வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தேவதைக்குப் பிடித்த காலணிகள் - கல்கியில்..

வ்வொரு ஞாயிறும் தன்
ஒழுங்கினைப் பாராட்டித்
தலைப்பக்கம் பரிசு
வைத்துச் செல்லும் தேவதைக்குச்
செருப்புச் செய்யப் போவதாகச்
சொன்னாள் பப்பு.


‘தேவதையைப் போல்
இருக்கிறாய்’
அம்மா அடிக்கடி சொன்னதால்
தன் காலளவையே
வரைந்து கொண்டாள்
மஞ்சள்நிற அட்டையில்.

யார் உதவியுமின்றிக்
கவனமாகக் கத்தரித்துப்
பொன்னிற ரிப்பன்களைக்
கயிறாக இணைத்தாள்.

தேவதையின் காலைக்
கடித்து விடக்கூடாதெனத்
தான்அணிந்து வீடுமுழுக்க
நாளெல்லாம் நடந்தாள்.

நட்சத்திரங்கள் மின்னும்
வான்வெளிக்குச்
சன்னலைத் திறந்து விட்டு
அதன் மாடத்தில் வைத்தாள்.

விடிந்ததும்
அவற்றைக் காணாது
சந்தோஷத்தில் கூவுகிறாள்.

‘காற்றில் பறந்திருக்கும்’
நினைத்ததைச் சொல்லாமல்
‘ஆம் கண்ணே, தேவதை
எடுத்துக் கொண்டாள்’ என்று
அணைத்துக் கொள்கிறாள் அம்மா.

சன்னலுக்கு அந்தப்பக்கம்
தெருவில் குப்பைகளை
அள்ளிக் கொண்டிருந்தவன்
திகைப்போடு திருப்பித் திருப்பிப்
பார்த்துக் கொண்டே நிற்கிறான்
‘யார்வீசிச் சென்றிருப்பார்’ என..
வேலைப்பாடு மிகுந்த ஒருசோடி
வெள்ளி செருப்புகளை.
***

29 ஏப்ரல் 2012 கல்கியில்..,

நன்றி கல்கி!


பப்பு செய்த காலணிகள் இங்கே.
கவிதை பப்புவுக்கான என் அன்புப் பரிசு:)!

55 கருத்துகள்:

  1. அருமை அருமை
    இறுதி வரிகள் இல்லாவிட்டால்
    நிச்சயம் தேவதைதான் கொண்டு போயிருப்பாள்
    அதுதான் சரியும் கூட
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. 29.04.2012 தேதியிட்ட கல்கி பக்கம் 44/45 இல் இப்போது தான் படித்து ரஸித்தேன். உடனே இந்தப் பதிவிலும் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை. அருமை..உங்கள் கவிதைகளை புத்தகமாக வெளியிடும்போது, கவனமாக அந்த கடைசி வரிகளை எடுத்து விடுங்கள்.
    அப்படிச் செய்வதனால், கவிதையின் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. அருமை... அருமை...


    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  5. அருமை. ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகுடன் இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. வாவ்!!
    ரொம்ப நல்லாருக்கு,பப்புவுக்கு உங்களுக்கு அன்பான பரிசு! கண்டிப்பா இந்த கவிதை அவளுக்கு வாசிக்கக் கொடுக்கிறேன்.(தமிழ் படிக்க அவ்வ்வ்வ்வ்ளோஓஓஓ இஷ்டம்...ஹ்ம்ம்ம்!!)

    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி, ராமலஷ்மி :‍)

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு ஞாயிறும் தலைப்பக்கம் பரிசு வைத்துச் செல்லும் தேவதையே அப்பாதணிகளைப் பத்திரப்படுத்தியிருக்கலாம். கவிதையும் கருவும் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  8. தேவதைகள் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது போலும். இல்லையெனில் நிச்சயம் அவர்கள்தாம் அதை கொண்டு சென்றிருப்பார்கள்...அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  9. Ramani said...

    /அருமை
    இறுதி வரிகள் இல்லாவிட்டால்
    நிச்சயம் தேவதைதான் கொண்டு போயிருப்பாள்/

    அந்த வரிகள் சொல்லுவது அதைதான்! வாழ்த்துகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. கோவை நேரம் said...

    /வாழ்த்துக்கள்/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வை.கோபாலகிருஷ்ணன் said...

    /29.04.2012 தேதியிட்ட கல்கி பக்கம் 44/45 இல் இப்போது தான் படித்து ரஸித்தேன். உடனே இந்தப் பதிவிலும் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்./

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  12. T.N.Elangovan said...

    /அருமை. அருமை..உங்கள் கவிதைகளை புத்தகமாக வெளியிடும்போது, கவனமாக அந்த கடைசி வரிகளை எடுத்து விடுங்கள்.
    அப்படிச் செய்வதனால், கவிதையின் தாக்கம் நிச்சயம் அதிகரிக்கும்./

    அதில்தான் கவிதையின் ஜீவன் இருப்பதாக உணருகிறேன்:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. Lakshmi said...

    /பாராட்டுக்கள் வாழ்த்துகள்./

    நன்றி லக்ஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  14. சே. குமார் said...

    /அருமை... அருமை...

    வாழ்த்துக்கள் அக்கா./

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  15. கோவை2தில்லி said...
    /அருமை. ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகுடன் இருந்தது./

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  16. சந்தனமுல்லை said...
    /வாவ்!!
    ரொம்ப நல்லாருக்கு,பப்புவுக்கு உங்களுக்கு அன்பான பரிசு! கண்டிப்பா இந்த கவிதை அவளுக்கு வாசிக்கக் கொடுக்கிறேன்.

    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி, ராமலஷ்மி :‍)/

    மகிழ்ச்சி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  17. கீதமஞ்சரி said...
    /கவிதையும் கருவும் வெகு அழகு./

    நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  18. கே. பி. ஜனா... said...

    /தேவதைகள் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது போலும். ...அருமையான கவிதை!/

    நாம் அப்படி நினைக்க குழந்தைகளை ஏமாற்றுவதில்லை தேவதைகள்:)! பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தேவதைகளோடு வாழும் உங்களுக்கு வாழ்த்துகள் அக்கா !

    பதிலளிநீக்கு
  20. அருமையான பரிசு கொடுத்து அசத்திட்டீங்க,.. பப்புவையும் எங்களையும் :-)

    பதிலளிநீக்கு
  21. தேவதையின் காலைக்
    கடித்து விடக்கூடாதெனத்
    தான்அணிந்து வீடுமுழுக்க
    நாளெல்லாம் நடந்தாள்.//

    ஒ ! என்ன அன்பு குழந்தைக்கு!

    தேவதை தினம் பரிசு கொடுக்கலாம் இந்த அன்பான குழந்தைக்கு.

    பப்பு செய்த தங்க காலணிகள் அருமை.

    பப்புவுக்கு ராமலக்ஷ்மி தேவதையின் கவிதை பரிசு அருமை.

    பதிலளிநீக்கு
  22. தேவதைக்குப் பிடித்த காலணிகள் ..அருமையான கவிதை. கல்கியில் வெளிவந்திருப்பமைக்குப் பாராட்டுகள். குழந்தையின் மனவுணர்வுகளை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அதே சமயம் அந்தக் குழந்தையின் உழைப்பு குப்பைக்குச் செல்லும்போது மனம் சங்கடப் பட்டாலும் குழந்தையின் மனதில் தேவதை எடுத்துக் கொண்டது போலத்தான் நம்ப வைக்கப் படுகிறது என்பது ஆறுதல் தருகிறது!

    பதிலளிநீக்கு
  23. ஹேமா said...

    /தேவதைகளோடு வாழும் உங்களுக்கு வாழ்த்துகள் அக்கா !/

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  24. அமைதிச்சாரல் said...

    /அருமையான பரிசு கொடுத்து அசத்திட்டீங்க,.. பப்புவையும் எங்களையும் :-)/

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  25. கோமதி அரசு said...
    //தேவதை தினம் பரிசு கொடுக்கலாம் இந்த அன்பான குழந்தைக்கு.

    பப்பு செய்த தங்க காலணிகள் அருமை.//

    ஆம்:)! நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  26. கவிதை நன்று.

    அச்சு ஊடகத்தில், தங்களின் படைப்புகள் அடிக்கடி இடம் பிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம். said...
    /..அருமையான கவிதை./

    நன்றி ஸ்ரீராம்.

    / அந்தக் குழந்தையின் உழைப்பு குப்பைக்குச் செல்லும்போது மனம் சங்கடப் பட்டாலும்/

    எப்போதும் என் கவிதைகளை சரியாகப் புரிந்திடுவீர்களே:)? இதற்கு மேல் விளக்கம் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதால்.... சன்னல் மாடத்திலிருந்த விலைமதிப்பற்றக் காலணிகளை அணிந்து கொண்டு தன் வெள்ளிச் செருப்புகளையே குப்பையில் வீசிச் செல்கிறாள் தேவதை:)!

    பதிலளிநீக்கு
  28. அமைதி அப்பா said...
    /கவிதை நன்று./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. புரிந்தேன்...தெளிந்தேன்.... நன்றி!

    பதிலளிநீக்கு
  30. //சன்னல் மாடத்திலிருந்த விலைமதிப்பற்றக் காலணிகளை அணிந்து கொண்டு தன் வெள்ளிச் செருப்புகளையே குப்பையில் வீசிச் செல்கிறாள் தேவதை:)! //

    தேவதை வெள்ளிச் செருப்பை கொடுத்ததாக புரிந்துக் கொண்டேன். ஆனால், அந்தக் குழந்தை செய்த செருப்புக்கு மாற்றாக என்று புரிந்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

    இந்த விளக்கம் கவிதையை இன்னும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    பலரது பின்னூட்டங்கள் இதற்கு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  31. கவிதை அசத்தல்.வாழ்த்துகக்ள்!

    பதிலளிநீக்கு
  32. தேவதைக்கு சின்னத்தேவதை செய்த காலணிகள் அருமை.

    மனதைத்தொட்டு நிற்கின்றது கவிதை.

    பதிலளிநீக்கு
  33. அடடா! ரொம்ப லேட்டா வந்துட்டேனேன்னு வருத்தமும், நல்ல ரசனையான கவிதைய மிஸ் பண்ணாம படிச்சதுல சந்தோஷமும் நிரூவுக்கு! கவிதை ரொம்ப நல்லாயிருக்கு! கல்கியில வெளிவந்ததுக்கு என்னோட வாழ்த்துககள்! பப்புவோட காலணிகளை நீங்க கொடுத்திருக்கற லிங்க்குல போய்ப் பாத்தேன். கொள்ளை அழகு!

    பதிலளிநீக்கு
  34. குழந்தைகள் உலகமே தனி.அதை புரிந்து கொள்வது கடினம்.ஆனால் அற்புதமாக கவிதையாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  35. கல்கியில் படித்தோம்.நாடகத்தால் பதில் போட தாமதமாகிவிட்டது.
    கவிதை அருமை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. அருமையாய் இருக்கிறது ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  37. மீள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  38. அமைதி அப்பா said...
    /இந்த விளக்கம் கவிதையை இன்னும் ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    பலரது பின்னூட்டங்கள் இதற்கு உதாரணம்./

    உண்மைதான்:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  39. nadi narayanan said...
    /அருமையோ அருமை ............./

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  40. ஸாதிகா said...
    /கவிதை அசத்தல்.வாழ்த்துக்கள்!/

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  41. மாதேவி said...
    /தேவதைக்கு சின்னத்தேவதை செய்த காலணிகள் அருமை.

    மனதைத்தொட்டு நிற்கின்றது கவிதை./

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  42. நிரஞ்சனா said...
    / பப்புவோட காலணிகளை நீங்க கொடுத்திருக்கற லிங்க்குல போய்ப் பாத்தேன். கொள்ளை அழகு!/

    மகிழ்ச்சியும் நன்றியும்:)!

    பதிலளிநீக்கு
  43. T.N.MURALIDHARAN said...
    /குழந்தைகள் உலகமே தனி.அதை புரிந்து கொள்வது கடினம்.ஆனால் அற்புதமாக கவிதையாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்/

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. Kanchana Radhakrishnan said...
    /கல்கியில் படித்தோம்.நாடகத்தால் பதில் போட தாமதமாகிவிட்டது.
    கவிதை அருமை.வாழ்த்துகள்./

    நன்றி மேடம். நாடகம் சிறப்பாக நடைபெற்றிருக்குமென நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  45. கணேஷ் said...
    /தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்./

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  46. பாச மலர் / Paasa Malar said...
    /அருமையாய் இருக்கிறது ராமலக்ஷ்மி../

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin