புதன், 8 பிப்ரவரி, 2012

ஏன் பாடுகிறது கூண்டுப் பறவை.. நானறிவேன்! - மாயா ஏஞ்சலோ கவிதை (1)


ரு சுதந்திரப் பறவை
காற்றின் முதுகில் தொத்திக் கொண்டு
பாயும்நீரின் முனைவரை மிதந்து
தன் சிறகுகளை
ஆதவனின் ஆரஞ்சுக் கதிரினில் நனைத்து
வானத்தையும் ஆக்ரமிக்கத் துணிகிறது.
அடைப்பட்ட பறவைக்கோ
குறுகிய கூண்டின் கொடும் கம்பிகளை மீறி
வெளியுலகினைக் காண இயலுவதில்லை.
கால்கள் கட்டப்பட்டிருக்க
சிறகுகள் ஒடுக்கப்பட்டிருக்க
வேறு வழியின்றிப் பாடத் தொடங்குகிறது
தொண்டையைத் திறந்து.

பாடுகிறது கூண்டுப்பறவை
நடுக்கம் நிறைந்த குரலெழுப்பி
அறிந்திராத விடயங்களைப் பற்றி
ஆனால் அறிய ஏங்குவன பற்றி...
விடுதலைக்காக இறைஞ்சும் அதன் இசை
தூரத்து மலைகளுக்கும் கேட்கும்படி.

ன்னொரு இளந்தென்றலைத் தேடுகின்ற
சுதந்திரப் பறவைக்காக
பருவக்காற்று நயமாகிறது
நெடுமூச்செறியும் மரங்களின் ஊடே.
காத்திருக்கின்றன கொழுத்த புழுக்கள்
சுதந்திரப் பறவைக்காக..
அதிகாலை பிரகாசத்துடன்
மினுங்கியப் புல்வெளியில்.
கொண்டாடுகிறது சுதந்திரப்பறவை
வானத்தைத் தனதென்று.

கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
கனவுகளின் கல்லறை மேலே.
அதன் நிழலும் கூட அலறுகிறது
கோரக்கனவு கண்டதனாலே.
கட்டப்பட்ட கால்களுடன்
ஒடுக்கப்பட்ட சிறகுகளுடன்
பாடத் தொடங்குகிறது
வேறு வழியறியாது
தொண்டையைத் திறந்து..

நடுக்கம் நிறைந்த குரலெழுப்பி
அறிந்திராத விடயங்களைப் பற்றி
ஆனால் அறிய ஏங்குவன பற்றி..
தூரத்து மலைகளுக்கும் கேட்கும்படி
விடுதலை வேண்டி.
***

மூலம்:
I Know Why The Caged Bird Sings
Maya Angelou (April 4, 1928)


படம் நன்றி: இணையம்

29 ஜனவரி 2012 அதீதம் இணைய இதழுக்காக மொழிபெயர்த்தக் கவிதை.

49 கருத்துகள்:

  1. 1928 இல் வந்தததன் மொழிபெயர்ப்பா....அருமை.
    (நிச்சயம் யாராவது மூலத்தையும் முழுதும் தந்திருக்கலாமே என்று கேட்பார்கள்!)

    பதிலளிநீக்கு
  2. கூண்டுப் பறைவைக்கு விடுதலைக் கிடைத்து அது சுதந்திரப் பறவையோடு சுற்றித் திரிய வேண்டும் என்று நம்மை ஏங்க வைக்கிறது கவிதை!

    நன்று.

    பதிலளிநீக்கு
  3. மிகப்ப்ழைய கவிதையை மொழி பெயர்த்திருப்பது புதுமை பிளஸ் அருமை.

    பதிலளிநீக்கு
  4. மூலத்தையும் தந்திருக்கலாமே என்று நான் கேட்க மாட்டேன்- தங்களின் மொழிபெயர்ப்பு அதைவிடச் சிறப்பாக இருக்குமென்று தோன்றுவதால். கூண்டுப் பறவையின் வலியை என்னால் உணர முடிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  5. கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நூறு வருடப் பழமக் கூவலா.
    அப்போதிலிருந்து கூவி இப்போது தமிழுக்கும் வந்துவிட்டது ராமலக்ஷ்மியின் கருணையால்.அதன் ஏக்கம் எங்கள் நெஞ்சிலும் எதிரொலிக்க வைத்துவிட்டீர்கள்.
    திறந்துவிட்டு விடலாமா அந்தக் கதவை.

    பதிலளிநீக்கு
  7. கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை.... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. கூண்டுப் பறவையின் ஏக்கக் குரல் ஒலிக்கின்றது....

    பதிலளிநீக்கு
  9. விடுதலைக்கான கூக்குரல்கள் நூற்றாண்டு தாண்டியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே.....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..மொழிபெயர்ப்பு சிறப்பாய் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  10. அக்கா திரட்டிகள் பிரச்சினையை தீர்க்க பிளாக்கர் நண்பனின் பதிவை பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  11. கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
    கனவுகளின் கல்லறை மேலே.

    பலரும் கனவுகளின் கல்லறை மேலே நிற்கிறார்கள்.வலிகளைச் சொல்லும் அருமைக் கவிதை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை அக்கா.கூண்டுப்பறவை என்று சொல்லிப் பரிதாபப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்போல ரொம்பக் காலமாகவே !

    பதிலளிநீக்கு
  14. கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை,பாரட்டுக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  15. எப்போதான் விடுதலை கிடைக்குமோ கூண்டுப்பறவைக்கு..

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம். said...
    //1928 இல் வந்தததன் மொழிபெயர்ப்பா....அருமை.
    (நிச்சயம் யாராவது மூலத்தையும் முழுதும் தந்திருக்கலாமே என்று கேட்பார்கள்!)//

    நன்றி ஸ்ரீராம். உங்கள் பின்னூட்டம் வந்ததும் மூலக்கவிதைக்கான இணைப்பினை சேர்த்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. அமைதி அப்பா said...
    //கூண்டுப் பறைவைக்கு விடுதலைக் கிடைத்து அது சுதந்திரப் பறவையோடு சுற்றித் திரிய வேண்டும் என்று நம்மை ஏங்க வைக்கிறது கவிதை!

    நன்று.//

    ஆம் அப்படித் தோன்றும் வகையில் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  18. ஸாதிகா said...
    //மிகப்ப்ழைய கவிதையை மொழி பெயர்த்திருப்பது புதுமை பிளஸ் அருமை.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  19. கணேஷ் said...
    //மூலத்தையும் தந்திருக்கலாமே என்று நான் கேட்க மாட்டேன்- தங்களின் மொழிபெயர்ப்பு அதைவிடச் சிறப்பாக இருக்குமென்று தோன்றுவதால். கூண்டுப் பறவையின் வலியை என்னால் உணர முடிகிறது. அருமை.//

    மிக்க நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  20. Rathnavel Natarajan said...
    //அருமையான கவிதை.
    நன்றி.//

    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி vgk சார்.

    பதிலளிநீக்கு
  22. //.....மூலக்கவிதைக்கான இணைப்பினை சேர்த்து விட்டேன்.//

    பார்த்தேன். படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ ஸ்ரீராம்,

    /பார்த்தேன். படித்தேன். நன்றி./

    மகிழ்ச்சியும் மீள் வருகைக்கு நன்றியும்.

    பதிலளிநீக்கு
  24. வல்லிசிம்ஹன் said...
    /நூறு வருடப் பழமக் கூவலா.
    அப்போதிலிருந்து கூவி இப்போது தமிழுக்கும் வந்துவிட்டது ராமலக்ஷ்மியின் கருணையால்.அதன் ஏக்கம் எங்கள் நெஞ்சிலும் எதிரொலிக்க வைத்துவிட்டீர்கள்.
    திறந்துவிட்டு விடலாமா அந்தக் கதவை./

    நிச்சயமாகத் திறந்து விட வேண்டும் வல்லிம்மா. நன்றி.

    பதிலளிநீக்கு
  25. கோவை2தில்லி said...
    //கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை.... பாராட்டுகள்.//

    நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  26. மாதேவி said...
    //கூண்டுப் பறவையின் ஏக்கக் குரல் ஒலிக்கின்றது....//

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  27. பாச மலர் / Paasa Malar said...
    //விடுதலைக்கான கூக்குரல்கள் நூற்றாண்டு தாண்டியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே.....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..மொழிபெயர்ப்பு சிறப்பாய் இருக்கிறது....//

    மிக்க நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  28. dhanasekaran .S said...
    //கூண்டுப்பறவையோ நிற்கிறது தன்
    கனவுகளின் கல்லறை மேலே.

    பலரும் கனவுகளின் கல்லறை மேலே நிற்கிறார்கள்.வலிகளைச் சொல்லும் அருமைக் கவிதை வாழ்த்துகள்//

    கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  29. Lakshmi said...
    //கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  30. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //கூண்டு பறவையின் கவிதை!
    கனக்க வைத்தது மனதை!!//

    நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகையில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. ஹேமா said...
    //அருமையான கவிதை அக்கா.கூண்டுப்பறவை என்று சொல்லிப் பரிதாபப்பட்டுக்கொண்டேயிருக்கிறோம்போல ரொம்பக் காலமாகவே !//

    உண்மைதான் ஹேமா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. S.Menaga said...
    //கவிதையின் மொழிபெயர்ப்பு அருமை,பாரட்டுக்கள் அக்கா!!//

    மிக்க நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  33. அமைதிச்சாரல் said...
    //எப்போதான் விடுதலை கிடைக்குமோ கூண்டுப்பறவைக்கு..

    அருமையான கவிதை.//

    காலகாலமாக கூண்டிலே பறவைகள். நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  34. ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)

    பதிலளிநீக்கு
  35. சசிகுமார் said...
    //அக்கா திரட்டிகள் பிரச்சினையை தீர்க்க பிளாக்கர் நண்பனின் பதிவை பார்க்கவும்.//

    பார்த்தேன் சசிகுமார். அந்த முறையில் மேற்கொண்ட திருத்தத்தில் எனது வலைப்பூவில் பிரச்சனை சரியாகவில்லை. காந்திருக்கிறேன் பலரையும் போல் வேறு தீர்வுக்கு:)! அக்கறையுடனான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. சுசி said...
    //ரொம்ப நல்லா இருக்கு அக்கா :)//

    மிக்க நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  37. கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்குமா? இல்லை மறுபடி கூண்டுக்கே திரும்பி வருமா? :(

    மொழிபெயர்ப்பு அருமை. பல கவிதைகளும் படித்தாலும் மொழிபெயர்க்க ஆவல் இருந்தாலும் கவிதை வடிவில் மொழிபெயர்க்க வருவதில்லை. கவிதைனா ரசிக்க மட்டுமே தெரியும். :))))))) அதனாலே நம்மளாலே உங்களுக்கெல்லாம் தொந்திரவு குறைஞ்சிருக்காக்கும்.

    பதிலளிநீக்கு
  38. அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!

    பதிலளிநீக்கு
  39. geethasmbsvm6 said...
    //கூண்டுப் பறவை கதவைத் திறந்தாலும் தைரியமாப் பறக்குமா? இல்லை மறுபடி கூண்டுக்கே திரும்பி வருமா? :(//

    யோசிக்க வைக்கும் கேள்வி.

    //மொழிபெயர்ப்பு அருமை.//

    நன்றி மேடம்:)!

    பதிலளிநீக்கு
  40. கே. பி. ஜனா... said...
    //அருமையான பாடல்! அற்புதமான மொழிபெயர்ப்பு!//

    வருகையில் மகிழ்ச்சியும் கருத்திற்கு நன்றியும்.

    பதிலளிநீக்கு
  41. எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  42. அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.
    பகிர்விற்கு நன்றி

    படித்ததும் என் பேனா மீண்டும் பதிவுலகத்திற்காக நிமிர்கிறது

    பதிலளிநீக்கு
  43. பதிவிற்குச் சம்பந்தமில்லாத கருத்து.
    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ராமலஷ்மி மேடம்.எனது மெயில் இன்பாக்ஸில் சமீபத்தில் கமெண்டுகள் வந்தால் தெரிவதில்லை. ஸ்பாமில் சென்றுவிட்டிருந்தன உங்கள் கமெண்டுகள்...
    சித்திரசந்தையில் ஸ்டால் நம்பர் சொன்னாலும் கண்டுபிடித்திருக்கமுடியாதுதான். செம பிரம்மாண்டமாய் இருந்தது. என்னாலும் முழுவதும் சுற்ற இயலவில்லை...:))

    சித்திரச்சந்தை புகைப்படங்களை நீங்கள் பதிவிடவில்லையா??

    பதிலளிநீக்கு
  44. raji said...
    //எனது பதிவில் தங்களுக்கு VERSATILE BLOGGER AWARD அளித்துள்ளேன்.ஏற்றதற்கு அடையாளமாக தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி//

    மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ராஜி. எப்போதும் போலவே இதைப் பதிவுலகில் எழுதி வரும் அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. raji said...

    //அசர வைக்கும் மொழி பெயர்ப்பு.
    பகிர்விற்கு நன்றி

    படித்ததும் என் பேனா மீண்டும் பதிவுலகத்திற்காக நிமிர்கிறது//

    நன்றி ராஜி. உங்கள் பேனா வடிக்கப் போகின்றவற்றை வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  46. thamizhparavai said...
    //ஸ்டால் நம்பர் சொன்னாலும் கண்டுபிடித்திருக்கமுடியாதுதான். செம பிரம்மாண்டமாய் இருந்தது. என்னாலும் முழுவதும் சுற்ற இயலவில்லை...:))//

    எந்த இடத்தில் ஸ்டால் இருக்கிறது எனக் கேட்டறிந்து வந்திருக்க இயலும். என் உறவினர் ஸ்டாலை அப்படிதான் கண்டு பிடித்தோம்:)!

    முழுவதுமாய் சுற்றினால் தலை சுற்றிப்போகும் போலிருந்தது:)!

    //சித்திரச்சந்தை புகைப்படங்களை நீங்கள் பதிவிடவில்லையா??//

    நிச்சயமாகப் பதிவு உண்டு! நேரமின்மையால் இன்னும் படங்களைக் கணினியில் ஏற்றவில்லை. விரைவில் செய்கிறேன். ஆர்வத்துடன் கேட்டிருப்பதற்கு மிக்க நன்றி:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin