Saturday, April 7, 2012

கோடு போட்டா ரோடு.. - ஏப்ரல் PiT போட்டி - 19 மாதிரிப் படங்கள்

வழிநடத்தும் கோடுகள் [leading lines]! ஒளிப்படக் கலையின் அடிப்படைகளில் ஒன்றான இதையே தலைப்பாக அறிவித்திருக்கிறார் நடுவர் MQN. புரிந்து கொண்டால்.. மாதிரிப் படங்களைப் பார்த்தால்.. போட்டி ரொம்ப ரொம்ப சுலபமென நீங்களே சொல்வீர்கள். படமெடுக்கும் போது கருப்பொருளை நோக்கி நம்மை கூட்டிப்போகிற மாதிரி கோடுகள் கிடைச்சா.. அதை அப்படியே பின் பற்றிப் போய் கோணத்தை அமைச்சா.. வேலை முடிஞ்சுது. கோடு போட்டா ரோடு என்பார்களே, அதேதான்.

இந்தக் கோடுகள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டிடங்கள், சாலைகள், கடல், வானம், வேலியென. எப்படியெனப் பார்ப்போம். முதல் நான்கும் PiT அறிவிப்புப் பதிவிலும் வெளியாகியிருப்பவை. மேலும் ‘சில’ முத்துச்சரத்தில் காட்டலாமென ஆல்பத்தைப் புரட்டிய போது கிடைத்ததோ ‘பல’:). இருக்கட்டும் மாதிரிக்கு என்று அனைத்தையும் தொகுத்து விட்டேன்:

#1 மணி மண்டபம் நோக்கி இழுத்துச் செல்லுகிறது பூக்களின் வரிசை
[பெங்களூர் ரமண மகிரிஷி பூங்காவின் கெம்பகெளடா மண்டபம்]

#2 மலையொட்டிய பாதையில் பார்ப்பவரை அழைத்துச் செல்லும் கோடு:
கிருஷ்ணகிரி சேலம் வழியாக வந்த போது...

#3 சிங்கப்பூர் சாலை... தூரத்தில் தெரியும் Marina Bay Sands ஹோட்டலுக்கு வழி நடத்திச் செல்வது போலான கோடுகளுடன்..


#4 ஜிவ்வென வேகமாக ஊருக்குள்ளே கூட்டிச் செல்லும் சிங்கப்பூர் பாலம்:

#5 நாழிக் கிணறு நோக்கிக் கூட்டிப் போகிற திருச்செந்தூர் பிரகாரம்:

#6 கருங்குளம் கிராமத்தை நோக்கி இறங்கிச் செல்ல அழைக்கிற படிக்கட்டு:


#7 ஷ்ராவணபெலகுலா கோமதீஷ்வரரை தரிசிக்க ஏறிவர அழைக்கும் படிக்கட்டு:


#8 சாவகாசமாக நடைபோடும் இவர்களை வேகமாகக் கடந்து போக அழைக்கிற மாதிரி கோடுகள்?
நெல்லையப்பர் கோவில் இரண்டாம் சுற்றுப் பிரகாரம்.

#9 ஆனை காந்திமதியைப் பார்க்கக் கூட்டிச் செல்லும் கோடு:

#10 நடை சாத்திய கதவுகளுக்குள் வீற்றிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்து வரச் சொல்லும் கோடுகள்:[காந்திமதி அம்மன் சன்னதியின் இடப்பக்கம் இருக்கிறது].

#11 கோவை தாஜில்..

ஒரு கிறுஸ்துமஸ் தினத்தில்.. அலங்காரத்துடன்..

#12 ‘சன்னல் வழியே வேடிக்கை பார்க்கணுமா?’ கேட்கின்றன கோடுகள்:


பசுமை நிறைந்த நினைவுகளுடன் கீழ்வரும் நான்கு. படித்த பள்ளிக்கு இரண்டு வருடம் முன்பு சென்றிருந்த போது எடுத்தவை :

#13 பள்ளிமேடைக்குப் பார்வை இழுத்துச் செல்லுகின்றன கட்டிடத்தின் பக்கவாட்டுக் கோடுகள்:


#14 என் பனிரெண்டாம் வகுப்பறை இருந்த வராந்தா:


#15 பள்ளி தேவாலயமும் நான் படித்த பத்தாம் வகுப்பறையும் இங்கேதான் உள்ளன:


#16 தேவாலயக் கட்டிடத்தையும், தலைமை ஆசிரியர் தங்கும் கட்டிடத்தையும் இணைக்கிற பாலம்:


#17 சிகப்பு உடைச் சிறுமி சிந்தும் புன்னகையை ரசிக்க அழைத்துச் செல்லுகின்றன மஞ்சள் கம்பிகளும் அவளது கைகளும்:


#18 வானம் தொட்டு விடும் தூரம்தான்:
சிங்கப்பூரில்..

#19 ஒத்தையடிப் பாலத்துல பேலன்ஸ் செஞ்சு கடந்து பச்சைப் பசேல் வயலுக்குப் போகலாமா?
குமரகம் தாஜில் எடுத்த இப்படத்தை நேற்றுதான் ஃப்ளிக்கரில் பதிந்தேன் “இப்பவே இதில் ஏறி நடக்கணும் போலிருக்கே’ என்றிருந்தார் நண்பர் ஜேம்ஸ். அப்படி உணர வைப்பதே படத்திற்கான வெற்றி! அதற்கு உதவி செய்பவையே கோடுகள்!


நடுவர் MQN போட்ட தலைப்புக் கோட்டின் மேல் மளமளவென ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள் இங்கே. சீக்கிரமா உங்க படத்தையும் அதில் சேர்த்திடுங்கள். மற்றவர் படங்களைப் பார்த்துக் கருத்துகளை வழங்கி உற்சாகப் படுத்துங்கள். ரோடு போடக் கடைசித் தேதி: 20 ஏப்ரல்:)!
***

47 comments:

 1. அழகான படங்கள் அக்கா :)

  ReplyDelete
 2. ஹைய்யோ!!!!!!!!!!!!!!!

  நாங்களும்.....முயற்சிப்போம்............

  ReplyDelete
 3. எல்லா படங்களும் அருமை. ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு ஃபுல் மார்க்! தீம் புரிந்தது போலத்தான் இருந்தது. ஆனால் 'கம்பியில் தொங்கும் சிறுமி' படம்? கம்பிகள்தான் கோடுகளா?

  // 2 வருடம் முன் படித்த பள்ளிக்குச் சென்றிருந்த போது எடுத்தவை://

  படித்த பள்ளிக்கு இரண்டு வருடம் முன்பு சென்றிருந்த போது எடுத்த படங்களில் நான்கு படங்களே கீழே... என்று கொடுத்திருந்தால் சரியான பொருள் வருமோ?!

  ReplyDelete
 4. மிகவும் பிரமாதமாக கோட்டில் ரோடு போட்டிருக்கிறீர்கள்...சகோதரி..

  ReplyDelete
 5. படமெடுக்கும் போது கருப்பொருளை நோக்கி நம்மை கூட்டிப்போகிற மாதிரி கோடுகள் கிடைச்சா.. அதை அப்படியே பின் பற்றிப் போய் கோணத்தை அமைச்சா.. வேலை முடிஞ்சுது. கோடு போட்டா ரோடு என்பார்களே, அதேதான்.//

  நீங்கள் சொல்வது கேட்கும் போது எனக்கும் கலந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 6. வெட்டிட்டு வா,...என்றால் கட்டிட்டு வருவது போல நீங்கள் போட்ட கோடுகள் ரோடுகள் மிகப்பிரமாதம்...

  ReplyDelete
 7. சூப்பர் படங்கள்....

  ரசித்தேன்.. என்னுடைய புகைப்படங்களையும் தேடுகிறேன்...

  ReplyDelete
 8. அந்த கருங்குளம் போட்டோ... நானே அந்த இடத்தில் இருக்கும் பிரமையை ஏற்படுத்தியது. கடைசிப் படமும் பிரமிக்க வைத்தது. இப்படிச் சொல்வதால் மற்ற படங்கள் குறைந்தவை என்று அர்த்தமாகி விடாது. நீஙகள் சொல்வது போல முயற்சிப்பவள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 9. PIT ல் இந்த subject போட்டியாக வரும் என்று முன்பே தெரிந்து இத்தனை கோடுகள் போட்டு வைத்திருக்கிறீர்களா? போட்டோ எடுப்பவர்களை நன்றாக வழி நடத்துகிறீரகள்.
  ஆமாம் நீங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டால் (கல்யாணபரிசில் தங்கவேலு சொன்ன மாதிரி) வேறு யாருக்கும் பரிசு கிடைக்காமல் போய்விடுமே.
  சகாதேவன்

  ReplyDelete
 10. அருமையான படங்கள். வாழ்த்துக்கள், ராமலஷ்மி.

  ReplyDelete
 11. இத்தனை அழகா ரோடு போட்டுட்டீங்களே ராமலக்ஷ்மி. அத்தனை வழிகளிலும் போக ஆசையாக இருக்கிறது:)
  சூப்பர் சொல்லலாம் அலுத்துவிடும். அவுட் ஆஃப் திஸ் வேர்ல்ட்' சொல்லிடறேன்:0)

  ReplyDelete
 12. PADANGAL ELLAAME VEHU AZAKU VAAZTHTHUKKAL.

  ReplyDelete
 13. எல்லாப் படங்களும் மிக அழகு..பசுமைக்கு இட்டுச் செல்லும் மரக்கோடுகளுக்கு முதலிடம்

  ReplyDelete
 14. புகைப்படங்கள் எல்லாம் அழகல்ல. நீங்கள் எடுக்கும் புகைப்படங்களே அழகு என்று சொல்ல வேண்டும் போல் உள்ளது. அருமை.

  ReplyDelete
 15. அனைத்துப் படங்களும் அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. அற்புதம்! உங்கள் (காமெராவின்) பார்வை மிக அழகு!

  ReplyDelete
 17. அற்புதமான கோணங்கள்.

  ReplyDelete
 18. எத்தனை அருமையான படங்கள்.. நல்ல பதிவு ராமலக்ஷ்மி !

  ReplyDelete
 19. எல்லாம் எல்லாம் எல்லாமே அழகாயிருக்கு அக்கா.கோடு போட்டா ரோடே போடுறீங்களே !

  ReplyDelete
 20. எல்லாப்படங்களுமே அசத்தல்..

  ReplyDelete
 21. எல்லாப் படங்களுமே அருமையா இருந்ததுங்க....

  ReplyDelete
 22. அருமையான கோடுகள்...

  ReplyDelete
 23. படங்கள் அனைத்தும் நன்று!

  ReplyDelete
 24. சுசி said...
  //அழகான படங்கள் அக்கா :)//

  நன்றி சுசி:)

  ReplyDelete
 25. துளசி கோபால் said...
  //ஹைய்யோ!!!!!!!!!!!!!!!

  நாங்களும்.....முயற்சிப்போம்............//

  நல்லது மேடம்:). காத்திருக்கிறேன் உங்கள் படத்தைக் காண.

  ReplyDelete
 26. ஸ்ரீராம். said...
  //எல்லா படங்களும் அருமை. ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு ஃபுல் மார்க்! தீம் புரிந்தது போலத்தான் இருந்தது. ஆனால் 'கம்பியில் தொங்கும் சிறுமி' படம்? கம்பிகள்தான் கோடுகளா?//

  பக்கவாட்டுக் கோடுகளுக்கான மாதிரியாக அதைச் சேர்த்தேன். கம்பிகள் இன்னும் நீளமாக அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  //படித்த பள்ளிக்கு இரண்டு வருடம் முன்பு சென்றிருந்த போது//

  உங்கள் பின்னூட்டம் கண்டதுமே மாற்றி விட்டேன்:).

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 27. ESWARAN.A said...
  //மிகவும் பிரமாதமாக கோட்டில் ரோடு போட்டிருக்கிறீர்கள்...சகோதரி..

  வெட்டிட்டு வா,...என்றால் கட்டிட்டு வருவது போல நீங்கள் போட்ட கோடுகள் ரோடுகள் மிகப்பிரமாதம்...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 28. கோமதி அரசு said...

  //நீங்கள் சொல்வது கேட்கும் போது எனக்கும் கலந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது ராமலக்ஷ்மி.//

  அவசியம் கலந்து கொள்ளுங்கள் கோமதிம்மா:).

  ReplyDelete
 29. வெங்கட் நாகராஜ் said...
  //சூப்பர் படங்கள்....

  ரசித்தேன்.. என்னுடைய புகைப்படங்களையும் தேடுகிறேன்...//

  நல்லது வெங்கட். நன்றி.

  ReplyDelete
 30. கணேஷ் said...
  //அந்த கருங்குளம் போட்டோ... நானே அந்த இடத்தில் இருக்கும் பிரமையை ஏற்படுத்தியது. கடைசிப் படமும் பிரமிக்க வைத்தது. இப்படிச் சொல்வதால் மற்ற படங்கள் குறைந்தவை என்று அர்த்தமாகி விடாது. //

  மகிழ்ச்சியும் நன்றியும் கணேஷ்.

  ReplyDelete
 31. சகாதேவன் said...
  //PIT ல் இந்த subject போட்டியாக வரும் என்று முன்பே தெரிந்து இத்தனை கோடுகள் போட்டு வைத்திருக்கிறீர்களா?//

  படங்களில் பல PiT மூலமாக Leading lines பற்றியெல்லாம் அறிந்து கொள்ளும் முன்னரே ‘இப்படி எடுத்தால் நன்றாக அமையும்’ எனும் இயல்பான கேமரா பார்வையில் எடுத்தவையே. அதையும் பதிவில் சொல்ல எண்ணி விட்டுப் போயிற்று:). நன்றி.

  ReplyDelete
 32. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //அருமையான படங்கள். வாழ்த்துக்கள், ராமலஷ்மி.//

  மிக்க நன்றி பவளா.

  ReplyDelete
 33. வல்லிசிம்ஹன் said...
  //இத்தனை அழகா ரோடு போட்டுட்டீங்களே ராமலக்ஷ்மி. அத்தனை வழிகளிலும் போக ஆசையாக இருக்கிறது:)
  சூப்பர் சொல்லலாம் அலுத்துவிடும். அவுட் ஆஃப் திஸ் வேர்ல்ட்' சொல்லிடறேன்:0)//

  மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.

  ReplyDelete
 34. Lakshmi said...
  //PADANGAL ELLAAME VEHU AZAKU VAAZTHTHUKKAL.//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 35. பாச மலர் / Paasa Malar said...
  //எல்லாப் படங்களும் மிக அழகு..பசுமைக்கு இட்டுச் செல்லும் மரக்கோடுகளுக்கு முதலிடம்//

  மிக்க நன்றி மலர்.

  ReplyDelete
 36. தமிழ் உதயம் said...
  //புகைப்படங்கள் எல்லாம் அழகல்ல. நீங்கள் எடுக்கும் புகைப்படங்களே அழகு என்று சொல்ல வேண்டும் போல் உள்ளது. அருமை.//

  நன்றி ரமேஷ்:)!

  ReplyDelete
 37. Rathnavel Natarajan said...
  //அனைத்துப் படங்களும் அருமை.
  வாழ்த்துகள்.//

  நன்றி சார்.

  ReplyDelete
 38. கவிநயா said...
  //அற்புதம்! உங்கள் (காமெராவின்) பார்வை மிக அழகு!//

  நன்றி கவிநயா.

  ReplyDelete
 39. ஸாதிகா said...
  //அற்புதமான கோணங்கள்.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 40. James Vasanth said...
  //எத்தனை அருமையான படங்கள்.. நல்ல பதிவு ராமலக்ஷ்மி !//

  நன்றி ஜேம்ஸ்.

  ReplyDelete
 41. ஹேமா said...//எல்லாம் எல்லாம் எல்லாமே அழகாயிருக்கு அக்கா.கோடு போட்டா ரோடே போடுறீங்களே !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 42. அமைதிச்சாரல் said...//எல்லாப்படங்களுமே அசத்தல்..//

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 43. கோவை2தில்லி said...//எல்லாப் படங்களுமே அருமையா இருந்ததுங்க....//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 44. Nithi Clicks said...
  //அருமையான கோடுகள்...//

  நன்றி நித்தி.

  ReplyDelete
 45. அமைதி அப்பா said...

  //படங்கள் அனைத்தும் நன்று!//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 46. கண்ணைக்கவரும் வண்ணபடங்கள் மிக அருமை...உங்கள் பதிவுக்கு பெருமை!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin