Wednesday, May 4, 2011

3 வருடம் / 34 மாதம்.. - முத்துச்சரம் / PIT போட்டி..

ன்றுடன் முத்துச்சரத்துக்கு 3 ஆண்டு நிறைவு. உடன் வரும் அத்தனை பேருக்கும் என் அன்பான நன்றி:)!

மூன்று வருடங்களும் நடைபெற்ற ஒவ்வொரு PiT போட்டிகளிலும் தவறாமல் பங்கு பெற்று பதிவுகளும் இட்டு வந்துள்ளேன். நடுவே சில மெகா மற்றும் குழுமப் போட்டிகளின் கால அவகாசம் நீட்டிக்கப் பட்டதால் முப்பத்தாறுக்கு பதில் 34 போட்டிகள்தான். தலைப்பு சரிதானே?

இப்போது என் 35 ஆவது போட்டிப் பதிவை முத்துச்சரத்தில் அன்றி, PiT தளத்திலேயே பதிந்து விட்டுள்ளேன், அதுவும் அறிவிப்புப் பதிவாக:)! PiT குழுவின் சார்பில் இம்மாதப் போட்டிக்கு நடுவராக இயங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் சர்வேசன். நன்றி PiT!
றிவிப்பையும் சில மாதிரிப் படங்களையும் இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:

தலைப்பு: உடைகள்.

படத்தைப் பார்த்த உடன் உடைகளே நம்மைக் கவர வேண்டும். ஒரு நடனப் படமாய் இருந்தாலும் பாவனை ஒப்பனையை விட உடை பிரதானமாக ஈர்க்க வேண்டும்.

PIT மாதாந்திர போட்டி விதிமுறைகள்
இங்கே விரிவாகவும் தெளிவாகவும். முடிவுத் தேதி மே 15.


படம்:1 # சி வி ஆர்
Duriyodhana in action

படம்:2 # ஜீவ்ஸ்
Seller

படம்:3 # கருவாயன்
ரெட்டை ஜடை

படம்:4,5 #ராமலக்ஷ்மி
‘கிமோனோ’ ஜப்பானிய உடை/ ’Kimono' Japanese Traditional Dress

‘கிமோனோ’ ஜப்பானியப் பாரம்பரிய உடை


இந்த உடை ஜப்பானில் ஆண், பெண், சிறுவர் அனைவராலும் அணியப் படுகிறது. இதற்கான அர்த்தம் ‘அணிவதற்கான பொருள்’, ki "wear" and mono "thing", என்கிறது விக்கிபீடியா.

தற்காலத்தில் இது முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே அணியப் படும் உடையாகி வருகிறது. பாரம்பரியத்தைக் காக்க விரும்பும் ஒரு சில வயதில் மூத்த ஆண், பெண்கள் மட்டும் தினசரி அணிகிறார்கள்.மேலும் மாதிரிப் படங்களுக்கு: மே 2011 போட்டி அறிவிப்பு

அறிவிப்பான அடுத்தநாளிலிருந்து அணிவகுக்கத் தொடங்கிவிட்டன அழகழகான படங்கள் போட்டிக்காக இங்கே. படங்கள் வர வர உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தபடி இருங்கள். முக்கியமாக,

உற்சாகமாக நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் ‘எதைக் கொடுக்க’ எனக் கேட்டு உங்களை சிரமப் படுத்தியதற்கு பதிலடியாக, இந்த முறை ‘எதை தேர்ந்தெடுக்க’ எனும் சிரமத்தை எனக்கு வழங்குங்கள்:)!

*** *** ***

60 comments:

 1. "எதை தேர்ந்தெடுக்க" என்பது எப்படி சிரமமாகும். அது பாக்கியமாயிற்றே.

  ReplyDelete
 2. @ தமிழ் உதயம்,

  போட்டி கடுமையாய் இருந்தால்தானே சுவாரஸ்யம்:)! மிக்க நன்றி:)!

  ReplyDelete
 3. ஜட்ஜம்மா வாழ்த்துக்கள்.ஜட்ஜ் உடையில் கற்பனை செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. அன்பின் ராமலக்ஷ்மி

  மூன்றாண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துகள் - முத்துச் சரம் துவங்கிய காலத்தில் இருந்து PIT போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டதற்கும் நடுவரானதற்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 5. மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சாதனைகள் தொடரட்டும்.

  ReplyDelete
 6. மூன்று வருட நிறைவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்...

  -*-

  PiT நடுவர் மிகச் சரியான அங்கீகாரம் வாழ்த்துகள்.
  சிறப்பாக பணியாற்றுங்கள்.

  ReplyDelete
 7. மூன்றாவது ஆண்டிற்கு நல் வாழ்த்துக்கள். நீதிபதிக்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்குண்டு..pit என்றால் என்ன?இதில் கலந்துகொள்ள என்ன செய்யவேண்டும்..அடுத்தவாரம் ஒரு புதிய காமரா எனக்கு அன்பளிப்பாக யு.கே.வில் இருந்து மகள் வாங்கிவருகிறார். 14 மெகாபிக்சராம்.

  ReplyDelete
 8. மூன்றாண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துக்கள்

  நடுவரானதற்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. முத்துச்சரத்தின் மூன்றாவது வருடத்திற்கு வாழ்த்துக்கள் நடுவரே :)

  ReplyDelete
 10. வாழ்த்துகள்..... மகிழ்ச்சி

  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 11. ப்ளாக்கிற்க்கும்,நடுவரானதிற்கும் வாழ்த்துக்கள் அக்கா!! அனைத்து புகைப்படங்களும் சூப்பர்!!

  ReplyDelete
 12. முத்துச் சரத்தின் முத்தான மூன்று வருடங்கள்... பவளமாய் பளிங்காய் பளபளக்கட்டும் இன்னும் வரும் வருடங்கள்.. வாழ்த்துக்கள் நடுவராய் நற்பணிக்கும்...
  மிக்க மகிழ்ச்சி....

  ReplyDelete
 13. நடுவர் அவர்களுக்கு மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துகள் :-))

  ReplyDelete
 14. COngrats for both (Third year completion & being a judge..)

  ReplyDelete
 15. மூன்று வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.
  //ஜட்ஜ் உடையில் கற்பனை செய்து பார்க்கிறேன்//

  :-)) naanum thaan.. பாராட்டுகள்!

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் அக்கா எனக்கு பிடித்தது நம்ப ஸ்கூல் யுனிபார்ம் தான்

  ReplyDelete
 17. உங்களுடைய தீர்ப்பைப் 'பார்க்க' ஆவலுடன் உள்ளோம்.

  வாழ்த்துக்கள் மேடம்!

  ReplyDelete
 18. மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. மனமார்ந்த வாழ்த்துக்கள்பா! பூங்கொத்தும்!

  ReplyDelete
 20. மூன்றாவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை!

  ReplyDelete
 21. WOW!!! 3rd anniversary! congratulations!

  ReplyDelete
 22. மூன்று வருடம் ஓடி விட்டதா! :-) ரைட்டு வாழ்த்துக்கள்.

  நானும் நீங்களும் இரண்டு வருடம் முன்பு ஒரு முறை படத்தை சமர்பித்து இருந்தோம் ..நான் அதன் பிறகு அப்படியே விட்டு விட்டேன்..ஆர்வம் இன்மை காரணமாக அல்லது சோம்பேறித்தனம் காரணமாக. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து அட்டகாசமாக படங்களை எடுத்துப் பழகி நடுவராகவே வந்து விட்டீர்கள். அசத்தல் போங்க! :-)

  உங்கள் புகைப்படக்கலை வளர்ச்சியை கவனித்து வருகிறேன் என்பதால் நிஜமாகவே பிரம்மித்துத்தான் போனேன். ஹி ஹி கொஞ்சம் பொறாமையாகக்கூட உள்ளது.

  இருந்தாலும் ஒரு ஓரமாக மனதில் இந்த ஆசை இருந்து கொண்டு தான் இருக்கிறது.. சரியான வாய்ப்பு மற்றும் ஆர்வம் வரும் போது அது வெளிப்படும் அப்போது உங்களிடம் கூறுகிறேன்.. பாருங்க ராமலக்ஷ்மி! அன்னைக்கு சொன்னேன்ல அதை இப்ப தான் செய்து இருக்கிறேன் என்று :-)

  சரி! கோ படம் பார்த்தீங்களா.. இந்தப்படம் பார்க்கும் போது உங்களைத்தான் நினைத்தேன். ஜீவா படம் எடுப்பதைப் பார்த்த போது உங்கள் நினைவு தான் வந்தது. பார்க்கலைனா கண்டிப்பா பாருங்க.. குறைந்த பட்சம் புகைப்படம் பற்றிய படம் என்பதற்காகவது.

  //goma said...
  ஜட்ஜம்மா வாழ்த்துக்கள்.ஜட்ஜ் உடையில் கற்பனை செய்து பார்க்கிறேன்.//

  கோமா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி? :-)

  ReplyDelete
 23. இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும் ராமலக்ஷ்மி .

  ReplyDelete
 24. நான்காவது தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  நடுவராய் பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 25. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு பக்கம்...

  பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 26. goma said...
  //ஜட்ஜம்மா வாழ்த்துக்கள்.ஜட்ஜ் உடையில் கற்பனை செய்து பார்க்கிறேன்.//

  மிக்க நன்றி:))!

  ReplyDelete
 27. cheena (சீனா) said...
  //அன்பின் ராமலக்ஷ்மி

  மூன்றாண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துகள் - முத்துச் சரம் துவங்கிய காலத்தில் இருந்து PIT போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டதற்கும் நடுவரானதற்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள். //

  மகிழ்ச்சியும் நன்றியும் சீனா சார்.

  ReplyDelete
 28. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அருமை..ராமலெக்ஷ்மி..:))//

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 29. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சாதனைகள் தொடரட்டும்.//

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 30. ஈரோடு கதிர் said...
  //மூன்று வருட நிறைவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்...

  -*-
  PiT நடுவர் மிகச் சரியான அங்கீகாரம் வாழ்த்துகள்.
  சிறப்பாக பணியாற்றுங்கள்.//

  நன்றி கதிர்:)!

  ReplyDelete
 31. ESWARAN.A said...
  //மூன்றாவது ஆண்டிற்கு நல் வாழ்த்துக்கள். நீதிபதிக்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்குண்டு..pit என்றால் என்ன?இதில் கலந்துகொள்ள என்ன செய்யவேண்டும்..அடுத்தவாரம் ஒரு புதிய காமரா எனக்கு அன்பளிப்பாக யு.கே.வில் இருந்து மகள் வாங்கிவருகிறார். 14 மெகாபிக்சராம்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  PiT-Photography-in-Tamil. “ தமிழில் புகைப்படக் கலை”யைப் பற்றி விரிவாகக் கற்றுக் கொடுக்கும், ஆர்வத்தை வளர்க்கும், கலை மற்றும் காமிரா குறித்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் ஒரே தளம். இந்தப்பதிவிலேயே ‘மாதாந்திரப் போட்டி விதிமுறைகள்’, ‘மே மாதப் போட்டி அறிவிப்பு’ இவற்றுக்கான சுட்டிகள் தந்துள்ளேன். அங்கு சென்று தளத்தின் எல்லா பதிவுகளையும் பார்வையிட்டால் உங்களுக்கே புரியும்.

  மகிழ்ச்சி:)! புதிய காமிராவின் படங்களைப் பார்க்கக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 32. r.v.saravanan said...
  //மூன்றாண்டு நிறைவுக்கு நல்வாழ்த்துக்கள்

  நடுவரானதற்கும் வாழ்த்துக்கள்//

  நன்றி சரவணன்.

  ReplyDelete
 33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //முத்துச்சரத்தின் மூன்றாவது வருடத்திற்கு வாழ்த்துக்கள் நடுவரே :)//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 34. ஆ.ஞானசேகரன் said...
  //வாழ்த்துகள்..... மகிழ்ச்சி//

  நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 35. S.Menaga said...
  //ப்ளாக்கிற்க்கும்,நடுவரானதிற்கும் வாழ்த்துக்கள் அக்கா!! அனைத்து புகைப்படங்களும் சூப்பர்!!//

  மிக்க நன்றி மேனகா:)!

  ReplyDelete
 36. S.Menaga said...
  //ப்ளாக்கிற்க்கும்,நடுவரானதிற்கும் வாழ்த்துக்கள் அக்கா!! அனைத்து புகைப்படங்களும் சூப்பர்!!//

  மிக்க நன்றி மேனகா:)!

  ReplyDelete
 37. குமரி எஸ். நீலகண்டன் said...
  //முத்துச் சரத்தின் முத்தான மூன்று வருடங்கள்... பவளமாய் பளிங்காய் பளபளக்கட்டும் இன்னும் வரும் வருடங்கள்.. வாழ்த்துக்கள் நடுவராய் நற்பணிக்கும்...

  மிக்க மகிழ்ச்சி....//

  மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  ReplyDelete
 38. அமைதிச்சாரல் said...
  //நடுவர் அவர்களுக்கு மூன்றாவது பிறந்தநாள் வாழ்த்துகள் :-))//

  நன்றி சாந்தி:))!

  ReplyDelete
 39. மோகன் குமார் said...
  //COngrats for both (Third year completion & being a judge..)//

  நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சி.தொடரட்டும் சிறப்புக்கள்.

  ReplyDelete
 41. "உழவன்" "Uzhavan" said...

  //மூன்று வருட நிறைவுக்கு வாழ்த்துகள்.
  //ஜட்ஜ் உடையில் கற்பனை செய்து பார்க்கிறேன்//

  :-)) naanum thaan.. பாராட்டுகள்!//

  ரைட்:))! நன்றி!

  ReplyDelete
 42. சசிகுமார் said...
  //வாழ்த்துக்கள் அக்கா எனக்கு பிடித்தது நம்ப ஸ்கூல் யுனிபார்ம் தான்//

  ஆமாம் எனக்கும் மிகப் பிடித்தமான படம் அது:)! நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 43. அமைதி அப்பா said...
  ***//உங்களுடைய தீர்ப்பைப் 'பார்க்க' ஆவலுடன் உள்ளோம்.

  வாழ்த்துக்கள் மேடம்!//***

  மிக்க நன்றி அமைதி அப்பா:)!

  ReplyDelete
 44. புதுகைத் தென்றல் said...
  //மனமார்ந்த வாழ்த்துக்கள்//

  நன்றி தென்றல்:)!

  ReplyDelete
 45. அன்புடன் அருணா said...
  //மனமார்ந்த வாழ்த்துக்கள்பா! பூங்கொத்தும்!//

  ரொம்ப நன்றி அருணா:)!

  ReplyDelete
 46. மதுரை சரவணன் said...
  //vaalththukkal...//

  நன்றிகள் சரவணன்.

  ReplyDelete
 47. May 6, 2011 1:35 AM
  ஸ்ரீராம். said...
  //மூன்றாவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நான் போட்டியில் கலந்து கொள்ளவில்லை!//

  இந்த விஷயத்தில் சிரமம் கொடுத்தால்தான் மகிழ்ச்சி:)! நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 48. Chitra said...
  //WOW!!! 3rd anniversary! congratulations!//

  நன்றி சித்ரா!

  ReplyDelete
 49. கிரி said...
  //மூன்று வருடம் ஓடி விட்டதா! :-) ரைட்டு வாழ்த்துக்கள்.

  நானும் நீங்களும் இரண்டு வருடம் முன்பு ஒரு முறை படத்தை சமர்பித்து இருந்தோம் ..நான் அதன் பிறகு அப்படியே விட்டு விட்டேன்..ஆர்வம் இன்மை காரணமாக அல்லது சோம்பேறித்தனம் காரணமாக. நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து அட்டகாசமாக படங்களை எடுத்துப் பழகி நடுவராகவே வந்து விட்டீர்கள். அசத்தல் போங்க! :-)//

  வேகமாகவே ஓடி விட்டது. ஆம் உங்கள் முதல் பிட் படம் வயல்வெளியில் உழும் மாடுகள். நினைவில் உள்ளது:)! பிறகு ஒருமுறை நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு போட்டிக்குத் தங்கள் மகனது படத்தைக் கொடுத்திருந்தீர்கள்.

  //சரியான வாய்ப்பு மற்றும் ஆர்வம் வரும் போது அது வெளிப்படும் //

  காத்திருக்கிறோம் அனைவரும்:)

  //கோ படம் பார்த்தீங்களா..//

  புகைப்பட வல்லுநர் MQN தனது buzz-ல் ‘இது எங்க PIT படம்’ எனக் கொண்டாடியிருந்தார்:)! அவசியம் பார்க்கிறேன்.

  //ஜட்ஜ் உடையில்//

  போட்டித் தலைப்பும் ‘உடை’ அல்லவா? ரசித்து, வாய்விட்டு சிரிக்க வைத்த கமெண்ட் அது. டேக் இட் ஈஸி:)!

  ReplyDelete
 50. துளசி கோபால் said...
  //இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும் ராமலக்ஷ்மி .//

  மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.

  ReplyDelete
 51. கோமதி அரசு said...
  //நான்காவது தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  நடுவராய் பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்!//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 52. புதுகை.அப்துல்லா said...
  //வாழ்த்துகள் அக்கா.//

  மிக்க நன்றி அப்துல்லா. நீங்கள் வலையுலகம் வந்தும் மூன்றாண்டுகள் நிறைவுறுகின்றன:)! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 53. இசக்கிமுத்து said...
  //நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு பக்கம்...

  பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!!//

  எப்போது வலைப்பக்க வந்தாலும் பதிவுக்கு வருகை தருகிறீர்கள். மிக்க நன்றி இசக்கிமுத்து.

  ReplyDelete
 54. மாதேவி said...
  //வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சி.தொடரட்டும் சிறப்புக்கள்.//

  மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 55. தமிழ்மணம், இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  ReplyDelete
 56. வாழ்த்துக்கள்....நடுவரம்மா!!

  ReplyDelete
 57. @ நானானி,

  மிக்க நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin