Wednesday, April 25, 2012

புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!

‘வருஷத்தின் 365 நாளுக்கும் ஏதோ ஒரு தினத்தைக் கொண்டாடிக்கிட்டு கடுப்பேத்தறாங்க மை லார்ட்’ என்பதுதான் இப்பப் பல பேரின் எண்ணமா இருக்கு. இயற்கையோட ஒன்றின வாழ்வும், இதயத்தில் சுரக்கிற நேசமுமா இருந்தப்ப எந்த நாளுக்கும் அவசியம் இருந்திருக்கல. ஆனா இப்ப?

‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது.

உலகம் போற அபாயமான பாதையை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு இருக்கிற வளத்தையாவது விட்டு வைக்கணுமேங்கிற அக்கறையிலே அங்க இங்கக் கூட்டு முயற்சியா செயல்படுற இயற்கை ஆர்வலர்களையும் வேலையத்தவங்கன்னு நினைக்கிறாங்க சிலரு. கொஞ்சம் பேராவது உரக்க எடுத்துச் சொல்லிக் களமிறங்கி செயல்படுறதாலதான், பூமியக் காக்க நம்மால என்ன முடியும்ங்கிற சிந்தனை தனி மனுசங்களுக்கு ஏற்படுது. நாட்டுல எத்தனையோ பிரச்சனைங்க இருக்கையில எதுக்கு புவி தினம், சுற்றுப்புறச் சூழல் தினம்னா, அங்க சுத்தி இங்க சுத்தி பசி பஞ்சத்துக்கான காரணங்களுல முக்கியமானதா இருக்கிறதே இயற்கையை மதிக்காத நம்ம போக்குதான்ங்கிற புரிதல் வரும்.

இதோ மூணு நாள் முன்னே கடந்து போச்சு புவிதினம். நாப்பதிரெண்டு வருஷங்களுக்கு முன்ன திரு. கேலார்டு நெல்சன் இந்த தினத்தை ஏற்படுத்தினாருங்கிற தகவலோடு அவர் சொன்ன முக்கியமான ஒரு சங்கதியையும் பகிர்ந்திருந்தார் இங்கே ‘மண், மரம், மழை, மனிதன்’ திரு வின்சென்ட் அவர்கள்:

நாட்டின் செல்வமே காற்று, தண்ணீர், மண், காடுகள், தாதுஉப்புக்கள், ஆறுகள், ஏரிகள், மாகடல்கள், இயற்கை அழகு, வனஉயிர்களின் உறைவிடம், உயிரனவளம் ஆகியவைதான். இவைகள்தான் முழுமையான பொருளாதாரம். இவற்றிலிருந்துதான் எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன. இவைதான் உலகத்தின் நிலையான சொத்து.

இதுல எத்தனை விஷயங்களைப் பாழ்படுத்திட்டோம்ங்கிறத நினைக்கையில பகீருன்னுதான் இருக்கு.

# பரந்து விரிந்து..
இப்படியாக நிழல் பரப்பிக்கிட்டிருந்த நாலாயிரத்தும் மேலான மரங்களை பெங்களூர் மெட்ரோவுக்காகவும் சாலைவிரிவாக்கத்துக்காகவும் இழந்தாச்சு. 37.1 டிகிரி செல்சியஸோட, இந்த வருடத்தின் அதிக வெப்பமான நாளா நேற்றைய தினம். இன்னும் கோடை முடியல. அதுமட்டுமா? தமிழகம் போல கர்நாடகாவின் பலபாகங்கள்ல திடுதிப்புன்னு மின்வெட்டு. உச்சக் கட்டமா,கிருஷ்ணா நதியில் நீரில்லாமல் ரெய்ச்சூர் பவர் ப்ளாண்டின் எட்டுல நாலு யூனிட்கள் ட்ரிப்பாகி விட மின்வெட்டு நேரத்தையும் அதிகரிச்சிருக்காங்க. பாதிப்பு பெங்களூரை முழுசா எட்டலைன்னாலும் வெட்டு விழும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நூற்றாண்டுகளா வேர் விட்டுத் தளைச்சு நின்ன பல விருட்சங்களையும்....


அடர்ந்த காடுகளயும்.....வெட்டி சாச்சுட்டு மழையில்லன்னு புலம்பிட்டிருக்கோம். ஆரம்பப் பத்திகளில் நான் வெளிப்படுத்தியிருக்கிற கருத்துகளைப் பிரதிபலிச்ச நண்பர் சதங்காவின் புவிநாள் பதிவும் என்னைக் கவர்ந்தது. அதுல இரண்டு பத்திரிகைக் கட்டுரைகளைப் பகிர்ந்திருந்திருந்தார். இய‌ற்கை வேளான் விஞ்ஞானி ந‌ம்மாழ்வார் சொன்னதாக சதங்கா பகிர்ந்ததிலிருந்து:

இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.

மரங்க செய்யற பேருதவி நாம சின்ன வயசுல படிச்சதுதான். இப்ப திரும்ப நினைவு படுத்திக்கதான் வேண்டியிருக்கு. சில வருடம் முன் நண்பர் உழவன் கார் பார்க் செய்ய தன் வீட்டிலிருந்த மரங்களை வெட்டலாமான்னு முதல்ல யோசிச்சு அப்புறம் வேண்டாம்னு முடிவெடுத்ததைப் பகிர்ந்திருந்தார். அவரைப் பாராட்டிய கையோடு நான் எழுதிய கதைதான் முதன் முதலில் தினமணி கதிரில் எனக்கொரு வாசலைத் திறந்துச்சு: வயலோடு உறவாடி. உங்களுக்கு படிக்க நேரமில்லாட்டாலும் நான் அதன் மூலம் சொல்ல விரும்புனது: வயலு வரப்பு தோட்டந்தொரவு வச்சிருந்தா முடிஞ்ச வரை அதை அப்படியே பேணமுடியுதா பாருங்க. வளைச்சுப் போடக் கண்கொத்திப் பாம்பா இருக்குறாங்க ரியல் எஸ்டேட்காரங்க. வீட்டச் சுத்தி மண்ணா இருக்கிற பூமியை பராமரிக்க கஷ்டமுன்னு சிமெண்ட்டப் போட்டு மூடாதீங்க. வீட்டில இருக்கிற மரங்கள விட்டுவையுங்க. அடுக்கு மாடிக்காரங்க தொட்டியிலயாவது செடி வளருங்க. உங்க பக்கம் இருக்கிற பூங்கா அல்லது சாலையில மரக்கன்றுகளை நட்டு குழந்தைகளைத் தண்ணி ஊத்திப் பரமாரிக்க ஊக்கப் படுத்துங்க ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமியைப் போல: One Boy One Tree

பாருங்க உழவன் ஒரு தனிமனிதனா யோசிச்சு ஒரு மரத்தை வெட்டாம விட்டதை ‘புதிய தலைமுறை’ பத்திரிகைப் பாராட்டி பரிசு வழங்கியிருந்துச்சு, அது எதுக்கு? எல்லாராலும் ஏதோ ஒரு விதத்துல இயற்கையைக் காக்க உதவ முடியும்னு உணர்த்துறதுக்காகதான்:

சென்னையிலிருந்த வரை (இப்ப இருப்பது கோவை) அவரோட குட்டி மகளுக்கு எத்தனை சுத்தமான காத்தை அந்த மரங்கள் கொடுத்திருக்கும்? ‘என் வீட்டுத் தோட்டத்துக்கு வரும் வண்ணத்துப்பூச்சிகளுக்குக் குட்டிக் கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் செல்கிறாள் அகமதி’ன்னு அடுத்த சில மாசத்துல அவர் பகிர்ந்த ஒரு ட்விட்டர், புன்னகையை வரவச்சதோட சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளின் வரவு அந்த மரங்களோட ஆசிர்வாதமுன்னும் நினைக்க வச்சது:)!

ஈரோடு கதிர் மூலமாக நமக்கெல்லாம் தெரியவந்த கோடியில் இருவரை மறக்க முடியுமா? தன்னலமற்று இந்தப் புவிக்காக ஆயிரக்கணக்கான மரங்களை நட்டவங்க.

‘நட்டு வளக்காட்டாலும் வெட்டிச் சாய்க்காதீங்க’ன்னு விசும்புகின்றனவோ இந்த Weeping Willow மரங்கள்:

சென்ற வருட புவிதினத்தின் போது நான் ஃப்ளிக்கரில் பகிர்ந்த படம் இது:

உலகின் நிலையான சொத்து எதுவென உணருவோம்!
***


இப்பதிவுக்காக அளித்த விருதுக்கு நன்றி வல்லமை!

http://www.vallamai.com/news-cat/special-news/19606/

49 comments:

 1. மிகவும் பயனுள்ள பதிவு.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அருமையான பதிவு. மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு மரமும் வெட்டப் படும் போது மனது வேதனைப் படுகிறது.
  உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 3. //உலகம் போற அபாயமான பாதையை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு இருக்கிற வளத்தையாவது விட்டு வைக்கணுமேங்கிற அக்கறையிலே அங்க இங்கக் கூட்டு முயற்சியா செயல்படுற இயற்கை ஆர்வலர்களையும் வேலையத்தவங்கன்னு நினைக்கிறாங்க சிலரு. கொஞ்சம் பேராவது உரக்க எடுத்துச் சொல்லிக் களமிறங்கி செயல்படுறதாலதான், பூமியக் காக்க நம்மால என்ன முடியும்ங்கிற சிந்தனை தனி மனுசங்களுக்கு ஏற்படுது//

  அதேதான் ராமலக்ஷ்மி.. அதுக்காக நாம சொல்றதை சொல்லாம இருக்க முடியுமா என்ன?.. புரிஞ்சுக்காதவங்க புரிஞ்சுக்கறவரைக்கும் நாம சொல்லிட்டே இருப்போமே..

  ReplyDelete
 4. மிக நல்ல பகிர்வு.மனதை தொட்டது.உணர்வுகள் மனதை அழுத்துகிறது.

  ReplyDelete
 5. மரங்கள் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது.

  இடுகை அருமை!

  முந்தி ஒரு பாட்டுப்பாடுவோம் அது நினைவுக்கு முழுசா வரலை

  'வன மகோத்ஸவம் கொண்டாடுவோம்
  வான் பரமன் அருளினாலே' ன்னு ஆரம்பிக்கும்.

  ReplyDelete
 6. எங்கள் ஏரியாவில் மரங்களின் கிளைகளைக் கூட வெட்டி ட்ரிம் செய்யக் கூட நான் அனுமதித்ததில்லை இங்கும் சாலைகளின் விரிவாக்கத்திற்கு மரங்களைப் பலி கொடுத்து நிறைய வெப்பம் வாங்கியிருக்கிறோம். இயற்கையின் அடிப்படை உண்மைகளை மறந்து தற்காலிக வசதிகளில் மூழ்கும் மனிதனை அறியாமை இது. மரங்கள் இருந்து பார்த்த ஏரியாவை அவைகள் இல்லாமல் போட்டால் தார்ச் சாலைகளாய்க் காணும் போது சந்தோஷமா ஏற்படும்?

  ReplyDelete
 7. மரம வளர்ப்போம் மழை பெறுவோம்.

  ReplyDelete
 8. இருக்கிற கொஞ்ச நஞ்ச மரங்களையும், சாலை விஸ்தரிப்பு, அது-இது என ஏதோ காரணத்திற்கு வெட்டிக் கொண்டு இருக்கிறோம். சுத்தி சுத்தி பொட்டல் காடாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது.

  மரங்கள் தான் நமக்குச் சொத்து என புரிய வைக்கும் பதிவு. நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. பொக்கிஷங்களை வெட்டும் மனங்கள்உணர்ந்துதான் செய்கின்றனவா.
  எங்கள் ஊரில் சில மரங்கள் பிள்ளையாரால் காப்பாற்றப்
  படுகின்றன.!! மரத்தடிகளில் திடீர்ப் பிள்ளையார் வந்து விடுகிறார்.

  கணபதிக்கு நமஸ்காரம்.
  கடைசிபடம் மனசைக் கொத்துகிறது:(

  ReplyDelete
 10. இன்றைய சூழலுக்கு ஏற்ற அருமையான படங்களும் கருத்துக்களும். இங்கு எனது பதிவு குறித்து சொல்லியதற்கு நன்றிகள் பல. நான் பரப்ப நினைத்தது மரம் என்றால், தாங்கள் பரப்புவது தோப்புக்களை ! அற்புதம் !!

  ReplyDelete
 11. “நாட்டின் செல்வமே காற்று, தண்ணீர், மண், காடுகள், தாதுஉப்புக்கள், ஆறுகள், ஏரிகள், மாகடல்கள், இயற்கை அழகு, வனஉயிர்களின் உறைவிடம், உயிரனவளம் ஆகியவைதான். இவைகள்தான் முழுமையான பொருளாதாரம். இவற்றிலிருந்துதான் எல்லா பொருளாதார நடவடிக்கைகளும் வேலைவாய்ப்பும் கிடைக்கின்றன. இவைதான் உலகத்தின் நிலையான சொத்து//

  இந்த பொக்கிஷங்களை இழந்து விட்டு வேறு சொத்துக்களை தேடி ஓடும் மனிதர்களை என்ன சொல்வது.!

  பூமியை காக்க மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்.

  கண்ணை விற்று ஒவியம் வாங்கிய் கதை ஆகி விட கூடாது. மரங்களை வெட்டி சாய்த்து விட்டு மழையை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்.

  அருமையான சான்றுகளுடன் உண்மையான நிலையான பொக்கிஷம் எது என்பதை விளக்கி விட்டீர்கள் கடைசி படத்தில் உள்ளது போல் நிறைய மரம் வளர்த்து மழை பெறுவோம்.

  அருமையான் பதிவை அளித்த ராமலக்ஷ்மிக்கு நன்றி.

  ReplyDelete
 12. பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. மாற்றம் தந்த பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்.....

  ReplyDelete
 14. படங்கள் + பதிவு அருமை. உழவனுக்கும் வாழ்த்துகள்

  கடைசி படம் எங்கு எடுத்தது? வெளி நாடா?

  ReplyDelete
 15. அருமையான பதிவு.

  எல்லோரும் தெரிந்து கொள்ளும் வரை சொல்லிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

  மரம் வளர்ப்போம்
  மழை வளம் காப்போம்.

  ReplyDelete
 16. அருமையான அவசியமான இடுகை.

  ReplyDelete
 17. மிகவும் வருத்தமளிக்கக்கூடிய பதிவு....இராமலஷ்மி

  ஒரு பக்கம் பெருகும் மக்கள்தொகை....நகரை விரிவடைய செய்கிறதாகவே வயல்களை அடுக்குமாடிகளாக மாற்றப்படுவதற்க்கு காரணம் என‌ ஒரு தரப்பினர் கூறுகின்றனர்...மரங்களை வெட்டிக்கொண்டு சாலைகளை விரிவாக்கம் செய்துக்கொண்டிருந்த காண்ட்ரெக்டரிடம் கேட்டதுக்கு, விபத்துகள் அதிகமானாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசாங்கத்தை எதிர்த்து மறியலும் செய்வீர்கள்,சாலையை விரிவாக்கம் செய்தால் மரங்களை வெட்டாதென்னு மறியலும் பன்னுவிங்கன்னு வெடுக்குனு கேட்டதும், நான் கற்றுக்கொண்ட ஒரு தாரக மந்திரம் "நமக்கேன் வம்பு".

  மாறிவிட்ட சீதோஷண நிலையால் காலம் தப்பி பெய்யும் பருவமழையால் விவசாயி சந்திக்கும் நஷ்டமோ சொல்லி மாலாது...ஒரு நான்கு வருடம் முன்பாக நண்பனின் தந்தை அவரது நிலத்தில் நெற்பயிரிட்டு 10 நாட்கள் பெய்யென பெய்த மழையால் அடைந்த நஷ்டத்திற்க்கு பிறகு அந்த நிலத்தை ஒரு ரியல் எஸ்டேட்கார‌ரிடம் விலைபேசும் அளவிற்க்கு சென்றுவிட்டார்.அதற்க்கு அவர் சொன்ன காரணம்...கால சீதோஷண நிலமை மாறிவிட்டதால் இனி நிலங்களை நம்பி பயனில்லை பேசாமல் நிலத்தை ஒரு விலைக்கு விற்றுவிட்டு அந்த பணத்தை ஒரு பொதுதுறை வங்கியில் டெப்பாஸிட் பன்னிட்டு மாச வட்டி வாங்கி சாப்பிடலாம்ம்ன்னு முடிவு பன்னிட்டேன்னு சொன்னது உண்மையில் மனது வலித்தது...நண்பனின் பிடிவாதத்தால் அந்த முடிவு பின்வாங்கப்பட்டது..தற்சமயம் அந்த நிலத்தில் சவுக்கு பயிரிடப்பட்டு வருகிறது.

  ஒரு புறம் ஒரு நாடு முன்னேறவேண்டுமென்றால் தொழில்துறையில் தான் நாட்டம் காட்டவேண்டும் என ஒரு தரப்பு கூறுகின்றது.விளைவு, காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டு hyundaiகார் கம்பெனிகளாகவும், Nokia செல்போன் நிறுவனமாகவும்,
  காட்சியளிக்கிறது.இது நியாயமா என கேள்வி எழுப்பினால்,இதனால் எத்தனை குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது தெரியுமா? என பதில் வருகிறது இத்தரப்பினரிடமிருந்து :(

  என்னதான் தொழில்துறையில் விரிவடைந்தாலும் நாம் பசிக்கு சோறு தான் திங்கமுடியும்....செல்போன்களையும்,ஆப்பிள் கம்ப்யூடரையும் திங்கமுடியாது.

  மழைவளம் மறித்து மனைவளம் பெறுகிறது என்பதுதான் இன்றைய சூழ்நிலை

  காடுகளையும்,வயல்களையும் அழித்து செய்யப்படும் இயந்திரங்கள் கடைசியாக நம் உயிரை வாங்கும்!!இது காலசக்கரத்தின் விதி!!

  ReplyDelete
 18. பெருமை சேர்க்கும் பதிவுங்க.

  ReplyDelete
 19. //‘உறவைக் கொண்டாடும் நாட்களை மேலை நாட்டுலருந்து இறக்குமதி செஞ்சு காசு பாக்குறாங்க வியாபாரிங்க’ என சிலபேர் அலுத்துக்கிற போது சரின்னே தோணுனாலும் இன்னொரு பக்கம் ‘இப்ப விடவோ அப்ப விடவோ’ன்னு நைஞ்சு கிடக்கிற உறவு இழைகளைப் பார்க்கையிலே அவற்றுக்கான தேவையும் வந்திடுச்சோன்னும் எண்ணம் ஏற்படுது//

  ரொம்ப அருமையான இந்த தருணத்தில் மிகத் தேவையான
  பதிவு ராமலக்ஷ்மி. மிக்க நன்றி.

  ReplyDelete
 20. தமிழகம் போல கர்நாடகாவின் பலபாகங்கள்ல திடுதிப்புன்னு மின்வெட்டு. // தவறான தகவல். இது பெங்களூரில் என்று தான் சொல்லி இருக்கனும்னு நினைக்கிறேன். எமது அலுவலக நண்பர்களிடம் பேசிய வகையில் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே) கிராமங்களில் 12 மணி நேர கடுமையான மின்வெட்டு அமலில் இருக்கிறது. தற்பொழுது பெங்களூரும் சேர்ந்துவிட்டது தமிழ்நாட்டைப் போல சென்னை மட்டும் என்ன எச்சுல பொறந்த மொசையானு யாரும் பெங்களூருக்கு மட்டும் ஏன் மின்வெட்டு இல்லைன்னு போராட்டம் நடத்துன மாதிரி தெரியல அதனால பெங்களூர் தப்பிச்சிட்டு இருந்தது இப்ப அதுவும் கட்டத்தில்.......

  ReplyDelete
 21. இயற்கையை நேசிக்கும் & நேசிக்க தூண்டும் நற்பணி செய்யும் பதிவு!

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் said...

  /மிகவும் பயனுள்ள பதிவு.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்./

  நன்றி vgk சார்.

  ReplyDelete
 23. Rathnavel Natarajan said...
  /அருமையான பதிவு. மனதை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு மரமும் வெட்டப் படும் போது மனது வேதனைப் படுகிறது.
  உங்களது பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி அம்மா./

  மகிழ்ச்சியும் நன்றியும் சார்.

  ReplyDelete
 24. அமைதிச்சாரல் said...
  //அதேதான் ராமலக்ஷ்மி.. அதுக்காக நாம சொல்றதை சொல்லாம இருக்க முடியுமா என்ன?.. புரிஞ்சுக்காதவங்க புரிஞ்சுக்கறவரைக்கும் நாம சொல்லிட்டே இருப்போமே..//

  ஆம், நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 25. Asiya Omar said...

  /மிக நல்ல பகிர்வு.மனதை தொட்டது.உணர்வுகள் மனதை அழுத்துகிறது./

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 26. துளசி கோபால் said...

  /மரங்கள் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது.

  இடுகை அருமை! /

  நன்றி மேடம்.

  /'வன மகோத்ஸவம் கொண்டாடுவோம்
  வான் பரமன் அருளினாலே' ன்னு ஆரம்பிக்கும்./

  பாருங்க கொண்டாட்டம் நம்ம நாட்டிலேயே இருந்திருக்கு.

  ReplyDelete
 27. ஸ்ரீராம். said...

  /மரங்கள் இருந்து பார்த்த ஏரியாவை அவைகள் இல்லாமல் போட்டால் தார்ச் சாலைகளாய்க் காணும் போது சந்தோஷமா ஏற்படும்?/

  வளரும் நகரங்களின் தேவைகளாய் சாலைகளும் கட்டிடங்களும் மட்டுமே பார்க்கப் படுவது வேதனை. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 28. kg gouthaman said...

  /மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்./

  நன்றி கெளதமன்.

  ReplyDelete
 29. வெங்கட் நாகராஜ் said...

  /மரங்கள் தான் நமக்குச் சொத்து என புரிய வைக்கும் பதிவு. நல்ல பகிர்வுக்கு நன்றி./

  நன்றி வெங்கட்.

  ReplyDelete
 30. வல்லிசிம்ஹன் said...

  /பொக்கிஷங்களை வெட்டும் மனங்கள்உணர்ந்துதான் செய்கின்றனவா.
  எங்கள் ஊரில் சில மரங்கள் பிள்ளையாரால் காப்பாற்றப்
  படுகின்றன.!! மரத்தடிகளில் திடீர்ப் பிள்ளையார் வந்து விடுகிறார்.
  கணபதிக்கு நமஸ்காரம்./

  திடீர்ப் பிள்ளையார்கள் எங்கெங்கும் எழுந்தருள வேண்டிக்குவோம். நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 31. சதங்கா (Sathanga) said...

  /இன்றைய சூழலுக்கு ஏற்ற அருமையான படங்களும் கருத்துக்களும்./

  நன்றி சதங்கா.

  ReplyDelete
 32. கோமதி அரசு said...

  /கண்ணை விற்று ஒவியம் வாங்கிய் கதை ஆகி விட கூடாது. மரங்களை வெட்டி சாய்த்து விட்டு மழையை எதிர்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்./

  சரியாகச் சொன்னீர்கள். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 33. Lakshmi said...

  /பயனுள்ள பதிவு. வாழ்த்துகள்./

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 34. manazeer masoon said...

  /மாற்றம் தந்த பதிவிற்கு கோடான கோடி நன்றிகள்...../

  மிக்க நன்றி.

  ReplyDelete
 35. மோகன் குமார் said...

  /படங்கள் + பதிவு அருமை. உழவனுக்கும் வாழ்த்துகள்

  கடைசி படம் எங்கு எடுத்தது? வெளி நாடா?/

  பெங்களூர் மைய நூலகத்துக்கு முன் இருக்கிற இடம். சென்ற வருடம் எடுத்த படம். நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 36. கோவை2தில்லி said...
  /அருமையான பதிவு.

  எல்லோரும் தெரிந்து கொள்ளும் வரை சொல்லிக் கொண்டே தான் இருக்க வேண்டும். /

  நன்றி ஆதி.

  ReplyDelete
 37. ஸாதிகா said...
  /அருமையான அவசியமான இடுகை./

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 38. Nithi Clicks said...
  /என்னதான் தொழில்துறையில் விரிவடைந்தாலும் நாம் பசிக்கு சோறு தான் திங்கமுடியும்....செல்போன்களையும்,ஆப்பிள் கம்ப்யூடரையும் திங்கமுடியாது./

  மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நண்பரின் முடிவு ஆறுதலளிக்கிறது. ஒருசில பேர் மட்டுமே சிரமங்களுக்கு நடுவிலும் விவசாயத்தை உறுதியாகத் தொடருகிறார்கள்.

  விரிவான பகிர்வுக்கு நன்றி நித்தி.

  ReplyDelete
 39. தாராபுரத்தான் said...
  /பெருமை சேர்க்கும் பதிவுங்க./

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 40. புவனேஸ்வரி ராமநாதன் said...
  //ரொம்ப அருமையான இந்த தருணத்தில் மிகத் தேவையான
  பதிவு ராமலக்ஷ்மி. மிக்க நன்றி./

  நன்றி புவனேஸ்வரி.

  ReplyDelete
 41. செந்திலான் said...
  /தமிழகம் போல கர்நாடகாவின் பலபாகங்கள்ல திடுதிப்புன்னு மின்வெட்டு. // தவறான தகவல். இது பெங்களூரில் என்று தான் சொல்லி இருக்கனும்னு நினைக்கிறேன். /

  பத்திரிகை செய்தியின் அடிப்படையில் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் தந்துள்ள தகவல் வருத்தம் அளிக்கிறது. சாலை, பேருந்து என எல்லா அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு ஓட்டு வங்கிகளாக மட்டுமே அரசுக்குக் கிராமங்கள்.

  பெங்களூர் கடந்த ஒருசில ஆண்டுகளாகதான் கோடையில் பரவாயில்லை என சொல்லும்படியாக இருந்தது மின் சப்ளை. இப்போது கட்டத்துக்குள் வந்தாயிற்று.

  ReplyDelete
 42. நம்பிக்கைபாண்டியன் said...
  /இயற்கையை நேசிக்கும் & நேசிக்க தூண்டும் நற்பணி செய்யும் பதிவு!/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 43. மரங்கள் மண்ணின் வரங்கள் ..அருமையான அக்கறையான பதிசு

  ReplyDelete
 44. @ nadi narayanan ,

  மிக்க நன்றி.

  ReplyDelete
 45. நான் முடிந்த வரை மரங்கள் வளர்த்து வருகிறேன்.. எங்கள் கோபியில் சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்டி மொட்டையாக்கி விட்டார்கள். வருத்தமாக இருந்தாலும் வேறு வழி இல்லை என்பதும் உண்மை. இதற்காக வேறு இடங்களில் வைக்கலாம் ஆனால் வெட்ட காட்டும் ஆர்வத்தை வளர்ப்பதில் காட்ட மறுக்கிறார்கள் :-(

  ReplyDelete
 46. @ கிரி,

  மரங்கள் வளர்ப்பது அறிந்து மகிழ்ச்சி.

  வேறு வழியில்லை என மனதை சமாதானம் செய்து கொள்ள இயலவில்லை. இறுதியாக நீங்கள் சொல்லியிருப்பதும் உண்மை.

  ReplyDelete
 47. well said ramalaksmi. i will work immediately for this.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin