Sunday, September 4, 2011

ஒரு வலம்.. பல ஸ்தலம்.. - பெங்களூர் சிவாலயம் (பாகம் 2)

பாகம் 1 இங்கே.

(படங்கள் திறப்பதற்கு நேரம் எடுத்தால் ஏதேனும் ஒன்றின் மேல் க்ளிக் செய்து light box_ல் வரிசையாகக் காணலாம்)

#1 அன்னை பார்வதி

அம்மை அப்பனை வலம் வந்து பிள்ளையார் மாம்பழத்தை வாங்கிக் கொண்டது போல பல ஸ்தலங்களுக்குப் பயணிக்கும் வசதியோ அல்லது வாய்ப்போ இல்லாதவர்கள் ஒருமுறை சிவனை வலம் வருகையில் எல்லா ஸ்தல விக்கிரகங்களையும் தரிசித்துப் பலன் பெற்றிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பிரகார யாத்திரை.

சிவனை பக்தர் தொட்டு வணங்குமாறு அமைக்கப்பட்டிருந்த மலைக்கோவில் யாத்திரை போலன்றி குகையில் அனைத்து லிங்கங்களும் கண்ணாடிப் பெட்டிகளுக்குள். ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்தேனாயினும் அங்கு பொருத்துப்பட்டிருந்த பல வண்ண விளக்குகளின் ஒளி கண்ணாடியில் விழுந்து புகைப்படத்திலும் பிரதிபலித்ததைத் தவிர்க்கமுடியவில்லை. இருப்பினும் இங்கு வர வாய்ப்பில்லாதவர் பார்த்திட வசதியாக பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஸ்தலங்களின் சிறப்பினையும், வணங்குவதால் கிடைக்கின்ற பலன்களையும் விவரமாக ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்கள். காமிரா சட்டத்துக்குள் அடங்கிய இரண்டு விவரங்களை மட்டும் கொடுத்துள்ளேன். மற்ற சில சுமார் ஆறடி அகலப் பலகைகளில். தேவையான அளவு பின்புறம் நகன்று சென்று எடுக்க இடமில்லை. ஒவ்வொரு பலகையையும், லிங்கத்தையும் அடுத்தடுத்து வரிசையாக எடுத்து, ஸ்தலங்களை சரியான பெயருடனேயே பதிந்திருப்பதாக நம்புகிறேன்:)!

#2 மகா காளேஷ்வர்-மத்தியபிரதேசம்

#3 மல்லிகார்ஜுனர்-ஆந்திரப் பிரதேசம்

#4 நாகேஷ்வரர்-குஜராத்


#5 சோமநாதர்-குஜராத்#6 ஆலய சிறப்பு#7 மிருத்ஞ்ய மந்திரத்தை காற்றிலே பரப்பும் மணிகள்

#8 கிரிஷ்நேஷ்வரர்-மகராஷ்டிரம்#9 ஆலயச் சிறப்பு

குகையின் முதல் திருப்பத்தில்..
#10 நாரதமுனி

அடுத்த திருப்பத்தில்..

#11 சிவபெருமான்

#12 வைத்தியநாதர்-ஜர்கண்ட்

#13 ஓம்காரேஷ்வர்-மத்தியபிரதேசம்

#14 பீமசங்கரா-மகராஷ்டிரம்பீமன் எனும் அசுரனிடமிருந்து சிவன் மக்களைக் காத்த ஸ்தலம்.‘பாறை போன்ற பாதுகாப்பைத் தருபவர்’ என இந்த வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பாறை திறந்து திறந்து மூடியபடி இருக்கிறது.

#15 திரிம்பகேஷ்வர்-மகராஷ்டிரம்

#16 கேதார்நாத்-உத்திரகாண்ட்

#17 ஓம் எனும் மந்திரம் ஓங்காரமாய் ஒலிக்க..

குகையினின்று வெளிவருகையில் சிவனுக்கு வலப்புறத்தில் அமர்ந்தபடி அருள் பாலிக்கிறார் அழகான கோலத்தில் அன்னை பார்வதி(படம் #1)

#18 பார்வதிக்குப் பக்கத்தில் பிரிய மகன் பிள்ளையாரப்பன்

#19 சிவன் ஊர் உலா செல்லுகையில் ஏற்றிச் செல்லத் தயாராக எந்நேரமும் அவர் முகம் பார்த்து அமர்ந்திருக்கிறார் நந்தி தேவர்

இந்தக் கோவில் 24 மணிநேரம் திறந்திருக்கும் என்பது கூடுதல் தகவல். மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷ தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. பக்தர் கூட்டமும் அதிகமாகக் காணப்படும். மகா சிவராத்திரியின் போது கேட்கவே வேண்டாம். நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று செல்லவேண்டுமெனக் கேள்வி.

நூற்றாண்டுகளைக் கடந்த புராதன ஆலய தரிசனங்களுடன் வளர்ந்த நாம், பட்டணத்தில் பளிங்குத்தரை மண்டபங்களில் தெய்வங்களை வணங்கப் பழகி கொண்டோம். இந்த ஆலயம் அதிலும் மாறுபட்டு வித்தியாசமான தரிசன அனுபவத்தை வழங்குகிறது. பெங்களூர் வரும் வேளையில் இந்த அனுபவத்தை நீங்களும் பெற்றிடுங்கள்.
***

36 comments:

 1. அழகிய படங்களுடன், அருமையான தகவல்கள் ... உடனே பெங்களூருக்குப் புறப்பட வேண்டும் என்று ஆவலை ஏற்படுத்துவதாக!

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள். vgk

  ReplyDelete
 2. ரொம்ப வித்தியாசமா பார்க்க ஆவல் ஏற்படுத்தற மாதிரி படங்களும் தகவல்களும் இருக்கு மேடம்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 3. நல்லதொரு தரிசனம் செஞ்ச திருப்தி.. இங்கே 'பீமாஷங்கர்' த்ரம்பகேஷ்வர் கோயில்கள் ரொம்பவும் புகழும் பழம்பெருமையும் பெற்றவை.

  ReplyDelete
 4. எங்களையும் தரிசிக்க வச்சதுக்கு நன்றி அக்கா.

  என் அப்பன் அம்சமா இருக்கார் :)

  ReplyDelete
 5. அருமையான தகவல்கள்.வாழ்த்துக்கள்.நல்லதொரு பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 6. படங்களுடன் தகவல்கள் அருமை. பகிருவுக்கு நன்றி. நேரில் அங்கு பார்க்கும் அனுபவம் பெரியதுதான்.
  //நூற்றாண்டுகளைக் கடந்த புராதன ஆலய தரிசனங்களுடன் வளர்ந்த நாம், பட்டணத்தில் பளிங்குத்தரை மண்டபங்களில் தெய்வங்களை வணங்கப் பழகி கொண்டோம். //

  உண்மை. எனினும் புராதன ஆலயங்கள் இன்னும் சுவாரஸ்யம். விசேஷம்! இல்லை?

  ReplyDelete
 7. பங்கலூருவில் இருக்குபோது எத்தனை கோவிலகளைத் தரிசித்திருப்போமோ தெரியாது. செம்மண் பூமிக்கு ஏற்ற வகையில் நகர்கல் குடிகொள்ளும் கோவில்களும் அம்மங்களும் ,ஆஞ்சமனேயர்களும் தென்படௌவார்கள். இந்த மகாதேவன் பதிவு அழகு. படங்களும் இடத்தின் புடிதம் பாதுகாக்கப் படும் அழகை விவரிக்கின்றன. திங்கள் காலை சிவதரிசனம் .மிக மகிழ்ச்சி. நன்றிமா.

  ReplyDelete
 8. எல்லா சிவஸ்தலங்களையும் சுற்றிப் பார்த்த பரவசம்.

  //பார்வதிக்குப் பக்கத்தில் பிரிய மகன் பிள்ளையாரப்பன்//
  முருகன் இல்லையா?

  சகாதேவன்

  ReplyDelete
 9. அருமையான தல யாத்திரை.

  //பார்வதிக்குப் பக்கத்தில் பிரிய மகன் பிள்ளையாரப்பன்//
  முருகன் இல்லையா?

  சகாதேவன்
  முருகன் மயிலேரி உலகைச் சுற்றச் சென்றவர் எத்தனாவது சுற்றில் இருக்கிறாரோ

  ReplyDelete
 10. அன்பு ராமலக்ஷ்மி தமிழ் எழுத்துப் பிழைகளுடன் பின்னூட்டம் இட்டதற்கு மன்னிக்கணும்

  ReplyDelete
 11. @ வல்லிம்மா,

  நீங்கள் பயணத்தில் இருப்பதும், தமிழ் ஃபாண்ட் பிரச்சனை இருக்கக் கூடும் என்பதும் அறிவேன். தங்கள் கருத்திலும் வருகையிலும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. அரிய புகைப்படங்களுடன் அழகிய தகவல்கள்.

  ReplyDelete
 13. அழகிய ப்ரகாரத்தில் சிவாலயத்தை வலம் வந்த த்ருப்தி கிடைத்தது ராமலெக்ஷ்மி.. நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 14. எல்லோரையும் புனிதப் பயணம் அழைத்துச் சென்று மகிழ்வித்தமைக்கு இறைவனின் அருளாசி நிச்சயம் உங்களுக்கு உண்டு

  ReplyDelete
 15. Parvathi,nanthi, pillaiar mugangal thirutthamaayum,amsamaayum ulladhu.thakavalkalukku nandri.

  ReplyDelete
 16. அருமையான தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 17. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //அழகிய படங்களுடன், அருமையான தகவல்கள் ... உடனே பெங்களூருக்குப் புறப்பட வேண்டும் என்று ஆவலை ஏற்படுத்துவதாக!

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள். vgk//

  மிக்க நன்றி vgk.

  ReplyDelete
 18. raji said...
  //ரொம்ப வித்தியாசமா பார்க்க ஆவல் ஏற்படுத்தற மாதிரி படங்களும் தகவல்களும் இருக்கு மேடம்.பகிர்விற்கு நன்றி//

  நன்றி ராஜி.

  ReplyDelete
 19. அமைதிச்சாரல் said...
  //நல்லதொரு தரிசனம் செஞ்ச திருப்தி.. இங்கே 'பீமாஷங்கர்' த்ரம்பகேஷ்வர் கோயில்கள் ரொம்பவும் புகழும் பழம்பெருமையும் பெற்றவை.//

  நன்றி சாந்தி, தகவலுக்கும்.

  ReplyDelete
 20. சுசி said...
  //எங்களையும் தரிசிக்க வச்சதுக்கு நன்றி அக்கா.

  என் அப்பன் அம்சமா இருக்கார் :)//

  ஆம், நன்றி சுசி:)!

  ReplyDelete
 21. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //அருமையான தகவல்கள்.வாழ்த்துக்கள்.நல்லதொரு பகிர்வுக்கு நன்றி .//

  நன்றி ஜெஸ்வந்தி. நலமா:)?

  ReplyDelete
 22. ஸ்ரீராம். said...
  ***/படங்களுடன் தகவல்கள் அருமை. பகிருவுக்கு நன்றி. நேரில் அங்கு பார்க்கும் அனுபவம் பெரியதுதான்./***

  நன்றி ஸ்ரீராம்.

  ***//நூற்றாண்டுகளைக் கடந்த புராதன ஆலய தரிசனங்களுடன் வளர்ந்த நாம், பட்டணத்தில் பளிங்குத்தரை மண்டபங்களில் தெய்வங்களை வணங்கப் பழகி கொண்டோம். //

  உண்மை. எனினும் புராதன ஆலயங்கள் இன்னும் சுவாரஸ்யம். விசேஷம்! இல்லை?/***

  மறுக்க முடியுமா:)?

  ReplyDelete
 23. @ வல்லிசிம்ஹன்,
  ஆம் ஆஞ்சநேயர், அம்மன் கோவில்கள் இங்கே அதிகமாக உள்ளனதான் வல்லிம்மா. இந்தக் கோவில் அமைப்பு வித்தியாசமான தரிசன அனுபவத்தைத் தருவதாக. மிக்க நன்றி.

  ReplyDelete
 24. சகாதேவன் said...
  /எல்லா சிவஸ்தலங்களையும் சுற்றிப் பார்த்த பரவசம்./

  மிக்க நன்றி.

  //பார்வதிக்குப் பக்கத்தில் பிரிய மகன் பிள்ளையாரப்பன்//

  முருகன் இல்லையா?

  நான் சொல்ல நினைத்ததே அடுத்த பின்னூட்டமாக:)!

  ReplyDelete
 25. goma said...
  //அருமையான தல யாத்திரை.//

  நன்றி கோமாம்மா, தம்பி ஊர் உலா சென்றிருப்பதை அண்ணனுக்குத் தெரிவித்தமைக்கும்:)!

  ReplyDelete
 26. தமிழ் உதயம் said...
  /அரிய புகைப்படங்களுடன் அழகிய தகவல்கள்./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 27. சசிகுமார் said...
  /சூப்பர்/

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 28. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  /அழகிய ப்ரகாரத்தில் சிவாலயத்தை வலம் வந்த த்ருப்தி கிடைத்தது ராமலெக்ஷ்மி.. நன்றி பகிர்வுக்கு/

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 29. குமரி எஸ். நீலகண்டன் said...
  /எல்லோரையும் புனிதப் பயணம் அழைத்துச் சென்று மகிழ்வித்தமைக்கு இறைவனின் அருளாசி நிச்சயம் உங்களுக்கு உண்டு/

  மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  ReplyDelete
 30. kothai said...
  /Parvathi,nanthi, pillaiar mugangal thirutthamaayum,amsamaayum ulladhu.thakavalkalukku nandri./

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 31. Kanchana Radhakrishnan said...
  /அருமையான தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி ./

  நன்றி மேடம்.

  ReplyDelete
 32. @ உழவன்,

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 33. திருகேதார்நாதரை இன்று உங்கள் தளத்திலும் தரிசித்து விட்டேன் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 34. @கோமதி அரசு,

  மகிழ்ச்சியும் நன்றியும், கோமதிம்மா:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin