Thursday, April 19, 2012

சிற்றருவியின் சங்கீதம் - வடக்கு வாசலில்..

சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதமாக
நிற்காமல் சிற்றருவி

கூடச் சேர்ந்து இசைக்கக்
காட்டுக் குயிலோ
சுற்றி வந்து ரசிக்க
ஒரு சிட்டுக்குருவியோ
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியோ
ஏதுமற்றத் தனிவெளியில்.

ஆகாய மேகங்கள்
கண்டும் காணாது நகர

சூரியனின் ஒளிக்கதிர்கள்
அருவியின் தலைகோதிப்
பின்னலிட்டு
வானவில்லின் வண்ணங்களில்
பூச்சூட்டி
அழகு பார்க்கும் மனமின்றித்
திரும்பிக் கொள்ள

சூழ இருந்த பெருமலைகளோ
அசைந்து விலகவும் இயலாத
ஆத்திரத்தில்
குதூகலப் பாடலைத் தவிர்க்கக்
கொடும் பாறைகளாய் இறுகி.

சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதமாக
நிற்காமல் சிற்றருவி.
***

படம் நன்றி: ஸ்ருதி http://www.flickr.com/photos/sruthiclicks/6252978980/in/photostream


ஏப்ரல் 2012 வடக்குவாசலில் இக்கவிதையும், இதழின் அட்டையில் நான் எடுத்த ஒளிப்படமும்! நன்றி வடக்கு வாசல்!35 comments:

 1. சிற்றருவியின் சங்கீதம் சுகமோ சுகம்.

  ReplyDelete
 2. சூரியனின் ஒளிக்கதிர்கள்
  அருவியின் தலைகோதிப்
  பின்னலிட்டு
  வானவில்லின் வண்ணங்களில்
  பூச்சூட்டி
  அழகு பார்க்கும் மனமின்றித்
  திரும்பிக் கொள்ள

  ரசனை நிரம்பிய வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. சுகமான கவிதை.யார் என்ன சொன்னால் என்ன, யார் மதித்தால் என்ன, மதிக்கா விட்டால் என்ன...என் கடமை சலசலத்து ஓடுவதே...!

  ReplyDelete
 4. அடுத்தவர் சந்தோஷமாக இருந்தால் பொறாமைப் படும் மனிதர்களை நினைவூட்டுகிறது கவிதை. என் அனுமானம் தவறோ?

  ReplyDelete
 5. சிலிர்ப்பாயிருக்கிறது கவிதை.அத்தனை குளிர்ச்சி !

  ReplyDelete
 6. அழகான கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 7. சுகமான கவிதை,வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 8. சுருதி லயத்தோடு
  சலசலத்து விழுந்து
  வற்றாத சங்கீதமாக
  நிற்காமல் சிற்றருவி.//

  வற்றாத சங்கீதமாய் நிற்காமல் சிற்றருவி விழுந்து கொண்டு இருக்கட்டும்.

  வாழ்த்துக்கள்.

  கவிதை அருமையாக இருக்கிறது ராமல்க்ஷ்மி.

  ReplyDelete
 9. I Feel like having a Bath in Aruvi. கவிதை அவ்வளவு இனிமையா நல்லா வந்திருக்கு.

  ReplyDelete
 10. அருவி பற்றின கவிதை ரொம்பவே ரசனைக்கு விருந்தளித்தது. மனசைத் தொட்டுச் சொல்லணும்னா... உங்களோட படம் அட்டையில வெளிவந்ததுக்கு ‘வடக்கு வாசல்’தான் பெருமைப்படணும். (நிஜமா மனசுல உணர்றதைதான் சொல்றேன்!)

  ReplyDelete
 11. சிற்றருவி எனக் கொட்டுகிறது கவிதை!

  ReplyDelete
 12. சுகமான கவிதை. வடக்கு வாசலில் உங்கள் கவிதையும் படமும் - புத்தகத்தில் பார்த்து ரசித்தேன். இப்போது மீண்டும் உங்கள் வலைப்பூவில்!

  ReplyDelete
 13. இனிமையான அழகான சுகமான ரசனை மிகுந்த கவிதை வரிகள்.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. சிற்றருவியின் சங்கீதம்...சாரல் மழை..

  ReplyDelete
 15. //சுருதி லயத்தோடு
  சலசலத்து விழுந்து
  வற்றாத சங்கீதமாக
  நிற்காமல் சிற்றருவி//

  சல சல சல ...
  சிலிர்க்கவைக்கும் சின்னருவி
  சீரான ச்ருதி லயம்
  சுகமளிக்கும் சங்கீதம்.

  குருவியில்லை, குயிலுமில்லை.
  கும்பலாய் சேர்ந்திசைக்க‌
  கண்கவரும் சிறகடிக்கும்
  பட்டுப்பூச்சி ஒன்றில்லை


  மேலே அம்மேகங்கள்
  மெல்லவே நகர்ந்து செல்ல‌
  கதிரவனின் ஒளிக்கதிர்கள்
  காதலுடன் மனமுவந்து

  சின்னருவி கூந்தலிலே
  சித்திரம் போல் பூக்கள் தூவி
  அழகே ! என் ஆரணங்கே என‌
  அன்புடனே அரவணைக்க

  மனமின்றி மலைகள் பக்கம்
  முகமதைத் திருப்பிக்கொள்ள‌
  மலைகளுமே இறுகி நிற்க‌

  மன்ந்தரளா இதயத்தோடு
  இன்னிசைக்கும் சின்னருவி !
  நீ
  என்ன வரம் வாங்கி வந்தாய் !!

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 16. தேவதைக்குப் பிடித்த காலணிகள் ..அருமையான கவிதை. இன்றைய கல்கியில் வெளிவந்திருப்பமைக்குப் பாராட்டுகள். குழந்தையின் மனவுணர்வுகளை....................................................................................................................................................................................................

  புள்ளியிட்ட இடங்கள் இதன் பதிவை நீங்கள் போடும் போது அங்கு ஃபில் அப் செய்கிறேன்!!!

  ReplyDelete
 17. இந்தக் கோடைக்கு அழகான படம். கேட்காவிட்டாலும் இனிக்கும் சங்கீதம். அருமை ராமல்க்ஷ்மி.

  ReplyDelete
 18. Lakshmi said...
  //சிற்றருவியின் சங்கீதம் சுகமோ சுகம்.//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 19. இராஜராஜேஸ்வரி said...

  //ரசனை நிரம்பிய வரிகளுக்குப் பாராட்டுக்கள்..//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 20. ஸ்ரீராம். said...
  //சுகமான கவிதை.யார் என்ன சொன்னால் என்ன, யார் மதித்தால் என்ன, மதிக்கா விட்டால் என்ன...என் கடமை சலசலத்து ஓடுவதே...!//

  அதே..

  //அடுத்தவர் சந்தோஷமாக இருந்தால் பொறாமைப் படும் மனிதர்களை நினைவூட்டுகிறது கவிதை. என் அனுமானம் தவறோ?//

  தவறில்லை. நன்றி ஸ்ரீராம்:).

  ReplyDelete
 21. ஹேமா said...
  //சிலிர்ப்பாயிருக்கிறது கவிதை.அத்தனை குளிர்ச்சி !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 22. கோவை2தில்லி said...
  //அழகான கவிதை. பாராட்டுகள்.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 23. S.Menaga said...
  //சுகமான கவிதை,வாழ்த்துக்கள் அக்கா!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 24. கோமதி அரசு said...
  //வற்றாத சங்கீதமாய் நிற்காமல் சிற்றருவி விழுந்து கொண்டு இருக்கட்டும்.

  வாழ்த்துக்கள். கவிதை அருமையாக இருக்கிறது ராமல்க்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 25. நிரஞ்சனா said...
  //I Feel like having a Bath in Aruvi. கவிதை அவ்வளவு இனிமையா நல்லா வந்திருக்கு.//

  நன்றி நிரஞ்சனா:).

  ReplyDelete
 26. கணேஷ் said...
  //அருவி பற்றின கவிதை ரொம்பவே ரசனைக்கு விருந்தளித்தது.//

  நன்றி.

  //உங்களோட படம் அட்டையில வெளிவந்தது....//

  அளிக்கப்பட்ட கெளரவமாக உணர்கிறேன். அதுவே சரி. அன்புக்கு நன்றி:).

  ReplyDelete
 27. கே. பி. ஜனா... said...
  //சிற்றருவி எனக் கொட்டுகிறது கவிதை!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 28. வெங்கட் நாகராஜ் said...
  //சுகமான கவிதை. வடக்கு வாசலில் உங்கள் கவிதையும் படமும் - புத்தகத்தில் பார்த்து ரசித்தேன். இப்போது மீண்டும் உங்கள் வலைப்பூவில்!//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 29. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //இனிமையான அழகான சுகமான ரசனை மிகுந்த கவிதை வரிகள்.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.//

  நன்றி vgk சார்.

  ReplyDelete
 30. பாச மலர் / Paasa Malar said...
  //சிற்றருவியின் சங்கீதம்...சாரல் மழை..//

  நன்றி மலர்.

  ReplyDelete
 31. sury said...
  //சல சல சல ...
  சிலிர்க்கவைக்கும் சின்னருவி
  ......
  நீ
  என்ன வரம் வாங்கி வந்தாய் !!//

  வற்றாத சின்னருவியின் வரிகள் அனைத்தும் அருமை! மிக்க நன்றி சார்:)!

  ReplyDelete
 32. ஸ்ரீராம். said...
  //தேவதைக்குப் பிடித்த காலணிகள் ..அருமையான கவிதை. இன்றைய கல்கியில் வெளிவந்திருப்பமைக்குப் பாராட்டுகள். குழந்தையின் மனவுணர்வுகளை......................................................

  புள்ளியிட்ட இடங்கள் இதன் பதிவை நீங்கள் போடும் போது அங்கு ஃபில் அப் செய்கிறேன்!!!//

  தகவலுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். இங்கே கிடைக்க இன்னும் சில தினங்கள் ஆகலாம். நிரப்ப இருக்கும் கருத்துக்குக் காத்திருப்பேன்:)!

  ReplyDelete
 33. வல்லிசிம்ஹன் said...
  //இந்தக் கோடைக்கு அழகான படம். கேட்காவிட்டாலும் இனிக்கும் சங்கீதம். அருமை ராமல்க்ஷ்மி.//

  நன்றி வல்லிம்மா. படம் பிட் போட்டிகளில் அடிக்கடி பங்கு பெறுகிற தோழி ஸ்ருதியுடையது:)!

  ReplyDelete
 34. சிற்றருவியின் சங்கீதம் எனக்கும் கேட்கின்றது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin