Monday, May 23, 2011

எல்லாம் புரிந்தவள் - வல்லமையில்..

மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.

அர்த்தங்கள் பல
முயன்று தோற்று

‘அப்பா
அம்மாவாகவே முடியாதோ..’
திகைத்து வருந்தி நிற்கையில்

புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு

எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.
***

23 மே 2011 வல்லமை இணைய தளத்தில்.., நன்றி வல்லமை!

படம் நன்றி: http://www.istockphoto.com, கவிதையுடன் வல்லமையில் வெளியானது.

53 comments:

நானானி said...

வடை எனக்கே.....!

கவிதை இனிமை.
‘வா வா என் தேவதையே.. பாடலை நினைவூட்டுகிறது.

தமிழ் உதயம் said...

உண்மை தான். தாய்க்கு தான் குழந்தை எப்படி பேசினாலும் புரிகிறது. அந்த அனுபவத்தை கவிதையாக்கியது அருமை.

Chitra said...

மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.


..... ஆரம்ப வரிகளே , கலக்கல்!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமை..

நாமும் மழலையாக இருந்துதான் வந்தோம் என்றாலும் மழலைமொழி நமக்கு முழுவதும் தெரிவதில்லை.

cheena (சீனா) said...

அன்பின் ராமலக்ஷ்மி

அருமை கவிதை அருமை - மகளிடமதிகம் பழகாத்தால் அப்பாவிற்கு மழலை புரியவில்லை. அகராதி பக்கத்தில் இருக்கும் வரை நாமாகவும் கற்றுக் கொள்ள மாட்டோம். அழகான முடிவு. அம்மாவானாள் அன்பு மகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா

MANO நாஞ்சில் மனோ said...

பாசம் பாசம் பாசம்....

அசத்தல் நெஞ்சை தொட்ட கவிதை...!!!

பாச மலர் / Paasa Malar said...

அனுபவப்பூர்வமான அழகு கவிதையாகும்போது இனிக்கிறது...

சிசு said...

//மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.//

மிக ரசித்தேன்...

சில சமயங்களில் நம் மௌனத்திற்கும்... :)

சசிகுமார் said...

கவிதை மிக அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

குட்டிப்பெண் குழந்தைபோலவே இந்தக்குட்டிக்கவிதையும்
அழகோ அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk

அமைதி அப்பா said...

கவிதை நன்று.

Rathnavel said...

அருமை.

S.Menaga said...

அழகான கவிதை!!

ஸ்ரீராம். said...

தாயுமானவள்!

அந்த அன்பின் முத்தத்தில் ஞானப்பால் குடித்த குழந்தையாய் அர்த்தங்களைப் புரிய தகப்பனுக்கும் கைவரும் கலை!

அம்பிகா said...

\\மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.\\

அழகான கவிதை.

ஈரோடு கதிர் said...

தித்திக்கிறது!

குமரி எஸ். நீலகண்டன் said...

அம்மாவே அறிவாள் அவளின் மொழி... அருமையான கவிதை...

ஹேமா said...

ஆரம்ப வரிகளே அழகாயிருக்கு !

goma said...

தாய்ப்பாசத்துக்கு வார்த்தை தேவையில்லை வயது தேவை இல்லை..என்பதை விளக்கமாக நாலே வார்த்தைகளில் கொட்டி விட்டீர்.
விழுந்தது நாலு மலர்கள் ,அதில் தொடுத்ததோ கொத்தான பூச்செண்டு

க.பாலாசி said...

அருமையான கவிதை...

சுசி said...

//
மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.
//

அழகு அக்கா..

எங்க வீட்ல மகனுக்கும் நானே அகராதி :)

ஸாதிகா said...

//மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.
//ஆஹா..என்ன வார்த்தைஜாலம்!!!!!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமையான குட்டி அம்மாக் கவிதை.. சூப்பர்ப் ராமலெக்ஷ்மி.

மோகன் குமார் said...

Very nice.

கே. பி. ஜனா... said...

அழகாய் ஆரம்பித்து அசத்தலாய் முடிந்த கவிதை!

ராமலக்ஷ்மி said...

நானானி said...
//வடை எனக்கே.....!

கவிதை இனிமை.
‘வா வா என் தேவதையே.. பாடலை நினைவூட்டுகிறது.//

ஆம் உங்களுக்கே:)! கருத்துக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//உண்மை தான். தாய்க்கு தான் குழந்தை எப்படி பேசினாலும் புரிகிறது. அந்த அனுபவத்தை கவிதையாக்கியது அருமை.//

கருத்துக்கு நன்றி தமிழ் உதயம்.

ராமலக்ஷ்மி said...

Chitra said...
//மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.


..... ஆரம்ப வரிகளே , கலக்கல்!!!//

நன்றி சித்ரா:)!

ராமலக்ஷ்மி said...

முனைவர்.இரா.குணசீலன் said...
//அருமை..

நாமும் மழலையாக இருந்துதான் வந்தோம் என்றாலும் மழலைமொழி நமக்கு முழுவதும் தெரிவதில்லை.//

உண்மைதான். அதுவும் அன்னைக்குப் புரியுமளவுக்கு தந்தைக்குப் புரிவதில்லை:)! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

cheena (சீனா) said...
//அன்பின் ராமலக்ஷ்மி

அருமை கவிதை அருமை - மகளிடமதிகம் பழகாத்தால் அப்பாவிற்கு மழலை புரியவில்லை. அகராதி பக்கத்தில் இருக்கும் வரை நாமாகவும் கற்றுக் கொள்ள மாட்டோம். அழகான முடிவு. அம்மாவானாள் அன்பு மகள் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி - நட்புடன் சீனா//

மிக்க நன்றி சீனா சார்:)!

ராமலக்ஷ்மி said...

MANO நாஞ்சில் மனோ said...
//பாசம் பாசம் பாசம்....

அசத்தல் நெஞ்சை தொட்ட கவிதை...!!!//

நன்றி மனோ:)!

ராமலக்ஷ்மி said...

பாச மலர் / Paasa Malar said...
//அனுபவப்பூர்வமான அழகு கவிதையாகும்போது இனிக்கிறது...//

நன்றி மலர்:)!

ராமலக்ஷ்மி said...

சிசு said...
***//மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.//

மிக ரசித்தேன்...

சில சமயங்களில் நம் மௌனத்திற்கும்... :)/***

ரசித்தேன் உங்கள் கருத்தை நானும்:)! நன்றி சிசு.

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//கவிதை மிக அருமை.//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//குட்டிப்பெண் குழந்தைபோலவே இந்தக்குட்டிக்கவிதையும்
அழகோ அழகு.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க vgk.

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//கவிதை நன்று.//

நன்றி அமைதி அப்பா.

ராமலக்ஷ்மி said...

Rathnavel said...
//அருமை.//

நன்றி ரத்னவேல்.

ராமலக்ஷ்மி said...

S.Menaga said...
//அழகான கவிதை!!//

நன்றி மேனகா.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//தாயுமானவள்!

அந்த அன்பின் முத்தத்தில் ஞானப்பால் குடித்த குழந்தையாய் அர்த்தங்களைப் புரிய தகப்பனுக்கும் கைவரும் கலை!//

வரட்டும் வரட்டும்:)! நன்றி ஸ்ரீராம்:)!

ராமலக்ஷ்மி said...

அம்பிகா said...
***\\மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.\\

அழகான கவிதை./***

நன்றி அம்பிகா. ஏன் வெகு நாளாக உங்கள் பதிவுகளைக் காணோம்? விடுமுறையில் இருக்கிறீர்களா:)?

ராமலக்ஷ்மி said...

ஈரோடு கதிர் said...
//தித்திக்கிறது!//

நன்றி கதிர்:)!

ராமலக்ஷ்மி said...

குமரி எஸ். நீலகண்டன் said...
//அம்மாவே அறிவாள் அவளின் மொழி... அருமையான கவிதை...//

ஆம் நீலகண்டன். அவள் அம்மாவும் ஆகிறாள் வாடிய தகப்பன் முகம் கண்டு:)! மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...
//ஆரம்ப வரிகளே அழகாயிருக்கு !//

நன்றி ஹேமா.

ராமலக்ஷ்மி said...

goma said...
//தாய்ப்பாசத்துக்கு வார்த்தை தேவையில்லை வயது தேவை இல்லை..//

சரியாகச் சொன்னீர்கள்.

//நாலே வார்த்தைகளில் கொட்டி விட்டீர். விழுந்தது நாலு மலர்கள் ,அதில் தொடுத்ததோ கொத்தான பூச்செண்டு//

மிக்க நன்றி கோமா:)!

ராமலக்ஷ்மி said...

க.பாலாசி said...
//அருமையான கவிதை...//

நன்றி பாலாசி.

ராமலக்ஷ்மி said...

சுசி said...
***//மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.//

அழகு அக்கா..

எங்க வீட்ல மகனுக்கும் நானே அகராதி :)//***

ஆமா அதுவும் இருக்கே இன்னொரு பக்கம்:)! நன்றி சுசி.

ராமலக்ஷ்மி said...

ஸாதிகா said...
//மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.


ஆஹா..என்ன வார்த்தைஜாலம்!!!!!!//

நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//அருமையான குட்டி அம்மாக் கவிதை.. சூப்பர்ப் ராமலெக்ஷ்மி.//

மிக்க நன்றி தேனம்மை.

ராமலக்ஷ்மி said...

மோகன் குமார் said...
//Very nice.//

நன்றி மோகன் குமார்.

ராமலக்ஷ்மி said...

கே. பி. ஜனா... said...
//அழகாய் ஆரம்பித்து அசத்தலாய் முடிந்த கவிதை!//

நன்றிங்க ஜனா.

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

கவிநயா said...

மழலையைப் போலவே கவிதை மிக அழகு, இனிமை!

ராமலக்ஷ்மி said...

@ கவிநயா,

வாங்க கவிநயா. இனிய கருத்துக்கு நன்றி:)!

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin