Monday, April 25, 2011

ஆறாவது அறிவு - நவீன விருட்சத்தில்..

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்
நேர்க் கோட்டில் சில கணங்கள்

வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை

விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.

மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க

மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க

ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பித்தது.

விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..

தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்

அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது

வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ

ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை

எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***

15 ஏப்ரல் 2011 நவீன விருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்!

படம்: நான் எடுத்தது..

61 comments:

 1. //வாழ்வோ பணியோ
  பதவியோ பந்தயமோ

  ஏமாற்றத்தின் வலியை
  தோல்வியின் துயரை

  எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.
  ***//

  அருமையான உவமை விளக்கம்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. எளியவரை வென்று மகிழும் பழக்கம் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை மேடம்.

  ReplyDelete
 3. வஞ்சம் நிறைந்த நெஞ்சுடன் வலம் வரும் ஆறாம் அறிவினைப் போலவே ஐந்தறிவுப் பறவையும் எளியோனை நோக்கி இறக்குகிறது தனது வலியை.... அருமையானக் கவிதை...

  ReplyDelete
 4. பருந்து படம் அழகாக எடுத்து இருக்கீங்க, கவிதையும் மிக அழகு.

  ReplyDelete
 5. சமீபமாய் அசத்தல் கவிதைகள்... அதிலும் இது மிகச் சிறப்பாய்!!!

  ReplyDelete
 6. படமும்.... கவிதையும் சிறப்பு.

  ReplyDelete
 7. //ஏமாற்றத்தின் வலியை
  தோல்வியின் துயரை

  எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.//
  ஆதிகாலத்திலிருந்தே இப்படித்தான். கவிதை உண்மை. படம் எப்படி எடுத்தீங்க பொறாமையா இருக்கு. great!

  ReplyDelete
 8. இளைச்சவனைக்கண்டா வலுத்தவனுக்கு இளப்பம்ன்னு சொல்லுவாங்க.. அதை நினைவுபடுத்துது உங்க கவிதை.

  ReplyDelete
 9. கவிதை அருமை, அதன் இறுதி வரிகளில் சொல்லியிருக்கும் உண்மை வலித்தாலும், எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்று மனதை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

  இந்த அவல நிலை காவல்துறையில்தான் மிக அதிகம்.

  (பல வீடுகளில் மனைவியிடம் பெற்ற வலியை தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடம் இறக்கி வைப்பதுதான் அதிகமாக நடக்கிறது.)

  ReplyDelete
 10. கவிதை மட்டுமல்ல; படமும் உங்களுடையது என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள் :-)

  ReplyDelete
 11. படமும் கவிதையும் அருமை.

  ReplyDelete
 12. ஐந்தறிவுக்கு அந்த குணம் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆறறிவுக்கும் அது இருப்பதுதான் சோகம். நல்ல கவிதை. (தூ.......ரத்தில் இருக்கும் நிலவையே படம்பிடிக்கும் உங்களுக்கு பருந்தைப் படம் பிடிப்பதா கஷ்டம்...!)

  ReplyDelete
 13. /*எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.*/
  :-( வாழ்க்கையைச் சொல்லும் நல்லதொரு கவிதை

  ReplyDelete
 14. அழகா சொல்லி இருக்கிங்க அக்கா.

  ReplyDelete
 15. கவிதைக்குப் படம்.படத்துக்குக் கவிதை பொருத்தம் !

  ReplyDelete
 16. //கைக்கெட்டும் தூரத்தில்
  கைக்கெட்டா கனவொன்றைப் போல்//

  //எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.//

  வரிகள் அருமை ராமலக்ஷ்மி.

  படமும், கவிதையும் அருமை.

  ReplyDelete
 17. மனித இயல்பின் எதார்த்த வெளிப்பாடு மீண்டும் உங்கள் வரிகளில்...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 18. அருமை ராமலெக்ஷ்மி..

  வலியாரைக்கண்டு பயந்து எளியாரை விரட்டுபவர் குறித்த கவிதை..

  ReplyDelete
 19. வழக்கம் போல் சிறப்பானக் கவிதை.

  படமும் அப்படியே!

  ReplyDelete
 20. உங்க ஊர் கழுகான்னு கேட்கலாமென்றிருந்தேன்.நானே புடிச்சதுன்னிட்டீங்க:)

  ReplyDelete
 21. //(தூ.......ரத்தில் இருக்கும் நிலவையே படம்பிடிக்கும் உங்களுக்கு பருந்தைப் படம் பிடிப்பதா கஷ்டம்...!)//

  நிலவு உட்கார்ந்துகிட்டிருக்குது.பருந்து பறந்திட்டிருக்குது.அதுவும் சிறகு விரிச்சு பறக்கறதப் புடிக்கத்தான் பற பற கஷ்டம்:)

  ReplyDelete
 22. எளியோரைத் தாக்குவது எளிதான செயல். வெகு சுகபமாக வாழ்வின்
  யதார்த்தத்தைப் புரிய வைத்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.மிக அருமை.

  நிறைந்த வாழ்த்துகள் .

  ReplyDelete
 23. அன்பின் ராமலக்ஷ்மி

  படமும் அருமை கவிதையும் அருமை. ஒரு தவறான, இயல்பான செயலினை இறுதியில் கூறி - ஆறறிவு படைத்த மனிதன் செய்வதைப் பருந்தும் கடைப்பிடிக்கிறதே என வருந்துவது தான் கவிதையும் உச்சம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 24. பறக்கிறது கருடனாட்டமா இருக்கே? :))))) உடல் சிவந்த நிறமாய் இருக்கே?? :))))

  வலியோரை வாழ்த்தி எளியோரை ஏசும் உலகு தானே இது! :(

  ReplyDelete
 25. யதார்த்தம் அழகிய கவிதையாக.

  ReplyDelete
 26. எதார்த்த வெளிப்பாடு மீண்டும் உங்கள் அருமையான கவிதை வரிகளில்..
  வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 27. சசிகுமார் said...
  பருந்து படம் அழகு.
  கவிதை அழகு.

  ReplyDelete
 28. அசத்தல் கவிதை

  ReplyDelete
 29. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. மோகன் குமார் said...
  //கவிதைக்குள் கதை//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 31. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ***//வாழ்வோ பணியோ
  பதவியோ பந்தயமோ

  ஏமாற்றத்தின் வலியை
  தோல்வியின் துயரை

  எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.***/

  அருமையான உவமை விளக்கம்.
  பாராட்டுக்கள்.//***

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 32. தமிழ் உதயம் said...
  //எளியவரை வென்று மகிழும் பழக்கம் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை மேடம்.//

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 33. குமரி எஸ். நீலகண்டன் said...
  //வஞ்சம் நிறைந்த நெஞ்சுடன் வலம் வரும் ஆறாம் அறிவினைப் போலவே ஐந்தறிவுப் பறவையும் எளியோனை நோக்கி இறக்குகிறது தனது வலியை.... அருமையானக் கவிதை...//

  மிக்க நன்றி நீலகண்டன். ‘ஏழாவது அறிவு எட்டிப் பார்க்கிறது’ என நவீன விருட்சத்தில் தாங்கள் தெரிவித்திருந்த கருத்தும் பிடித்தது.

  ReplyDelete
 34. சசிகுமார் said...
  //பருந்து படம் அழகாக எடுத்து இருக்கீங்க, கவிதையும் மிக அழகு.//

  மிக்க நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 35. ஈரோடு கதிர் said...
  //சமீபமாய் அசத்தல் கவிதைகள்... அதிலும் இது மிகச் சிறப்பாய்!!!//

  மகிழ்ச்சியும் நன்றியும் கதிர்.

  ReplyDelete
 36. சி.கருணாகரசு said...
  //படமும்.... கவிதையும் சிறப்பு.//

  நன்றி கருணாகரசு.

  ReplyDelete
 37. சாகம்பரி said...
  ***//ஏமாற்றத்தின் வலியை
  தோல்வியின் துயரை

  எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.//
  ஆதிகாலத்திலிருந்தே இப்படித்தான். கவிதை உண்மை. படம் எப்படி எடுத்தீங்க பொறாமையா இருக்கு. great!//***

  முதல் வருகைக்கு மிக்க நன்றி சாகம்பரி. வீட்டு பால்கனியிலிருந்து.. ஷட்டர் ஸ்பீட் அதிகரித்து..

  ReplyDelete
 38. அமைதிச்சாரல் said...
  //இளைச்சவனைக்கண்டா வலுத்தவனுக்கு இளப்பம்ன்னு சொல்லுவாங்க.. அதை நினைவுபடுத்துது உங்க கவிதை.//

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 39. திருவாரூர் சரவணன் said...
  //கவிதை அருமை, அதன் இறுதி வரிகளில் சொல்லியிருக்கும் உண்மை வலித்தாலும், எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்று மனதை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

  இந்த அவல நிலை காவல்துறையில்தான் மிக அதிகம்.

  (பல வீடுகளில் மனைவியிடம் பெற்ற வலியை தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடம் இறக்கி வைப்பதுதான் அதிகமாக நடக்கிறது.)//

  நன்றி சரவணன். எதிர்மறையாகவும் நடக்கிறது. மனிதர் மாற வேண்டும். வலி மற்றவரிடம் இறக்கி வைக்க அல்ல. புரிந்து அனுசரணயாக நடக்க.. என உணர வேண்டும்.

  ReplyDelete
 40. "உழவன்" "Uzhavan" said...
  //கவிதை மட்டுமல்ல; படமும் உங்களுடையது என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்கள் :-)//

  மிக்க நன்றி உழவன்.

  ReplyDelete
 41. asiya omar said...
  //படமும் கவிதையும் அருமை.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 42. ஸ்ரீராம். said...
  //ஐந்தறிவுக்கு அந்த குணம் இருப்பது ஆச்சர்யமில்லை. ஆறறிவுக்கும் அது இருப்பதுதான் சோகம். நல்ல கவிதை. (தூ.......ரத்தில் இருக்கும் நிலவையே படம்பிடிக்கும் உங்களுக்கு பருந்தைப் படம் பிடிப்பதா கஷ்டம்...!)//

  நிலவு பறக்காது. நின்று சமர்த்தாய் போஸ் கொடுக்கும். பருந்து அப்படி இல்லையே:)! பலநாள் பலமுறை முயன்றதில் ஓரளவு ஓகேயான படமே இது:)!

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 43. April 25, 2011 8:32 PM
  அமுதா said...
  ***/*எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.*/
  :-( வாழ்க்கையைச் சொல்லும் நல்லதொரு கவிதை//***

  நன்றி அமுதா.

  ReplyDelete
 44. சுசி said...
  //அழகா சொல்லி இருக்கிங்க அக்கா.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 45. ஹேமா said...
  //கவிதைக்குப் படம்.படத்துக்குக் கவிதை பொருத்தம் !//

  மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 46. கோமதி அரசு said...
  **//கைக்கெட்டும் தூரத்தில்
  கைக்கெட்டா கனவொன்றைப் போல்//

  //எளியோனிடம் கடத்தும்
  மனிதனைப் போலவே.//

  வரிகள் அருமை ராமலக்ஷ்மி.

  படமும், கவிதையும் அருமை./**

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 47. பாச மலர் / Paasa Malar said...
  //மனித இயல்பின் எதார்த்த வெளிப்பாடு மீண்டும் உங்கள் வரிகளில்...வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..//

  மிக்க நன்றி மலர்.

  ReplyDelete
 48. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அருமை ராமலெக்ஷ்மி..

  வலியாரைக்கண்டு பயந்து எளியாரை விரட்டுபவர் குறித்த கவிதை..//

  ஆம், வலியாரைப் போராடி வெல்லத் துணிவற்றோர்.., மிக்க நன்றி தேனம்மை.

  ReplyDelete
 49. அமைதி அப்பா said...
  //வழக்கம் போல் சிறப்பானக் கவிதை.

  படமும் அப்படியே!//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 50. ராஜ நடராஜன் said...
  //உங்க ஊர் கழுகான்னு கேட்கலாமென்றிருந்தேன்.நானே புடிச்சதுன்னிட்டீங்க:)//

  கோடையில் புறாக்கள் பருந்து மைனாக்கள் கிளிகள் என காலை நேரம் வானில் கோலாகலம்தான்:)!
  ***//(தூ.......ரத்தில் இருக்கும் நிலவையே படம்பிடிக்கும் உங்களுக்கு பருந்தைப் படம் பிடிப்பதா கஷ்டம்...!)//

  நிலவு உட்கார்ந்துகிட்டிருக்குது.பருந்து பறந்திட்டிருக்குது.அதுவும் சிறகு விரிச்சு பறக்கறதப் புடிக்கத்தான் பற பற கஷ்டம்:)//***

  நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டுள்ளீர்கள்:)! நன்றி ராஜ நடராஜன்.

  ReplyDelete
 51. வல்லிசிம்ஹன் said...
  //எளியோரைத் தாக்குவது எளிதான செயல். வெகு சுகபமாக வாழ்வின்
  யதார்த்தத்தைப் புரிய வைத்துவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.மிக அருமை.

  நிறைந்த வாழ்த்துகள் .//

  மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 52. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி

  படமும் அருமை கவிதையும் அருமை. ஒரு தவறான, இயல்பான செயலினை இறுதியில் கூறி - ஆறறிவு படைத்த மனிதன் செய்வதைப் பருந்தும் கடைப்பிடிக்கிறதே என வருந்துவது தான் கவிதையும் உச்சம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா சார்.

  ReplyDelete
 53. geethasmbsvm6 said...
  //பறக்கிறது கருடனாட்டமா இருக்கே? :))))) உடல் சிவந்த நிறமாய் இருக்கே?? :))))

  வலியோரை வாழ்த்தி எளியோரை ஏசும் உலகு தானே இது! :(//

  நன்றி மேடம். கருடனுக்கும் பருந்துக்கும் எப்படி வித்தியாசம் பார்க்கிறது:)? நான் இதுதான் பருந்து என நினைத்துக் கொண்டிருக்கிறேன்:)!

  ReplyDelete
 54. மாதேவி said...
  //யதார்த்தம் அழகிய கவிதையாக.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 55. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //எதார்த்த வெளிப்பாடு மீண்டும் உங்கள் அருமையான கவிதை வரிகளில்..
  வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 56. Kanchana Radhakrishnan said...
  //பருந்து படம் அழகு.
  கவிதை அழகு.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 57. r.v.saravanan said...
  //அசத்தல் கவிதை//

  நன்றி, முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 58. Rathnavel said...
  //நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 59. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றிகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin