Thursday, April 21, 2011

வண்ணத்துப்பூச்சிகளின் வகுப்பறை! - கல்கி கவிதை கஃபே


குடியரசுதின அணிவகுப்பு மரியாதை
கண்களுக்குள் ஓட

‘ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்
ஆகணும் டீச்சர்’
தொடங்கி வைத்தாள் எழிலரசி

ஆனந்தி, மல்லிகா, சந்திராவுக்கு
போலீசாய் பைலட்டாய் விஞ்ஞானியாய்
ஆக விருப்பமாம்

கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகி
உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில்
உறுதியாக இருந்தாள் உமா மகேஸ்வரி

தயங்கித் தயங்கி
வெளிப்படுத்தினாள் யாழினி
வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
தன் ஆசையென

கைதட்டிக் குலுங்கியது சிரிப்பால்
குழந்தைகளின் வகுப்பறை

தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன.
***

24 ஏப்ரல் 2011, இந்த வார கல்கியில் வெளியாகியுள்ள கவிதை.

வண்ணத்துப்பூச்சி படம் கவிதையுடன் கல்கி ஆன்லைனில் வெளியானது.

பத்திரிகையில்...
என் கவிதையின் தலைப்பு கவிதை கஃபேயின் தலைப்பாகவும் அமைந்ததில் கூடுதல் மகிழ்ச்சி:)!

கல்கியில் இதுவரை வெளியான பிற கவிதைகள்(முன்னர் வாசித்திராதவருக்காக..): தவிப்பு , குழந்தை முகத்தில் குளிர் நிலவு!


நன்றி கல்கி!!!

***

52 comments:

குமரி எஸ். நீலகண்டன் said...

வண்ணக்கனவுகளோடு இறக்கைகள் துளிர்க்க வளமான எண்ணங்களோடு சிறகடிக்கிறது அழகான வண்ணத்து பூச்சி... நல்ல அழகானக் கவிதை

ராஜ ராஜ ராஜன் said...

ரொம்ப அழகா இருக்குங்க...

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா இருக்குங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல அருமையான அழகிய கவிதை.
கல்கியிலேயே படித்தேன். பெயர் ராமலக்ஷ்மி என்று இருந்ததால் அது தங்களுடையது [முத்துச்சரம் ராமலக்ஷ்மி தான்] என்பதை கவனிக்கத்தவறிவிட்டேன்.

மனமார்ந்த பாராட்டுக்கள், மேடம்.

வாழ்த்துக்கள். Congratulations.

[அதே கல்கியில் 83 ஆம் பக்கத்தில்
என் பெயரும் இடம்பெற்றுள்ளது]

தமிழ் உதயம் said...

குழந்தைகளின் கனவு அழகு... வண்ணத்துப்பூச்சிகளும் அழகு... இரண்டையும் இணைத்த கவிதை கொள்ளை அழகு.

MANO நாஞ்சில் மனோ said...

//தயங்கித் தயங்கி
வெளிப்படுத்தினாள் யாழினி
வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
தன் ஆசையென//


கலக்குங்க கலக்குங்க....

Mahan.Thamesh said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

அழகான கவிதை..

பாச மலர் / Paasa Malar said...

சிறகுகள் விரித்துப் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்...வண்ணமயமான கனவுகள் நனவாகட்டும்..

Kanchana Radhakrishnan said...

அழகிய கவிதை.

asiya omar said...

வித்தியாசமான கவிதை,கல்கி கவிதை கஃபே ,இப்ப தான் கேள்விபடுறேன்..வாழ்த்துக்கள்.

S.Menaga said...

அழகான கவிதை!!

Chitra said...

சூப்பர்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

அன்புடன் அருணா said...

ஆஹா!பூங்கொத்து!

அமுதா said...

மிக அழகு... வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது மனம் கவிதை படித்ததும்....

ஹேமா said...

வண்ணக்கனவுகளோடு சின்னக்குழந்தைகள்.அழகான கற்பனை.வாழ்த்துகள் அக்கா !

ஆ.ஞானசேகரன் said...

//தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன//

அழகு
வாழ்த்துகளுடன்
ஆ.ஞானசேகரன்

சசிகுமார் said...

அருமை

திவா said...

good!....great!

ஈரோடு கதிர் said...

வாவ்!

Shakthiprabha said...

மிக அருமை. வாழ்த்துக்கள்!!

ஆயிஷா அபுல். said...

அருமை.வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

//தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன.
***//ஆஹா என்ன ஒரு அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி

ஸ்ரீராம். said...

முதலிலேயே படிச்சுட்டேனே....! பாராட்டுகள். கல்கி வந்தவுடன் தெரிந்த பெயர்கள் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதல் வேலை.

அமைதி அப்பா said...

எழிலரசி,ஆனந்தி, மல்லிகா, சந்திரா,யாழினி....
அழகான தமிழ்ப் பெயர்களை வைத்து அசத்துகிறீர்கள்.

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

குமரி எஸ். நீலகண்டன் said...
//வண்ணக்கனவுகளோடு இறக்கைகள் துளிர்க்க வளமான எண்ணங்களோடு சிறகடிக்கிறது அழகான வண்ணத்து பூச்சி... நல்ல அழகானக் கவிதை//

மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

ராமலக்ஷ்மி said...

ராஜ ராஜ ராஜன் said...
//ரொம்ப அழகா இருக்குங்க...//

மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

செல்வராஜ் ஜெகதீசன் said...
//நல்லா இருக்குங்க.//

மிக்க நன்றி செல்வராஜ் ஜெகதீசன்:)!

ராமலக்ஷ்மி said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
//நல்ல அருமையான அழகிய கவிதை.
கல்கியிலேயே படித்தேன். பெயர் ராமலக்ஷ்மி என்று இருந்ததால் அது தங்களுடையது [முத்துச்சரம் ராமலக்ஷ்மி தான்] என்பதை கவனிக்கத்தவறிவிட்டேன்.

மனமார்ந்த பாராட்டுக்கள், மேடம்.

வாழ்த்துக்கள். Congratulations.

[அதே கல்கியில் 83 ஆம் பக்கத்தில்
என் பெயரும் இடம்பெற்றுள்ளது]//

மிக்க நன்றி. தங்கள் பெயரை பத்திரிகையிலும் பார்த்தேன். அதுகுறித்த தங்கள் பதிவினையும் வாசித்தேன். வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

தமிழ் உதயம் said...
//குழந்தைகளின் கனவு அழகு... வண்ணத்துப்பூச்சிகளும் அழகு... இரண்டையும் இணைத்த கவிதை கொள்ளை அழகு.//

மிக்க நன்றி தமிழ் உதயம்.

ராமலக்ஷ்மி said...

MANO நாஞ்சில் மனோ said...
***//தயங்கித் தயங்கி
வெளிப்படுத்தினாள் யாழினி
வண்ணத்துப்பூச்சியாக வேண்டுமென்பதே
தன் ஆசையென//


கலக்குங்க கலக்குங்க....//

நன்றி நாஞ்சில் மனோ.

ராமலக்ஷ்மி said...

Mahan.Thamesh said...
//அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

ராமலக்ஷ்மி said...

அமைதிச்சாரல் said...
//அழகான கவிதை..//

நன்றி சாந்தி:)!

ராமலக்ஷ்மி said...

பாச மலர் / Paasa Malar said...
//சிறகுகள் விரித்துப் பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும்...வண்ணமயமான கனவுகள் நனவாகட்டும்..//

ஆகட்டும் அவ்வண்ணமே:)! நன்றி மலர்.

ராமலக்ஷ்மி said...

April 21, 2011 2:50 PM
Kanchana Radhakrishnan said...
//அழகிய கவிதை.//

நன்றி மேடம்.

ராமலக்ஷ்மி said...

asiya omar said...
//வித்தியாசமான கவிதை,கல்கி கவிதை கஃபே ,இப்ப தான் கேள்விபடுறேன்..வாழ்த்துக்கள்.//

நன்றி ஆசியா.

ராமலக்ஷ்மி said...

S.Menaga said...
//அழகான கவிதை!!//

நன்றி மேனகா.

ராமலக்ஷ்மி said...

Chitra said...
//சூப்பர்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!//

நன்றி சித்ரா.

ராமலக்ஷ்மி said...

அன்புடன் அருணா said...
//ஆஹா!பூங்கொத்து!//

நன்றி அருணா!

ராமலக்ஷ்மி said...

அமுதா said...
//மிக அழகு... வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது மனம் கவிதை படித்ததும்....//

நன்றி அமுதா:)!

ராமலக்ஷ்மி said...

ஹேமா said...
//வண்ணக்கனவுகளோடு சின்னக்குழந்தைகள்.அழகான கற்பனை.வாழ்த்துகள் அக்கா !//

நன்றி ஹேமா.

ராமலக்ஷ்மி said...

ஆ.ஞானசேகரன் said...
**//தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன//

அழகு//

மிக்க நன்றிங்க.

ராமலக்ஷ்மி said...

சசிகுமார் said...
//அருமை//

நன்றி சசிகுமார்.

ராமலக்ஷ்மி said...

திவா said...
//good!....great!//

மிக்க நன்றி திவா சார்!

ராமலக்ஷ்மி said...

ஈரோடு கதிர் said...
//வாவ்!//

நன்றி:)!

ராமலக்ஷ்மி said...

Shakthiprabha said...
//மிக அருமை. வாழ்த்துக்கள்!!//

நன்றி ஷக்தி:)!

ராமலக்ஷ்மி said...

ஆயிஷா அபுல். said...
//அருமை.வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஆயிஷா.

ராமலக்ஷ்மி said...

ஸாதிகா said...
***//தட்டிக் கொண்டிருந்த கைகள் யாவும்
மெல்ல இறக்கைகளாய்
மாறிக்கொண்டிருந்தன.
***//ஆஹா என்ன ஒரு அற்புதமான கவி வரிகள்.வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி//

நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...

ஸ்ரீராம். said...
//முதலிலேயே படிச்சுட்டேனே....! பாராட்டுகள். கல்கி வந்தவுடன் தெரிந்த பெயர்கள் இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதல் வேலை.//

பல சமயம் உங்கள் தகவல் மூலமே (தினமணி கதிர் உட்பட) முதலில் அறிய வருகிறேன்:)!நன்றி ஸ்ரீராம்!

ராமலக்ஷ்மி said...

அமைதி அப்பா said...
//எழிலரசி,ஆனந்தி, மல்லிகா, சந்திரா,யாழினி....
அழகான தமிழ்ப் பெயர்களை வைத்து அசத்துகிறீர்கள்.

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.//

மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா:)!

ராமலக்ஷ்மி said...

தமிழ்மணம் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி:)!

Rathnavel said...

அருமை.
பறக்க வேண்டும் என்று ஆசை.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin