Tuesday, October 11, 2011

தூறல் - பண்புடன் இணைய இதழ் - செப் 30, 2011எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்

காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்

வாட்டமிலா
சற்றுங்கோணா
முகங்காட்ட வேண்டும்

இயந்திரத்தனமாய் இன்றி
சிந்தும் புன்னகை
இயல்பாய் இருந்து தொலைக்க
தூங்கும் போது கனவில் சுமந்தும்
போகுமிடமெங்கும் ஏந்தித் திரிந்தும்
பழக வேண்டும்

தசைகளை
இழுத்துத் தைத்துக் கொண்டால்
தேவலாமெனும் சிந்தனை
தந்த சிரிப்புடன் கிளம்பிய
ஒரு காலையில்..

திசைமாறி வீசிய பருவக்காற்று
திரட்டி வந்த கருமேகங்கள்
தூறலைப் பெரிய பெரிய பொட்டாகச்
சாலையில் எட்டி எட்டிப் போட

அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
பொறாமையுடன் புன்னகைக்கிறாள்

இதயம் வெடித்து விடாதிருக்க
இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.
***

செப்டம்பர் 30, 2011 பண்புடன் இணைய இதழில்.., நன்றி பண்புடன்!

படம்: படைப்புடன் வெளியானது.

53 comments:

 1. அருமை.. சோக உணர்வுகளை சொன்னாலும் உண்மை !!

  ReplyDelete
 2. nice one...

  http://suresh-tamilkavithai.blogspot.com

  ReplyDelete
 3. மனதை நனைக்கும் நல்ல கவிதை

  ReplyDelete
 4. Tamilmanam Traffic rankil kalakkureenga ! Vaazhthukkal.

  ReplyDelete
 5. கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. கண்ணீர் - துயரத்தின் வடிகால். அதற்கு கூட கட்டுப்பாடு அல்லது தட்டுப்பாடு. கவிதை அருமை.

  ReplyDelete
 7. //இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.//

  ஆடம்பரம்... உணர்வுகளற்றவர்களாய் மாற்றி வருகிறது, மனிதர்களை!

  ReplyDelete
 8. //இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.//


  கடைசி வரிகள் அருமை அக்கா.

  கவிதை சோகம் சொன்னாலும் அழகாய்...

  பண்புடன் இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. செயற்கைப் புன்னகையில் அழக்கூட உரிமையில்லாத பிழைப்பைச் சொல்லும் அருமையான கவிதை.

  ReplyDelete
 10. சார்லி சாப்ளினின் “மழை எனக்குப் பிடிக்கும். மழையில் அழும்போது யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்” என்ற வாச்கம் நினைவு வருகிறது.

  (இந்தப் பின்னூட்டம் இப்போ சமீபத்தில்தான் மற்றொரு பதிவிலும் எழுதிய ஞாபகம்; இருந்தாலும் இங்கேயும் பொருந்துமல்லாவா)

  ReplyDelete
 11. //அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
  பொறாமையுடன் புன்னகைக்கிறாள்

  இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.//

  தூறல் போலவே அருமையான குளுமையான வரிகள்.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
  பொறாமையுடன் புன்னகைக்கிறாள்//

  வானம் சுதந்திரமாய் அழுகிறது என்றா?

  நல்ல கற்பனை.

  நல்ல மழை பெய்யாமல் தூறிக் கொண்டு இருந்தால் மக்கள் எல்லோரும் இந்த வானம் ஏன் அழுது கிட்டே இருக்கு என்று அலுத்து கொள்வார்கள்.

  ReplyDelete
 13. நெஞ்சம் கணக்கும் கவிதை...!!!

  ReplyDelete
 14. இன்றைய நிலைமையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை !

  ReplyDelete
 15. அருமையான கவிதை.

  ReplyDelete
 16. என்ன பண்ணுறது? இயந்திர வாழக்கையாய் ஆகிவிட்டால் மழை, காற்று, விலங்குகள் எல்லாத்தையும் (மனிதர்களைத்தவிர்த்து) பார்த்துப் பொறாமைப் பட வேண்டியதுதான்!

  ரொம்ப ரொம்ப நல்ல கவிதைங்க ராமலக்ஷ்மி! :-)

  ReplyDelete
 17. "தசையை இழுத்துத் தைத்துக்கொண்டால் தேவலாம்"


  இந்த கூர்மை இதயத்தில் ரத்தம் கசிய வைக்கிறது!

  ReplyDelete
 18. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. சோகத்தை பிழிந்தது கவிதை.

  ReplyDelete
 20. ம்ம்.. உண்மைதான் அக்கா..

  ReplyDelete
 21. நல்ல உணர்வுகளை எடுத்து அழகாக சொல்லியிருக்கிங்க நல்ல கவிதை.
  எப்படி இருக்கிங்க. நீண்ட நாடகள் கழிந்து நல்ல கவிதையோடு உங்களை இங்கு சந்திக்கிறேன்.

  ReplyDelete
 22. இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.
  ***
  Waw.. excellent

  ReplyDelete
 23. மோகன் குமார் said...

  //அருமை.. சோக உணர்வுகளை சொன்னாலும் உண்மை !!//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 24. சே.குமார் said...

  //Kavithai miga arumai....//

  நன்றி குமார்.

  ReplyDelete
 25. Rishvan said...

  //nice one...//

  நன்றி தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 26. குமரி எஸ். நீலகண்டன் said...

  //மனதை நனைக்கும் நல்ல கவிதை//

  நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 27. மோகன் குமார் said...

  //Tamilmanam Traffic rankil kalakkureenga ! Vaazhthukkal.//

  நன்றி. நண்பர்களுக்கே நன்றி உரித்தாகும்.

  ReplyDelete
 28. அமைதி அப்பா said...

  //சிறப்பான கவிதை.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 29. Lakshmi said...

  //கவிதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 30. தமிழ் உதயம் said...

  //கண்ணீர் - துயரத்தின் வடிகால். அதற்கு கூட கட்டுப்பாடு அல்லது தட்டுப்பாடு. கவிதை அருமை.//

  ஆம், ஆடம்பரென்ற கட்டுப்பாடு. மிக்க நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 31. சத்ரியன் said...

  ***//இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.//

  ஆடம்பரம்... உணர்வுகளற்றவர்களாய் மாற்றி வருகிறது, மனிதர்களை!/***

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. சே.குமார் said...

  ***//இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.//

  கடைசி வரிகள் அருமை அக்கா.

  கவிதை சோகம் சொன்னாலும் அழகாய்...

  பண்புடன் இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.//***

  மீள் வருகைக்கும் ரசித்த வரிகளுடனான வாழ்த்துக்களுக்கும் நன்றி குமார்.

  ReplyDelete
 33. ஸ்ரீராம். said...

  //செயற்கைப் புன்னகையில் அழக்கூட உரிமையில்லாத பிழைப்பைச் சொல்லும் அருமையான கவிதை.//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 34. ஹுஸைனம்மா said...

  //சார்லி சாப்ளினின் “மழை எனக்குப் பிடிக்கும். மழையில் அழும்போது யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்” என்ற வாச்கம் நினைவு வருகிறது.

  (இந்தப் பின்னூட்டம் இப்போ சமீபத்தில்தான் மற்றொரு பதிவிலும் எழுதிய ஞாபகம்; இருந்தாலும் இங்கேயும் பொருந்துமல்லாவா)//

  எதிர்மறையா பொருந்துது இங்கே, மழையிலும் கூட அழ முடியாமல் சிரித்துப் பழக வேண்டிய சூழலில் அப்பெண்.

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 35. Kanchana Radhakrishnan said...

  //அருமை.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 36. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //தூறல் போலவே அருமையான குளுமையான வரிகள்.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  நன்றி சார்.

  ReplyDelete
 37. கோமதி அரசு said...

  ***/அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
  பொறாமையுடன் புன்னகைக்கிறாள்//

  வானம் சுதந்திரமாய் அழுகிறது என்றா?

  நல்ல கற்பனை.

  நல்ல மழை பெய்யாமல் தூறிக் கொண்டு இருந்தால் மக்கள் எல்லோரும் இந்த வானம் ஏன் அழுது கிட்டே இருக்கு என்று அலுத்து கொள்வார்கள்./***

  நன்றி கோமதிம்மா. ஆம், சொல்வார்கள் நம்ம பக்கத்தில் ‘அடிச்சு ஓயாம ஏன் நொய் நொய்னு அழுது’ என.

  ReplyDelete
 38. MANO நாஞ்சில் மனோ said...

  //நெஞ்சம் கனக்கும் கவிதை...!!!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 39. ஹேமா said...

  //இன்றைய நிலைமையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.அருமை !//

  வாங்க ஹேமா. விடுமுறை முடிந்ததா? நீண்ட நாட்களுக்குப் பிறகான வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

  நன்றி.

  ReplyDelete
 40. ஸாதிகா said...

  //அருமையான கவிதை.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 41. வருண் said...

  //என்ன பண்ணுறது? இயந்திர வாழக்கையாய் ஆகிவிட்டால் மழை, காற்று, விலங்குகள் எல்லாத்தையும் (மனிதர்களைத்தவிர்த்து) பார்த்துப் பொறாமைப் பட வேண்டியதுதான்!

  ரொம்ப ரொம்ப நல்ல கவிதைங்க ராமலக்ஷ்மி! :-)//

  நன்றி வருண். ஆம் அப்படியான சூழலில்தான் இயந்திர உலகம் சுழலுது இப்போது.

  ReplyDelete
 42. Lalitha Mittal said...

  //"தசையை இழுத்துத் தைத்துக்கொண்டால் தேவலாம்"


  இந்த கூர்மை இதயத்தில் ரத்தம் கசிய வைக்கிறது!//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 43. ஈரோடு கதிர் said...

  //துயரம் சொட்டுது!//

  நன்றி கதிர்.

  ReplyDelete
 44. Muthumani said...

  //கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 45. தேனம்மை லெக்ஷ்மணன் said...

  //சோகத்தை பிழிந்தது கவிதை.//

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 46. சுசி said...

  //ம்ம்.. உண்மைதான் அக்கா..//

  நன்றி சுசி.

  ReplyDelete
 47. Vijiskitchencreations said...
  //நல்ல உணர்வுகளை எடுத்து அழகாக சொல்லியிருக்கிங்க நல்ல கவிதை.
  எப்படி இருக்கிங்க. நீண்ட நாடகள் கழிந்து நல்ல கவிதையோடு உங்களை இங்கு சந்திக்கிறேன்.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி.

  ReplyDelete
 48. ரிஷபன் said...
  //இதயம் வெடித்து விடாதிருக்க
  இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
  ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.
  ***
  Waw.. excellent//

  மிக்க நன்றி ரிஷபன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin