நண்டுகளோடு ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்
ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்
எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்
கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விடப் பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்
இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்
அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்
அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***
படம்: இணையத்திலிருந்து..
29 ஏப்ரல் 2011, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்
ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்
எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்
கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விடப் பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்
இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்
அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்
அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***
படம்: இணையத்திலிருந்து..
29 ஏப்ரல் 2011, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
படமும் காட்சி விவரிப்பும் மிக அருமை
பதிலளிநீக்குகுறிப்பாக உடற்பயிற்சி ஆசான்களைச் சொல்லவேண்டும்
வித்தியாசமான சிந்தனை
அரங்கேறட்டும் இது போன்ற அற்புதப் படைப்புகள்
இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
பதிலளிநீக்குஇரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்
....lovely! கவிதையும் படமும் - அருமையோ அருமை. பாராட்டுக்கள், அக்கா!
கடற்கரையில் ஓடும் மனிதர்களையும் அவர்களை இழுத்துச் செல்லும் வளர்ப்புச்
பதிலளிநீக்குசெல்லங்களையும் பார்க்கும் போது இதே சிந்தனை தோன்றும்.:)--
அழகான படம்
அற்புதமான சிந்தனை.
நாற்காலிகள் நிறையும் நாட்கள் வந்து கொண்டே இருக்கின்றன:))
இயற்கையை ரசிக்க மனமில்லாததால் - நேரமில்லை என்று பொய் சொல்லி சமாளிக்கிறோம். அருமையான கவிதை.
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்குங்க.
பதிலளிநீக்குஇப்போ நானும் உங்களை போல படம் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் :-)
கவிதையும் படமும் அருமை
பதிலளிநீக்குபிணக்கும் குறைக்கும் அற்புதக்காட்சிகள் :)
பதிலளிநீக்குகடைசிப்பாரால சொல்லி இருக்கிறமாதிரி நாற்காலி காத்தே கிடக்குங்க.. அவசரமா ஓட்டமா ஓடிக்கிட்டிருக்கோம்.
அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
பதிலளிநீக்குஎவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்//
அலைகளும், பறவைகளும் இயங்கும் காட்சி அற்புதம்,
//அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
பதிலளிநீக்குஅமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.///
டச்சிங்...
கவிதை அசத்தல், படமும் அசத்தல்...
பதிலளிநீக்குகவிதை அழகு
பதிலளிநீக்கு||பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன||
அபாரமான வரி!
ஒரு காட்சியையே கவிதை தருகிறது.
பதிலளிநீக்குபடமும் கவிதையும் சூப்பர்ர்!!
பதிலளிநீக்கு//எண்பதெழுபது கிலோ
பதிலளிநீக்குஎடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்//
குறும்பு :))
//அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.//
அவளவு யதார்த்தம்.
அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
பதிலளிநீக்குஎவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்//
கவிதை அரங்கேறும்நேரம் தான் கடற்கரை காட்சிகளைப் பார்க்கும் போது.
கவிதாயினி ராமலக்ஷ்மிக்கு எவ்விடத்திலும் கவிதை வரும்.
கவிதையும் படமும் அற்புதம்.
கவிதை ரொம்பரொம்ப அழகு அக்கா.
பதிலளிநீக்குரொம்ப அருமையான கவிதை. முதல் பத்தியும் கடைசி பத்தியும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
பதிலளிநீக்குகவிதை மிக அழகா இருக்கு.
பதிலளிநீக்குபடங்களும் சுப்பர்.
படமும் பகிர்வும் அழகு
பதிலளிநீக்குஅனைத்துமே அருமை.
பதிலளிநீக்கு//எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்//
மிகவும் அழகான கற்பனை.
பாராட்டுக்கள்.
பதிவு அருமை அக்கா
பதிலளிநீக்குRamani said...
பதிலளிநீக்கு//படமும் காட்சி விவரிப்பும் மிக அருமை
குறிப்பாக உடற்பயிற்சி ஆசான்களைச் சொல்லவேண்டும்
வித்தியாசமான சிந்தனை
அரங்கேறட்டும் இது போன்ற அற்புதப் படைப்புகள்//
மிக்க நன்றி.
Chitra said...
பதிலளிநீக்கு***/இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்
....lovely! கவிதையும் படமும் - அருமையோ அருமை. பாராட்டுக்கள், அக்கா!/***
நன்றி சித்ரா:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//கடற்கரையில் ஓடும் மனிதர்களையும் அவர்களை இழுத்துச் செல்லும் வளர்ப்புச்
செல்லங்களையும் பார்க்கும் போது இதே சிந்தனை தோன்றும்.:)--
அழகான படம்
அற்புதமான சிந்தனை.
நாற்காலிகள் நிறையும் நாட்கள் வந்து கொண்டே இருக்கின்றன:))//
மிக்க மகிழ்ச்சி. நன்றி வல்லிம்மா:)!
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//இயற்கையை ரசிக்க மனமில்லாததால் - நேரமில்லை என்று பொய் சொல்லி சமாளிக்கிறோம். அருமையான கவிதை.//
ஆம், நன்றி தமிழ் உதயம்.
சிங்கக்குட்டி said...
பதிலளிநீக்கு//ரொம்ப நல்லா இருக்குங்க.//
நன்றி சிங்கக்குட்டி.
//இப்போ நானும் உங்களை போல படம் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் :-)//
உங்கள் சமீபத்திய பதிவில் பகிந்து கொண்டிருந்த படங்கள் யாவும் வெகு அருமை:)!
எல் கே said...
பதிலளிநீக்கு//கவிதையும் படமும் அருமை//
நன்றி எல் கே.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//பிணக்கும் குறைக்கும் அற்புதக்காட்சிகள் :)
கடைசிப்பாரால சொல்லி இருக்கிறமாதிரி நாற்காலி காத்தே கிடக்குங்க.. அவசரமா ஓட்டமா ஓடிக்கிட்டிருக்கோம்.//
அதே. நன்றி முத்துலெட்சுமி:)!
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு***/அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்//
அலைகளும், பறவைகளும் இயங்கும் காட்சி அற்புதம்,/***
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு***//அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.///
டச்சிங்.../***
நன்றி மனோ.
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு//கவிதை அசத்தல், படமும் அசத்தல்...//
நன்றி:)!
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//கவிதை அழகு
||பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன||
அபாரமான வரி!//
மிக்க நன்றி கதிர்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//ஒரு காட்சியையே கவிதை தருகிறது.//
மனம் நிறைந்தது. நன்றி ஹேமா:)!
S.Menaga said...
பதிலளிநீக்கு//படமும் கவிதையும் சூப்பர்ர்!!//
நன்றி மேனகா.
சுசி said...
பதிலளிநீக்கு***//எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்//
குறும்பு :))***
அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா? இது ஆசான்களுக்கான பாராட்டு:)!
***//அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.//
அவளவு யதார்த்தம்.//***
நன்றி சுசி.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு***/அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்//
கவிதை அரங்கேறும்நேரம் தான் கடற்கரை காட்சிகளைப் பார்க்கும் போது.
கவிதாயினி ராமலக்ஷ்மிக்கு எவ்விடத்திலும் கவிதை வரும்.
கவிதையும் படமும் அற்புதம்./***
மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.
சுந்தரா said...
பதிலளிநீக்கு//கவிதை ரொம்பரொம்ப அழகு அக்கா.//
நன்றி சுந்தரா.
"உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//ரொம்ப அருமையான கவிதை. முதல் பத்தியும் கடைசி பத்தியும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.//
மகிழ்ச்சியும் நன்றியும் உழவன்:)!
Vijiskitchencreations said...
பதிலளிநீக்கு//கவிதை மிக அழகா இருக்கு.
படங்களும் சுப்பர்.//
நன்றி விஜி.
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு//படமும் பகிர்வும் அழகு//
மிக்க நன்றி ஞானசேகரன்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//அனைத்துமே அருமை.
//எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்//
மிகவும் அழகான கற்பனை.
பாராட்டுக்கள்.//
மகிழ்ச்சியும் நன்றியும்.
சண்முககுமார் said...
பதிலளிநீக்கு//தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள் //
தகவலுக்கு நன்றி.
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//பதிவு அருமை அக்கா//
நன்றி சசிகுமார்.
தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.
பதிலளிநீக்கு