ஞாயிறு, 1 மே, 2011

மே தினம் - தினமணி கதிரில்.. ‘பிடிவாதம்’

பொங்கி வந்த பாலை அணைத்து, அளவான சர்க்கரை டிக்காஷனுடன் சேர்த்து, கிளம்பிய மணத்தை நாசிக்குள் இழுத்தவாறே கோப்பையுடன் டிவி முன் அமர்ந்தான் ரகு.

‘இன்று காலை பத்து மணிக்கு ஞாயிறு மகளிர்மலர் நிகழ்ச்சியில் இளம் மருத்துவர் சக்தி ரகுநாதன் நம்முடன் கலந்துரையாடுகிறார். காணத் தவறாதீர்கள்.’

உறிஞ்சத் தொடங்குகையில் தேவாமிர்தமாய் இருந்த காஃபி ஒரே கணத்தில் வெறுத்தது. கடனே என குடித்து முடித்தான் மிச்சத்தை. ஆனால் மீத வாழ்க்கையை அப்படி சலிப்புடன் கழிக்கத் தான் தயாராக இல்லை என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தான்.

இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே ரெகார்ட் செய்ய சக்தி செட் செய்திருந்தது நினைவுக்கு வந்தது. மெயின் சுவிட்சை அணைத்து விடலாம் என அற்பமாக யோசித்த வேளையில் தொலைபேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா.

“ஏன்டா, சக்தி ப்ரோக்ராம் இன்னிக்குதானே? போன ஞாயிறே அவ சொன்னதாலே பார்க்கச் சொல்லி அக்கம்பக்கம் தெரிஞ்ச எல்லார்க்கிட்டேயும் கொட்டடிச்சாச்சு. அவ பேட்டி முடிஞ்ச கையோட நானும் அப்பாவும் சம்பா சித்தி பொண்ணு கல்யாணத்துக்குக் கிளம்பிட்டிருக்கோம். வந்து பேசறேன்னு சக்திட்ட சொல்லு. இருக்காளா?”

சின்ன தயக்கத்துக்குப் பின் “நைட் ட்யூட்டி முடிஞ்சு வரல இன்னும்” என்றான்.

“ம்ம். சரி. அவதான் வர முடியாட்டியும் நீயாவது வந்திருக்கலாம்டா. சித்தி நீ ஏன் வரலைன்னு என்னப் பிச்சு எடுக்கப் போறா?” பதிலை எதிர்பார்க்காமல் ஃபோனை வைத்து விட்டாள் அம்மா.

‘வந்தா என்னைய ஆளாளுக்குப் பிச்சுத் தொங்க விட்டுறுவீங்களே’

போன வாரம் கல்லூரி நண்பன் கதிரேசன் தம்பிக்குத் திருமணம். குடும்பத்தோடு வந்து அவனுக்குச் சட்டை, சக்திக்குப் பட்டுப்புடவை தந்து அழைப்பு வைத்திருந்தார்கள். ஒருமாதம் முன்னாலிருந்தே சக்தியிடம் நினைவுபடுத்தியபடி இருந்தும் அன்று காலை தவிர்க்க முடியாத பிரசவ கேஸ் எனக் கிளம்பிப் போய் விட்டாள். நண்பர்களின் கலாட்டா தாங்கவில்லை. அதுவும் குரு இவன் காலை வாருவதிலேயே குறியாயிருந்தான்.

“வந்துட்டான்யா வந்துட்டான், கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி வந்துட்டான்” அத்தனை நண்பர்களும் ‘கொல்’ என சிரித்தது காதுக்குள் இன்னும் காய்ச்சி ஊற்றிய ஈயமாக. கல்லூரி நண்பர்கள் எப்போதுமே அதிக உரிமை எடுத்து கிண்டல் செய்வது சகஜம்தான். என்றாலும், வரவர இது போன்ற விளையாட்டுக்களை ரசிக்க முடியவில்லை.அதிக நேரம் அங்கிருக்கப் பிடிக்காமல் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடாமலே நழுவி வந்து விட்டிருந்தான் ரகு.

ஏற்கனவே மாமாவால் புகையத் தொடங்கியிருந்த மனம் குபுக் என பற்றிக் கொண்டதும் அன்றுதான்.

வேலை விஷயமாக ஊரிலிருந்து வந்து அவனோடு இரண்டு நாள் தங்கியிருந்த தாய்மாமா கிளம்பும் முன்னே, “என்ன வாழ்க்கடா வாழற. நல்லாப் படிச்சு உத்தியோகத்துல மடமடன்னு முன்னேறி என்ன பிரயோசனம் எங்கியோ பார்த்தேன், இவதான் வேணும்னு டாக்டர் பொண்ணக் கட்டுன. நீ வீட்டுக்கு வந்தா அவ கிளம்பிப் போறா. அவ காலையில திரும்பி வரும் போது நீ போயிடுற. எப்ப பாக்குறீங்களோ? எப்ப பேசுறீங்களோ? புள்ளக் குட்டியும் இன்னும் ரெண்டு வருஷம் வேண்டாம்னு இருக்கோம்ங்கிற. ஒண்ணும் நல்லதாத் தெரியல” என்றவர் போகிற போக்கில் ஒரு ஆலோசனையையும் தூக்கிப் போட்டார்.

“ஒண்ணு பண்ணு. என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு எம் எம் மெடிக்கல் காலேஜில் இருக்கான். அவன் மூலமா லெக்சரர் வேலைக்கு ஏற்பாடு செய்யறேன். நேரத்துக்கு போனமா வந்தமான்னு வாழ்க்கை சுலபப்படும். யோசிச்சு எனக்கு ஃபோன் செய். அவ மாட்டேன்னுதான் சொல்லுவா. பேசிக் கீசி கன்வின்ஸ் செய்யப் பாரு”

அதை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் நண்பர்களின் கேலியால் நொந்த தருணத்தில் பரிசீலிக்கத் தொடங்கி, இரண்டு நாள் முன்னர் சக்தியிடம் பேச்சை ஆரம்பிக்க முடிவற்றதாய் நீண்டு, இனி சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்கிற உச்சத்தைத் தொட்டு, இப்போது அவள் நர்சிங்ஹோம் கெஸ்ட் ஹவுஸில். பிடிவாதக்காரி. பிரிவதில் தனக்கு உடன்பாடில்லை என்று மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னாளே தவிர, தன் ஆலோசனையைப் பரிசீலிக்கக் கூட அவள் தயாராக இல்லாதது இவனுக்குப் பெரும் கோபத்தைக் கிளப்பி விட்டது.

அவளா தானா என பார்த்து விடும் கட்டத்தில் இருந்தான். ’என்னை விட உன் தொழில்தான் முக்கியமென்றால் அப்படியே இருந்து விடு’ தீர்மானமாய் சொல்லி விட்டான். இத்தனைக்கும் விரும்பிக் கைப் பிடித்தவள். எப்போது பார்த்தான் முதன் முதலில் அவளை?

பெரியம்மா மகனின் திருமணத்தில் மணப்பெண்ணின் தோழியாக. பார்த்த சில நிமிடங்களிலேயே அப்படிப் பிடித்துப் போனது அவனுக்கு. அவள் டாக்டர் எனத் தெரியவந்த போது அவனால் நம்பவே முடியவில்லை. படித்து ஓரளவு நல்ல வேலையில் அமர்ந்ததுமே மனிதர்களிடம் இயல்பாக வந்து ஒட்டிக் கொள்ளும் கெத்து எதுவும் இல்லாமல் மிக எளிமையாகவும் கலகலப்பாகவும் ஓடியாடி ஒவ்வொருவரையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் சக்தி. அப்போதே பெரியம்மாவைக் கைக்குள் போட்டுக் கொண்டு கட்டினால் சக்தியைத்தான் கட்டுவேன் எனக் கைகாட்டி விட்டு வந்து விட்டான்.

‘நம்ம சமூகம் இல்லை. டாக்டர் பொண்ணு குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராது’ என அவன் பக்கத்திலும், ‘எங்க ஆட்கள் இல்லீங்களே. அது கூடப் பரவாயில்ல. நாங்க டாக்டர் பையனா தேடறோமே’ என சக்தி குடும்பத்திலும் கிளம்பிய எதிர்ப்புகளையும் மறுப்புகளையும் நடுவில் நின்று சமாளித்து, பரஸ்பரம் சந்திக்க வைத்துப் பேசி முடித்தது பெரியம்மாதான்.

சக்தி மிகத் தெளிவாக இருந்தாள்.

“ஒரு டாக்டரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னா என் ப்ரொஃபஷனைப் பற்றிய புரிதலோட நடந்துப்பாங்கன்னு என் அப்பா நினைக்கறதில தப்பில்லை. நான் ஆசைப்பட்டதுக்காக பல சிரமங்களுக்கு மத்தியில என்னப் படிக்க வச்சவரு அவரு. அந்தப் படிப்புக்கான மரியாதை நான் இதுல உயர்ந்து காட்டறதுதான். அதுக்கு உங்களால...”

“நோ சக்தி. இது ஒரு புனிதமான வேலைன்னு புரியாதவன் இல்லை நான். எங்க சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரியிலும் நேரங்காலமில்லாத உழைப்புகள் எல்லாம்தான் இப்போ சகஜமாகி விட்டதே. என்னோட மனைவின்னு ஒரு வட்டத்துக்குள்ள கண்டிப்பா உங்களக் கட்டிப் போட மாட்டேன்” அவள் நம்பினாளோ இல்லையோ தான் அப்படி இருப்போம் என்பதில் அவனுக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது அப்போது. ஓரளவு தொழிலில் கவனம் செலுத்தி ஒரு நிலைக்கு வர மூன்று வருடமாகலாம் என்றும், அதுவரை குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்க முடியுமா என்றும் அவள் கேட்டதற்கு, “அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை” என்று தலையைத் தலையை ஆட்டியவன்தான் அப்போது.

ப்போது அவன் பார்வை முழுவதுமாய் மாறி விட்டிருந்தது. பொறுமை போய் விட்டிருந்தது.

ஆனால் அவளோ மாமாவின் ஆலோசனையை முன் வைத்த போது கோபப்படவே இல்லை.

“ஏன் ரகு, திடீர்னு இப்படி லெக்சரர்? தட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ. ஜஸ்ட் இன்னும் ஒரே வருஷம். ஒரு சிறந்த குழந்தைப்பேறு நிபுணராகிடுவேன். அப்புறம் ஒண்ணென்ன ரெண்டோ மூணோ கூட பெத்துத் தந்துட மாட்டேனா. வேலைக்கும் போயிக்கிட்டு, ஆளுங்களப் போட்டு குழந்தைகளையும் நிச்சயம் நல்லாப் பார்த்துக்க முடியும் என்னாலே”

“பெரிய தப்பு பண்ணிட்டேன்னு இப்போ தோணுது” ஏதேதோ இவன் பேச, பதிலுக்கு அவளும் பேச “அவுட்” என வாசலைக் காட்டிக் கொந்தளித்து விட்டான்.

“உங்களிடம் இப்போ என்ன பேசியும் புண்ணியமில்லை. ஆற அமர யோசிங்க. என்னைப் பார்க்கப் பார்க்க கோபம்தான் அதிகமாகும். இப்போதைக்கு நர்சிங்ஹோமிலேயே தங்கிக்கறேன்” என துணிமணிகளை அடுக்க ஆரம்பித்து விட்டாள்.

“வீராப்பா போறியா? போ போ. ஊர் வாய்க்குப் பயந்துகிட்டெல்லாம் உங்கிட்டே தோற்க மாட்டேன். திரும்ப வந்து கூப்பிடவும் மாட்டேன். நீயா வர்றியான்னு ஒரு மாசம் பார்ப்பேன். நான் சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா சேர்த்துப்பேன். இல்லைன்னா டைவர்ஸ்தான்.”

அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டுக் கிளம்பி விட்டாள்.

லைபேசி அழைத்தது. அறியாத எண்கள்.

அழைத்தது, நண்பன் பாலகணேஷ்.

“டேய்ய்ய் பாலா...” அலறினான் ஆனந்தத்தில்.

“மாறவே இல்ல ரகு நீ. அப்பாவுக்கு பை பாஸ் சர்ஜரி. சென்னை வந்து ஒரு வாரமாச்சு. காலையிலே ஃப்ரீயா சொல்லு. எனக்கு 12 மணிக்கு ஃப்ளைட். அதுக்குள்ள உன்னைப் பார்த்துட்டு போலாம்னு..”

“வா வா. ப்ரேக்ஃபாஸ்ட் இங்கயே வச்சுக்கலாம்”

சமையல் உதவிக்கு வரும் சீதாம்மாவைப் பாலாவுக்குப் பிடித்த பூரிக்கிழங்கை செய்யச் சொல்லிவிட்டுக் குளிக்க ஓடினான்.

பாலா ப்ளஸ் டூ வரைக் கூடப் படித்த பால்ய சிநேகிதன். பக்கத்து தெருவும் ஆகிப் போக எப்போதும் சேர்ந்தே திரிவார்கள். எத்தனை நட்புகள் பின்னாளில் கிடைத்தாலும் எதிர்பார்ப்புகளற்ற கள்ளமில்லா சிறுவயது நட்புக்கு ஈடாகுமா? கல்லூரிக்காகப் பிரிந்தவர்கள். பிறகு சந்திக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கவில்லை. கல்லூரி முடித்த கையோடு இவன் சென்னையிலும் அவன் டெல்லியிலுமாய் செட்டிலாக ஒருவர் திருமணத்துக்கு மற்றவர் போகவும் இயலவில்லை.

சொன்னபடியே ஒரு மணிநேரத்தில் அங்கிருந்தான் பாலா. ஆரத் தழுவிக் கொண்டார்கள். நான்கு கண்களும் மினுங்கி மினுங்கிப் பழைய காலத்துக்குப் போய்த் திரும்பின.

பாலா சொன்னான்: “நினைவிருக்கா ரகு. உங்கிட்டே ஒரு பிடிவாதம் உண்டு. ஏதாவது விளையாட்டில நீ தோத்துப் போனா அத்தோட விட மாட்டே. எதிராளிகிட்ட நைச்சியமா பேசியோ சமயத்தில கெஞ்சியோ மறுபடி விளையாட வச்சு ஜெயிச்சாதான் நிம்மதியாவே. உன்னோட அந்தப் போக்கு எங்களுக்கு அலுப்பா இருந்தாலும், போகுது ஃப்ரெண்டாச்சேன்னு சலிப்பா விளையாண்டாலும் உள்ளுக்குள்ள பிரமிப்பா இருக்கும்.”

ரகுவுக்குப் பெருமையாக இருந்தது.

பாலா தொடர்ந்தான்: “ஒருவகையில நான் இப்ப நல்ல நிலமையில இருக்கதுக்கு உன் கூடவே இருந்து கத்துக்கிட்ட அந்த பிடிவாத குணமும் ஒரு காரணம். அப்போ அதோட அருமை தெரியல. அவரவர் வழியில பிரிஞ்ச பிறகு வாழ்க்கையில எந்தத் தடை வந்தாலும் இத ரகு எப்படி சமாளிச்சிருப்பான்னு என்னய நானே கேட்டுப்பேன்னா பார்த்துக்கோயேன்” சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவன் அலைபேசி சிணுங்கியது.

“சொல்லும்மா.... அவகிட்ட ஃபோனைக் குடும்மா நான் பேசறேன்.... அனுக்குட்டி, செல்லமாச்சே நீ. பாட்டியைப் படுத்தாம குடுத்ததை சமர்த்தா சாப்பிடுவியாம். அப்பா இதோ வந்துட்டேயிருக்கேன்.... சரி சரி... வாங்கிட்டு வர்றேன். குளிச்சு ரெடியா இருக்கணும். நாம ரெண்டு பேரும் ஏர்போர்ட் போகணுமில்லையாடா.. குட் கேர்ள்” போனை வைத்தான்.

“வொய்ஃப் வரலையாடா உன்னோட?”

“இல்லடா. அவங்க ஆன்சைட் ப்ராஜக்டுக்காக யு கே போய் ஆறுமாசமாகுது”

“அப்போ குழந்தைய யார் பார்த்துக்கறது?” ஆச்சரியமாய் கேட்டான் ரகு.

ன் நான்தான். ஆயாம்மா காலையில எட்டு மணிக்கு வந்து சாயங்காலம் நான் வந்ததுமா ஆறுமணிக்குப் போவாங்க. அதுக்கு மேல நான் பாத்துக்கறேன்”.

“எப்படிடா மூணு வயசுதான் ஆகுதுங்கறே?”

“அனுக்குட்டிக்கு ஒண்ணரை வயசா இருக்கும் போதே ஒரு மாசம் பிரியா ஜெர்மனி போனப்போ பார்த்துக்கிட்டவன் நான். இப்ப முடியாதா என்ன ஆறு மாசமேன்னு ரொம்ப யோசிச்சாங்க இந்த தடவை. திறமைக்குச் சவாலா தேடிவந்த பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாதுன்னு தைரியம் சொல்லி அனுப்பி வச்சிருக்கேன். சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”

ரகுவுக்கு வியர்த்தது.

“ஒண்ணுக்கு ரெண்டு பசங்க ஆயிட்டா வேலைய விடச்சொல்ற ஆளுங்களையும் நிறையப் பார்த்துட்டேன். வர்ற ப்ரோமோஷனை வேண்டாம்னுட்டு, தன்னைவிடத் திறமை குறைஞ்சவங்க தாண்டிப் போறத கைகட்டி வேடிக்க பார்த்துகிட்டு, சம்பளத்தை மட்டும் கொண்டு தரணும்னாஅநியாயமா இல்லே? மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை”

ரகுவுக்கு லேசாக வெட்கம் வந்தது. தன்னிச்சையாக செட் டாப் பாக்ஸ் பக்கம் பார்வை சென்றது. சக்தியின் பேட்டி அதில் ரெகார்ட் ஆகிக் கொண்டிருந்தது.

“உறவும் ஊரும் இன்ன வரை என்னப் பேசாத கேலி இல்ல. வர்றான் பாரு ஃபீடிங் பாட்டில்னுதான் ஃப்ரெண்ட்ஸ் கிண்டலடிப்பாங்க. அவங்களுக்கென்ன, ஜாலியாச் சொல்லிட்டு அடுத்த வேலயப் பார்க்கப் போயிடுவாங்க. நாம ஏன் அதை மனசுல ஏத்திட்டுத் திரியணும்னு எதையும் சட்டை செய்யறதில்ல. இது நம்ம வாழ்க்கை. அடுத்தவங்க மூக்கை நுழைக்கப்படாதுங்கறதுல தீர்மானமா இருந்தோம் ரெண்டு பேருமே...

“நா ஒரு முட்டாள். யாரு கிட்ட என்ன சொல்லிட்டிருக்கேன் பாரு. அன்னக்கி உம்மேல வச்ச பிரமிப்பு இன்ன வர மாறல, நா சொல்லியா தெரியணும் இதெல்லாம்? ஊரே மெச்சுற டாக்டரையில்ல கட்டிக்கிட்டிருக்க. அவங்கள பார்க்காம போறமேன்னுதான் வருத்தம் எனக்கு. அடுத்த தடவை ஃபேமிலியோட மீட் பண்ணலாம்.” விடாமல் பேசிய பாலா கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்தான்.

ஏதேதோ மிதப்பில் இருந்த ரகு மெல்லத் தரை தொட்டிருந்தான்.

"இது நம்ம வாழ்க்கை' உதடுகள் முணுமுணுக்க, டின்னருக்கு சக்தியை எங்கே அழைத்துச் செல்லலாம் எனும் சிந்தனை வந்திருந்தது.
*** *** ***

படம்: கதையுடன் பிரசுரமானது.

  • உழைக்கும் மகளிருக்கு உறுதுணையாய் இருங்கள்:)! மேதினத்தில் இச்சிறுகதையை வெளியிட்டிருக்கும் தினமணி கதிருக்கு என் நன்றி!
  • தினமணி இணையதளத்திலும் வாசிக்கலாம்இங்கே.
  • அனைத்து வர்க்க உழைப்பாளிகளின் வாழ்வு சிறக்க, நலன் பெருக மே தின வாழ்த்துக்கள்! சென்ற வருட என் மே தினக் கவிதை ‘நட்சத்திரங்கள் இங்கே.

76 கருத்துகள்:

  1. தினமணி கதிரில் வெளியானதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  2. பொருத்தமான கதை.கலக்குறீங்க ராமலக்‌ஷ்மி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் அக்கா.

    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை. தினமணி கதிர் பிரசுரத்திற்கு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள். புத்தகத்திலேயே படித்தேன். வாழ்த்த வந்தால் சுடச்சுட பதிவிட்டு விடீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கருத்துச் செறிவுடன் பயணிக்கிறது கதை. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  7. என் பெண்ணை சனி கிழமைகளில் கடந்த பத்து வருஷமா நான் தான் பாத்துக்குறேன். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது, பணி நேரத்தை மதியம் டு இரவு என மாற்றி கொண்டு அரை நாள் (Morning) ஆவலுடன் இருந்து விட்டு போவேன். வேலை பார்க்கும் பெண்களுக்கு இவை மிக மிக குறைந்த அளவிலான உதவி என்று தான் சொல்லவேண்டும்.

    நல்ல கதைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி,அருமையான கருத்தாழமிக்க கதை.தொடர்ந்து நிறைய எழுதுங்க..

    பதிலளிநீக்கு
  9. கதையை இப்போதுதான் பொறுமையாகப் படித்து முடித்தேன். மிகவும் நல்லதொரு கதை. அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    //சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”//

    அருமையான உதாரணம். வாழ்த்துக்கள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  10. தினமணி கதிரில் கதை வெளியானதற்கு

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  11. பல் வேறு தகவல்களை அற்புதமாக கதையில் கொண்டுவந்து, சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். அது உங்கள் பாணி என்பதையும் நாங்கள் அறிவோம்.
    வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அழகான கதை ராமலக்ஷ்மி.

    விட்டுக் கொடுத்தல், வாழ்க்கைதுணையின் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்தல் என்று எல்லாம் இருந்ததால் தான் இல்லறம் இனிதாக இருக்கும்.

    உழைக்கும் மகளிருக்கு மேதினபரிசு.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  13. நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. அருமையான கருத்து, அழகான கதை.

    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  15. அழகான எதார்த்தமான கதை...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

    பதிலளிநீக்கு
  16. அதென்னமோ முழ நீளப் பின்னூட்டம்னா ஏத்துக்கறதில்லை, ரெண்டு நாளா.:( மறுபடி முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. மாலையில் விழும் சிக்கல்களை அவிழ்ப்பதை விடக் கடினமானது வாழ்க்கையில் விழும் சிக்கலை அவிழ்ப்பதுவும். அதிலும் மூன்றாம் மனிதர் இடையூறு இல்லாமல் இருந்தால் தான் யோசிக்கவே முடியும். அவ்வகையில் சிக்கலை மிக எளிதாகப் பிரித்துத் தீர்த்து மாலையை அணியப்பயனுள்ளதாக்கிவிட்டீர்கள். முத்துச் சரம் அல்லவா? ஒரு முத்துப் போனாலும் அழகு குறையுமே!

    பதிலளிநீக்கு
  18. இல்வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்தலில் தான் நிறைவே அடையும். அதைச் சுட்டிக்காட்டுவதோடு அந்த விட்டுக்கொடுத்தல் இருபக்கமும் இருக்கவேண்டும் என்பதையும் காட்டுகிறது கதை. டாக்டர் மனைவி என்றால் அவங்க தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆகவேண்டும். அதோடு குடும்பத்தையும் வெறுத்து ஒதுக்கும் மனைவியும் இல்லை. இப்படிப்பட்ட மனைவி கிட்டே சின்னச் சின்ன எதிர்பார்ப்புக்களைக் காட்டாமல் அடுத்தவர் தலையீடு இல்லாமல் நாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. கிட்டத்தட்ட இதே மூலக்கருவில் தொலைக்காட்சியில் ஒரு தொடரோ அல்லது நாடகமோ பார்த்தேன், ஹிந்தியில்?? ஆமாம்னு நினைவு.

    பதிலளிநீக்கு
  20. அருமையான கதை ராமலஷ்மி.. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  22. பிராக்டிகலான அருமையான் கதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. ||அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டு||
    .... ரசித்தேன்

    கதை நல்லாருக்குங்க!

    பதிலளிநீக்கு
  24. மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. கவிதை,புகைப்படம்,சிறுகதைன்னு பன்முகத்தில் அசத்துவது தனித்திறமையே!!மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள்'ங்க... ரெம்ப அழகான வாழ்வியல் கதை... கதை சொல்லும் செய்தி நிறைய பேருக்கு படிப்பினையாய் இருக்கும்னு நினைக்கிறேன்... நன்றி

    பதிலளிநீக்கு
  27. அன்பு ராமலக்ஷ்மி,
    இன்றைய சமுதாயத்துக்குத் தேவையான கதை.
    வாழ்வு சிறக்க இருமனத்தின் திருத்தம் தேவை.
    அமைப்பும் கருத்தும் சிறப்பு. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  28. கதை சூப்பரா இருக்குங்க.தினமணி கதிரில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கதை மிக அருமை,
    வாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. வெகு இயல்பான, ய‌தார்த்தமான நடை! அருமையான கருத்தாழம் மிக்க கதை! பொதுவாக மருத்துவராக ஒரு பெண் இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி பிரச்சினைகளையும் மட்டுமல்ல, குழந்தைகளை அருகிருந்து கவனிக்க முடியாமை, எதற்கும் நேரமில்லாத யந்திரத்தனமான வாழ்க்கை இப்படி அவர்களது பிரச்சினைகள் நீள்கின்றன‌. கணவன் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் உறவுகளின் உதவியும்கூட அவர்களுக்குத் தேவைப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றை களமாக எடுத்து, அதற்கு அழகாக தீர்வையும் சொல்லியிருக்கிறீர்கள்! கதைக்காகவும் தினமணி கதிரில் பிரசுரம் ஆனதற்காகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  31. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்...நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_04.html

    பதிலளிநீக்கு
  32. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //தினமணி கதிரில் வெளியானதற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  33. ஸாதிகா said...
    //பொருத்தமான கதை.கலக்குறீங்க ராமலக்‌ஷ்மி.வாழ்த்துக்கள்.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  34. போ. மணிவண்ணன் said...
    //வாழ்த்துக்கள்//

    நன்றி மணிவண்ணன், முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  35. சுசி said...
    //வாழ்த்துகள் அக்கா.

    அருமையான கதை.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  36. ரிஷபன் said...
    //நல்ல கதை. தினமணி கதிர் பிரசுரத்திற்கு நல்வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம். said...
    //வாழ்த்துகள். புத்தகத்திலேயே படித்தேன். வாழ்த்த வந்தால் சுடச்சுட பதிவிட்டு விடீர்கள்.//

    உங்களைப் போலவே ஒரு நண்பர் பார்த்து விட்டுத் தகவல் தெரிவித்ததன் பேரிலேயே உடனே சென்று பத்திரிகையை வாங்கினேன். சூட்டோடு பதிவும் இட்டு விட்டேன்:)! மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  38. குமரி எஸ். நீலகண்டன் said...
    //நல்ல கருத்துச் செறிவுடன் பயணிக்கிறது கதை. மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி...//

    மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  39. முல்லை அமுதன் said...
    //wishes.//

    மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  40. goma said...
    //வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  41. ஹுஸைனம்மா said...
    //அருமையா இருக்குக்கா கதை.//

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  42. அன்புடன் அருணா said...
    //அட!பூங்கொத்துப்பா!!!//

    மிக்க நன்றி அருணா:)!

    பதிலளிநீக்கு
  43. மோகன் குமார் said...
    //என் பெண்ணை சனி கிழமைகளில் கடந்த பத்து வருஷமா நான் தான் பாத்துக்குறேன். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது, பணி நேரத்தை மதியம் டு இரவு என மாற்றி கொண்டு அரை நாள் (Morning) ஆவலுடன் இருந்து விட்டு போவேன். வேலை பார்க்கும் பெண்களுக்கு இவை மிக மிக குறைந்த அளவிலான உதவி என்று தான் சொல்லவேண்டும்.//

    மகிழ்ச்சியும் பாராட்டுக்களும். உதவுபவர் எண்ணிக்கை முன்னை விட அதிகம்தான். இருப்பினும் இன்னும் புரிதல், அனுசரணை தேவைப்படுகிறது உழைக்கும் மகளிருக்கு.

    //நல்ல கதைக்கு வாழ்த்துகள்//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  44. asiya omar said...
    //மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மி,அருமையான கருத்தாழமிக்க கதை.தொடர்ந்து நிறைய எழுதுங்க..//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  45. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ***/கதையை இப்போதுதான் பொறுமையாகப் படித்து முடித்தேன். மிகவும் நல்லதொரு கதை. அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    //சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகணும்னோ கவுரவுத்துக்காகவோ வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னே அடமா நின்னு பண்ணிக்கறவங்க எத்தனை பேரு. ஆனா வொய்ஃப் ஒரு ஏடிஎம் மெஷினப் போல பணங்காய்ச்சி மரமா ஒரே எடத்துல நிக்கணும்னா எப்படி?”//

    அருமையான உதாரணம். வாழ்த்துக்கள்./***

    மீள் வருகைக்கும், கருத்துக்கும் மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  46. r.v.saravanan said...
    //தினமணி கதிரில் கதை வெளியானதற்கு

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  47. அமைதி அப்பா said...
    //பல் வேறு தகவல்களை அற்புதமாக கதையில் கொண்டுவந்து, சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். அது உங்கள் பாணி என்பதையும் நாங்கள் அறிவோம்.
    வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.//

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  48. கோமதி அரசு said...
    //அழகான கதை ராமலக்ஷ்மி.

    விட்டுக் கொடுத்தல், வாழ்க்கைதுணையின் விருப்பு, வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்தல் என்று எல்லாம் இருந்ததால் தான் இல்லறம் இனிதாக இருக்கும்.

    உழைக்கும் மகளிருக்கு மேதினபரிசு.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

    இனிய இல்லறம் பற்றி அருமையாய் சொன்னீர்கள். மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  49. தமிழ் உதயம் said...
    //நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி.//

    நன்றிகள் தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  50. சுந்தரா said...
    //அருமையான கருத்து, அழகான கதை.

    வாழ்த்துக்கள் அக்கா.//

    நன்றி சுந்தரா.

    பதிலளிநீக்கு
  51. பாச மலர் / Paasa Malar said...
    //அழகான எதார்த்தமான கதை...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

    மிக்க நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  52. T.V.ராதாகிருஷ்ணன் said...

    //அருமையான கதை.வாழ்த்துகள்//

    மிக்க நன்றி டி வி ஆர் சார்!

    பதிலளிநீக்கு
  53. geethasmbsvm6 said...
    //மாலையில் விழும் சிக்கல்களை அவிழ்ப்பதை விடக் கடினமானது வாழ்க்கையில் விழும் சிக்கலை அவிழ்ப்பதுவும். அதிலும் மூன்றாம் மனிதர் இடையூறு இல்லாமல் இருந்தால் தான் யோசிக்கவே முடியும். அவ்வகையில் சிக்கலை மிக எளிதாகப் பிரித்துத் தீர்த்து மாலையை அணியப்பயனுள்ளதாக்கிவிட்டீர்கள். முத்துச் சரம் அல்லவா? ஒரு முத்துப் போனாலும் அழகு குறையுமே!//

    நன்றி மேடம்.

    // யோசிக்கவே முடியும்// நூறு சதவிகிதம் உண்மை! ஆனால் சுற்றத்தாரின் இடையூறு இருந்து கொண்டேதான் இருக்கிறது எல்லா இடங்களிலும். அதுதான் உலகம் என்றாகி விட்டது. அந்த இடையூறு தங்கள் இல்லறத்தைப் பாதிக்காதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தம்பதிகள் கைகளில்தான்..

    பதிலளிநீக்கு
  54. geethasmbsvm6 said...
    //இல்வாழ்க்கை என்பது விட்டுக்கொடுத்தலில் தான் நிறைவே அடையும். அதைச் சுட்டிக்காட்டுவதோடு அந்த விட்டுக்கொடுத்தல் இருபக்கமும் இருக்கவேண்டும் என்பதையும் காட்டுகிறது கதை. டாக்டர் மனைவி என்றால் அவங்க தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆகவேண்டும். அதோடு குடும்பத்தையும் வெறுத்து ஒதுக்கும் மனைவியும் இல்லை. இப்படிப்பட்ட மனைவி கிட்டே சின்னச் சின்ன எதிர்பார்ப்புக்களைக் காட்டாமல் அடுத்தவர் தலையீடு இல்லாமல் நாமே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.//

    கதையின் நோக்கத்தை அழகுறச் சொல்லி விட்டீர்கள். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  55. அமைதிச்சாரல் said...
    //அருமையான கதை ராமலஷ்மி.. வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  56. சசிகுமார் said...
    //கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  57. இராஜராஜேஸ்வரி said...
    //பிராக்டிகலான அருமையான் கதைக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  58. May 2, 2011 3:44 PM
    ஈரோடு கதிர் said...
    *****||அடம் பிடிக்கும் சின்னக் குழந்தையைப் பார்ப்பது போல ஒரு புன்னகையை வீசி விட்டு||
    .... ரசித்தேன்.

    கதை நல்லாருக்குங்க!//*****

    நன்றி கதிர்!

    பதிலளிநீக்கு
  59. சி.பி.செந்தில்குமார் said...
    //கதை வந்ததற்குப்பாராட்டுக்கள்//

    நன்றி செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  60. ராஜ நடராஜன் said...
    //மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்!

    கவிதை,புகைப்படம்,சிறுகதைன்னு பன்முகத்தில் அசத்துவது தனித்திறமையே!!மீண்டும் வாழ்த்துக்கள்.//

    மகிழ்ச்சியும் நன்றியும் ராஜ நடராஜன்:)!

    பதிலளிநீக்கு
  61. அப்பாவி தங்கமணி said...
    //வாழ்த்துக்கள்'ங்க... ரெம்ப அழகான வாழ்வியல் கதை... கதை சொல்லும் செய்தி நிறைய பேருக்கு படிப்பினையாய் இருக்கும்னு நினைக்கிறேன்... நன்றி//

    மிக்க நன்றி புவனா, இன்றைய வலைச்சரத்தில் இக்கதையினை குறிப்பிட்டிருப்பதற்கும்.

    பதிலளிநீக்கு
  62. "உழவன்" "Uzhavan" said...
    //வாழ்த்துகள் :-)//

    நன்றி உழவன்.

    பதிலளிநீக்கு
  63. வல்லிசிம்ஹன் said...
    //அன்பு ராமலக்ஷ்மி,
    இன்றைய சமுதாயத்துக்குத் தேவையான கதை.
    வாழ்வு சிறக்க இருமனத்தின் திருத்தம் தேவை.
    அமைப்பும் கருத்தும் சிறப்பு. வாழ்த்துகள் மா.//

    மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  64. ஜிஜி said...
    //கதை சூப்பரா இருக்குங்க.தினமணி கதிரில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி.//

    மிக்க நன்றி ஜிஜி.

    பதிலளிநீக்கு
  65. Jaleela Kamal said...
    //கதை மிக அருமை,
    வாழ்த்துகக்ள், வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஜலீலா:)!

    பதிலளிநீக்கு
  66. மனோ சாமிநாதன் said...
    //வெகு இயல்பான, ய‌தார்த்தமான நடை! அருமையான கருத்தாழம் மிக்க கதை! பொதுவாக மருத்துவராக ஒரு பெண் இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி பிரச்சினைகளையும் மட்டுமல்ல, குழந்தைகளை அருகிருந்து கவனிக்க முடியாமை, எதற்கும் நேரமில்லாத யந்திரத்தனமான வாழ்க்கை இப்படி அவர்களது பிரச்சினைகள் நீள்கின்றன‌. கணவன் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் உறவுகளின் உதவியும்கூட அவர்களுக்குத் தேவைப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றை களமாக எடுத்து, அதற்கு அழகாக தீர்வையும் சொல்லியிருக்கிறீர்கள்! கதைக்காகவும் தினமணி கதிரில் பிரசுரம் ஆனதற்காகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!//

    மகிழ்வாய் உணர்கிறேன். மிக்க நன்றி மனோ சாமிநாதன்.

    பதிலளிநீக்கு
  67. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  68. ராமலக்ஷ்மி கதை எனக்கு புரிய சிரமமாக இருந்தது.. அதனால் தான் தாமதமாக படிக்கலாம் என்று படித்தேன்.. ம்ஹீம் வேலைக்கு ஆகலை.

    வரவர எனக்கு மூளை காலியாகிக்கொண்டு வருகிறதோ :-) இத்தனை பேர் பாராட்டி இருக்காங்க.. அப்ப எனக்குத்தான் எதோ பிரச்சனை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin