Wednesday, April 18, 2012

தூறல்: 4 - தலைக்கு வந்தது..

லுக்கும் நிகழ்வாக கைக்குழந்தை ஹீனாவுக்கு நேர்ந்த கொடுமை. பெண்ணாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்தினால் தகப்பன் உமரால் சித்திரவதைக்கு ஆளாகி மூச்சை நிறுத்தி விட்ட சின்ன மலர். ஹினாவின் தாய் ரேஷ்மா பத்தொன்பது வயதுக்குள் வாழ்வின் மோசமான பக்கங்களைப் பார்த்து விட்டார். வீட்டுப் பணியில் எனக்கு உதவ வருகிறவர், இவர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர். குழந்தைக்கும் தாய்க்கும் நேர்ந்த சித்திரவதைகளாக (பத்திரிகைகளில் வராத தகவல்களாக) அவர் சொன்ன எதையும் இங்கே பகிரக் கூட மனம் வரவில்லை. பெண் சிசுக் கொலை, குடும்ப வன்முறை இவற்றுக்கு எதிரான சட்ட திட்டங்கள் பெயரளவிலே இருக்க, இது போல நடப்பவை நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ரேஷ்மா விட்ட தன் படிப்பைத் தொடர உள்ளார். உமர் தனிமைச் சிறையில் தற்போது. காரணம், அவன் செய்த குற்றத்தை அறிய வந்த சக சிறைவாசிகள் கொந்தளித்துப் போய் மூர்க்கத்துடன் அவனைத் தாக்கியிருக்கிறார்கள். குற்றவாளிகளாலும் கூட ஏற்க முடியாத குற்றமாக இது!

குழந்தைகளில் ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசம் பாராட்டாதீர்கள் எனக் கோரும் என் முந்தைய பதிவொன்று இங்கே: செல்வக் களஞ்சியங்கள்

அதிலும் பெண் குழந்தைகள் கடவுள் தருகிற வரம். அவர்கள் பூமியை இரட்சிக்க வந்த தேவதைகள்!

மிழ்புத்தாண்டு அதீதம் சிறப்பிதழ் கொண்டாடுகிறது அத்தேவதைகளை தன் ஃபோட்டோ கார்னரில்.. “தேவதைகள் வாழும் பூமி

பிரேம்குமார் படம்: ஒன்று

முரளிதரன் அழகர் படங்கள்: ஒன்று ; இரண்டு ; மூன்று [மூன்றாவது படம் ஒரு கவிதை. சின்னத் தேவதைகளும் சந்தோஷமாக அவர்களை எதிர் கொள்ளும் முதியவரும், பார்த்து நிற்கும் அன்னையின் பூரிப்பும் என் கண்களை விட்டு அகலவே இல்லை. ஆகச் சிறந்த படமென்பேன்.]
***

ஏப்ரல் I அதீதம் வலையோசை - ஹுஸைனம்மா
ஏப்ரல் II அதீதம் வலையோசை - க. பாலாசி

சொல்லிச் சொல்லிப் பார்த்தது ராஜஸ்தான் அரசாங்கம், குழந்தைத் திருமணம் குற்றமென. மக்கள் காதில் போட்டுக் கொள்கிற மாதிரித் தெரியவில்லை. இன்னொரு முயற்சியாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. பத்திரிகை அச்சடிக்க வருகிறவர்களிடம் மாப்பிள்ளை, பெண் பிறப்பு சான்றிதழ்களை வாங்கிப் பார்ப்பதுடன் அவர்கள் திருமண வயதை அடைந்தவர்களா என விசாரித்து அறிந்து உறுதிப் படுத்திய பின்னரே அச்சகங்கள் அழைப்பிதழ்களை அடிக்க வேண்டும். மீறி அவர்கள் குழந்தைகள் எனத் தெரிய வந்தால் முதல் வாரன்ட் அச்சக உரிமையாளருக்குதான். எல்லாச் சட்டங்களிலும் எங்கே ஓட்டையைப் போடலாமென ஆராயும் புத்திசாலிகள் நிறைந்தது நம் நாடென்றாலும் இந்தச் சட்டம் நல்லாதானிருக்கு. ஒரு நாலு பேராவது பின்வாங்க மாட்டார்களா?

பெங்களூரில் இதுவரையில் மூன்றுமுறைகள் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கின்றன. ’92-ல் சன்னல்கள் பூட்டிய அறையில் நள்ளிரவில் திடீரென அலமாரி சாவித் துவாரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சாவிக் கொத்து டங்டங் என தொடர்ந்து அலமாரிக் கதவில் மோதிக் கொண்டது. 2001-ல் காலை 11 மணியளவில் சில நொடிகள் ஷோகேஸில் இருந்த கண்ணாடிச் சாமான்கள் மெலிதாக நாட்டியமாடின. சென்றவாரத்தில் உணர்ந்ததுதான் அதிகம். கழுத்து, முதுகு வலி தவிர்க்க இப்போது மடிக்கணினியை மரப்பலகை இணைக்கப்பட்ட (study chair) நாற்காலியில் அமர்ந்தே உபயோகிக்கிறேன். அதில் வேலையாக இருக்கையில் ஒரு சீராக தொடர்ந்து ஆடியது. சற்று சொகுசாக கூட இருந்தது:)! பிரமை என்றே நினைத்தேன். பிறகு உற்று ஷோகேசிலிருந்த க்றிஸ்டல் தாமரைகள் ஆடுகின்றனவா எனப் பார்த்தேன். இல்லை என்றதும் வேலையைத் தொடர ஆட்டமும் தொடர்ந்தது. சந்தேகத்துடன் சன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஒருசிலர் மட்டும் பரபரப்பாக வெளியில் வந்து ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் கணவர் அழைத்து தாங்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வெளியே இருப்பதாகச் சொன்னதுமே புரிந்தது. அம்மா, தங்கை ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தபடி இருக்க, சிலநிமிடங்களில் ஆபத்தில்லை என மறுபடி தகவல் சொன்னார் கணவர். பெரும்பாலும் அடுக்குமாடிகளில் இருந்தவர்களுக்கே நடுக்கத்தை உணர முடிந்திருக்கிறது. அப்படியும் பதினோராவது மாடியில் தனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாள் தங்கை.

டுக்கம் வந்த மறுநாள் மாலை, பெங்களூர் ஜி. எம் பாளையாவில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பின் நாலாவது மாடியில் வசிக்கும் ஒரு பெண்மணி தங்கள் கட்டிடத்துக்கு வெகு அருகாமையில் பயங்கரமாக விமானச் சத்தம் கேட்க கிலியில் நடுங்கி விட்டாராம் ‘நேற்றுதான் நிலம் நடுங்கியது, இப்போது இது என்ன சத்தம்’ என. நினைத்து முடிக்கும் முன்னரே தலைக்கு மேலே ’தட் தடார்’ என ஏதோ இறங்கியது போலிருக்க மொட்டைமாடிக்கு ஓடியிருக்கிறார். பார்த்தால் அங்கே ஒரு ஹெலிகாப்டர் லேண்ட் ஆகியிருக்க, ரோடார் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்க பைலட்கள் பதட்டமாக இறங்கி ஓடிவந்தபடி ‘பக்கத்துல வராதீங்க. கீழே ஓடுங்க’ எனத் துரிதப் படுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து கட்டிடத்திலிருந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டு, ஆபத்தில்லை என ஊர்ஜிதம் ஆனபிறகே நிம்மதியாகியிருக்கிறார்கள். எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. கட்டிடத்துக்கும் சரி, குடியிருப்பினர் மற்றும் பைலட்களுக்கும் சரி யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

விஷயம் இதுதான். பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்றில் திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட உடனடியாக இறக்கியாக வேண்டிய சூழலில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் நிறைந்த அப்பகுதியின் ஒரு மைதானம் கண்ணில் பட்டிருக்கிறது. ஆனால் அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும், உயர் அழுத்த மின் கம்பிகளும் அதற்கு தடையாக இருக்க “எங்கடா இறக்கறது” எனப் பார்த்தபடியே வந்து இந்தக் குடியிருப்பில் மொட்டைமாடியில் இறக்கி விட்டார்கள். மறுநாள் க்ரேன் மூலமாக ஹெலிகாப்டர் அகற்றப்படும் வரை குடியிருப்பினர் தவிர யாரும் பாதுகாப்பு காரணமாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஹெலிகாப்டர் சாலைக்கு இறக்கப்பட்டதும் அதில் ஏறியே தீரணுமென அழுத ஒரு குழந்தையை அதிகாரிகள் வேறுவழியில்லாமல் ஏற்றிவிட்டு கொஞ்ச நேரம் விளையாட அனுமதித்திருக்கிறார்கள். பின்னே ஒருநாள் நிறுத்தி வைத்ததற்கும், சொல்லாமக் கொள்ளாம கட்டிடத்தில் இறக்கியதற்கும் இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?


சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்.

சரிதானே நான் சொல்வது:)? செல்லும் நிகழ்வுகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள், அனுபவப் பகிர்வுகள் எதுவாயினும் படங்களுடன் பதிய வேண்டுமென்கிற ஆவலும் அவசியமும் எல்லோருக்கும் இருக்கிறது. பெரும்பாலும் நாம் அதிக பட்ச பிக்ஸலில் வைத்தே படமெடுக்கிறோம். அவற்றை அதே அளவுகளில் உபயோகிப்பது பல சிக்கல்களைத் தருவதால் அளவைக் குறைக்க வேண்டியது அவசியமாகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேலான படங்களை ஒரு பதிவுக்கு உபயோக்க வேண்டியுள்ளது. அல்லது ஒரு பத்திரிகைக்கோ, இணைய இதழுக்கோ சிலபடங்களை அனுப்ப வேண்டியிருக்கிறது. இவற்றுகான தீர்வை என் அனுபவத்தில் நான் பின்படுத்தும் முறையை PiT (தமிழில் புகைப்படக்கலை) தளத்தில் பகிர்ந்துள்ளேன்: இர்ஃபான்வ்யூ - படங்களின் அளவைக் குறைக்கவும் பல்வேறு தேவைகளுக்கும்.. தேவையிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கூடி வாழ்தல்

ஏப்ரல் I அதீதம் ஃபோட்டோ கார்னரிலும்.
***

(அவ்வப்போது தூறும்..)

42 comments:

மோகன் குமார் said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதீதத்தில் முதல் முறையா ஒரு பிரபல பதிவர் எழுதிருக்கார். பழைய டீம் இருக்கும் போது சில பல பதிவுகள் அனுப்பி இருந்தாலும் அவரது பதிவு அதீதத்தில் வருவது முதல் முறை. அவருக்கும் ஒரு சுட்டி தந்திருக்கலாம். (வேற ஒன்னும் இல்லை உங்கள் வாசகர் வட்டம் பெரிது. அதில் கொஞ்சம் பேர் நம்ம பக்கம் ரீ-டைரக்ட் ஆவாங்க இல்ல )
****
நிற்க தற்சமயம் தமிழ் மணம் வேலை செய்ய வில்லை
****
மே மாத இறுதியில் நாங்கள் பெங்களூரு வந்தாலும் வர கூடும். நிச்சயமில்லை. அதற்கு முன் இன்னொரு மே மூன்றாம் வாரம் "பெரிய்ய ட்ரிப்" ஒன்று திட்டமிடுகிறோம் அது நடந்தால் பெங்களூர் வருவது சிரமம். பெங்களூரில் உடன் பிறந்த அண்ணன் இருக்கார். அங்கு தங்குவோம்

விச்சு said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இராஜஸ்தான் மேட்டர் அருமையான ஐடியா...

Nithi Clicks said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை..பல நிகழ்வுகளை....கதம்பமாக ஒரே பதிவில் அளிப்பது அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்!!!

//“எங்கடா இறக்கறது” எனப் பார்த்தபடியே வந்து இந்தக் குடியிருப்பில் மொட்டைமாடியில் இறக்கி விட்டார்கள்//.

அடப்பாவமே!!!என்னத்த சொல்லறது டன் கணக்கில் எடையிருக்கும் ஒரு பொருளை இறக்கிவிட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே விட்டிருக்கிறார்கள்...முதலில் ஒரு நல்ல சிவில் எஞ்சினியரை அழைத்து வந்து அந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் தளம்(roof) நல்ல நிலையில் இருக்கிறதா,பாதிப்பு ஒன்றும் இல்லையா என உறுதி செய்துகொள்ளுங்கள் :))

MangaiMano said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மொட்டை மாடியில் ஹெலிகாப்டரா! நானும் அடம்பிடிச்சு ஏறி இருப்பேனே :)
பெங்களூரு புறாக்கள் தங்களுக்கு போட்டியா இன்னொரு பறவை வந்திர்ச்சுனு நினைச்சிருக்குமே
சோகம் ஹீனா :( .அருமை பதிவு !

அமைதி அப்பா said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தலைக்கு வந்தது.. தலைப்பே தகவல்களின் தன்மையைச் சொல்லிவிடுகிறது. நல்ல தலைப்பு.

பத்திரிகையில் படித்தாலும், கூடுதலாக கிடைக்கும் சில தகவல்கள் நன்று.

****************

அதீதம் வலையோசை அறிமுகம் ஹுஸைனம்மா மற்றும்
க. பாலாசி இருவருக்கும் வாழ்த்துகள். மேலும், எங்கள் நாகை மாவட்டத்தை சார்ந்தவரை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

*****************

கூடி வாழ்தல் - நன்று.

புதுகைத் தென்றல் said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெண் சிசுக்கொலை இன்னும் தீராத பிரச்சனை. சமீபமாக பேப்பரில் வரும் செய்திகள் இதுதான். 7 மாத கர்ப்பிணியை இதுவும் பெண்குழந்தைதான் என்று தெரிந்ததும் வயிற்றில் அடித்தே கொன்று இருக்கிறான் ஒரு கணவன்... :((

ஸ்ரீராம். said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குற்றம் செய்தவர்களே கொந்தளிக்கும் அளவு கொடூரம்தான் உமரின் குற்றம்.
ராஜஸ்தான் அரசாங்கத்தின் முய்ழ்ர்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இன்னும் கூட திருமணம் நடத்தி வைப்பவர்கள் முதல் பதிவு (செய்தால்) செய்பவர்கள் வரை கிடுக்கிப்பிடி போடலாம்.
நிலநடுக்கம் எங்களைச் சுற்றி இருந்த ஏரியாக்களில் உணர்ந்தார்கள். எங்களுக்குத் தெரியவில்லை. மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்....த்ரில்!
PiT பதிவு உபயோகமானது.

Asiya Omar said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தூறல் -4 வித்தியாசமான பகிர்வு.புகைப்படமும், பிட் பகிர்வும் அருமை.சில செய்திகளை கேள்வி படும் பொழுது பக்கென்று இருக்கு.

அமைதிச்சாரல் said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ச்சீன்னு ஆகிப்போச்சுங்க ஹீனாவைப் பத்தி படிச்சப்ப..

//டெரஸில் இறங்கிய ஹெலிகாப்டர்//

கடைசியில் க்ரேன் வந்து தூக்கி விட்டதா செய்திகளில் படிச்சேன் :-).

இதே மாதிரி ஒருக்கா ஒரு பழைய விமானத்தை ட்ரக்கில் டெல்லிக்கு சாலை வழியா கொண்டு போகும்போது நவி மும்பையின் பகுதிக்கருகே ட்ராபிக் ஜாம் ஆகி மாட்டிக்கிட்டது. ரங்க்ஸ் மொபைலில் படம் எடுத்து வந்து காட்டினப்ப நம்பவே முடியலை. சாலையோரச் சிறுவர்கள் இதில் ஏறி விளையாடி தங்களோட ஏக்கத்தை குறைச்சுக்கிட்டாங்களாம் :-)

கோமதி அரசு said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெண்ணாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்தினால் தகப்பன் உமரால் சித்திரவதைக்கு ஆளாகி மூச்சை நிறுத்தி விட்ட சின்ன மலர்.//

தினம் சித்திரவதை கொடுக்க வேண்டும் இந்த மாதிரி அரக்கர்களுக்கு. வெறும் தனிமைச்சிறை மட்டும் போதாது.

ராஜஸ்தான் அரசாங்கம், எடுத்து இருக்கும் முடிவு நல்லமுடிவு தான்.
சிலரை சட்டத்தால் தான் திருத்தமுடியும்.

நில நடுக்கத்தை உணர்ந்தீர்களா?

சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்.//

தலைப்பை ரசித்தேன். படங்களுக்காக பதிவா? பதிவுக்காக படங்களா என்று நினைக்க வைக்கிறது . அதற்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் உதவும்.

மற்ற எல்லா பதிவுகளையும் அதீதம் போய் படிக்கிறேன். நன்றி ராமலக்ஷ்மி ..

வல்லிசிம்ஹன் said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சுனாமியிலிருந்து எல்லாம் தலைக்கு வந்து விட்டுப் போவதே நடுக்கமாக இருக்கிறது.
ஹீனாவின் இழப்புதான் மிகவும் பாதித்தது. பத்தொன்பது வயசு பெண்ணிற்குக் குழந்தையை இழப்பது எத்தனை சோகம்.அந்தப் படம் இன்னும் கண்ணில் நிற்கிறது.

நல்ல கதம்பமாகக் கொடுத்திருக்கிறீர்கள்
மண்வாசனை எனும் சீரியல் ஒன்று இந்தி டப்ப்ட் இன் தமிழ் நன்றாக இருக்கிறது. முதலில் இவர்கள் ஏன் இத்தனூண்டு பெண்ணுக்குத் திருமணம் செய்கிறார்கள் என்று பார்த்தேன். இது ராஜஸ்தான் வழ்க்கம் ...அதுவும் இன்னமும் இருக்கிறது என்று யோசித்தால் தலை சுற்றுகிறது..

Vairai Sathish said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான பகிர்வு

முத்துலெட்சுமி/muthuletchumi said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சரிதான்..
எனக்கு நிலநடுக்கம் பார்த்துப்பார்த்து ஒரு போபியா ஆகிடுச்சுல்ல.. எப்பவும் எதாச்சும் ஆடுதான்னு உத்து உத்துப்பார்த்து பயப்படறது அதுபோலத்தான்..இந்த ஹெலிக்காப்டர் விமான போபியாவும் இருக்கு..ரொம்ப பக்கத்துல சத்தம் கேட்டா அது வந்து இறங்கப்போறதா..:))

ஹுஸைனம்மா said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெண்குழந்தைகள்.... என்ன சொல்லன்னே தெரியலை.. முன்காலங்களில்தான் அறியாமை என்றால், கல்வியறிவு பெருகியுள்ள இக்காலத்திலும் இந்த நிலை என்றால்... ஒரே காரணம்தான் புலப்படுகிறது எனக்கு.. வரதட்சணை & கல்யாணச் செலவுகள் etc.!!

நேற்றுகூட, மூன்றாவதாகப் பெண் பெற்றதற்காக, மனைவியை அடித்துக் கொலை செய்திருக்கிறான் ஒருவன், பஞ்சாபில்!! :-(((

ஒருபக்கம் இப்படி என்றால், மறுபுறம் சுதந்திரம் என்ற பெயரில் தறிகெட்டு அலையும் இளைஞர்கூட்டம். எங்கே போகிறோம் நாம்? பயமாக இருக்கிறது.

ராஜஸ்தானிய சட்டம் நம்பிக்கை தருகிறது.

//‘சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்//

ஹி. ஹி.. சென்ற வாரம் ஏர்போர்ட்டில் நீண்ட வரிசையில் நிற்கும்போது பிட் போட்டி “கோடுகள்” தலைப்பு நினைவு வர, அருகில் உள்ள நீண்ட கைப்பிடியை ஃபோட்டோ எடுக்க்லாம் என ஆசைப்பட்டு, கேமராவைக் கையில் எடுத்தேன். பார்த்த ரங்க்ஸ், “ஏர்போர்ட்டில் படம் எடுத்து, போலீஸ் புடிச்சுட்டுப் போச்சுன்னா, நான் இந்தம்மா யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடுவேன்”ன்னு ‘பூச்சாண்டி’ காட்டினதால, வெற்றிபெறும் வாய்ப்பு இழந்தேன்!! :-D

//தலைக்கு மேலே ’தட் தடார்’ என ஏதோ இறங்கியது போலிருக்க மொட்டைமாடிக்கு ஓடியிருக்கிறார்//
அதுசரி, வீதிக்கு ஓடாம, தகிரியமா மொட்டைமாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறாரே, இதுக்காகவாவது “வீர் புரஸ்கார்” அவார்ட் கொடுக்கணும் இவருக்கு!! :-)

அதீதம் அறிமுகத்துக்கு நன்றிகள் பல் அக்கா!!

ஸாதிகா said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்.//ரொம்ப சரி.

எனக்கு கூட அட்லீஸ்ட் கூகுளில் இருந்தாவது ஒரு படத்தை எடுத்து சேர்த்து பதிவிட்டால்த்தான் திருப்தியாக இருக்கும்

கோவை2தில்லி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹீனா விஷயம் ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. இப்படிக் கூட இருப்பார்களா:( என்று தான் திருந்து வார்களோ.....

முத்துலெட்சுமி சொன்னது போல தான் எனக்கும்....நிலநடுக்கம் வந்து, வந்து தொடர்ந்து சில நாட்களுக்கு ஆடுற மாதிரியே இருக்கும்....பார்த்துகிட்டே இருப்பேன்.

போட்டோ கார்னர் பிரமாதம்.

Thenammai Lakshmanan said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் சில நிகழ்ச்சிகள் சோகமா இருந்தாலும் கடைசியில் ஒரு பஞ்ச் வைச்சு சிரிக்க வைச்சிட்டீங்க ராமலெக்ஷ்மி.. சேர்ந்தே இருப்பது காமிராவும் பதிவரும்..:)) நான் கூட கங்காரு குட்டி போல அதைக் தூக்கியபடியே அலைகிறேன்.:)

அன்புடன் அருணா said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல சரம்!!!

நிரஞ்சனா said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெண் குழந்தைகள் கடவுள் தருகிற வரம். அவர்கள் பூமியை இரட்சிக்க வந்த தேவதைகள்.
-அருமையான வரிகள். இந்த உண்மையப் புரிஞ்சுக்காத சில மூடர்களை நினைச்சாத்தான் கோபம் கோபமா வருது. உங்கள் பதிவுகளை சமீபமா நான் விரும்பிப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். என்னோட முதல் வருகை + கமெண்ட் இது. (நீங்க என்னை எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியலை. But, உங்க வாழ்த்து எனக்கு Energy குடுத்தது. Many Thanks!)

பாச மலர் / Paasa Malar said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தாய் ரேஷ்மா, குழந்தை ஹீனா வெளிவந்த செய்திகளே கொடுமை..அதனினும் கொடுமையா....நடுக்கமாய்த்தான் இருக்கிறது...

பூகம்பம் அமைதியாக அடங்கட்டும் எப்போதும்...

கூடி வாழும் பறவைகள் கோடி அழகு

புவனேஸ்வரி ராமநாதன் said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதுபோன்ற அநியாயங்கள் நடக்க நடக்க பூகம்பங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். வழக்கம்போல் மனதை அள்ளும் புகைப்படங்களுடன் சிறப்பான பகிர்வு. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மோகன் குமார் said...
//அதீதத்தில் முதல் முறையா ஒரு பிரபல பதிவர் எழுதிருக்கார்.... நம்ம பக்கம் ரீ-டைரக்ட் .... //

சுவாரஸ்யமான பயணக் கட்டுரை! தன்னடக்கமா சொல்றீங்க:)!

//தமிழ்மணம்//

பதிவிட்ட பிறகே கவனித்தேன். [வல்லிம்மாவின் இதுகுறித்த பதிவில் ஒருவர் ‘சரியாகா விட்டால் உயிரை விட்டு விடுவேன்’ என சொல்லியிருந்தார்!] நல்லவேளையாக விரைவில் சரி செய்தார்கள்:)!

//மே மாத இறுதியில் நாங்கள் பெங்களூரு//

தகவல் தெரிவியுங்கள்.

//பெரிய்ய ட்ரிப்//

வெளிநாட்டுப் பயணமா:)? இன்னொரு நல்ல அனுபவக் கட்டுரை கிடைக்கும் வாசகருக்கு. நன்றி மோகன் குமார்.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விச்சு said...
//இராஜஸ்தான் மேட்டர் அருமையான ஐடியா...//

ஆம், ஏதேனும் ஒருவகையில் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Nithi Clicks said...
//முதலில் ஒரு நல்ல சிவில் எஞ்சினியரை அழைத்து வந்து அந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் தளம்(roof) நல்ல நிலையில் இருக்கிறதா,பாதிப்பு ஒன்றும் இல்லையா என உறுதி செய்துகொள்ளுங்கள் :))//

எனக்கும் இதேதான் தோன்றியது. செய்திருப்பார்கள் என நம்புவோம். நன்றி நித்தி.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

MangaiMano said...
//மொட்டை மாடியில் ஹெலிகாப்டரா! நானும் அடம்பிடிச்சு ஏறி இருப்பேனே :)//

நல்ல ஆசை உங்களுக்கு:)! நன்றி மங்கை.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அமைதி அப்பா said...
//நல்ல தலைப்பு. பத்திரிகையில் படித்தாலும், கூடுதலாக கிடைக்கும் சில தகவல்கள் நன்று. கூடி வாழ்தல் - நன்று.//

நன்றி அமைதி அப்பா. க. பாலாசி உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவரா? மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புதுகைத் தென்றல் said...
//பெண் சிசுக்கொலை இன்னும் தீராத பிரச்சனை. சமீபமாக பேப்பரில் வரும் செய்திகள் இதுதான். 7 மாத கர்ப்பிணியை இதுவும் பெண்குழந்தைதான் என்று தெரிந்ததும் வயிற்றில் அடித்தே கொன்று இருக்கிறான் ஒரு கணவன்... :((//

நாடெங்கிலும் தடுக்க முடியாதபடி தொடரும் அவலமாக உள்ளது. இரட்டைக் குழந்தையாக ஹீனாவுடன் உருவான இன்னொரு கரு உமரின் சித்திரவதையினால் வயிற்றிலேயே கலைந்து போயிருக்கிறது:(!

பகிர்வுக்கு நன்றி தென்றல்.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஸ்ரீராம். said...
//இன்னும் கூட திருமணம் நடத்தி வைப்பவர்கள் முதல் பதிவு (செய்தால்) செய்பவர்கள் வரை கிடுக்கிப்பிடி போடலாம்.//

செய்ய வேண்டிய ஒன்று. விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Asiya Omar said...
//தூறல் -4 வித்தியாசமான பகிர்வு.புகைப்படமும், பிட் பகிர்வும் அருமை.//

நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அமைதிச்சாரல் said...
//இதே மாதிரி ஒருக்கா ஒரு பழைய விமானத்தை ட்ரக்கில் டெல்லிக்கு சாலை வழியா கொண்டு போகும்போது நவி மும்பையின் பகுதிக்கருகே ட்ராபிக் ஜாம் ஆகி மாட்டிக்கிட்டது. ரங்க்ஸ் மொபைலில் படம் எடுத்து வந்து காட்டினப்ப நம்பவே முடியலை. சாலையோரச் சிறுவர்கள் இதில் ஏறி விளையாடி தங்களோட ஏக்கத்தை குறைச்சுக்கிட்டாங்களாம் :-)//

சுவாரஸ்யமான சம்பவம். பகிர்வுக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கோமதி அரசு said...
//சேர்ந்தே இருப்பது’ கேமராவும் பதிவரும்.//

தலைப்பை ரசித்தேன். //

கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வல்லிசிம்ஹன் said...
//...நல்ல கதம்பமாகக் கொடுத்திருக்கிறீர்கள்.

....ராஜஸ்தான் வழ்க்கம் ...அதுவும் இன்னமும் இருக்கிறது என்று யோசித்தால் தலை சுற்றுகிறது..//

நன்றி வல்லிம்மா. ராஜஸ்தானில் வழக்கம் என்றால் இங்கும் வேறு வழியில்லாமல் பெண்ணுக்கு பதினான்கு, பதினைந்து வயதிலே திருமணம் முடிப்பது ஆங்காங்கே நடக்கவே செய்கிறது.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Vairai Sathish said...
//அருமையான பகிர்வு//

நன்றி சதீஷ்.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முத்துலெட்சுமி/muthuletchumi said...
// எப்பவும் எதாச்சும் ஆடுதான்னு உத்து உத்துப்பார்த்து பயப்படறது அதுபோலத்தான்..இந்த ஹெலிக்காப்டர் விமான போபியாவும் இருக்கு..ரொம்ப பக்கத்துல சத்தம் கேட்டா அது வந்து இறங்கப்போறதா..:))//

இதற்கு முந்தைய தடவை கண்ணாடிக் கோப்பைகள் ஆடியதால் அதையே பார்க்கத் தோன்றியது:)!

ஹெலிகாப்டர் இறங்கியே விட்டது! கிலியான அனுபவமே குடியிருப்பினருக்கு.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஹுஸைனம்மா said...//“ஏர்போர்ட்டில் படம் எடுத்து, போலீஸ் புடிச்சுட்டுப் போச்சுன்னா, நான் இந்தம்மா யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு சொல்லிடுவேன்”ன்னு ‘பூச்சாண்டி’ காட்டினதால, வெற்றிபெறும் வாய்ப்பு இழந்தேன்!! :-D//

இந்தப் பூச்சாண்டிகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்! அனுபவத்தில் சொல்லுகிறேன்:))!

விரிவான கருத்துகளுக்கு நன்றி ஹுஸைனம்மா.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஸாதிகா said...

/அட்லீஸ்ட் கூகுளில் இருந்தாவது ஒரு படத்தை எடுத்து சேர்த்து பதிவிட்டால்த்தான் திருப்தியாக இருக்கும்/

படமின்றிப் பதிவில்லை:)! நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கோவை2தில்லி said...
//முத்துலெட்சுமி சொன்னது போல தான் எனக்கும்....நிலநடுக்கம் வந்து, வந்து தொடர்ந்து சில நாட்களுக்கு ஆடுற மாதிரியே இருக்கும்....பார்த்துகிட்டே இருப்பேன்.

போட்டோ கார்னர் பிரமாதம்...//

அங்கே அடிக்கடி நேருவது கவலைக்குரிய விஷயம்.

கருத்துக்கு நன்றி ஆதி.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thenammai Lakshmanan said...
//சேர்ந்தே இருப்பது காமிராவும் பதிவரும்..:)) நான் கூட கங்காரு குட்டி போல அதைக் தூக்கியபடியே அலைகிறேன்.:)//

“பிரிக்கவே முடியாதது” என்றும் சொல்லலாமோ:)? நன்றி தேனம்மை!

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்புடன் அருணா said...
//நல்ல சரம்!!!//

நன்றி அருணா.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிரஞ்சனா said...

//நீங்க என்னை எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியலை. //

எனது கடந்த பதிவில் நான்காவது நபராகப் பின்னூட்டம் இட்டிருந்தீர்களே! அதன் மூலமாகதான்:)!

நன்றி நிரஞ்சனா.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பாச மலர் / Paasa Malar said...
//அதனினும் கொடுமையா....நடுக்கமாய்த்தான் இருக்கிறது...

...கூடி வாழும் பறவைகள் கோடி அழகு//

அறிய வரப்படாத தகவல்கள் போலவே வெளியே வராமலே போகும் இது போன்ற அவலங்களும் அதிகமே.

கருத்துக்கு நன்றி மலர்.

ராமலக்ஷ்மி said...Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புவனேஸ்வரி ராமநாதன் said...
//இதுபோன்ற அநியாயங்கள் நடக்க நடக்க பூகம்பங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். வழக்கம்போல் மனதை அள்ளும் புகைப்படங்களுடன் சிறப்பான பகிர்வு. மிக்க நன்றி ராமலக்ஷ்மி.//

நன்றி புவனேஸ்வரி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin