# 1

நெல்லையப்பர் கோவிலில் அம்மை அப்பனை தரிசித்து விட்டு வரும் போது மூன்றாம் சுற்று பிரகாரத்தின் முடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் காத்திருப்பவள் ஆனை காந்திமதி. கழுத்தில் சர மணி மாலை, ஒரு குழந்தைக்குத் திலகமிடுவது போல் பார்த்துப் பார்த்து ரசனையுடன் நெற்றி, காதுகள், தும்பிக்கையில் இடப்பட்டத் திலகங்களுடன் காட்சி அளிப்பவளை ரசிக்காதவர் இருக்க முடியாது. இவளின் வருகைக்கு முன்னர் கோவிலுக்குச் சின்னக் குட்டியாகக் கிடைத்த நயினார் யானையைப் பற்றி அறிவீர்களா? அது குறித்து சுவைபடச் சொல்லியிருக்கிறார் தொடர்ந்து நெல்லையைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைத் தன் எழுத்தின் மூலமாக ஆவணப்படுத்தி வரும் ‘மூங்கில் மூச்சு’ சுகா அவர்கள் தனது
‘நயினார்’ கட்டுரையில், 1 பிப்ரவரி 2012 சொல்வனம் இணைய இதழில். அதே கட்டுரை
வேணுவனத்திலும். படித்துப் பாருங்கள். அதில் யானை காந்திமதியைப் பற்றியதான பகிர்வுக்கு நான் எடுத்த
(இப்பதிவின் முதலிரண்டு) படங்கள் உபயோகிப்பட்டுள்ளன. சொல்வனத்துக்கும் சுகா அவர்களுக்கும் நன்றி.
# 2

இப்போதைய காந்திமதி உலகின் சாதுவான யானைகளில் ஒன்றாக மக்களால் கொண்டாடப்படுவது பற்றியும், கொடுக்கப்படும் அன்பான கவனிப்பைக் காரணமாகச் சொல்வதையும் ஏற்கனவே 2010-ல் ‘
இறையும் கலையும் - நெல்லைப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்’ பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
# 3

இம்மூன்று படங்கள் போக ‘
நயினார்’ கட்டுரையை வாசித்த பின் மேலும் என் ஆல்பத்தில் தேடிய போது கிடைத்த படங்கள் சிலவற்றையும் பகிர விருப்பம். “ குட்டி நயினாருடன் குட்டிப் பாகனாக இருந்த, பெரிய யானைப் பாகனின் மகன்” எனக் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘காந்திமதி’யின் இப்போதையப் பாகன் இவரே:
# 4

நமக்கு மட்டும்தான் பாஸ்போர்ட் சைஸில் ப்ரொஃபைல் படம் அவசியமா? காந்திமதிக்கும் இருந்தால் அழகுதானே?
# 5

மேலும் ஒரு படமாகக் கோவில் தெப்பக்குளத்தின் பச்சை நீரில் காந்திமதி அம்மன் கோபுரமும் மணிமண்டபமும் பிரதிபலிக்கும் காட்சி. உச்சி நேரத்தில் எடுத்தபடியால் வானம் சற்று வெளுப்பாகி விட்டிருந்தாலும் பகிர்ந்து கொண்டு விட்டேன்:)!
# 6

***