Tuesday, September 6, 2011

புதிய அத்தியாயம் - நவீன விருட்சத்தில்..


சொன்ன கதையையே திரும்பத் திரும்பச்
சொல்லச் சொல்லிக் கேட்கிறது குழந்தை.
கவனப் பிசகாக
சிங்கத்தைப் புலியென்றோ
முயலை மானென்றோ
இரண்டு குருவிகளை மூன்றென்றோ
சொன்னோமேயானால்
பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
தவறென்று திருத்துகிறது.
உறக்கம் அழுத்தும்
அதன் விழிகளைக் கண்டு
சுருக்கி முடித்திட நினைத்தால்
திருப்தியற்றுச் சிணுங்குகிறது.
‘அதன்பிறகு அனைவரும்
நலமே வாழ்ந்தார்கள்’ எனும்
கடைசி வாக்கியத்துக்காக
இமைகள் விரியக் காத்திருந்து
நிறைவான புன்னகையுடன்
தூங்கச் செல்கிறது.

வாழ்க்கையைப் பல நேரங்களில்
அதன் போக்கில் விட்டுப் பார்க்க
அஞ்சுகிற நமக்கும்
குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
ஆரம்பம் ஆனது...

அணைத்த விளக்கு பரப்பிய இருளில்
ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.
***

படம்: இணையத்திலிருந்து..


16 ஜூலை 2011 நவீன விருட்சம்
இணைய இதழில்.., நன்றி நவீன விருட்சம்!
***

63 comments:

 1. அருமை. குழந்தைகளின் உலகத்தில் பல அற்புதங்களை பெறுவோம். நீங்கள் இந்த கவிதையை பெற்று இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. இரண்டு குருவிகளை மூன்றென்றோ
  சொன்னோமேயானால்
  பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
  தவறென்று திருத்துகிறது.//
  ஆஹா கண்கொள்ளாக்காட்சியாச்சே. :)

  ReplyDelete
 3. அருமை..அருமை....!
  நல்ல கவிதை...


  ஜெயஸ்ரீ ஷங்கர்..

  ReplyDelete
 4. என் பெண்ணை தூங்க வைக்க கதை சொன்னது நினைவுக்கு வருது

  ReplyDelete
 5. அசத்தல்..

  இப்படிக்கு,
  தினமும் நாலைஞ்சு கதைகள் சொல்லிய ஒரு அம்மா :-))

  ReplyDelete
 6. //பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித் தவறென்று திருத்துகிறது.//

  வெகு அருமையான நான் மிகவும் ரசித்த வரிகள். நன்றி.

  ReplyDelete
 7. மிக அருமை. அதென்ன சாந்தி 4., 5 கதை.. குட்டிக் கதைகளா.. அல்லது 5 கதை கேட்டாதான் தூங்குற பழக்கமா..:)

  ReplyDelete
 8. அருமை.

  /*
  உறக்கம் அழுத்தும்
  அதன் விழிகளைக் கண்டு
  சுருக்கி முடித்திட நினைத்தால்
  திருப்தியற்றுச் சிணுங்குகிறது
  */
  எங்கள் வீட்டிலும் இதே கதை தான்.

  /*அணைத்த விளக்கு பரப்பிய இருளில்
  ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

  புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து
  */
  இந்த வரிகள் பிடித்தது

  ReplyDelete
 9. பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
  தவறென்று திருத்துகிறது.//


  அந்த பரிசத்துக்கு முழு சொத்தையுமே எழுதி குடுக்கலாம்....!!

  ReplyDelete
 10. காட்சி அப்படியே கண்முன்னே.. அழகு அக்கா..

  ReplyDelete
 11. குழந்தையின் தெய்வ மனத்தை
  அழகாகச் சொல்லிப் போகும் அற்புதமான கவிதை
  தந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
  த.ம 4

  ReplyDelete
 12. @தேனக்கா,

  தினமும் நாலஞ்சு கதைகள் சொல்லியாகணும். இன்னொண்ணு, இன்னொண்ணுன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. கதை சொல்லிய நான் தூங்கிடுவேன். கேட்டுக்கிட்டிருக்கற பசங்க முழிச்சுட்டு இருப்பாங்க

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 13. எனக்கு கதை சொன்ன எனது பெரியம்மாவை நினைவு படுத்தி விட்டீர்கள்.
  நன்றி!

  ReplyDelete
 14. அற்புதமான கவிதை. குழந்தைகள் உலகில் பிரவேசித்துத் திரும்பிய உற்சாகம் இப்போது மனசெங்கும்.

  இரண்டு குருவிகளை மூன்றென்றோ
  சொன்னோமேயானால்
  பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
  தவறென்று திருத்துகிறது.

  ஆஹா..

  ReplyDelete
 15. அப்படியே குழந்தையாகிப்போய் கவிதை புனைந்தீர்களோ.

  ReplyDelete
 16. வாழ்க்கையைப் பல நேரங்களில்
  அதன் போக்கில் விட்டுப் பார்க்க
  அஞ்சுகிற நமக்கும்
  குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
  தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
  ஆரம்பம் ஆனது...

  அணைத்த விளக்கு பரப்பிய இருளில்
  ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

  புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 17. இப்போதும் கதை சொல்வோர் இருப்பதையும் அந்த கதை கேட்டு குழந்தைகள் அமைதியாய் தூங்கிப் போவதையும் கேட்கையிலே மனசுக்கு இதமாய் இருக்கிறது.

  ReplyDelete
 18. அருமை. நான் ரசித்த வரிகளை முத்துலட்சுமி மேடம் முதல் நிறைய பேர் ரசித்துள்ளார்கள் என்று பின்னூட்டம் பார்த்தபோது தெரிந்தது. நாமும் குழந்தைகளாயிருந்து வந்தவர்களாயினும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நித்தம் ஒரு புதுப் பாடம்!

  ReplyDelete
 19. நல்ல கவிதை. நல்லா இருக்கு

  ReplyDelete
 20. குழந்தை மனத்தை சித்தரிக்கும் அருமையானக் கவிதை..

  ReplyDelete
 21. குழந்தைக்கான கதைகள் மூலமும் அவர்கள் உலகம் மூலமும் பெரியவர்கள் நாம் நிறைய பெறுகிறோம்

  கவிதையும் பொருளும் அருமை

  //@தேனக்கா,

  தினமும் நாலஞ்சு கதைகள் சொல்லியாகணும். இன்னொண்ணு, இன்னொண்ணுன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. கதை சொல்லிய நான் தூங்கிடுவேன். கேட்டுக்கிட்டிருக்கற பசங்க முழிச்சுட்டு இருப்பாங்க//

  என் பெண்ணுக்கு அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் வரை நான் கதை
  சொல்லி இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் குறைந்தது இரண்டு கதைகளாவது கூற வேண்டும்.
  ஏற்கனவே என்றாவது நான் கூறியிருந்த கதையை திருப்பி கூறக் கூடாது.
  நடுவில் கதைக்கு அவள் அப்பா உம் கொட்டக் கூடாது.இப்பிடி நிறைய கன்டிஷன் லாம்
  தாண்டி, அப்பாடி! பதினொன்றாம் வகுப்பு வந்துட்டா.

  ReplyDelete
 22. //அதன்பிறகு அனைவரும்
  நலமே வாழ்ந்தார்கள்’ எனும்
  கடைசி வாக்கியத்துக்காக
  இமைகள் விரியக் காத்திருந்து
  நிறைவான புன்னகையுடன்
  தூங்கச் செல்கிறது//

  காட்சி கண்ணில் விரிகிறது :)

  குழந்தைகளின் உலகமே அழகானதுதான்.

  ReplyDelete
 23. அழகான கவிதை.. கண்முன் காட்சியாய் விரிகிறது.. நன்று

  ReplyDelete
 24. மிக அருமை ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 25. //வாழ்க்கையைப் பல நேரங்களில்
  அதன் போக்கில் விட்டுப் பார்க்க
  அஞ்சுகிற நமக்கும்
  குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
  தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
  ஆரம்பம் ஆனது...

  அணைத்த விளக்கு பரப்பிய இருளில்
  ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

  புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.//

  கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்தான். நன்று ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 26. அதன்பிறகு அனைவரும்
  நலமே வாழ்ந்தார்கள்’ எனும்
  கடைசி வாக்கியத்துக்காக
  இமைகள் விரியக் காத்திருந்து
  நிறைவான புன்னகையுடன்
  தூங்கச் செல்கிறது./

  குழந்தை உலகம் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 27. திருவோணத் திருநாள் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. வாழ்க்கையைப் பல நேரங்களில்
  அதன் போக்கில் விட்டுப் பார்க்க
  அஞ்சுகிற நமக்கும்
  குழந்தைக்குமான வித்தியாசத்தைத்
  தேடித் திகைத்து நின்ற புள்ளியில்
  ஆரம்பம் ஆனது...

  அணைத்த விளக்கு பரப்பிய இருளில்
  ஒளிர்ந்த சன்னல்வழி நட்சத்திரமாய்

  புதிய அத்தியாயத்தின் முதல் எழுத்து.

  அருமையான கவிதைவரிகள் .மிகவும்
  உணர்ந்து எழுதப்பட்டுள்ளது ............
  வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .......

  ReplyDelete
 29. நினைவுகளைக் கிண்டிய நல்ல கவிதை.

  ReplyDelete
 30. தமிழ் உதயம் said...
  /அருமை. குழந்தைகளின் உலகத்தில் பல அற்புதங்களை பெறுவோம். நீங்கள் இந்த கவிதையை பெற்று இருக்கிறீர்கள்./

  மிக்க நன்றி ரமேஷ்:)!

  ReplyDelete
 31. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  ***/இரண்டு குருவிகளை மூன்றென்றோ
  சொன்னோமேயானால்
  பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
  தவறென்று திருத்துகிறது.//
  ஆஹா கண்கொள்ளாக்காட்சியாச்சே. :)/***

  நன்றி முத்துலெட்சுமி. உங்களைத் தொடர்ந்து பலருக்கும் பிடித்துப் போனதாக இக்காட்சி அமைந்து விட்டது:)!

  ReplyDelete
 32. சசிகுமார் said...
  /நல்ல இருக்கு/

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 33. valampurisangu said...
  /அருமை..அருமை....!
  நல்ல கவிதை.../

  நன்றி ஜெயஸ்ரீ, தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 34. மோகன் குமார் said...
  /என் பெண்ணை தூங்க வைக்க கதை சொன்னது நினைவுக்கு வருது/

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 35. அமைதிச்சாரல் said...
  /அசத்தல்..

  இப்படிக்கு,
  தினமும் நாலைஞ்சு கதைகள் சொல்லிய ஒரு அம்மா :-))/

  நன்றி சாந்தி பகிர்வுக்கு:)!

  ReplyDelete
 36. Kanchana Radhakrishnan said...
  /அருமை./

  நன்றி மேடம்.

  ReplyDelete
 37. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ***//பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித் தவறென்று திருத்துகிறது.//

  வெகு அருமையான நான் மிகவும் ரசித்த வரிகள். நன்றி./***

  மகிழ்ச்சியும் நன்றியும் vgk.

  ReplyDelete
 38. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  /மிக அருமை./

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 39. அமுதா said...
  **/அருமை.

  /*
  உறக்கம் அழுத்தும்
  அதன் விழிகளைக் கண்டு
  சுருக்கி முடித்திட நினைத்தால்
  திருப்தியற்றுச் சிணுங்குகிறது
  */
  எங்கள் வீட்டிலும் இதே கதை தான். /**

  ஆம் அமுதா. சுருக்கிச் சொல்வதை குழந்தைகள் விரும்புவதே இல்லை:)!
  முடிவு வரிகளை ரசித்தமைக்கும் நன்றி.

  ReplyDelete
 40. MANO நாஞ்சில் மனோ said...
  ***/
  பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
  தவறென்று திருத்துகிறது.//


  அந்த பரிசத்துக்கு முழு சொத்தையுமே எழுதி குடுக்கலாம்....!!/***

  நன்றி:)!

  ReplyDelete
 41. சுசி said...
  /காட்சி அப்படியே கண்முன்னே.. அழகு அக்கா../

  நன்றி சுசி:)!

  ReplyDelete
 42. Ramani said...
  /குழந்தையின் தெய்வ மனத்தை
  அழகாகச் சொல்லிப் போகும் அற்புதமான கவிதை
  தந்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்/

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 43. அமைதிச்சாரல் said...//கேட்டுக்கிட்டிருக்கற பசங்க முழிச்சுட்டு இருப்பாங்க//

  :))!

  ReplyDelete
 44. அமைதி அப்பா said...
  //எனக்கு கதை சொன்ன எனது பெரியம்மாவை நினைவு படுத்தி விட்டீர்கள்.
  நன்றி!//

  நன்றி அமைதி அப்பா. நீங்கள் அமைதிக்கு சொன்னதில்லையா:)?

  ReplyDelete
 45. ரிஷபன் said...
  //அற்புதமான கவிதை. குழந்தைகள் உலகில் பிரவேசித்துத் திரும்பிய உற்சாகம் இப்போது மனசெங்கும்.

  இரண்டு குருவிகளை மூன்றென்றோ
  சொன்னோமேயானால்
  பிஞ்சுவிரல்களால் நம் இதழ்களை மூடித்
  தவறென்று திருத்துகிறது.

  ஆஹா..//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 46. ஸாதிகா said...
  //அப்படியே குழந்தையாகிப்போய் கவிதை புனைந்தீர்களோ.//

  அவர்கள் உலகில் நுழைந்தால் அனைவரும் குழந்தைகளே:). நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 47. Rathnavel said...

  //அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள் அம்மா.//

  மகிழ்ச்சியும் நன்றியும் சார்.

  ReplyDelete
 48. த. ஜார்ஜ் said...
  //இப்போதும் கதை சொல்வோர் இருப்பதையும் அந்த கதை கேட்டு குழந்தைகள் அமைதியாய் தூங்கிப் போவதையும் கேட்கையிலே மனசுக்கு இதமாய் இருக்கிறது.//

  கருத்துக்கும் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 49. ஸ்ரீராம். said...
  //அருமை. நான் ரசித்த வரிகளை முத்துலட்சுமி மேடம் முதல் நிறைய பேர் ரசித்துள்ளார்கள் என்று பின்னூட்டம் பார்த்தபோது தெரிந்தது. நாமும் குழந்தைகளாயிருந்து வந்தவர்களாயினும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நித்தம் ஒரு புதுப் பாடம்!//

  நித்தம் ஒரு பாடம் என்பது மிகச் சரி. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 50. Lakshmi said...
  /நல்ல கவிதை. நல்லா இருக்கு/

  நன்றிங்க லக்ஷ்மி.

  ReplyDelete
 51. குமரி எஸ். நீலகண்டன் said...
  /குழந்தை மனத்தை சித்தரிக்கும் அருமையானக் கவிதை../

  மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 52. raji said...
  //குழந்தைக்கான கதைகள் மூலமும் அவர்கள் உலகம் மூலமும் பெரியவர்கள் நாம் நிறைய பெறுகிறோம்

  கவிதையும் பொருளும் அருமை//

  நன்றி தங்கள் அனுபவத்தைப் பற்றிய பகிர்வுக்கும்:)!

  ReplyDelete
 53. சுந்தரா said...


  //காட்சி கண்ணில் விரிகிறது :)

  குழந்தைகளின் உலகமே அழகானதுதான்.//

  நன்றி சுந்தரா.

  ReplyDelete
 54. மோகன்ஜி said...
  //அழகான கவிதை.. கண்முன் காட்சியாய் விரிகிறது.. நன்று//

  நன்றி மோகன்ஜி தங்கள் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 55. Jaleela Kamal said...
  /மிக அருமை ராமலக்‌ஷ்மி/

  மிக்க நன்றி ஜலீலா.

  ReplyDelete
 56. கவிநயா said...

  //கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்தான். நன்று ராமலக்ஷ்மி :)//

  நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 57. இராஜராஜேஸ்வரி said...
  /குழந்தை உலகம் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்!/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 58. அம்பாளடியாள் said...

  /அருமையான கவிதைவரிகள் .மிகவும்
  உணர்ந்து எழுதப்பட்டுள்ளது ............
  வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ......./

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 59. அப்பாதுரை said...
  /நினைவுகளைக் கிண்டிய நல்ல கவிதை./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 60. வாழ்க்கையை அதன் போக்கில் விட அஞ்சும் நமக்கும் ,குழந்தைக்கும் உள்ள வித்யாசம் வெகு நுட்பமாய் அறிந்து சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தி புது அத்தியாயம்தான்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin