சனி, 14 ஏப்ரல், 2012

மழலையின் பாட்டு - ‘வல்லமை’ சித்திரைச் சிறப்பிதழில்..



விண்மீன்களையும் வெள்ளிநிலவையும் காட்டி,
மடியில் கிடத்தித் தொட்டில் போல் ஆட்டி
குழந்தையை உறங்க வைக்கிறவளின் வானம்
முகிலாடையால் மூடிக் கிடந்தது

எங்கோ நடுங்கிய பூமியின் அதிர்வால்
பொங்கிடலாம் கடல் என்றார்கள்

வயிற்றுக்காக வலைவீசப் போயிருந்த
சொந்தங்களின் நினைப்பால்
கலங்கிய மனதைக் காட்டிக் கொள்ளாமல்

வீசும் காற்று பிடில் வாசிக்க
பாசத்துடன் பாடுகிறாள்
கண்ணே கண்ணுறங்கென.

கேட்ட கடலோரக் கூழாங்கற்களும் சிப்பிகளும்
நாளெல்லாம் உருண்ட களைப்பில்
சொகுசாய் மணலுள் புதைந்து
கண் அசர

சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்து
சமர்த்தாக அலைகள் சுருண்டு
பின் வாங்க

கரையின் நீண்ட மணற்பரப்பு
நெட்டி முறிக்கிறது
அயர்வாக.

உறைந்திருந்த அமைதியில்
மறைந்திருந்த அச்சங்களைக்
கரைத்துக் கொண்டிருந்த
அன்னையின் தாலாட்டுக்கு

‘ம்.. ம்..’ எனக் குழந்தை இசைத்த
எதிர்ப்பாட்டை எடுத்துக் கொண்டு
விரைகிறது முகிலொன்று

ஆழ்கடலுக்குள் சென்றிருந்த தந்தையின்
ஓடம் தேடி..
***

13 ஏப்ரல் 2012, வல்லமை சித்திரைச் சிறப்பிதழில்..,நன்றி வல்லமை!
படம் நன்றி: இணையம்




11 ஏப்ரல், கருணை காட்டிய கடல் அன்னைக்கு வந்தனங்கள்.

இயற்கையின் ஆசிகளுடன் நந்தன வருடம் வளமாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்!

52 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்.


    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்து
    சமர்த்தாக அலைகள் சுருண்டு
    பின் வாங்க

    கரையின் நீண்ட மணற்பரப்பு
    நெட்டி முறிக்கிறது
    அயர்வாக.
    //வார்த்தைகளில் புகுந்து விளையாடிய அற்புதமான கவிதைப்படைப்பு ராமலக்‌ஷ்மி.வாழ்த்துகக்ள்

    பதிலளிநீக்கு
  3. இதமாய் இருக்கிறது மழலையின் பாட்டு...

    பதிலளிநீக்கு
  4. சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்து
    சமர்த்தாக அலைகள் சுருண்டு
    பின் வாங்க
    மழலைப் பாட்டுடன் புத்தாண்டு சிறப்பு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. மழலையின் பாட்டு ரொம்ப நல்லா இருக்குங்க. உங்களுக்கும் என் நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வியக்க வைக்கிறது சொல்லாடல். ரசிக்க வைக்கிறது கவிதை. அருமைங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. சொல் ஆளுமை புருவத்தை உயர வைக்கின்றது.அற்புதம்.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-))

    பதிலளிநீக்கு
  8. //வீசும் காற்று பிடில் வாசிக்க...//
    //கூழாங்கற்களும் சிப்பிகளும்
    நாளெல்லாம் உருண்ட களைப்பில்....//
    அற்புதமான வரிகள்!

    பதிலளிநீக்கு
  9. உறைந்திருந்த அமைதியில்
    மறைந்திருந்த அச்சங்களைக்
    கரைத்துக் கொண்டிருந்த
    அன்னையின் தாலாட்டுக்கு

    ‘ம்.. ம்..’ எனக் குழந்தை இசைத்த
    எதிர்ப்பாட்டை எடுத்துக் கொண்டு
    விரைகிறது முகிலொன்று

    ஆழ்கடலுக்குள் சென்றிருந்த தந்தையின்
    ஓடம் தேடி..//

    அருமையான கருத்தாழம் மிக்க தாலாட்டு பாட்டு. குழந்தை பாட்டை முகில் தந்தையிடம் சேர்க்க ஓடத்தில் தன் கண்மணியைப் பார்க்க வந்து இருப்பார் பத்திரமாய் இல்லையா ராமலக்ஷ்மி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை.....

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  11. " எனக் குழந்தை இசைத்த
    எதிர்ப்பாட்டை எடுத்துக் கொண்டு
    விரைகிறது முகிலொன்று

    ஆழ்கடலுக்குள் சென்றிருந்த தந்தையின்
    ஓடம் தேடி.."

    அடடா! அருமையாய் முடித்திருக்கிறீர்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    பதிலளிநீக்கு
  12. ஒரு ஏக்கமும், மிரட்சியும் கலந்த அதே சமயம் குழந்த சம்பந்தப் பட்டது என்பதால் அந்த நேரத்து இனிமை சம்பந்தப் பட்ட நிகழ்வை அழகாகக் கூறும் கவிதை. அருமை. தூங்க வைக்கும்போது குழந்தையின் 'ம்..ம்...' சத்தம்...புன்னகைக்க வைத்தது.

    திரும்பிச் செல்லும் அலைகளுக்குத்தான் எத்தனை உவமைகள் கூற முடிகிறது?!

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை. புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கவிதை.....

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா....

    பதிலளிநீக்கு
  15. கடலன்னையைக் கசந்து பேசாமல், அருமையாக ஒரு கடற்புரத்தைக் கொண்டுவந்து கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். குழந்தையின் குரலைக் கேட்டுத் திரும்பட்டும் அதன் தந்தை.

    பதிலளிநீக்கு
  16. மழலையின் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  17. மழலைப் பாட்டு - அர்த்த நயம் அழகு நயம்....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  18. உறைந்திருந்த அமைதியில்
    மறைந்திருந்த அச்சங்களைக்
    கரைத்துக் கொண்டிருந்த
    அன்னையின் தாலாட்டுக்கு

    ‘ம்.. ம்..’ எனக் குழந்தை இசைத்த
    எதிர்ப்பாட்டை எடுத்துக் கொண்டு
    விரைகிறது முகிலொன்று
    //

    அருமை

    பதிலளிநீக்கு
  19. அருமையான கவிதை.....
    ம்ம்ம் 26 டிசம்பர் 2004 ஆம் ஆண்டு...சமுத்திரதாய் இப்படியாக அதட்டியிருந்தால்...அன்றும் இவ்வாறாக அலைகள் பின்வாங்கப்பட்டிருக்கும்....செய்ய மறந்தது ஏனோ?

    பதிலளிநீக்கு
  20. மாதேவி said...

    //வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  21. ஸாதிகா said...
    //வார்த்தைகளில் புகுந்து விளையாடிய அற்புதமான கவிதைப்படைப்பு ராமலக்‌ஷ்மி.வாழ்த்துகக்ள்//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  22. குமரி எஸ். நீலகண்டன் said...

    //இதமாய் இருக்கிறது மழலையின் பாட்டு.....//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  23. இராஜராஜேஸ்வரி said...

    //மழலைப் பாட்டுடன் புத்தாண்டு சிறப்பு வாழ்த்துகள்..//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நிரஞ்சனா said...

    //மழலையின் பாட்டு ரொம்ப நல்லா இருக்குங்க. உங்களுக்கும் என் நந்தன தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

    நன்றி நிரஞ்சனா.

    பதிலளிநீக்கு
  25. கணேஷ் said...

    //வியக்க வைக்கிறது சொல்லாடல். ரசிக்க வைக்கிறது கவிதை. அருமைங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  26. raji said...

    //சொல் ஆளுமை புருவத்தை உயர வைக்கின்றது.அற்புதம்.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் :-))//

    நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  27. கே. பி. ஜனா... said...

    ***//வீசும் காற்று பிடில் வாசிக்க...//
    //கூழாங்கற்களும் சிப்பிகளும்
    நாளெல்லாம் உருண்ட களைப்பில்....//
    அற்புதமான வரிகள்!/***

    மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. கோமதி அரசு said...

    //அருமையான கருத்தாழம் மிக்க தாலாட்டு பாட்டு. குழந்தை பாட்டை முகில் தந்தையிடம் சேர்க்க ஓடத்தில் தன் கண்மணியைப் பார்க்க வந்து இருப்பார் பத்திரமாய் இல்லையா ராமலக்ஷ்மி.

    வாழ்த்துக்கள்.//

    நம்பிக்கைதானே வாழ்க்கை. நிச்சயமாக. நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  29. வெங்கட் நாகராஜ் said...

    //அருமையான கவிதை.....

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  30. தமிழ்த்தேனீ said...
    //அடடா! அருமையாய் முடித்திருக்கிறீர்கள்//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...

    //நல்ல கவிதை. இனிய வாழ்த்துகள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். said...
    //ஒரு ஏக்கமும், மிரட்சியும் கலந்த அதே சமயம் குழந்த சம்பந்தப் பட்டது என்பதால் அந்த நேரத்து இனிமை சம்பந்தப் பட்ட நிகழ்வை அழகாகக் கூறும் கவிதை. அருமை. தூங்க வைக்கும்போது குழந்தையின் 'ம்..ம்...' சத்தம்...புன்னகைக்க வைத்தது.

    திரும்பிச் செல்லும் அலைகளுக்குத்தான் எத்தனை உவமைகள் கூற முடிகிறது?!//

    மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. கோவை2தில்லி said...
    //அருமையான கவிதை. புத்தாண்டு வாழ்த்துகள்.//

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  34. சே. குமார் said...

    //அருமையான கவிதை.....

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா....//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  35. வல்லிசிம்ஹன் said...

    //கடலன்னையைக் கசந்து பேசாமல், அருமையாக ஒரு கடற்புரத்தைக் கொண்டுவந்து கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். குழந்தையின் குரலைக் கேட்டுத் திரும்பட்டும் அதன் தந்தை.//

    மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  36. Kanchana Radhakrishnan said...

    //மழலையின் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  37. பாச மலர் / Paasa Malar said...

    //மழலைப் பாட்டு - அர்த்த நயம் அழகு நயம்....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி//

    நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  38. Jaleela Kamal said...

    //மிக அருமையான கவிதை//

    நன்றி ஜலீலா.

    பதிலளிநீக்கு
  39. T.N.MURALIDHARAN said...

    //நல்ல கவிதை//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. அமைதிச்சாரல் said...

    //அசத்தலான கவிதை ராமலக்ஷ்மி..//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  41. Nithi Clicks said...
    //அருமையான கவிதை.....
    ம்ம்ம் 26 டிசம்பர் 2004 ஆம் ஆண்டு...சமுத்திரதாய் இப்படியாக அதட்டியிருந்தால்...அன்றும் இவ்வாறாக அலைகள் பின்வாங்கப்பட்டிருக்கும்....செய்ய மறந்தது ஏனோ?//

    கவிதையின் சூழல் புயலுக்கு முன்னான அமைதியோ என எண்ண வைப்பது போலாக.. இங்கே அச்சம் முழுதாக விலகவில்லை. சமுத்திரத் தாயின் அதட்டல் கூட குழந்தையின் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்பதற்காக. (நில அதிர்வு பற்றி அறிந்தாளா தெரியாது). நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதாக முடிகிறது கவிதை.

    நன்றி நித்தி:)!

    பதிலளிநீக்கு
  42. மழலையின் பாட்டு அசத்தல். மழலைகள் என்றுமே ரசிக்கத்தக்கவர்கள்.

    பதிலளிநீக்கு
  43. கருத்துள்ள கவிதை.ஒரு தாயின் மனநிலை,சூழ்நிலையை சித்தரித்தது மிக நன்று.

    பதிலளிநீக்கு
  44. விச்சு said...
    //மழலையின் பாட்டு அசத்தல். //

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  45. அமைதி அப்பா said...
    //அற்புதமான கவிதை!//

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  46. Asiya Omar said...
    //கருத்துள்ள கவிதை.ஒரு தாயின் மனநிலை,சூழ்நிலையை சித்தரித்தது மிக நன்று.//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin