திங்கள், 16 ஜூலை, 2012

திறக்கிற மறுகதவு


அலாதி மகிழ்ச்சி..


1. குழப்பமான கேள்விகளுக்கு எளிமையான பதில்களை வைத்திருக்கிறது, பலநேரங்களில் வாழ்க்கை.

2. தடைகள் தற்காலிகமானவை. நிரந்தரமாக்குவது நாமே.

3. மூடிய கதவையே ஏக்கத்துடன் பார்த்து நின்றிருந்தால் திறக்கிற மறுகதவு கண்களுக்குத் தென்படாமலே போகும்.

4. 'உன்னால் முடியாது' என சொல்லப்பட்டதை, செய்து காட்டுகையில் கிடைக்கிற மகிழ்ச்சி அலாதியானது.

5. எங்கே நிற்கிறோம் என்பதை விட எதை நோக்கி நகருகிறோம் என்பது முக்கியமானது.

6. செய்யும் பிழையால் தள்ளிப் போகலாம் வெற்றி. செய்த பிழையையே திரும்பச் செய்வதால் தட்டிப் போகக் கூடாது.

7. நம்மிடமிருந்து பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிராமல் நமக்கு என்ன தேவை என்பதிலும் அக்கறை காட்டுவோம்.

8. நசநசக்கும் சிறு மழையோடு வானவில். நகரும் வாழ்வில் சிறுசிறு வலிகளோடு பெருமகிழ்ச்சி.

9. சில பிரச்சனைகளுக்கு தீர்வை விடத் தேவையாய் இருப்பது, கடந்து வெளிவரும் முதிர்ச்சி.

10. சுயத்தின் வீம்புக்கும் அனுபவத்தின் எச்சரிக்கைக்கும் நடுவே தத்தளிக்கிறது இயலாமையுடன் வாழ்வின் சமரசங்கள்.

***

(எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்,
தொகுப்பது தொடர்கிறது..)




தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
ஒரு நூறு பேரின் ஆர்வம்.. சிறந்த தருணம்..
வாழ்க்கை என்பது எதிரொலி

அறிவின் கருவி
உறுதி ஊற்றெடுக்கும் காலம்


41 கருத்துகள்:

  1. தெளிவாகச் சொல்லி இருக்கீங்க..
    அனுபவத்தின் அடிப்படையில் அழகாக வந்துகொண்டிருக்கிறது ..வரிக்குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
  2. முத்துச் சரம் என்பது காரணப் பெயர்
    என்பதை நிருபித்துப் போகும் பதிவு

    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தொகுப்பு அருமை! கவனத்தில் வைக்கணும்.

    பதிலளிநீக்கு
  4. மூடிய கதவையே ஏக்கத்துடன் பார்த்து நின்றிருந்தால் திறக்கிற மறுகதவு கண்களுக்குத் தென்படாமலே போகும்.//

    மூடிய கதவை விட்டு விட்டு திறக்கும் மறு கதவைப் பார்த்தால் வெற்றி நிச்சயம் என்பதை அழகாய் சொல்லி விட்டீர்கள்.
    தொகுப்பு எல்லாம் மனக்களஞ்சியத்தில் சேமிக்கப்படவேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  5. //எங்கே நிற்கிறோம் என்பதை விட எதை நோக்கி நகருகிறோம் என்பது முக்கியமானது//

    Arumai

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப அருமையா இருக்குக்கா. அதிலயும் அந்த 6வது மேட்டரை மனசுல பதிச்சுக்கிட்டேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ரெம்ப நல்ல சிந்தனைகள்
    யதார்த்தமானதும் கூட

    பதிலளிநீக்கு
  8. எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியயவில்லை.., அனைத்தும் அருமை.!

    பதிலளிநீக்கு
  9. 200 பக்கங்களில் எழுத வேண்டிய ஒரு சுய முன்னேற்ற நூலை ஒரே பக்கத்தில் முத்தான வரிகளாகக் கோர்த்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. மிகவும் ரசித்தேன். நான் நிறைய கடை பிடிக்க வேண்டியவை இருக்கினறன் உங்கள் பட்டியலில்.. நன்றியும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  10. அனைத்துமே அருமை தான்.

    //எங்கே நிற்கிறோம் என்பதை விட எதை நோக்கி நகருகிறோம் என்பது முக்கியமானது.// ;)))))

    பதிலளிநீக்கு
  11. அனைத்து வரிகளும் உணரப்பட வேண்டியவை.
    'உன்னால் முடியாது' என சொல்லப்பட்டதை, செய்து காட்டுகையில் கிடைக்கிற மகிழ்ச்சி அலாதியானது.

    மனதில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான தொகுப்பு... தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. எல்லாமே நல்லா இருக்கு எனக்கு பிடித்தது.

    சுயத்தின் வீம்புக்கும் அனுபவத்தின் எச்சரிக்கைக்கும் நடுவே தத்தளிக்கிறது இயலாமையுடன் வாழ்வின் சமரசங்கள்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான தொகுப்பு....வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  15. @முத்துலெட்சுமி/muthuletchumi,

    தொடர ஊக்கம் தந்து வரும் தங்களுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin