ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

எண்ணும் எழுத்தும் போட்டிக்குத் தகும் - செப்டம்பர் PiT - மாதிரிப் படங்கள்

மிக சுவாரஸ்யமான அதே நேரம் எளிதாகப் படம் பிடிக்கும் வகையில் ஒரு தலைப்பைக் கொடுத்துள்ளார் நடுவர் MQN. நம் கண்ணுக்குத் தெரிகிற தற்செயலாக அமைந்த எண்கள் மற்றும் எழுத்துக்களை எடுத்துக் காட்டுவதே இம்மாதப் போட்டி.

ஆனால் எண், எழுத்தாகவே எழுதப்பட்ட எதையினையும் படம் பிடித்துக் காட்ட தடா. சில மாதிரிகளை இங்கே பார்ப்போம்.

#T
எலக்டஸ் கிளியின் இருக்கை


எண்ணோ எழுத்து கோடு இழுத்த மாதிரிதான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் வடிவத்திலும் இருக்கலாம். அதே நேரம் படத்தில் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

#O
‘ஓ’ போடலாம்தானே இதன் வித்தைக்கு..


O ரொம்ப எளிதா பந்திலிருந்து பிழிந்து குடிக்கும் சாத்துக்குடி வரையில் எல்லாவற்றிலும் இருக்கிறதுதான். ரசனையோடு ஒரு ஓ-வை உருட்டி விடுங்கள்.

#H


வீட்டில நம்மைச் சுற்றி பார்த்தாலே எத்தனை தற்செயல் எழுத்தும் எண்ணும் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி மாட்டிய ஒன்று:

#C
சிங்கத்தின் வாயில்..

என்ன படம் கொடுக்கலாமென விட்டத்தைப் பார்த்து யோசித்த நம்ம அமைதிச்சாரல் மின்விசிறியை Y ஆகக் காட்டி விட்டுள்ளார்:)! அவர் வழியில் சிந்தனையைத் தட்டி விட்டதில் என்ன கிடைத்தது பாருங்கள்:

#X
காலம் பொன் போன்றது
அதை வீண் செய்வது
பெரும் (X)தவறென்கிறதோ
சுவர்க் கடிகாரம்?

#U

நேர்த்தியான கட்டமைப்புக்கு உதாரணம்?
அல்லது
புலம் பெயர் துயரின் அடையாளம்?

எனக்கு இதை U ஆகவே காட்ட விருப்பம் என்றாலும் திருப்பிப் போட்டு D ஆகவும் காட்ட அனுமதிக்கிறார் நடுவர்.அடுத்து வரும் நிலாவை எப்படி லைட்டாத் திருப்பிப் போட்டு D ஆக்கியுள்ளேன் பாருங்கள்:

# D


திருப்பியோ சுழட்டியோ போடுகையில் சில படங்களுடைய லாஜிக் உதைக்குமே என நீங்கள் கருதலாம். உதாரணத்துக்குத் தேனடையைத் திருப்பினால் எப்படி பக்கவாட்டில் அது தொங்கமுடியுமென. ஆனாலும் அது மாதிரியான லாஜிக் பார்க்கத் தேவையில்லைன்னு சொல்லியிருக்கிறார் நடுவர். எனவே தாராளமாய் சுழட்டுங்கள்.

வல்லிம்மா சரியான புரிதலுடன் மேலே அரைவட்டமாக இருந்த ஒரு சன்னலை அப்படியே அலாக்காய் திருப்பிப் போட்டு U ஆகப் போட்டிக்குக் கொடுத்திருக்கிறார். நானானிம்மா சிரித்தபடி ‘நல்லாருக்கே சிரசாசனம்’ என்று சொல்லிச் செல்ல எனக்கும் ஏன் நடுவர் அப்படி ஒரு விதிமுறையை வைத்தார் எனப் புரிந்தது. கொஞ்சம் அப்படி இப்படி அவர் தலையை சரித்துப் பார்க்கச் சொன்னால் பரவாயில்லை. சிரசாசனம் செஞ்சு பார்த்துக் கொள்ளுங்கள் என்றால்..?! அந்த சிரமம் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள்:)! மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களுக்கு மட்டுமே அனுமதி! ஏனெனில் பிறமொழிகள் தனக்குத் தெரியாது எனப் பின்வாங்கி விட்டுள்ளார் நடுவர்:)!


#1
நம்பர் 1 இடத்தைப் பிடிக்க நிற்கிறதோ ஒற்றைக் காலில் தவம்?



#7


#S

சன்னல்கள், அதன் கம்பிகள், நாற்காலிகளின் கால்கள் என எல்லாவற்றுள்ளும் எண், எழுத்து கிடைக்கும். எங்கே எதிலே தேடலாம் என விவரமாக அறிவிப்புப் பதிவில் சொல்லியிள்ளார் நடுவர் MQN. சூலாயுதத்தில் W தெரிகிற எனது சிவன் படம் உட்பட நடுவர் எடுத்த மேலும் பல அருமையான மாதிரிப் படங்களுக்கும், போட்டி விதிமுறைகளுக்கும் இங்கே செல்க!

அணிவகுக்க ஆரம்பித்து விட்ட போட்டிப் படங்களைக் காண இங்கே வருக! எப்படியெல்லாம் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள் நம் நண்பர்கள் என்பதைக் கண்டு மகிழ்க! உங்கள் கருத்துக்களைப் பதிந்து உற்சாகம் நல்குக! அதே உற்சாகத்துடன் போட்டிக்கான உங்கள் படங்களைத் தேதி பதினைந்துக்குள் அனுப்பித் தருக:)!!!

45 கருத்துகள்:

  1. கண்ணைக் கவரும் அழகான படங்கள்.
    போட்டியின் ஆரம்பமே ஜோராக உள்ளது. vgk

    பதிலளிநீக்கு
  2. ஆஹா..ராமலக்‌ஷ்மி..பட் ..பட்..பட்..வெறொன்றுமில்லை.நான் இங்கிருந்து பலமாக கரகோஷம் எழுப்பும் ஒலிதான்.படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கற்பனை. அழகான படங்கள்.
    சிங்கத்தின் வாயில் c மட்டும் சொல்லாமல் ஓரளவு E கூடச் சொல்லலாமோ...
    சுவர்க் கடிகாரத்தில் எண்களும்...

    பதிலளிநீக்கு
  4. கலைச் சித்திரத்தில் கவிதையாய் நிற்கின்றன எண்ணும் எழுத்தும். பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா சிங்கப்பூர் படங்கள் ட்ரயல் ...
    அருமை முழு ஆல்பம் எப்போ

    பதிலளிநீக்கு
  6. சிங்கப்பூர் போறதா சொல்லவே இல்லையே...உங்க பேச்சு கா

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு முறையும் தீங்கள் புகைப்படங்களை பகிரும்போது - அந்த புகைப்படங்களே வால்பேப்பராக இருக்கும்.இப்போது "O" படம்.

    பதிலளிநீக்கு
  8. நானும் கூட ஒரு படம் போட்டிருக்கேன்

    :-))

    பதிலளிநீக்கு
  9. படங்கள் பொருத்தமாக அழகாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. தூள் கெளப்புது ஒவ்வொரு படமும்..

    ஓடிக்கிட்டிருந்த மின்விசிறியைப் பிடிச்சு நிறுத்தறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன் :-))

    பதிலளிநீக்கு
  11. அன்பு ராமலக்ஷ்மி,நான்தான் அந்தக் கதவைச் சிரசாசனம் செய்ய வைத்தேன்.
    '' யு '' சரியாகத்தானே இருக்கிறது!!
    கஷ்டப்படாமல் பார்க்கலாமே:)
    இன்னொன்று அனுப்பட்டுமா.

    பதிலளிநீக்கு
  12. ராமலக்ஷ்மியின் ஒவ்வொரு படங்களும் கவிதை.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வல்லிசிம்ஹன் said...
    //நான்தான் அந்தக் கதவைச் சிரசாசனம் செய்ய வைத்தேன்.
    '' யு '' சரியாகத்தானே இருக்கிறது!!//

    ஐயோ வல்லிம்மா:(!

    சரியான புரிதலுடன் படத்தைத் திருப்பிப் போட்டு எழுத்தை அதே வடிவில் நீங்கள் காட்டியிருக்கிறீர்கள் எனப் பாராட்டி அல்லவா இருக்கிறேன்?? சொல்ல வந்ததை நான்தான் ஒழுங்காகச் சொல்லவில்லை போலும்:(!

    அந்தப் படமே அழகு. திரும்ப அனுப்ப வேண்டாம்:)!

    பதிலளிநீக்கு
  14. MERLION இனிமேல் C-ங்கபூர் C-ங்கம்

    பதிலளிநீக்கு
  15. பளிச்சென்று படங்கள்! வெகு அழகு!..

    பதிலளிநீக்கு
  16. சூப்பர் ராமலெக்ஷ்மி.. நீங்களே நிறைய அசத்தல் படம்போட்டு இருக்கீங்களே..:)

    பதிலளிநீக்கு
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கண்ணைக் கவரும் அழகான படங்கள்.
    போட்டியின் ஆரம்பமே ஜோராக உள்ளது.//

    மிக்க நன்றி vgk.

    பதிலளிநீக்கு
  18. ஸாதிகா said...
    //ஆஹா..ராமலக்‌ஷ்மி..பட் ..பட்..பட்..வெறொன்றுமில்லை.நான் இங்கிருந்து பலமாக கரகோஷம் எழுப்பும் ஒலிதான்.படங்களும்,வர்ணனையும் பிரமாதம்.//

    கேட்டது தங்கள் கரவொலி:)! நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம். said...
    //அருமையான கற்பனை. அழகான படங்கள்.
    சிங்கத்தின் வாயில் c மட்டும் சொல்லாமல் ஓரளவு E கூடச் சொல்லலாமோ...//

    அட, ஆமாம்:)!

    //சுவர்க் கடிகாரத்தில் எண்களும்...//

    அப்படி எண்ணாகவே உள்ளதை முன்னிறுத்தக் கூடாது என்பது ஒரு விதிமுறை:)!

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  20. சந்தனமுல்லை said...
    //:-) சுவாரசியமான கான்செப்ட்//

    நன்றி முல்லை:)!

    பதிலளிநீக்கு
  21. குமரி எஸ். நீலகண்டன் said...
    //கலைச் சித்திரத்தில் கவிதையாய் நிற்கின்றன எண்ணும் எழுத்தும். பாராட்டுக்கள் ராமலக்ஷ்மி...//

    மிக்க நன்றி நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  22. goma said...
    //ஆஹா சிங்கப்பூர் படங்கள் ட்ரயல் ...
    அருமை முழு ஆல்பம் எப்போ//

    ஆம் இது முன்னோட்டமே:)! மெதுவாக பகுதிகளாக ரிலீஸ் செய்யப்படும் மற்றவை.

    //சிங்கப்பூர் போறதா சொல்லவே இல்லையே..//

    படம் காட்டி சொல்லலாம்னுதான்:)!

    பதிலளிநீக்கு
  23. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //ஆஹா அருமை..//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  24. மோகன் குமார் said...
    //Thanks for the first photo (reminds my naughty)//

    இன்னும் நிறைய்ய கிளி வகைகள் வரிசையாக வரும். காத்திருங்கள்:)! நன்றி மோகன்குமார்.

    பதிலளிநீக்கு
  25. தமிழ் உதயம் said...
    //ஒவ்வொரு முறையும் தீங்கள் புகைப்படங்களை பகிரும்போது - அந்த புகைப்படங்களே வால்பேப்பராக இருக்கும்.இப்போது "O" படம்.//

    இதை விட ஒரு புகைப்பட ஆர்வலருக்கு [கலைஞர்னு சொல்லலாமான்னு தெரியலை:)] வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மிக்க நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  26. raji said...
    //நானும் கூட ஒரு படம் போட்டிருக்கேன்

    :-))//

    கிடைத்தது உங்கள் Q :)! ராஜி, உங்கள் சமீபத்திய பதிவுகளில் ராஜஸ்தான் பயணப்படங்கள் அருமை. தொடர்ந்து பிட் போட்டியில் பங்கு பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. asiya omar said...
    //படங்கள் பொருத்தமாக அழகாக இருக்கு.//

    மிக்க நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  28. Lakshmi said...
    //படங்கள் எல்லாமே வெகு அழகு.//

    நன்றிங்க லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  29. அமைதிச்சாரல் said...
    //தூள் கெளப்புது ஒவ்வொரு படமும்..

    ஓடிக்கிட்டிருந்த மின்விசிறியைப் பிடிச்சு நிறுத்தறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன் :-))//

    நானும் முள்ளைப் பிடிச்சு நிறுத்துவதற்குள்:))! நன்றி சாந்தி!

    பதிலளிநீக்கு
  30. MANO நாஞ்சில் மனோ said...
    //ஹா ஹா ஹா ஹா சூப்பரா இருக்குங்க....!!!//

    நன்றி மனோ:)!

    பதிலளிநீக்கு
  31. கிரி said...
    //அசத்தல் படங்கள் :-)//

    நன்றி கிரி:)!

    பதிலளிநீக்கு
  32. வல்லிசிம்ஹன் said...
    //ராமலக்ஷ்மியின் ஒவ்வொரு படங்களும் கவிதை.
    மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

    நன்றி வல்லிம்மா:)!

    பதிலளிநீக்கு
  33. goma said...
    //MERLION இனிமேல் C-ங்கபூர் C-ங்கம்//

    ஒரிஜனல் சிங்கத்தின் வாயில் தண்ணீர் குழாய் வந்து விடுகிறதே:)! பொம்மை Merlion ஆ எனத் திறந்து சி-யைக் காட்டுகிறது:)!

    பதிலளிநீக்கு
  34. கே. பி. ஜனா... said...
    //பளிச்சென்று படங்கள்! வெகு அழகு!..//

    மகிழ்ச்சியும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  35. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //சூப்பர் ராமலெக்ஷ்மி.. நீங்களே நிறைய அசத்தல் படம்போட்டு இருக்கீங்களே..:)//

    நன்றி தேனம்மை:)! உங்கள் படம் இன்னும் வரவில்லை. சீக்கிரமாய் அனுப்பி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  36. படங்கள் அனைத்தும் அருமை.

    கிளியின் படம் நன்று!

    பதிலளிநீக்கு
  37. நம்முடைய எண்ணம் போலத்தான் நம் வாழ்க்கையும் அமையும் சிறந்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி இதை போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் Tamil News

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin