ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தொடரும் பயணம் - நவீன விருட்சத்தில்..


ஒரு தேவதையைப் போலதான்
வாழ்ந்திருந்தாள்.
கிரீடத்தில் நட்சத்திரங்களாக
ஒளிர்ந்த வைரங்களுடன்
கூந்தல் நிறம் போட்டி போடவும்
பறத்தலில் வேகம் குறைந்தது.
உதிரும் சிறகுகளால்
வீடெங்கும் குப்பையாவதாக
இறக்கைகள்
வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டன.
ஆயினும் கூட்டிலே ஓய்வெடுக்க
அனுமதியில்லை.
நடந்தேனும் ஊர்ந்தேனும்
தனக்கான தானியத்தை
ஈட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்.

பாய்ந்து வந்த
வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை.
சுழற்றி வீச வாளொன்று
சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க
விரல்களில் வலுவில்லை.
இவள் தொட்டு ஆசிர்வதித்த
செங்கற்களைக் கொண்டு
எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.

மேகங்களுக்குள் புகுந்து
வெளிவந்த காலத்தில்
அதன் வெண்மையை வாங்கி
மிளிர்ந்த உடை
பழுப்பாகிப் போய்ப் பாதந்தடுக்க
இரை தேடக் கிளம்புகிறாள்.
வழக்கமாகச் செல்லும் பேருந்து
நிறுத்தம் தாண்டிச்
சென்று விட்டதாக எண்ணி
நடக்கத் தொடங்குகிறாள்.

சற்றுதூரம் கடந்திருக்கையில்
ஒட்டி வந்து நின்றது
ஏதோ காரணத்தால்
தாமதமாகப் புறப்பட்டிருந்த பேருந்து.
சாலைவிதிகளை மீறி
நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி
ஏறிக் கொள்ளுமாறு
அன்றாடப் பயணி அவளை
அடையாளம் கண்டு அழைத்த
ஓட்டுநரின் கனிவு..

மயிற்பீலியின் நீவலென
ஆற்றுகிறது மனதின் காயங்களை.

கால் துவளும் வேளையில்
ஏதேனும் ஒரு பல்லக்கு
எங்கிருந்தோ வந்தடைகிறது
பயணத்தைத் தொடர.
***

படம் நன்றி: ஜீவா சுப்ரமணியம் http://www.flickr.com/photos/jeevanphotography/6126097836/in/photostream

13 ஆகஸ்ட் 2011நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

46 கருத்துகள்:

  1. முதுமையின் அவல வாழ்வை மிக அழகாக
    சொல்லிச் செல்வதோடு கால்கள் உதவ
    மறுத்தாலும் தடி உதவுதல் போல்
    உற்றவர்கள் உதவ மறுத்தாலும்
    மனைத நேயம் மிக்கவர்கள் உலகில்
    இன்னமும் இருக்கிறார்கள் என
    நேர்மறை சிந்தனையோடு முடித்திருப்பது அழகு
    படமே பாதி பேசிவிடுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஓட்டுனரின் கனிவு , மயில் பீலியின் நீவலென ஆற்றுகிறது மனக் காயங்களை.......என்ற வரிகள் உற்ற நிலைமையை உள்ளபடி சொல்வதாய்
    உள்ளது. மனதை நெருடும் கவிதை.

    பதிலளிநீக்கு
  3. //இவள் தொட்டு ஆசிர்வதித்த
    செங்கற்களைக் கொண்டு
    எழுந்த மனையென்பது
    எவர் நினைவிலும் இல்லை.//

    //கால் துவளும் வேளையில்
    ஏதேனும் ஒரு பல்லக்கு
    எங்கிருந்தோ வந்தடைகிறது
    பயணத்தைத் தொடர.//

    கண்ணீர் வரவழைத்த வரிகள்.

    முதுமையைப் பற்றிய அருமையானதொரு படைப்பு.

    வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்.
    நன்றிகள்.
    vgk

    பதிலளிநீக்கு
  4. கால் துவளும் வேளையில்
    ஏதேனும் ஒரு பல்லக்கு
    எங்கிருந்தோ வந்தடைகிறது
    பயணத்தைத் தொடர.



    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  5. இவள் தொட்டு ஆசிர்வதித்த
    செங்கற்களைக் கொண்டு
    எழுந்த மனையென்பது
    எவர் நினைவிலும் இல்லை.

    அருமையான கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. முதுமை...இன்று அப்பா அம்மாவைப் பார்க்கும்போது அவங்களை இளமையாகப் பார்த்த ஞாபகம்தான் அதிகம் வருகிறது. உங்க கவிதையைப் படிச்சதும் அவங்கள இளமையில் என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது...

    இளமையிலேயே இந்த உலகத்தைவிட்டுப் போன "அதிர்ஷ்டசாலி"ங்க மட்டும்தான் முதுமை அடைவதிலிருந்து தப்ப முடியும்! At least such "lucky people" dont have to deal with the "psychological stress" caused due to losing one by one (health, position and possession and respect and what not) as time goes on until they are ready to travel in the "pallakku"!

    நல்ல கவிதைங்க ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  7. மிக அருமை. படமே பாதி கதையைச் சொல்கிறது. பிரமாதம். படத்தில் ஜீவன் என்று போட்டுள்ளதே..(அதுவும் கவிதைக்குத் தலைப்பு போல உள்ளது!!) நீங்கள் எடுத்த புகைப்படம் இல்லையோ...
    "இவள் தொட்டு அச்செர்வதித்துக் கொடுத்த செங்கற்களைக் கொண்டு..." உபயோகம் இருக்கும் வரைதான் உறவுகள் நம்மை மதிக்கின்றன. உறவுகளில் விழுந்த காயத்துக்கு நட்புகள் தடவும் மருந்து.

    பதிலளிநீக்கு
  8. மன்னிக்கவும்...திருத்தம்..."உறவுகளால் விழுந்த காயத்துக்கு..." என்று மாற்றிப் படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  9. மனதை ஒரு வித பாதிப்பில் ஆழ்த்தி முடிகிறது கவிதை

    பதிலளிநீக்கு
  10. அடையாளம் கண்டு அழைத்த
    ஓட்டுநரின் கனிவு..

    மயிற்பீலியின் நீவலென
    ஆற்றுகிறது மனதின் காயங்களை.//

    முதியோரை மதிக்கும் மனித நேயம் இருப்பதை காட்டுகிறது இந்த வரிகள்.முதியோர் தினத்தில் நல்லதொரு கவிதை.

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப அழகான கவிதை.. உணர்ச்சிக் குவியலுடன் அருமையான படைப்பு.

    பதிலளிநீக்கு
  12. மயிற்பீலியின் நீவலென
    ஆற்றுகிறது மனதின் காயங்களை//

    ஆற்றிவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //கால் துவளும் வேளையில்
    ஏதேனும் ஒரு பல்லக்கு
    எங்கிருந்தோ வந்தடைகிறது
    பயணத்தைத் தொடர.//


    மனம் கவர்ந்த கவிதை.

    பதிலளிநீக்கு
  14. \\ஒரு தேவதையைப் போலதான்
    வாழ்ந்திருந்தாள்//.

    சிந்திக்கையில் பயம் வருகிறது நாளை நம் நிலமையும் இப்படியாகுமாவென?

    கண்ணீர் வரவழைத்த கவிதை வரிகள் :(

    பதிலளிநீக்கு
  15. மிக நல்ல கவிதை,திரும்ப திரும்ப வாசிக்கத்தூண்டியது.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. //கால் துவளும் வேளையில்
    ஏதேனும் ஒரு பல்லக்கு
    எங்கிருந்தோ வந்தடைகிறது
    பயணத்தைத் தொடர.//

    அருமை மேடம்..

    முதுமை படும் அவதிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய கவிதை..

    பதிலளிநீக்கு
  17. MANO நாஞ்சில் மனோ said...
    //முதல் கவிதை மழை....//

    நன்றி!

    பதிலளிநீக்கு
  18. Ramani said...
    //..மனித நேயம் மிக்கவர்கள் உலகில்
    இன்னமும் இருக்கிறார்கள் என
    நேர்மறை சிந்தனையோடு முடித்திருப்பது அழகு
    படமே பாதி பேசிவிடுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி. திரு. ஜீவா சுப்பிர மணியத்தின் பல படங்கள் ஜீவனுள்ளவை ஸ்ரீராம் சொல்லியிருப்பது போலவே.

    பதிலளிநீக்கு
  19. natchiar kothai said...
    //ஓட்டுனரின் கனிவு , மயில் பீலியின் நீவலென ஆற்றுகிறது மனக் காயங்களை.......என்ற வரிகள் உற்ற நிலைமையை உள்ளபடி சொல்வதாய்
    உள்ளது. மனதை நெருடும் கவிதை.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கண்ணீர் வரவழைத்த வரிகள்.

    முதுமையைப் பற்றிய அருமையானதொரு படைப்பு.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. goma said...
    //வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. குமரி எஸ். நீலகண்டன் said...
    //மனதைத் தொடும் கவிதை...//

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  23. Rathnavel said...
    //அருமையான கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம். said...
    //மிக அருமை. படமே பாதி கதையைச் சொல்கிறது. பிரமாதம். படத்தில் ஜீவன் என்று போட்டுள்ளதே..(அதுவும் கவிதைக்குத் தலைப்பு போல உள்ளது!!) நீங்கள் எடுத்த புகைப்படம் இல்லையோ...//

    இல்லை:)! படம் எடுத்தவரின் ஜீவனுள்ள பிற பதிவுகளைக் காணவே அவரின் ஃப்ளிக்கர் முகவரியையும் தந்துள்ளேன். அருமையான புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர்.

    //உபயோகம் இருக்கும் வரைதான் உறவுகள் நம்மை மதிக்கின்றன. உறவுகளால் விழுந்த காயத்துக்கு நட்புகள் தடவும் மருந்து.//

    ஆம், நட்பு பாராட்டும் நல்லுள்ளங்களே பெரும்பாலானோருக்குத் தெம்பாக வாழ்வைத் தொடர உதவுகின்றன. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  25. தமிழ் உதயம் said...
    //மனதை ஒரு வித பாதிப்பில் ஆழ்த்தி முடிகிறது கவிதை//

    கருத்துக்கு மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  26. கோமதி அரசு said...
    //முதியோரை மதிக்கும் மனித நேயம் இருப்பதை காட்டுகிறது இந்த வரிகள்.முதியோர் தினத்தில் நல்லதொரு கவிதை.//

    மிக்க நன்றி கோமதிம்மா. ஆம் ஏதேச்சையாகவே அத்தினத்தையொட்டி பதிந்து விட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. அமைதிச்சாரல் said...
    //ரொம்ப அழகான கவிதை.. உணர்ச்சிக் குவியலுடன் அருமையான படைப்பு.//

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  28. Kanchana Radhakrishnan said...
    //நல்ல கவிதை. வாழ்த்துகள்.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  29. geethasmbsvm6 said...
    ***//மயிற்பீலியின் நீவலென
    ஆற்றுகிறது மனதின் காயங்களை//

    ஆற்றிவிட்டது. நன்றி./***

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  30. சே.குமார் said...
    //மனம் கவர்ந்த கவிதை.//

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  31. Nithi Clicks said...
    ***\\ஒரு தேவதையைப் போலதான்
    வாழ்ந்திருந்தாள்//.

    சிந்திக்கையில் பயம் வருகிறது நாளை நம் நிலமையும் இப்படியாகுமாவென?

    கண்ணீர் வரவழைத்த கவிதை வரிகள் :(//***

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நித்தி.

    பதிலளிநீக்கு
  32. வருண் said...
    //இளமையிலேயே இந்த உலகத்தைவிட்டுப் போன "அதிர்ஷ்டசாலி"ங்க மட்டும்தான் முதுமை அடைவதிலிருந்து தப்ப முடியும்! At least such "lucky people" dont have to deal with the "psychological stress" caused due to losing one by one (health, position and possession and respect and what not) as time goes on until they are ready to travel in the "pallakku"!//

    வருத்தம் தரும் நிதர்சனத்தை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    //நல்ல கவிதைங்க ராமலக்ஷ்மி!//

    நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  33. asiya omar said...
    //மிக நல்ல கவிதை,திரும்ப திரும்ப வாசிக்கத்தூண்டியது.வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  34. அன்புடன் மலிக்கா said...
    //அருமை மேடம்..

    முதுமை படும் அவதிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய கவிதை..//

    மிக்க நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  35. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நெஞ்சைக் கீறும் கவிதை. வார்த்தைகளே இல்லாமல் கவிதை வடிக்கும் படம். ஒன்றை ஒன்று விஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  37. படமும் கவிதையும் மீண்டும் பார்க்கவும் படிக்கவும் வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
  38. Super Arumaiyan poem.
    நெஞ்சைத் தொடுகிறது. வாழ்த்துகள். இதே போலவே நதியின் பயணமும், சிறிராம் போட்டதை வாசித்தேன். சுப்பர் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  39. அருமை ராமலக்ஷ்மி,கண்ணீர்த்துளிகளல் எழுதிய ஓவியம் இந்தக் கவிதை. மனதில் பாரம் ஏறுகிறது. எல்லோருக்கும் உண்டானது முதுமை.
    ஓவியத்தில்,படத்தில் இருக்கும் அம்மாவை ஓடிவந்து தூக்கி கொள்ள கைகள் பரபரக்கின்றன.
    நிதர்சனம்.
    கைகொடுத்த கண்டக்டருக்குக் கோடி வந்தனங்கள் கவிதைக்குள் இருக்கும் மயிலிறகுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin