Friday, October 14, 2011

இசைத் தட்டுக் காலம், மருக்கொழுந்து வாசம்..-மறந்து போனவை [Oct PiT]

1. மறந்து போனதின் மறு அவதாரம்மின் விளக்காக..


2. துருப் பிடித்திருந்தாலும்
தூர எறியப்படாமல்..
தொடரும் பந்தம்

3. தொடரட்டும் பந்தங்கள்என்றும் நன்றியுடன்!


4. மரிக்கொழுந்து வாசம்பாட்டிக்கு மாறவில்லை நேசம்


5. சலவைக் கற்கள்நினைவில் இருக்கா?


6. மாலை முழுவதும் விளையாட்டுவழக்கப்படுத்திக் கொண்ட
ஒரு மழலை மொட்டு!

முன் போல பூங்காக்களில் கூட்டம் இருப்பதில்லை:(! இன்டோர் கேம்ஸ் கூட கணினித் திரை முன்னும், எக்ஸ் பாக்ஸ், ப்ளே ஸ்டேஷனுடன் டிவி திரை முன்னுமே கழிகின்றன. பரம பதத்தில் நூறை நெருங்குகையில் பாம்பு கொத்தப் பகீர்னு ஆவதும், ஏணியப் பிடிச்சுக் கிடுகிடுன்னு ஏறுகையில் வானின் உச்சிக்கே செல்லும் உற்சாகம் ஊற்றெடுப்பதும்.., தாயம் விழுமா விழுமா எனக் கட்டைகளை விட கண்ணை உருட்டி உருட்டிப் பார்ப்பதும்.., பல்லாங்குழியில் வெற்றிடம் துடைத்துச் சோழிகளைப் புதையலாக அள்ளியதும்.. ம்ம்ம், இதெல்லாம் இக்காலக் குழந்தைகள் விளையாடிப் பார்க்க முடிவதில்லை. மறந்த போன அந்த அழகான விளையாட்டுப் பலகைகளையோ தாயக்கட்டைகளையோ கூடப் படம் பிடித்துக் காட்டலாம் நீங்கள்.


7. கேட்ட கானங்கள் கொஞ்சமோ..?
ஐபாட் காலத்தில், இதில் காட்சிக்கு வைக்க ஒரு இசைத்தட்டேனும் கிடைக்குமா என நானும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்.


8. நெஞ்சம் மறப்பதில்லை..
யாஷிகா- D
அப்பாவின் கேமரா, என்னுடைய முதல் கேமராவும்..
இது குறித்த பகிர்வு இங்கே.
***

9. நினைவுப் பறவை விரிக்குது சிறகை

இந்த ட்வின் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமரா (1957-63 தயாரிப்பு) 35mm ஃபிலிம் சுருளுக்கும் முன்னே 120 format காலத்தைச் சேர்ந்தது. 6செ.மீ x 6செ.மீ அளவிலான படங்களைத் தரும் இப்படி.


10. நினைத்தாலே இனிக்கும்

பள்ளிக்குக் கேமராவை எடுத்துச் செல்லுகையில் க்ளிக் ஃபோரை தயக்கமின்றி இயக்க முன் வருபவர் யாஷிகாவைத் தொட்டு இயக்கத் தயாராக இருக்கவில்லை. எனவே நான் இருக்கும் படங்களை செல்ஃப் டைமரிலேயே எடுப்பேன். ஃப்லிம் சுருள் தரும் 12 படத்தில் ஒரு 4 படத்துலயாவது தலையக் காட்டலேன்னா எப்படின்னு காட்டி விடுவது வழக்கம்:)! ட்ரைபாடாக வகுப்பறையிலிருந்து இழுத்து வரப்படும் பெஞ்சு மேசைகளே பயன்படும். இதிலிருக்கும் தோழியர் இருபத்து ஒன்பது வருடங்கள் கழித்து இப்படத்தை இங்கு பகிர்வதில் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என ஒரு நம்பிக்கைதான்:)! நினைத்தாலே இனிக்கிற, பாடித் திரிந்த +2-வில் இருக்கும் போது எடுத்தது. இந்த வயதுப் பெண்கள் மறந்து போன உடையாக.. அல்லது என்றேனும் பாட்டிகளை மகிழ்விக்க அணியும் உடையாக.. பாவாடை தாவணி.

வாங்க, மறந்து போனவற்றை நினைவிடுக்களிலிருந்து மீட்டெடுங்க. கடிதக் காலத்துக்குப் போய் தபால் பெட்டி, போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷக் கடிதங்களின் உறைகள் இவற்றைக் கூட படமாக்கலாம். போட்டி அறிவிப்பு இங்கே. நேரம் அதிகமில்லை. இன்னும் ரெண்டே ரெண்டு நாள்தான் இருக்கு. இதுவரை போட்டிக்கு வந்த அற்புதமான படங்கள் எல்லாம் இந்த பிகாஸா ஆல்பத்தில் இருக்கு. வல்லிம்மா கிணற்று ராட்டினத்தைச் சிறப்பாப் படமாக்கியிருக்கிறாங்க. இருபது பைசா நாணயத்தை வருண் எப்படி எடுத்திருக்கிறார் பாருங்க. பாலசுந்தரம் கஞ்சி காய்ச்சிப் பச்ச மொளகா, வத்த மொளகா, சின்ன வெங்காயத்தால அலங்கரிச்சு மண்கலயத்தில் கொடுத்திருக்கிறாரு. அப்படியே எடுத்து உறிஞ்சிக் குடிக்கலாம் போல. நம்ம மக்கள் எத்தனை ரசனையோடு படம் எடுக்கறாங்க? பார்க்கப் பார்க்க உங்களுக்கே வேகம் வரும்.
***

61 comments:

 1. அருமையான புகைப்படங்கள்! ரசித்து மகிழ்ந்தேன். நன்றி!

  ReplyDelete
 2. வாவ்...பார்த்துப்பார்த்து ரசிக்கக்கூடிய புகைப்படங்கள்.அதிலும் பாட்டி வைத்திருக்கும் மரிக்கொழுந்து படம் அட்டகாசம்.

  ReplyDelete
 3. படத்தைக் கண்ணாலே ரசிக்கும்போதே மனசெல்லாம் மரிக்கொழுந்து வாசனை!!சூப்பர் படங்கள் !!

  ReplyDelete
 4. அற்புதமான படங்கள்...அந்தநாள் ஞாபகங்கள்.

  ReplyDelete
 5. படங்கள் எல்லாம் அற்புதம்
  நீங்கள் பழைய நினைவுகளை சந்தோஷத்துடன்
  எழுதிச் செல்லச் செல்ல அந்த சந்தோஷமும் உற்சாகமும்
  எங்களுக்குள்ளும் நிரம்பி வழிகிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 6. அருமையான ஃபோட்டோ வரலாறு.
  இந்த யாஷிகா டியை, அண்ணனிடமிருந்து வாங்கி
  ‘என்து டி ’என்று என் கையில் இருந்த சமயம் ,எடுத்த படம்தான் ராமலஷ்மி, சகோதர சகோதரிகளோடு சிரித்தபடி இருக்கும் படத்தை தட்டினேன்....அது ஒரு காலம்.
  என் புகைப்படக்கலை வளர்ந்ததும் இந்த யாஷிகாவில்தான்

  ReplyDelete
 7. பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ சூப்பர்ப்...!!!

  ReplyDelete
 8. கிளிக் 04 நானும் ஒரிரு முறை இயக்கி இருக்கிறேன்... இதையெல்லாம் பார்க்கும் போது அவரவர் காலங்கள் அவரவர் முன்பு வந்து காட்சி கொடுக்கும். கடந்து போன காலங்கள் மகிழ்ச்சியை நம்மிடம் பரிசாக தந்து சென்றிருக்கின்றன... உண்மையிலேயே எல்லாவற்றையும் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி ராமலக்ஷ்மி...

  ReplyDelete
 9. என்ன ஒரு ஒய்யாரம் :)))

  சூப்பர் ராமலக்‌ஷ்மி எல்லாமே அழகு..

  ReplyDelete
 10. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்கிறது..

  ReplyDelete
 11. ரிஷபன் சார் சொல்வது போல ஓவ்வொரு படமும் ஒரு பழங்கதையைச் சொல்கிறது. எல்லாவற்றிலும் எனக்கும் பழக்கம் உண்டு என்பதால், மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.

  சிம்னி & லாந்தர் விளக்கொளியில் தான் நான் அந்தக்கால XI Std. SSLC வரை, படித்தேன்.

  அருமையான மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பிய பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  Tamilmanam 3 & Indli 3 vgk

  ReplyDelete
 12. அருமை... மறந்து போனவையா?...மனதில் மறைந்து நின்றவை எட்டிப் பார்க்கின்றன இந்த பதிவால்...

  ReplyDelete
 13. அருமையான பதிவு இராமலஷ்மி...மலரும் நினைவுகளாய் தொடுத்திருக்கும் படங்கள் அருமையிலும் அருமை....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. நல்ல புகைப்படங்கள் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.

  ReplyDelete
 15. அருமையான புகைப்படங்கள்,ஊரில் என்றால் எண்ணற்ற பொருட்கள்,காட்சிகள் கண்ணில் மாட்டும்..அசத்துறீங்க..

  ReplyDelete
 16. அழகிய தீம். புகைப் படங்கள் அபாரம். 'எங்களிடமும்' சில புகைப் படங்கள் இந்த தீமை ஒட்டி இருந்தாலும் இந்தப் போட்டிகளில் இதுவரை கலந்து கொண்டதில்லை என்பதால் அனுப்புவதில்லை. உங்கள் பழைய நினைவுகள் எங்களுக்கும் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கின்றன.

  ReplyDelete
 17. கதை சொல்லும் படங்கள் அருமை.

  ராமலக்ஷ்மி, அம்மா வித விதமாய் சிம்னி ,லாந்தர் வைத்து இருந்தார்கள்.

  அது சரி எந்த படம் போட்டிக்கு?
  எல்லாமே அழகு.

  ReplyDelete
 18. என்னிடம் இசைத்தட்டு இருக்கிறதி என்றே நினைக்கிறேன் ராமலக்ஷ்மி.
  அருமையான தொகுப்பு இந்தப் புகைப்படங்கள்.

  தாழம்பூவைத் தேடி ஏமாந்து போனேன்:)

  ReplyDelete
 19. நல்ல படங்களுடன் தகவல்களையும் தந்துள்ளீர்கள்.


  //இதிலிருக்கும் தோழியர் இருபத்து ஒன்பது வருடங்கள் கழித்து இப்படத்தை இங்கு பகிர்வதில் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என ஒரு நம்பிக்கைதான்:)!//

  'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் உள்ள தோழிகள், தங்கள் பதிவைப் படித்தல் மகிழ்ச்சியடைவார்கள்.

  படிக்கிற காலத்தில், எனக்கு 'இப்படி காமிராவும் கையுமாக ஒரு நண்பர் கிடைக்க வில்லையே' என்கிற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

  நினைவுகளை தூசித்தட்டி எழுப்பியமைக்கு நன்றி.

  ReplyDelete
 20. அருமையான படங்கள். பிரபல எழுத்தாளினி இருக்கும் கடைசி படம் ஆச்சரியம். எனக்கு முதல் படம் மிக பிடித்தது

  ReplyDelete
 21. பாராட்ட வார்த்தை இல்ல அவ்வளோ அருமை..எப்படித்தான் இப்படி தேடிப்பிடிக்கறீங்களோ ராமலஷ்மி! அந்தநாள் ப்ளாக் அண்ட் ஒயிட்டுக்கு ஈடு இணைதான் ஏது?

  ReplyDelete
 22. பாட்டி மருக்கொழுந்து ...அருமை
  ஆனால் இப்படிக் கரு கருவென்று அடர்த்தியான கேசம் கொண்ட பாட்டி யாரம்மா....????!!!!!
  கொஞ்சம் திரும்பச்சொல்லுங்கள் பார்க்கலாம்

  ReplyDelete
 23. TallyKarthick said...
  //நல்ல தகவல்//

  நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 24. கணேஷ் said...
  //அருமையான புகைப்படங்கள்! ரசித்து மகிழ்ந்தேன். நன்றி!//

  நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 25. ஸாதிகா said...
  //வாவ்...பார்த்துப்பார்த்து ரசிக்கக்கூடிய புகைப்படங்கள்.அதிலும் பாட்டி வைத்திருக்கும் மரிக்கொழுந்து படம் அட்டகாசம்.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 26. Lalitha Mittal said...
  //படத்தைக் கண்ணாலே ரசிக்கும்போதே மனசெல்லாம் மரிக்கொழுந்து வாசனை!!சூப்பர் படங்கள் !!//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 27. மாதேவி said...
  //அற்புதமான படங்கள்...அந்தநாள் ஞாபகங்கள்.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 28. Ramani said...
  //படங்கள் எல்லாம் அற்புதம்
  நீங்கள் பழைய நினைவுகளை சந்தோஷத்துடன்
  எழுதிச் செல்லச் செல்ல அந்த சந்தோஷமும் உற்சாகமும்
  எங்களுக்குள்ளும் நிரம்பி வழிகிறது
  அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 29. goma said...
  //அருமையான ஃபோட்டோ வரலாறு.
  இந்த யாஷிகா டியை, அண்ணனிடமிருந்து வாங்கி
  ‘என்து டி ’என்று என் கையில் இருந்த சமயம் ,எடுத்த படம்தான் ராமலஷ்மி, சகோதர சகோதரிகளோடு சிரித்தபடி இருக்கும் படத்தை தட்டினேன்....அது ஒரு காலம்.//

  அந்தப் படம் எங்களுக்குப் பொக்கிஷம்.[இந்தப் பதிவின் கடைசிப் படம்.]

  //என் புகைப்படக்கலை வளர்ந்ததும் இந்த யாஷிகாவில்தான்//

  ராசியான கேமரா! மிக்க நன்றி:)!

  ReplyDelete
 30. MANO நாஞ்சில் மனோ said...
  //பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ சூப்பர்ப்...!!!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 31. குமரி எஸ். நீலகண்டன் said...
  //கிளிக் 04 நானும் ஒரிரு முறை இயக்கி இருக்கிறேன்... இதையெல்லாம் பார்க்கும் போது அவரவர் காலங்கள் அவரவர் முன்பு வந்து காட்சி கொடுக்கும். கடந்து போன காலங்கள் மகிழ்ச்சியை நம்மிடம் பரிசாக தந்து சென்றிருக்கின்றன... உண்மையிலேயே எல்லாவற்றையும் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி ராமலக்ஷ்மி...//

  சரியாகச் சொன்னீர்கள். அந்தப் பரிசுகளை எடுத்துப் பார்க்க ஒரு வாய்ப்பாக அமைந்த இப்பதிவு எல்லோருக்குமே நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ச்சியைத் தந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 32. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //என்ன ஒரு ஒய்யாரம் :)))

  சூப்பர் ராமலக்‌ஷ்மி எல்லாமே அழகு..//


  செல்ஃப் டைமர் போட்டுவிட்டு அவசரமாக ஓடி வந்து கொடுத்த போஸ்:))! நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 33. ரிஷபன் said...
  //ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்கிறது..//

  நன்றி ரிஷபன்.

  ReplyDelete
 34. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //ரிஷபன் சார் சொல்வது போல ஓவ்வொரு படமும் ஒரு பழங்கதையைச் சொல்கிறது. எல்லாவற்றிலும் எனக்கும் பழக்கம் உண்டு என்பதால், மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.

  சிம்னி & லாந்தர் விளக்கொளியில் தான் நான் அந்தக்கால XI Std. SSLC வரை, படித்தேன்.

  அருமையான மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பிய பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் சார்.

  ReplyDelete
 35. அமுதா said...
  //அருமை... மறந்து போனவையா?...மனதில் மறைந்து நின்றவை எட்டிப் பார்க்கின்றன இந்த பதிவால்...//

  மகிழ்ச்சி அமுதா. மிக்க நன்றி:)!

  ReplyDelete
 36. SurveySan said...
  //very nice post.//

  நன்றி சர்வேசன்.

  ReplyDelete
 37. Nithi Clicks said...
  //அருமையான பதிவு இராமலஷ்மி...மலரும் நினைவுகளாய் தொடுத்திருக்கும் படங்கள் அருமையிலும் அருமை....வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி நித்தி:)!

  ReplyDelete
 38. Lakshmi said...
  //நல்ல புகைப்படங்கள் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.//

  நன்றிம்மா. கடைசிப் படத்துக்குப் பொருத்தமான பாடல்:)!

  ReplyDelete
 39. asiya omar said...
  //அருமையான புகைப்படங்கள்,ஊரில் என்றால் எண்ணற்ற பொருட்கள்,காட்சிகள் கண்ணில் மாட்டும்..அசத்துறீங்க..//

  நன்றி ஆசியா. நீங்கள் போட்டிக்கு அனுப்பிய படமும் நல்ல பகிர்வு.

  ReplyDelete
 40. ஸ்ரீராம். said...
  //அழகிய தீம். புகைப் படங்கள் அபாரம். 'எங்களிடமும்' சில புகைப் படங்கள் இந்த தீமை ஒட்டி இருந்தாலும் இந்தப் போட்டிகளில் இதுவரை கலந்து கொண்டதில்லை என்பதால் அனுப்புவதில்லை. உங்கள் பழைய நினைவுகள் எங்களுக்கும் பல பழைய நினைவுகளை அசை போட வைக்கின்றன.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம். போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பிக்கலாமே நீங்கள்!!

  ReplyDelete
 41. கோமதி அரசு said...
  //கதை சொல்லும் படங்கள் அருமை.

  ராமலக்ஷ்மி, அம்மா வித விதமாய் சிம்னி ,லாந்தர் வைத்து இருந்தார்கள்.

  அது சரி எந்த படம் போட்டிக்கு?
  எல்லாமே அழகு.//

  மிக்க நன்றி கோமதிம்மா. பிட் குழுவில் இருப்பதால் இப்போது நான் போட்டியில் பங்கேற்க இயலாது. மாதிரிப் படங்களாக மற்றவருக்கு ஒரு நினைவூட்டலாக போட்டிப் பதிவுகள் தொடர்கின்றன:)!

  ReplyDelete
 42. வல்லிசிம்ஹன் said...
  //என்னிடம் இசைத்தட்டு இருக்கிறதி என்றே நினைக்கிறேன் ராமலக்ஷ்மி.
  அருமையான தொகுப்பு இந்தப் புகைப்படங்கள்.//

  நன்றி வல்லிம்மா. ரெகார்ட் ப்ளேயரோடு பெரியப்பா உபயோகித்த பத்து இசைத்தட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வரிசையாகப் பாடும் ரேடியோ கிராம் உண்டு வீட்டில். ஏராளமான இசைத்தட்டுகளும். இப்போது எங்குள்ளனவோ தெரியவில்லை.

  இங்கே படமெடுத்துக் காட்டியிருப்பது மாமனார் வீட்டிலிருந்து கொண்டு வந்தது:)!

  //தாழம்பூவைத் தேடி ஏமாந்து போனேன்:)//

  இவங்க தாழம்பூ வச்சுப் பார்த்ததில்லை:)! ஆனால் வாசமிகு ‘நாகவல்லிப்பூ’வை ஒற்றையாக வச்சுப் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 43. அமைதி அப்பா said...
  ***/நல்ல படங்களுடன் தகவல்களையும் தந்துள்ளீர்கள்.

  //இதிலிருக்கும் தோழியர் இருபத்து ஒன்பது வருடங்கள் கழித்து இப்படத்தை இங்கு பகிர்வதில் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என ஒரு நம்பிக்கைதான்:)!//

  'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் உள்ள தோழிகள், தங்கள் பதிவைப் படித்தல் மகிழ்ச்சியடைவார்கள். //

  மகிழ்ச்சியுடன் மடல் அனுப்பி விட்டார்கள் ஏற்கனவே சிலர்:)!

  //படிக்கிற காலத்தில், எனக்கு 'இப்படி காமிராவும் கையுமாக ஒரு நண்பர் கிடைக்க வில்லையே' என்கிற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.//

  காமிராவும் கையுமா இருந்திருந்தாலும் புத்தகத்தைக் கீழே போடவில்லை:)!

  //நினைவுகளை தூசித்தட்டி எழுப்பியமைக்கு நன்றி.//

  மிக்க நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 44. மோகன் குமார் said...
  //அருமையான படங்கள். பிரபல எழுத்தாளினி இருக்கும் கடைசி படம் ஆச்சரியம். எனக்கு முதல் படம் மிக பிடித்தது//

  கருப்பு வெள்ளைப் படங்கள் அடிக்கடி பகிர்ந்ததுண்டே:)!

  மறு அவதாரம். என் சாய்ஸும் அதுவே என்பதால் முதல் படமாயிற்று பதிவில். நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 45. ஷைலஜா said...
  //பாராட்ட வார்த்தை இல்ல அவ்வளோ அருமை..எப்படித்தான் இப்படி தேடிப்பிடிக்கறீங்களோ ராமலஷ்மி! அந்தநாள் ப்ளாக் அண்ட் ஒயிட்டுக்கு ஈடு இணைதான் ஏது?//

  ஆம், கருப்பு வெள்ளைக்காலப் படங்கள் என்றைக்கும் சிறப்பே!
  மிக்க நன்றி ஷைலஜா.

  ReplyDelete
 46. goma said...
  //பாட்டி மருக்கொழுந்து ...அருமை
  ஆனால் இப்படிக் கரு கருவென்று அடர்த்தியான கேசம் கொண்ட பாட்டி யாரம்மா....????!!!!!
  கொஞ்சம் திரும்பச்சொல்லுங்கள் பார்க்கலாம்//

  எனக்கு விகடன் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்த அதே பாட்டிதான்:)! இங்கே கடைசிப் படம். இதை எடுத்து சரியா 3 வருடம் முடிந்தது. மரிக்கொழுந்து சமீபத்திய ஷாட். நல்லாப் பாருங்க. நரை இருக்கு. ஆனா இந்த வயசுக்கு அதிகமில்லை என்பது ஆச்சரியமான, வடிவேலு சொல்றா மாதிரி “லைட்டா..” பொறாமைப் படக்கூடியதாக:)! மீள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 47. //காமிராவும் கையுமா இருந்திருந்தாலும் புத்தகத்தைக் கீழே போடவில்லை:)!//

  படிக்கிற காலத்தில் புத்தகத்தை தாங்கள் ஒதுக்கவில்லை என்பதற்கு தாங்கள் வாங்கிய பட்டங்களும், தங்களின் எழுத்துக்களும் சாட்சி.

  பல திறமைகளுக்கு சொந்தக்காரர் தாங்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று நம்புகிறேன்.

  இன்றைய பெண்களுக்கு தாங்கள் ஒரு வழிக்காட்டி!

  என்னுடை பின்னூட்டத்திற்கு விரிவான பதிலளித்தமைக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 48. @ அமைதி அப்பா,

  வேடிக்கையாகவே சொல்லியிருந்தேன் அமைதி அப்பா. அன்பிற்கு நன்றி:)!

  ReplyDelete
 49. அழகான அருமையான படங்கள் ராமலஷ்மி..

  ReplyDelete
 50. Lovely shots - especially the Yashica D

  School photo arumai :)

  ReplyDelete
 51. அழகுப் படங்கள் ராமலக்ஷ்மி...

  ReplyDelete
 52. சூப்பர் படங்கள்

  ReplyDelete
 53. மிக அருமை வழக்கம்போலவே ராமலெக்ஷ்மி:)

  ReplyDelete
 54. அமைதிச்சாரல் said...
  //அழகான அருமையான படங்கள் ராமலஷ்மி..//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 55. Someone like you said...
  //Lovely shots - especially the Yashica D

  School photo arumai :)//

  Thanks a lot:)!

  ReplyDelete
 56. பாச மலர் / Paasa Malar said...
  //அழகுப் படங்கள் ராமலக்ஷ்மி...//

  நன்றி மலர்:)!

  ReplyDelete
 57. Kanchana Radhakrishnan said...
  //சூப்பர் படங்கள்//

  நன்றி மேடம்:)!

  ReplyDelete
 58. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அருமை வழக்கம்போலவே ராமலெக்ஷ்மி:)//

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 59. உங்கள் புகைப்படக் கலைத்திறன் மிக அழகாகவும் அபாரமாகவும் இருக்கிறது( பல பதிவுகளில் பார்த்தேன்)

  அதை மற்றவர்களும் வளர்க்க உதவம் பணிக்கு(PIT) பாரட்டுக்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin