புதன், 26 மே, 2010

இதம் மறந்த இயல்புகள்


ற்றவரை மட்டம் தட்டுவதில்
மனிதமனம் அடையுது குதூகலம்


ஒருவர் எட்டி மிதித்ததாலே
இமயமலையின் உச்சி சரிந்ததாய்
இல்லை ஏதும் சரித்திரம்

துரும்பெனப் பரிகசிக்கப்பட்டவர்
இரும்பை விட உறுதியாய்
முன்னேறிய கதைகளோ
வரலாற்றில் ஆயிரம்

இளக்காரங்களால்
எவர் தரமும் தாழ்ந்ததில்லை
இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை

தெரிந்தாலும்
தேன்குடித்த வண்டு போல
இன்பங்கண்ட உள்ளங்கள்
தொடர்கின்றன களிப்பாக
இதிலென்ன பாவமென
இல்லை பெருங்குற்றமென

*
டசடவென்று
சன்னல் கதவுகளை விடாது தட்டி
இடிமின்னலுடன்
அடித்துப் பெய்தது கோடைமழை

சீறிய இயற்கை
பார் என்றழைக்க
சிந்தனை கலைந்து
நின்றது ஆய்வு

இதம் மறந்த புயல்காற்றால்
முற்றமெங்கும் இறைந்து கிடந்த
தடித்த பெரும் ஆலங்கட்டிகள்
பளபளத்துத் தெரிந்தன ஏனோ
பண்பு துறந்த ஏளனங்களாய்

நிமிடத்தில் கரைந்து
அடையாளம் தொலைத்தாலும்
அடங்கோம் யாமென
நிற்காத அடைமழையினூடே
கெக்கலிப்பாய் சேதி சொல்லி.
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..











105 கருத்துகள்:

  1. ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி சரிந்ததாய்
    இல்லை ஏதும் சரித்திரம்


    ..... superb! applause!

    பதிலளிநீக்கு
  2. முதல் கவிதை அருமையோ அருமை. முதல் கவிதையிலேயே மனம் நின்று விட்டதால் இரண்டாவது மழை என்னை அத்தனை பாதிக்கவில்லை என நினைக்கிறேன். முதல் கவிதை நல்ல டானிக்!

    பதிலளிநீக்கு
  3. //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை//

    நல்லா சொல்லியிருக்கீங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  4. //ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி சரிந்ததாய்
    இல்லை ஏதும் சரித்திரம்//

    அருமை!

    கவிதைகள் இரண்டுமே சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. நல்லாயிருக்குங்க ராமலஷ்மி..

    http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

    இங்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் விருதை....
    யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அசத்தறீங்க..சொன்ன விதத்திலும்! :-)

    பதிலளிநீக்கு
  7. நல்லாச் சொல்லியிருக்கீங்க ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  8. //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை//

    உண்மைதான்...

    இரண்டாவதில் நனைந்தேவிட்டேன்...... அருமை.... படமும்....

    பதிலளிநீக்கு
  9. சாரலில்... நனைந்தேன்.

    கவிதை...
    “இதம் மாறாத இயல்பு”

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா26 மே, 2010 அன்று 1:51 PM

    //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை//

    அசத்தறீங்க

    பதிலளிநீக்கு
  11. வக்ர புத்திகளுக்குள் சிக்க்த் தவிக்கிறான் மனிதன்.
    அழிவுகளும் அதனால்தான்.

    மனிதனின் குணம் சொல்லும் கவிதையும்,மழையில் சிலிர்க்க வைத்த கவிதையும் அருமை.
    வாழ்த்துகள் லஷ்மி அக்கா.

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நல்ல கவிதை. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை
    neat expression best wishes.

    பதிலளிநீக்கு
  14. ///துரும்பெனப் பரிகசிக்கப்பட்டவர்
    இரும்பை விட உறுதியாய்
    முன்னேறிய கதைகளோ
    வரலாற்றில் ஆயிரம்///

    super..!

    பதிலளிநீக்கு
  15. ஆஹா.. கண்ணில் படுபவைகளெல்லாம் கவிகளாக மாறுகின்றன :-)

    பதிலளிநீக்கு
  16. அருமையா இருக்கு அக்கா..

    இதான் நீங்க முன்னாடி சொன்ன ஆலங்கட்டி மழையின்போது எழுதின கவிதையா..
    படம் எடுக்கலேன்னாலும் கவிதை மூலமா அசத்திட்டிங்க :))

    பதிலளிநீக்கு
  17. கவிதை அருமை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  18. //ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி சரிந்ததாய்
    இல்லை ஏதும் சரித்திரம்//

    அருமை!

    வாவ் சூப்பரா கலக்கிட்டிங்க. இருக்குஎனக்கு கவிதை வடிவில் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  19. மழையும்,தலைப்பும்,கவிதையும் வெற்றி விழா கொண்டாட துடித்தவர்களையே எனக்கு நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
  20. முதல் கவிதை எழுதிமுடிச்ச கையோட மழையும் வந்துடுச்சு போல!! அதான் ஆலங்கட்டியும், ஏளனமாய்த்ட் தெரிஞ்சிருக்கு!!

    உங்க கவிதை யூத்ஃபுல் விகடன்ல வரலைன்னா மட்டும் சொல்லுங்க இங்க!! அநேகமா எல்லாந்தான் வந்துடுதே!! :-))))

    பதிலளிநீக்கு
  21. ஆலங்கட்டி சொல்லும் சேதி அழுத்தமும் கூட

    பதிலளிநீக்கு
  22. ****இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை***

    என்று எண்ணுகிற மனதைரியம் எல்லோருக்க்கும் இருப்பதில்லை :(

    இருந்தபோதிலும் "இளக்காரங்களால் எவர் மனதும் தாழ்ந்துவிடக்கூடாது! இகழ்ந்தவரரெல்லாம் உயர்ந்தாலும் தாழ்ந்தவர்கள்தாம்" என்று சொல்லாமல் சொல்கிற உங்களுடைய அழுத்தமான ஊக்குவிப்பால் இளகிய, மற்றும் உடைந்துவிடக்கூடிய மனம் கொண்ட சில நல்லவர்கள் மன உறுதியுள்ளவர்களாக மாற வேண்டுமென்பது என் ஆசை இல்லை பேராசை!

    பதிலளிநீக்கு
  23. நல்ல வரிகள் சகோதரி.
    மழைக் கவிதை மிகவும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  24. நான் கூற நினைத்ததை அனைவரும் முன்பே கூறி விட்டார்கள் :-)

    பதிலளிநீக்கு
  25. மழைக்கவிதையும், அந்தப் புகைப்படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  26. “நிமிடத்தில் கரைந்து
    அடையாளம் தொலைத்தாலும்
    அடங்கோம் யாமென
    நிற்காத அடைமழையினூடே”

    அருமையான வரிகள்!

    மனிதர்களும் இப்படித்தான்.
    மின்னல் போல் வாழ்க்கை மறைந்து சென்றாலும்
    அதற்குள் ‘அடங்கோம் யாமென’
    போடும் ஆட்டங்கள் எத்தனை!

    பதிலளிநீக்கு
  27. நல்லா இருக்குங்க... விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. கவிதையும் அழகு...அதற்கான படமும் அழகு.

    பதிலளிநீக்கு
  29. \\ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி \\
    அருமை..!

    பதிலளிநீக்கு
  30. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    பதிலளிநீக்கு
  31. இரண்டும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள இந்த நேரத்தில், உண்மையில் அவசியமான கவிதை.

    மதிப்பெண் அதிகம் வாங்கிய பிள்ளைகளின் பெற்றோரில் சிலர், குறைந்த மதிப்பெண் பெற்ற உறவினர் நண்பர்களின் குழந்தைகளை இகழ்வாகப் பேசுவதும். அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் நடத்துவதும், இப்போது வழக்கமாகிவிட்டது. அதற்கு நல்ல தீர்வாக, உங்கள் கவிதை அமைந்துவிட்டது.

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  33. எப்பவும் போல நல்ல பதிவு அக்கா . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  34. நல்ல கருத்தும் கவிதைகளும், அவற்றை சொன்ன விதமும். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  35. புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

    பதிலளிநீக்கு
  36. beautiful! உங்க கவிதைகளை படிக்கும்போது, ஒரு டச்சிங் ஃபீல் இருக்கு. கலக்கறீங்க.

    பதிலளிநீக்கு
  37. அருமை. கவிதைகளுக்கு வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  38. அருமையான கவிதைக்கும் விகடன் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  39. நல்ல கவிதைகள்..அதிலும் முதல் கவிதை..மிகவும் பிடித்தது..

    பதிலளிநீக்கு
  40. ஓ....ஏற்கனவே படித்தது போல் இருக்கிறதே..என்று முதலில் வியந்தேன்...படித்து பின்னூட்டமும் முன் இட்டிருக்கிறேன்...இருந்தாலும் மீண்டுமொரு முறை அந்த
    முதல் கவிதையைப் பாராட்டத் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  41. இதம் மறந்த புயல்காற்றால்
    முற்றமெங்கும் இறைந்து கிடந்த
    தடித்த பெரும் ஆலங்கட்டிகள்
    பளபளத்துத் தெரிந்தன ஏனோ
    பண்பு துறந்த ஏளனங்களாய்.

    வார்த்தைகள் மிக அழகாய் கோர்வையாய் கவிதை மிக அருமை மேடம்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  42. Chitra said...
    //ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி சரிந்ததாய்
    இல்லை ஏதும் சரித்திரம்


    ..... superb! applause!//

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  43. அபி அப்பா said...
    //முதல் கவிதை அருமையோ அருமை. முதல் கவிதையிலேயே மனம் நின்று விட்டதால் இரண்டாவது மழை என்னை அத்தனை பாதிக்கவில்லை என நினைக்கிறேன். முதல் கவிதை நல்ல டானிக்!//

    நன்றி அபி அப்பா. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவையே:)!

    பதிலளிநீக்கு
  44. அபி அப்பா said...
    //முதல் கவிதை அருமையோ அருமை. முதல் கவிதையிலேயே மனம் நின்று விட்டதால் இரண்டாவது மழை என்னை அத்தனை பாதிக்கவில்லை என நினைக்கிறேன். முதல் கவிதை நல்ல டானிக்!//

    நன்றி அபி அப்பா. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவையே:)!

    பதிலளிநீக்கு
  45. அமைதிச்சாரல் said...

    ***/ //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை//

    நல்லா சொல்லியிருக்கீங்க. அருமை./***

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  46. சுந்தரா said...

    ***/ //ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி சரிந்ததாய்
    இல்லை ஏதும் சரித்திரம்//

    அருமை!

    கவிதைகள் இரண்டுமே சிறப்பு./***

    நன்றிகள் சுந்தரா.

    பதிலளிநீக்கு
  47. அஹமது இர்ஷாத் said...

    //நல்லாயிருக்குங்க ராமலஷ்மி..//

    நன்றி இர்ஷாத்.

    // http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

    இங்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் விருதை....
    யூத்ஃபுல் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்..//

    நன்றிங்க. உங்களை அடுத்து அமைதிச்சாரலும் இதே விருதைக் கொடுத்திருக்காங்க. விரைவில் வலைப்பூ முகப்பில் மாட்டிக் கொள்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  48. முத்துலெட்சுமி/muthuletchumi said...

    // நல்லா இருக்கிறது ராமலக்ஷ்மி//

    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  49. சந்தனமுல்லை said...

    //அசத்தறீங்க..சொன்ன விதத்திலும்! :-)//

    நன்றி முல்லை.

    பதிலளிநீக்கு
  50. பாச மலர் / Paasa Malar said...

    // நல்லாச் சொல்லியிருக்கீங்க ராமலக்ஷ்மி..

    May 26, 2010 12:59 PM//

    நன்றிகள் பாசமலர், மீள் வாசிப்புக்கும் கருத்துக்கும் சேர்த்து:)!

    ----------------------

    //நல்ல கவிதைகள்..அதிலும் முதல் கவிதை..மிகவும் பிடித்தது//

    //ஓ....ஏற்கனவே படித்தது போல் இருக்கிறதே..என்று முதலில் வியந்தேன்...படித்து பின்னூட்டமும் முன் இட்டிருக்கிறேன்...இருந்தாலும் மீண்டுமொரு முறை அந்த
    முதல் கவிதையைப் பாராட்டத் தோன்றுகிறது..

    June 5, 2010 1:48 PM//

    நானும் பதில் தர பத்து தினங்களுக்கு மேல் ஆக்கியதால் உங்களுக்கு வந்திருக்கலாம் குழப்பம். மன்னிக்கவும்:)!

    பதிலளிநீக்கு
  51. க.பாலாசி said...

    ***/ //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை//

    உண்மைதான்...

    இரண்டாவதில் நனைந்தேவிட்டேன்...... அருமை.... படமும்..../***

    வாங்க பாலாசி. நனைந்ததில் ஜலதோஷமில்லைதானே:)? மிக்க நன்றி படத்தேர்வையும் கவனித்துப் பாராட்டியிருப்பதற்கு.

    பதிலளிநீக்கு
  52. சி. கருணாகரசு said...

    // சாரலில்... நனைந்தேன்.

    கவிதை...
    “இதம் மாறாத இயல்பு”//

    கவித்துவமான கருத்து.

    நன்றிகள் கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  53. சின்ன அம்மிணி said...

    ***/ //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை//

    அசத்தறீங்க/***

    நன்றி அம்மிணி.

    பதிலளிநீக்கு
  54. ஹேமா said...

    // வக்ர புத்திகளுக்குள் சிக்க்த் தவிக்கிறான் மனிதன்.
    அழிவுகளும் அதனால்தான்.//

    மிகச் சரி ஹேமா.

    //மனிதனின் குணம் சொல்லும் கவிதையும்,மழையில் சிலிர்க்க வைத்த கவிதையும் அருமை.
    வாழ்த்துகள் லஷ்மி அக்கா.//

    அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  55. விக்னேஷ்வரி said...

    // ரொம்ப நல்ல கவிதை. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள். வாழ்த்துகள்.//

    நன்றி விக்னேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  56. Dr.Rudhran said...

    //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை
    neat expression best wishes.//

    நன்றி டாக்டர்.

    பதிலளிநீக்கு
  57. மோகன் குமார் said...

    //அருமை...Particularly the first one.//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  58. தமிழ் அமுதன் (ஜீவன்) said...

    *** ///துரும்பெனப் பரிகசிக்கப்பட்டவர்
    இரும்பை விட உறுதியாய்
    முன்னேறிய கதைகளோ
    வரலாற்றில் ஆயிரம்///

    super..!//***

    சரியாய்தான் சொல்லியிருக்கிறேன்னு சொல்லுங்க:)! நன்றி ஜீவன்.

    பதிலளிநீக்கு
  59. "உழவன்" "Uzhavan" said...

    //ஆஹா.. கண்ணில் படுபவைகளெல்லாம் கவிகளாக மாறுகின்றன :-)//

    எல்லாம் உங்களிடம் இருந்து கற்றதுதான்:))!

    பதிலளிநீக்கு
  60. susi said...

    //அருமையா இருக்கு அக்கா..//

    நன்றி சுசி.

    // இதான் நீங்க முன்னாடி சொன்ன ஆலங்கட்டி மழையின்போது எழுதின கவிதையா..//

    அதேதான்:))!

    பதிலளிநீக்கு
  61. கோமதி அரசு said...

    // கவிதை அருமை.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. //

    மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  62. Vijiskitchen said...

    *** //ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி சரிந்ததாய்
    இல்லை ஏதும் சரித்திரம்//

    அருமை!

    வாவ் சூப்பரா கலக்கிட்டிங்க. இருக்குஎனக்கு கவிதை வடிவில் சொல்ல வார்த்தைகள் இல்லை.// ***

    நன்றிகள் விஜி.

    பதிலளிநீக்கு
  63. ராஜ நடராஜன் said...

    // மழையும்,தலைப்பும்,கவிதையும் வெற்றி விழா கொண்டாட துடித்தவர்களையே எனக்கு நினைவு படுத்தியது.//

    இதம் மறந்த இயல்புகள் அன்றாடங்களில் எப்போதும் இருந்தபடியேதான். வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்.

    பதிலளிநீக்கு
  64. ஹுஸைனம்மா said...

    //முதல் கவிதை எழுதிமுடிச்ச கையோட மழையும் வந்துடுச்சு போல!! அதான் ஆலங்கட்டியும், ஏளனமாய்த்ட் தெரிஞ்சிருக்கு!!//

    நான் எழுதிய கோணத்திலேயே புரிந்திருக்கிறீர்கள். இரண்டும் தொடர்புள்ள ஒரே கவிதையே:)! நன்றி ஹுசைனம்மா.

    //உங்க கவிதை யூத்ஃபுல் விகடன்ல வரலைன்னா மட்டும் சொல்லுங்க இங்க!! அநேகமா எல்லாந்தான் வந்துடுதே!! :-))))//

    ஹி. இன்றைக்கு ‘சீற்றம்’னு ஒரு கவிதை வெளிவந்திருக்கு. நேரமிருந்தா பாருங்க:)!

    பதிலளிநீக்கு
  65. ஜெஸ்வந்தி said...

    //நல்லாயிருக்கு ராமலஷ்மி.//

    மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  66. ஈரோடு கதிர் said...

    //ஆலங்கட்டி சொல்லும் சேதி அழுத்தமும் கூட//

    நல்லது கதிர்.

    பதிலளிநீக்கு
  67. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

    //நல்லாயிருக்குங்க .//

    நன்றி நண்டு.

    பதிலளிநீக்கு
  68. வருண் said...

    // ****இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை***

    என்று எண்ணுகிற மனதைரியம் எல்லோருக்க்கும் இருப்பதில்லை :( //

    தூசி போலத் தட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடப்பவரும் உண்டு. அதே நேரம் துவண்டு போவோரும் உண்டுதான்.

    // இருந்தபோதிலும் "இளக்காரங்களால் எவர் மனதும் தாழ்ந்துவிடக்கூடாது! இகழ்ந்தவரரெல்லாம் உயர்ந்தாலும் தாழ்ந்தவர்கள்தாம்" என்று சொல்லாமல் சொல்கிற உங்களுடைய அழுத்தமான ஊக்குவிப்பால் இளகிய, மற்றும் உடைந்துவிடக்கூடிய மனம் கொண்ட சில நல்லவர்கள் மன உறுதியுள்ளவர்களாக மாற வேண்டுமென்பது என் ஆசை இல்லை பேராசை!//

    உண்மையில் கவிதையை எழுதியது இளக்காரம் செய்கிறவரை மனதில் வைத்துதான். அடங்காத மனித இயல்புகளில் இதுவும் ஒன்றெனத் தோன்றியதால் முதலில் நான் யோசித்திருந்த தலைப்பு ‘அடங்கோம் யாம்’ என்பதே. உங்கள் பேராசை பலிக்க வேண்டும் என்பதே என் ஆசை. இல்லையில்லை பேராசை:)!

    பதிலளிநீக்கு
  69. எம்.ரிஷான் ஷெரீப் said...

    //நல்ல வரிகள் சகோதரி.
    மழைக் கவிதை மிகவும் பிடித்திருந்தது.//

    நல்லது ரிஷான். நன்றியும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  70. கிரி said...

    // நான் கூற நினைத்ததை அனைவரும் முன்பே கூறி விட்டார்கள் :-)//

    ரைட்:)!

    நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  71. செ.சரவணக்குமார் said...

    //மழைக்கவிதையும், அந்தப் புகைப்படமும் அருமை.//

    படத்தேர்வையும் ரசித்தமைக்கு நன்றிகள் கிரி.

    பதிலளிநீக்கு
  72. மனோ சாமிநாதன் said...

    ***/ “நிமிடத்தில் கரைந்து
    அடையாளம் தொலைத்தாலும்
    அடங்கோம் யாமென
    நிற்காத அடைமழையினூடே”

    அருமையான வரிகள்!/***

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மனோ சாமிநாதன்.

    //மனிதர்களும் இப்படித்தான்.
    மின்னல் போல் வாழ்க்கை மறைந்து சென்றாலும்
    அதற்குள் ‘அடங்கோம் யாமென’
    போடும் ஆட்டங்கள் எத்தனை!//

    முற்றிலும் உண்மை. வருணுக்கான பதிலில் சொல்லியிருப்பது போல 'அடங்கோம் யாம்' என்பதையே தலைப்பாய் வைக்க யோசித்து பின் இதமாய் வைத்து விட்டேன், அப்படியாவது மனிதர்கள் அது(இதம்) பற்றி யோசிக்க மாட்டார்களா என்று.

    பதிலளிநீக்கு
  73. அப்பாவி தங்கமணி said...

    // நல்லா இருக்குங்க... விகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்//

    நன்றி புவனா:)!

    பதிலளிநீக்கு
  74. ஸ்ரீராம். said...

    // கவிதையும் அழகு...அதற்கான படமும் அழகு.//

    இரண்டையும் ரசித்தமைக்கு நன்றிகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  75. அம்பிகா said...

    *** \\ஒருவர் எட்டி மிதித்ததாலே
    இமயமலையின் உச்சி \\
    அருமை..! ***


    நன்றி அம்பிகா.

    பதிலளிநீக்கு
  76. @ தலைவன்.காம்,

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  77. மாதேவி said...

    //இரண்டும் நன்றாக இருக்கிறது.//

    நன்றிகள் மாதேவி.

    பதிலளிநீக்கு
  78. அமைதி அப்பா said...

    // முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்.

    தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள இந்த நேரத்தில், உண்மையில் அவசியமான கவிதை.

    மதிப்பெண் அதிகம் வாங்கிய பிள்ளைகளின் பெற்றோரில் சிலர், குறைந்த மதிப்பெண் பெற்ற உறவினர் நண்பர்களின் குழந்தைகளை இகழ்வாகப் பேசுவதும். அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் நடத்துவதும், இப்போது வழக்கமாகிவிட்டது. அதற்கு நல்ல தீர்வாக, உங்கள் கவிதை அமைந்துவிட்டது.

    நன்றி மேடம்.//

    நன்றி அமைதி அப்பா. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம் வருத்தம் தருகிறது. நம் மன பலத்தை இதுபோன்ற விமர்சனங்களால் இழந்து விடக் கூடாதென்பதை அந்த மாணவர்களுக்கும் காலம் கற்றுத் தருமென நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  79. ஷர்புதீன் said...

    // :) //

    புன்னகை சொல்லும் சங்கதி என்ன:)?

    பதிலளிநீக்கு
  80. Geetha6 said...

    // wav!!very nice.//

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கீதா.

    பதிலளிநீக்கு
  81. சசிகுமார் said...

    //எப்பவும் போல நல்ல பதிவு அக்கா . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    நன்றி சசிகுமார்.

    // இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.//

    பார்த்தேன். இப்போது முழுமையாய் குணமடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  82. கவிநயா said...
    //நல்ல கருத்தும் கவிதைகளும், அவற்றை சொன்ன விதமும். வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

    வாங்க கவிநயா:)! என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  83. SurveySan said...

    // beautiful! உங்க கவிதைகளை படிக்கும்போது, ஒரு டச்சிங் ஃபீல் இருக்கு. கலக்கறீங்க.//

    நன்றி சர்வேசன்:)!

    பதிலளிநீக்கு
  84. Jeeves said...

    // அருமை. கவிதைகளுக்கு வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்//

    ரொம்ப நன்றி ஜீவ்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  85. தக்குடுபாண்டி said...

    //அருமையான கவிதைக்கும் விகடன் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி தக்குடு.

    பதிலளிநீக்கு
  86. அன்புடன் மலிக்கா said...

    *** /இதம் மறந்த புயல்காற்றால்
    முற்றமெங்கும் இறைந்து கிடந்த
    தடித்த பெரும் ஆலங்கட்டிகள்
    பளபளத்துத் தெரிந்தன ஏனோ
    பண்பு துறந்த ஏளனங்களாய்./

    வார்த்தைகள் மிக அழகாய் கோர்வையாய் கவிதை மிக அருமை மேடம்.. வாழ்த்துக்கள்..***

    நன்றிகள் மலிக்கா.

    பதிலளிநீக்கு
  87. குடந்தை அன்புமணி said...

    // மழை கவிதை ரொம்பவும் ரசித்தேன். //

    நன்றி அன்புமணி, கவிதைப் போட்டி பற்றிய தகவலுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  88. தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேர்களுக்கும், தமிழிஷில் வாக்களித்த 36 பேர்களுக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  89. என்னமோ தெரியல .. இப்ப எல்லாம் எதிர்கவுஜ எழுதியே ஆகனும் போல இருக்கு

    ****
    தரும அடி !!
    ***********

    வீட்டில் மனைவியுடன் சண்டை
    குழந்தையை ஸ்கூலுக்கு
    கூட்டிச் செல்லவில்லையென

    பக்கத்து வீட்டுக்காரனும்
    திட்டிவிட்டுச் சென்றான்
    யாரோ கொட்டியக் குப்பைக்கு
    என்னைக் குற்றம் சாட்டி
    அரசியல்வாதி அவன்.
    எதிர்க்க முடியுமா என்ன ?

    நேரமாச்சுது.. அலுவலகத்துக்கு
    முடிக்க முடியாத டார்கெட்டை
    முடிக்கச் சொல்லும் மேனேஜரைப்
    பார்த்தாகவேண்டும்.
    வேறுவழியில்லை
    கையாலாகா கோபம் கொதிக்கிறது.

    விரைந்த வண்டியும் நின்றது
    கூட்டத்தில் யாரோ
    அடி வாங்கிக் கொண்டிருந்தவனைப்
    பார்த்து

    ஓடி உள்ளேப் புகுந்தேன்
    " இவன் எப்பவுமே இப்படித் தான் சார்"
    என்னுடைய பங்கு இரண்டு
    அப்பாடா
    இந்த நாள் இனி நன்றாகப் போகும்
    கோபத்தை இறக்கியாயிற்றல்லவா!
    **

    பதிலளிநீக்கு
  90. ஓ ரெண்டு கவிதை தானா.. அப்ப ரெண்டு எதிர் கவிதை போதும். அடுத்த கவிதைக்கு எதிர் கவிதை எழுத முடியுதான்னு பாக்கறேன்
    :))

    பதிலளிநீக்கு
  91. வேண்டா நேரத்தில்
    வெட்டிச் செல்கிறது மின்னலொளி
    காற்றென்ன பொற்கைப் பாண்டியனா
    தட்டியதற்கு தன் கை வெட்டிக் கொள்ள
    நள்ளிரவு தூக்கம் கலைந்தது தான் மிச்சம்

    மரம்வெட்டி, கரியமிலப் புகையூதி
    கெடுத்தாயிற்று இயற்கையை
    இயற்கைக்கு என்ன தேவை இனி
    நம் இதம் அறிந்துக் கொள்ள

    எத்தனைப் பட்டும்
    திருந்தா மனங்களிடம்
    ஊழிப் பெருங்காற்றுடன்
    எச்சரித்துச் செல்கிறது
    இனியும் வருவேனென்று
    மழை!

    பதிலளிநீக்கு
  92. முதல் கவிதை மிக அற்புதம் ராமலக்ஷ்மி !

    பதிலளிநீக்கு
  93. //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை
    // அருமையான சொற்களை தேர்ந்தெடுத்து அழகிய கவிதை படைத்து விட்டீர்கள் சகோதரி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  94. @ ஜீவ்ஸ்,

    100!

    கதிர் சிறுகதைப் பதிவில் பின்னூட்ட எண்ணிக்கையை சதம் ஆக்கிவிட்டு நீங்கள் சொன்னது. இப்போது கவனிக்கத் தவறி விட்டீர்களே:)!

    ரெண்டு எதிர் கவிதைகளுமே அருமை:)! நன்றி!

    //அடுத்த கவிதைக்கு எதிர் கவிதை எழுத முடியுதான்னு பாக்கறேன்//

    அடுத்ததற்குமாஆஆ...??

    பதிலளிநீக்கு
  95. James Vasanth said...

    //முதல் கவிதை மிக அற்புதம் ராமலக்ஷ்மி !//

    மிகவும் நன்றி ஜேம்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  96. ஸாதிகா said...

    *** //இளக்காரங்களால்
    எவர் தரமும் தாழ்ந்ததில்லை
    இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை
    //

    அருமையான சொற்களை தேர்ந்தெடுத்து அழகிய கவிதை படைத்து விட்டீர்கள் சகோதரி ராமலக்ஷ்மி.***

    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஸாதிகா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin