புதன், 15 அக்டோபர், 2008

விளம்பரத்துக்கு அணுகவும் [PiT-Oct போட்டிக்கு]

"விளம்பரம்"
அக்டோபர் மாத PiT போட்டிக்கு எனது பங்களிப்பு:
இரண்டாவது படமாகிய
'பாரம்பரியத்தின் கம்பீர வெற்றிக் களிப்பு '

***

கையெழுத்தாகும்
எந்த ஒப்பந்தத்துடனும்
இதன்
பந்தம் நிர்ப்பந்தம்.




பாரம்பரியம் தரும் கம்பீரம்



நூற்றறுபது ஆண்டுகளாக
க்ராஸுடனான வெற்றியை
எதுவும்
க்ராஸ் செய்ததாய் சரித்திரமில்லை!




முதுமை விரும்பும் பழமையும்
முதுமையும் ரசிக்கும் புதுமையுமாய்
என்றும்
திகழும் நெ:1 வார இதழ்!







50 கருத்துகள்:

  1. அக்கா! மூணாவது படம் தான் கலக்கல்..:) அதையே போட்டிக்கு கொடுங்க...:) மாடல் யாருன்னும் சொல்லிடுங்க

    பதிலளிநீக்கு
  2. தமிழ் பிரியன் said...
    //மூணாவது படம் தான் கலக்கல்..:) அதையே போட்டிக்கு கொடுங்க...:)//

    பாருங்க போட்டி நேரம் முடிய 30 நிமிடமே இருக்கு. படத்தை அனுப்பிட்டுதான் பதிவே போட்டிருக்கேன்.

    //மாடல் யாருன்னும் சொல்லிடுங்க//

    மாடல்னதும் நீங்க நாலாவது படத்தைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அவங்க எனக்குத் தெரிஞ்சவங்க. தமிழ் வாசிக்க வராது. எனக்காக மாடலிங் செய்தாங்க.[சிவாஜி படங்கள் பிடிக்குமாம்:)]

    பதிலளிநீக்கு
  3. நிழற்படம் said...
    //எந்தப்படம் போட்டிக்கு ?//

    நிழற்படங்களை ரசிக்க வந்த நிழற்படத்துக்கு நன்றி. பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கேன் பாருங்க. இரண்டாவது படம்.

    பதிலளிநீக்கு
  4. கடைசி படம் பட்டாசா இருக்கு :-)))))

    பதிலளிநீக்கு
  5. கிரி said...
    //கடைசி படம் பட்டாசா இருக்கு
    :-)))))//

    கான்செப்ட் ரீதியில் பார்த்தால் பலருக்கும் அந்தப் படம்தான் பிடிக்கும் என எனக்கும் தோன்றியது. ஆனால் நுணுக்கமான கேப்ச்சர் [ஹி ஹி.. நானே சொல்லிக்கப்படாதுதான்] என்ற வகையில் இரண்டாவதைக் கொடுத்தேன்.

    பதிலளிநீக்கு
  6. எல்லா படங்களும் கலக்கலாக இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அக்கா, நான்காவது படத்திற்கு தான் முதல் பரிசே கிடைத்திருக்கும்... அதுதான் டாப் டக்கர்... PIT நேரம் அமெரிக்க நேரம் தான்.. மாற்ற இன்னும் நேரமிருக்கு... மாத்துங்க

    பதிலளிநீக்கு
  8. ராமலக்ஷ்மி,

    படங்கள் மிளிர்கின்றன.

    எனக்கும் ஆ.வி. பிடிச்சது :P.

    தனிஷ்க்கும் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!

    இந்த மாதம் சுத்தமாக வலைப்பக்கமே நான் வர இயலவில்லை. PIT-ஐயும் மிஸ் செய்துவிட்டேன் :(((

    பதிலளிநீக்கு
  9. நாலாவது படம் :-). நல்லா மாடல் பண்ணியிருக்காங்க!! கமெண்டுகள் வ்ழக்கம்போல் நச்!

    பதிலளிநீக்கு
  10. சில நாட்களாக உங்கள் பதிவை படித்து வருகிறேன். அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. இங்குள்ள புகைப்படங்களும் டாப். வெற்றி பெற வாழுத்துக்கள்.

    ~உண்மை.

    பதிலளிநீக்கு
  11. எல்லாப் படங்களும் நல்லாருக்கு. முதல் படத்துக்குரிய துக்கடா (jingles :) நல்லாருக்கு. கடைசி படம்தான் எனக்கும் ரொம்ப பிடிச்சது. வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

    அதை விகடனுக்கு வித்துருங்க:-)

    பதிலளிநீக்கு
  13. கடையம் ஆனந்த் said...
    //எல்லா படங்களும் கலக்கலாக இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    எல்லா படங்களும் தங்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு நன்றி ஆனந்த்.

    பதிலளிநீக்கு
  14. தமிழ் பிரியன் said...

    // PIT நேரம் அமெரிக்க நேரம் தான்.. மாற்ற இன்னும் நேரமிருக்கு... மாத்துங்க//

    நேரம் ஒரு பக்கம் இருக்க! இம்மாத போட்டி அறிவிப்பை http://photography-in-tamil.blogspot.com/2008/10/pit-2008.html பார்த்தீர்களோ என்னவோ தெரியாது.

    //* நன்கு முடிவு செய்தப்பின் படத்தினை அனுப்பவும். என்னென்றால் ஒருமுறை படம் அனுப்பிய பின், உங்கள் படத்தினை மாற்ற முடியாது :( //

    இப்படி வருத்தமாகவும்

    //* மறுபடியும் சொல்கிறோம், ஒருமுறைக்கு மேல் படத்தினை மாற்ற முடியாது, அதனால் நன்கு யோசித்து படத்தினை அனுப்பவும் :)////

    இப்படிச் சிரித்தபடி அழுத்தம் திருத்தமாகவும்...

    சொல்லிப்புட்டாங்க எனக்காகத்தான்
    :(! ஏன்னா போனமுறை கூட கடைசி நேரத்தில் படத்தை மாற்றிய ஆசாமியாச்சே நான்:))!

    அவர்கள் சொல்வதும் சரிதானே, அப்படி பலரும் மாற்றுமாறு போய் நிற்கையில் அது பெரிய வேலையாகி விடுகிறதே!

    //அக்கா, நான்காவது படத்திற்கு தான் முதல் பரிசே கிடைத்திருக்கும்... அதுதான் டாப் டக்கர்... //

    இது இது.. இந்தப் பாராட்டுதாங்க.. எனக்கு முதல் பரிசு!

    பதிலளிநீக்கு
  15. NewBee said...
    //படங்கள் மிளிர்கின்றன.//

    நன்றி புதுவண்டு. குறிப்பாக தனிஷ்க் படம் சரியான விகிதத்தில் மிளிரணும். ரொம்ப க்ளேர் அடித்திடக் கூடாது. கொடுத்திருக்கும் படத்தைத் தேற்ற கிட்டத்தட்ட 30 ஷாட் முயற்சித்தேனாக்கும்.

    //எனக்கும் ஆ.வி. பிடிச்சது :P.//

    ஆ.வி என்றாலே எல்லோருக்கும் எப்போதுமே தனிப் பாசம்தான், இல்லையா:)?

    //தனிஷ்க்கும் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!//

    நன்றி நன்றி.

    //இந்த மாதம் சுத்தமாக வலைப்பக்கமே நான் வர இயலவில்லை.//

    அதை உங்களது போன பதிவின் தாமதத்திலேயே புரிந்து கொண்டேன். எல்லோருக்குமே சில சமயங்களில் அப்படித்தான் ஆகி விடுகிறது.

    //PIT-ஐயும் மிஸ் செய்துவிட்டேன்
    :(((//

    அதனால் என்ன அடுத்த மாதம் அசத்திடுங்க. கதை, திரைக்கதை,வசனம், இயக்கத்துடன் ஒளிப்பதிவிலும் மிளிரும் சகலாகலாவல்லி அல்லவா நீங்கள்:)!

    பதிலளிநீக்கு
  16. சந்தனமுல்லை said...
    //நாலாவது படம் :-).//

    ஆக, உங்களைக் கவர்ந்ததும் ஆ.வி.தான்:)!

    //நல்லா மாடல் பண்ணியிருக்காங்க!!//

    ஆமாம் முல்லை. அருமையாகவும் எனக்காகப் பொறுமையாகவும் போஸ் கொடுத்தாங்க.

    //கமெண்டுகள் வ்ழக்கம்போல் நச்!//

    நன்றி நன்றி:)!

    பதிலளிநீக்கு
  17. Truth said...
    //சில நாட்களாக உங்கள் பதிவை படித்து வருகிறேன்.//

    ஆமாம் நீங்கள் "அமுதம் விரும்புவோர்" பட்டியலில் இணைந்ததை வைத்து நானும் புரிந்து கொண்டேன்:)!

    //அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது.//

    நன்றி உண்மை!

    //இங்குள்ள புகைப்படங்களும் டாப். வெற்றி பெற வாழுத்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கும் நன்றி. போட்டிக்கான உங்களது படமும் அருமை. சமுதாய அக்கறையுடன் ஆனது. அடுத்த எனது பதிவு உங்களது அந்தப் படத்தைப் பிரதிபலிக்கப் போகிறது பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. கவிநயா said...
    //எல்லாப் படங்களும் நல்லாருக்கு.//

    கேட்கவே நல்லாருக்கு:)!

    //முதல் படத்துக்குரிய துக்கடா (jingles :) நல்லாருக்கு.//

    அப்போ விளம்பரக் கம்பெனி ஆரம்பித்து விடலாம்தானே:)!

    //கடைசி படம்தான் எனக்கும் ரொம்ப பிடிச்சது.//

    ஆ.வி-க்குதான் விழுகிறது அதிக ஓட்டு!

    //வெற்றி கிடைக்க வாழ்த்துகள்! //

    நன்றி கவிநயா!

    பதிலளிநீக்கு
  19. துளசி கோபால் said...
    //கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

    அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

    டக்கரான படம்னு சொல்லி சூப்பரான ஐடியாவும் கொடுத்திருக்கீங்க மேடம், செஞ்சிடுறேன்:))!

    பதிலளிநீக்கு
  20. நான்காவது படத்தின் தீம் அருமை.. ஆனால் அது கொஞ்சம் இன்கம்ப்ளீட்ட்டாக தோன்றுகிறது (உதாரணம் புத்தகம் முழுதும் தெரியவில்லை)..

    இரண்டாவது படமும் மூன்றாவது படமும் அருமை. என் சாய்ஸ் மூன்றாவது படம்தான், சரியான லைட்டிங், கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் என்று..

    கலக்கல். வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  21. வெண்பூ said...
    //நான்காவது படத்தின் தீம் அருமை..//

    நன்றி.

    //ஆனால் அது கொஞ்சம் இன்கம்ப்ளீட்ட்டாக தோன்றுகிறது (உதாரணம் புத்தகம் முழுதும் தெரியவில்லை)..//

    உண்மைதான் வெண்பூ. ஆனால் அவர் அணிந்திருக்கும் கண்ணாடியிலுள்ள எழுத்துக்களும் தெரிவதற்கு இந்தனை நெருக்கமான க்ளோஸ் அப் ஷாட் தேவையாகி விட்டது. இருந்தாலும் "ஆ.வி" எனும் எழுத்துக்கள் கட் ஆகாதவாறு பார்த்துக் கொண்டேன். சற்றே கேமிரா கோணத்தை இடப்புறமாகத் திருப்பி முயற்சித்திருந்திருக்கலாம்தான். ஆனால் பரஸ்பர அன்புக்காக போஸ் கொடுக்க சம்மதித்தவரை ரொம்பப் படுத்த முடியாதல்லவா:))?

    // என் சாய்ஸ் மூன்றாவது படம்தான், சரியான லைட்டிங், கம்ப்ளீட் டீடெய்ல்ஸ் என்று..//

    அட, ஆமாம் நீங்க சொன்ன பிறகு கவனித்துப் பார்த்தால் நிழல் கூட இல்லாமல் வந்திருக்கு மூன்றாவது படம்.

    யோசிக்க வைத்த கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //போட்டிக்கான உங்களது படமும் அருமை. சமுதாய அக்கறையுடன் ஆனது. அடுத்த எனது பதிவு உங்களது அந்தப் படத்தைப் பிரதிபலிக்கப் போகிறது பாருங்கள். //

    காத்துகிட்டு இருக்கேங்க.

    பதிலளிநீக்கு
  23. Mont Blanc முதல் படத்துக்கே எனது ஓட்டு.

    பதிலளிநீக்கு
  24. என்னோட சாய்ஸ்ஸும் நாலாவது படம் தான். நிறைய டீடெய்ல்ஸ் இதில் இருக்கு. 'ஒரு விளம்பரம்' .... அப்படினு சொல்லுவோமே, அது இந்தப் படத்தைப் பார்த்தவுடனே சொல்லலாம். அதுக்காக மத்த படங்கள் நல்லா இல்லை என்று சொல்லவில்லை :)

    //கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

    அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

    இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்

    பதிலளிநீக்கு
  25. Truth said...
    //காத்துகிட்டு இருக்கேங்க.//

    நன்றி. சீக்கிரமே போடறேங்க!

    பதிலளிநீக்கு
  26. ////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

    அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

    இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்//

    ரி
    ப்
    பி
    ட்
    டேய்ய்ய்ய்ய்ய்!

    பதிலளிநீக்கு
  27. ராஜ நடராஜன் said...
    //Mont Blanc முதல் படத்துக்கே எனது ஓட்டு.//

    உங்களுக்கு சொல்லட்டுமா ஒரு விஷயம். எனக்கு மிகத் திருப்தி கொடுத்ததும் அப்படமே. அதிக ஷாட்டும் வாங்கலை:)! ஆனாலும் கடைசி நேரத்தில் இரண்டாவது படத்துக்கு மனசு ஓட்டு போட்டு விட்டது:)!

    பதிலளிநீக்கு
  28. சதங்கா (Sathanga) said...
    //என்னோட சாய்ஸ்ஸும் நாலாவது படம் தான். நிறைய டீடெய்ல்ஸ் இதில் இருக்கு. 'ஒரு விளம்பரம்' .... அப்படினு சொல்லுவோமே, அது இந்தப் படத்தைப் பார்த்தவுடனே சொல்லலாம்.//

    உங்கள் ஓட்டும் விகடனுக்கே, இல்லையா? ஆனாலும் வெண்பூ சொன்ன மாதிரி முழுமையான நல்ல கோணம் அதற்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். மாடல் செய்தவங்களுக்கு தொந்திரவாகிடக் கூடாதேயெனும் சங்கடத்தில் அவசரமா எடுத்தது.

    //அதுக்காக மத்த படங்கள் நல்லா இல்லை என்று சொல்லவில்லை :)//

    அதானே:))! நன்றி சதங்கா.

    ////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

    அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

    இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்////

    வித்திடுவோமா, இல்ல நம்ம தமிழை வளர்த்த விகடன் தாத்தாவுக்கு அன்பளிப்பா கொடுத்திடுவோமான்னு இப்ப யோசிச்சிட்டிருக்கேன்:).

    பதிலளிநீக்கு
  29. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
    ////கடைசிப்படம் டக்கரா இருக்குப்பா.

    அதை விகடனுக்கு வித்துருங்க:-) //

    இதை வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்//

    ரி
    ப்
    பி
    ட்
    டேய்ய்ய்ய்ய்ய்!////

    வாங்க சுடர்மணி.
    வி


    ன்
    என்றதுமே
    பு
    து
    மை
    புறப்பட்டு விட்டது பாருங்க உங்கள் கருத்திலும் கூட:))! நன்றி நன்றி!

    பதிலளிநீக்கு
  30. கலகலகலக்கல்ஸ்! ராமலஷ்மி!
    பேனாவும் அதுக்கான கமெண்டும் சூப்பர்! கடைசி படம் அல்லாரும் சொன்னாப்ல படுபடு சூப்பர்! போட்டிக்கும் அதுவே என் சாய்ஸ்!
    பூந்து வெளாடு!!!!

    பதிலளிநீக்கு
  31. எல்லா படங்களும் வாசகங்களும் சூப்பர். ஆ.வி டக்சென்று ஈர்க்கின்றது.

    பதிலளிநீக்கு
  32. தனிஷ் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!

    நெஜமாவே தெரியாம கேக்கறேன், அந்த தனிஷ்க் காதணியா? இல்ல சட்டை பொத்தானா?

    பதிலளிநீக்கு
  33. கலக்குங்க... அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  34. நானானி said...
    //கலகலகலக்கல்ஸ்! ராமலஷ்மி!//

    நன்றி:)!

    //பேனாவும் அதுக்கான கமெண்டும் சூப்பர்!//

    திருப்தியா அமைந்த படத்துக்கு திருப்தியா அமைந்தது அந்தக் கமென்டும் கூட.

    //கடைசி படம் அல்லாரும் சொன்னாப்ல படுபடு சூப்பர்! போட்டிக்கும் அதுவே என் சாய்ஸ்!//

    போட்டிக்கு வேறு கொடுத்து விட்டிருந்தாலும் பலரையும் இப்படம் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

    //பூந்து வெளாடு!!!!//

    ஃபோட்டோ பதிவுகளில் இப்படிப் 'பூந்து வெளாட' நான் கற்றுக் கொண்டதே உங்களிடமும், துளசி மேடத்திடமும்தான். அதற்கும் நன்றி இருவருக்கும்:)!

    பதிலளிநீக்கு
  35. அமுதா said...
    //எல்லா படங்களும் வாசகங்களும் சூப்பர். ஆ.வி டக்சென்று ஈர்க்கின்றது.//

    படங்களுடன் வாசகங்களையும் ரசித்தமைக்கு நன்றி. சரி உங்கள் ஓட்டும் ஆ.விக்கே, இல்லையா:))?

    பதிலளிநீக்கு
  36. ambi said...
    //தனிஷ் நல்லா இருக்கு. வெற்றிக்கு வாழ்த்துகள்!!//

    நன்றி அம்பி!

    //நெஜமாவே தெரியாம கேக்கறேன், அந்த தனிஷ்க் காதணியா? இல்ல சட்டை பொத்தானா?//

    நெஜமாவே காமெடி கீமெடி பண்ணலியே:)? அம்பி என்ன கேட்டாலும் இப்படி யோசிக்க வைக்குது:)! காதணி இல்லை, நல்லாப் பாருங்க திருகாணி இல்ல:)! அத்தோடு நீங்க தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்லது, இந்த டிசைனிலெல்லாம் யாரும் காதணி விரும்புவதில்லை:)!

    'சட்டை பொத்தான்'..ம்ம்ம் பாதி சரி. "சட்டைக் 'கை' பொத்தான்".. சரியான வார்த்தைதானா Cufflinks என்பதற்கு?

    இந்தப் படத்தில் "பாரம்பரியம்" என்பது தனிஷ்க் பெட்டியில் தெரிகிற TATA symbol. அதுவே cufflinks-ல் தரப் படுகையில் கூடுகிறது அணிபவரின் "கம்பீரம்". இதுதான் படம் செய்யும் விளம்பரம். இந்த விளக்கத்தைக் கொடுக்க நேரும் வண்ணம் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டதற்கு ரொம்ப நன்றி அம்பி.

    பதிலளிநீக்கு
  37. இசக்கிமுத்து said...
    //கலக்குங்க... அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி இசக்கிமுத்து!

    பதிலளிநீக்கு
  38. என்னிடம் கேட்டிருந்தால் ஆனந்த விகடனை விளம்பரபடுதிருக்கலம் மிகவும் கவரக்குடியதாக உள்ளது வாழ்த்துக்கள்.

    Pmt

    பதிலளிநீக்கு
  39. ரிஸல்ட் என்ன ஆச்சு? எப்ப தெரியும்?

    வாழ்த்துக்கள்
    மைதிலி

    பதிலளிநீக்கு
  40. pmt said...
    //என்னிடம் கேட்டிருந்தால் ஆனந்த விகடனை விளம்பரபடுதிருக்கலம் மிகவும் கவரக்குடியதாக உள்ளது வாழ்த்துக்கள்.//

    உங்களையும் அப்படம் கவர்ந்ததில் மகிழ்ச்சி pmt.

    பதிலளிநீக்கு
  41. ராமலக்ஷ்மி said...
    mynah said...
    //ரிஸல்ட் என்ன ஆச்சு? எப்ப தெரியும்?

    வாழ்த்துக்கள்
    மைதிலி//

    வாழ்த்துக்களுக்கு நன்றி மைதிலி. ஒவ்வொரு முறையும் 'பங்களிப்பே சிறப்பு' எனக் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன் நான்.

    தேர்வான சிறந்த படங்களைக் காண இங்கே செல்லுங்கள்:
    http://photography-in-tamil.blogspot.com/2008/10/pit_20.html

    பதிலளிநீக்கு
  42. ராமலக்ஷ்மி கடைசிப் படம்தான் சூப்பர்.
    மற்றதுக்கெல்லாம் விளம்பரம் யார் வேஎண்டுமானாலும் செய்யலாம். ஆவீக்கு நீங்க கொடுத்திருக்கிற விளம்பரம் அட்டகாசம்.
    வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  43. கடைசிப் படம் சும்மா நச்னு இருக்குங்க ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  44. வல்லிசிம்ஹன் said...
    //ராமலக்ஷ்மி கடைசிப் படம்தான் சூப்பர்.//

    வாங்க வல்லிம்மா. உங்களை கண்டிப்பா அந்தப் படம் ஈர்க்கும் என நானும் நினைத்தேன்:)!

    //மற்றதுக்கெல்லாம் விளம்பரம் யார் வேஎண்டுமானாலும் செய்யலாம். ஆவீக்கு நீங்க கொடுத்திருக்கிற விளம்பரம் அட்டகாசம்.
    வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்//

    நன்றி இதுவே அப்படத்துக்கான வெற்றி. மற்றபடி போட்டி முடிவுகள் பிரமாதமான படங்களுடன் தேர்வாகி நேற்றே வந்தாகி விட்டது. கண்டிப்பாகப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  45. Amal said...
    //கடைசிப் படம் சும்மா நச்னு இருக்குங்க ராமலக்ஷ்மி!//

    எல்லோரும் வியக்கும் வண்ணம் துல்லியமான பிரமிக்கத் தக்கப் படத்தை இம்மாதப் போட்டிக்கு கொடுத்திருக்கும் உங்களிடமிருந்து பாராட்டை வாங்குவது சந்தோஷமாகவே இருக்கிறது அமல். எனது கணிப்பின் படி முதல் இடம் உங்களுக்குத்தான் இம்முறை. என் வாழ்த்துக்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. கடைசிப் படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்கள் அம்மாவா சகோதரி ?

    பதிலளிநீக்கு
  47. @எம்.ரிஷான் ஷெரீப்,

    அல்ல ரிஷான்:)! அவங்க எனக்கு தெரிஞ்சவங்க. தெலுங்கு, கன்னடம் மட்டுமே வாசிக்க வரும். ஆனா கூட புத்தகத்தில் சுவாரஸ்யமா ஆழ்ந்து போன மாதிரி அருமையா போஸ் கொடுத்திருக்காங்க,இல்லையா:)?

    ஆக, கடைசிப் படத்துக்குத்தான் வோட்டு மேலே வோட்டு:)!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin