‘பண்டிகை நேரம்
பதினஞ்சு ரூவாய்க்குப்
பைசா குறையாது மொழம்'
காசில் கறாராய் இருந்தாலும்
களை கட்டியிருந்தது
அவள் கடையிலே வியாபாரம்.
வந்து நின்ற பேருந்திலிருந்து
இறங்குகிறாள் ஒரு இளந்தாய்
கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.
எண்ணெய் வைத்து வாரிமுடித்த
பூச்சூடாப் பின்னல் நுனிகள்
பச்சை மஞ்சள் ஊதா ரிப்பன்களில்.
கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக்
குழந்தைகளை இழுத்துக் கொண்டு
வேகமாகக் கடந்தவளைக்
கூவி அழைத்துக்
கொடுக்கிறாள் பூக்காரம்மா
‘அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.
*** *** ***
படம்: இணையத்திலிருந்து...
20 மார்ச் 2011 நவீனவிருட்சம் இணைய தளத்தில்.., நன்றி நவீன விருட்சம்!
||அம்மாவா நினைச்சு
பதிலளிநீக்குசும்மா புடி தாயீ||
கவிதையும் மணக்குது!!!
//அம்மாவா நினைச்சு
பதிலளிநீக்குசும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.//
அருமை......
கூடைமல்லி பார்த்ததுமே தவிப்பாகிக்
பதிலளிநீக்குகுழந்தைகளை இழுத்துக் கொண்டு
வேகமாகக் கடந்தவளைக்
கூவி அழைத்துக்
கொடுக்கிறாள் பூக்காரம்மா
இல்லாமையும் இயலாமையும் சேர்ந்து ,
பூ வாங்கி பாசம் காட்ட இயலாத கொடுமை அறியாதவளா அந்த பூக்காரம்மா...
வேகமாய்க் கடந்ததன் காரணம் புரியாதவளா அந்த பூக்காரம்மா..
அருமையாக உணர்த்தி விட்டீர்கள்
//‘அம்மாவா நினைச்சு
பதிலளிநீக்குசும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.//
பூக்கார அம்மாவின் தாயுள்ளம் கூறும் கவிதை அருமை ராமலக்ஷ்மி.
நெகிழ்ச்சி
பதிலளிநீக்குநல்லாருக்கு சகா!
பதிலளிநீக்குபூக்களை போல் அழகாக - கவிதைகளும், உணர்வுகளும்...
பதிலளிநீக்குஅழகும் மணமும்...பூக்களில் மட்டுமல்ல..கவிதையிலும்!
பதிலளிநீக்கு‘அம்மாவா நினைச்சு
பதிலளிநீக்குசும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.
.....நெகிழ வைத்தது.
கறாராக பூ விற்றாலும் பூப் போல மனசுதான் விற்கும் பெண்மணிக்கு. மனிதம் மனதை நனைக்கிறது.
பதிலளிநீக்குஒரு பக்கக் கதை என்று எழுதுகிறார்களே.ஒரு கவிதையிலே அழகான கதை சொல்லி விட்டீர்கள். நாலு முழம் சருக்கிய அந்த பூக்காரி எத்தனை ஜாண் ஏறவேண்டும்.
பதிலளிநீக்குசகாதேவன்
இறுக்கமான இடத்தில்தான் சமயத்துக்கு இரக்கமும் இருக்கும் !
பதிலளிநீக்குஅருமை.ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குபடத்திலிருக்கும் பூ மாதாவும் அருமை.
பூவைக் கொடுக்கும் மாதாவும் அருமை. மூன்று பெண்களைப் பெற்ற ஏழை மாதாவும் அருமை.
மொத்தத்தில் இந்த அன்புக் கவிதைக்கு கோடி நமஸ்காரங்கள்.
அன்பின் அழகே அழகு..அதை விட அழகு இந்த வார்ப்பு...ராமலக்ஷ்மி....
பதிலளிநீக்குஇல்லாமை இருந்தாலும் கொடுத்து மகிழ்வது ஏழைகள் மட்டுமே அக்கா.
பதிலளிநீக்குஅழகான கவிதை.
//கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.//
:)))))
மிகவும் அழகான கவிதை.
பதிலளிநீக்குஆஹா...அருமை ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்கு//‘அம்மாவா நினைச்சு
பதிலளிநீக்குசும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.//அருமை......
தாய்வாசனை..
பதிலளிநீக்குபூக்காரம்மாவின் அன்புள்ளம் நம்மையும் இழுக்கிறது.
பதிலளிநீக்குகவிதை ரொம்ப வாசமா இருக்கு...
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குஅன்பின் ராமலக்ஷ்மி - அருமையான சிந்தனை - நல்லதொரு கவிதை - தாயுள்ளம் கொண்ட பூக்கார அம்மா - ஏழைத் தாயின் நிலை அறிந்து - பூ கொடுக்கும் இந்தத்தாயின் செயல் நெஞ்சம் நெகிழ வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஆமா காசுல கறார் எப்ப ..அன்புல கறார் எப்பன்னு தெரிஞ்சு வச்ச எளிய மக்கள்.
பதிலளிநீக்குநல்லாருக்கு ராமலக்ஷ்மி
மலரைப் போலவே அவள் மனமும் வாசத்துடன்
பதிலளிநீக்குநல்ல கவிதை!
பதிலளிநீக்குநல்ல கவிதை!
பதிலளிநீக்குஒரு நாள் பஸ்ஸில் ஒரு பூக்காரி மும்முரமாக பூத்தொடுத்துக்கொண்டு இருந்தார். நான் பேச்சுக்கொடுத்தேன். இயல்பாக, அவர் சொன்ன போது தான், அவர் போன்ற சில்லரை வியாபாரிகளின் கடின உழைப்பு எனக்கு புரிய வந்தது. இந்த பொருள் செறிந்த கவிதை, அந்த நிகழ்வை நினைவுட்டுகிறது.
பதிலளிநீக்குகண்ணீரே வந்தது ரா.ல. ஆனால் இதை நான் அனுபவிச்சிருக்கேன். இதிலுள்ள உண்மை நெஞ்சை நிறைக்கும்.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குKathir said...
பதிலளிநீக்கு***||அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ||
கவிதையும் மணக்குது!!!/***
மிக்க நன்றி கதிர்.
MANO நாஞ்சில் மனோ said...
பதிலளிநீக்கு***//அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.//
அருமை....../***
நன்றி மனோ.
goma said...
பதிலளிநீக்கு//இல்லாமையும் இயலாமையும் சேர்ந்து ,
பூ வாங்கி பாசம் காட்ட இயலாத கொடுமை அறியாதவளா அந்த பூக்காரம்மா...
வேகமாய்க் கடந்ததன் காரணம் புரியாதவளா அந்த பூக்காரம்மா..
அருமையாக உணர்த்தி விட்டீர்கள்//
மிக்க நன்றி கோமா.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு***//‘அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.//
பூக்கார அம்மாவின் தாயுள்ளம் கூறும் கவிதை அருமை ராமலக்ஷ்மி./***
நன்றி கோமதிம்மா.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//நெகிழ்ச்சி//
நன்றி மோகன் குமார்.
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//நல்லாருக்கு சகா!//
மிக்க நன்றி பா ரா.
தமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//பூக்களை போல் அழகாக - கவிதைகளும், உணர்வுகளும்...//
நன்றி தமிழ் உதயம்.
meenamuthu said...
பதிலளிநீக்கு//அழகும் மணமும்...பூக்களில் மட்டுமல்ல..கவிதையிலும்!//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மீனா:)!
Chitra said...
பதிலளிநீக்கு//.....நெகிழ வைத்தது.//
நன்றி சித்ரா.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//கறாராக பூ விற்றாலும் பூப் போல மனசுதான் விற்கும் பெண்மணிக்கு. மனிதம் மனதை நனைக்கிறது.//
மிக்க நன்றி ஸ்ரீராம்.
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//ஒரு பக்கக் கதை என்று எழுதுகிறார்களே.ஒரு கவிதையிலே அழகான கதை சொல்லி விட்டீர்கள். நாலு முழம் சருக்கிய அந்த பூக்காரி எத்தனை ஜாண் ஏறவேண்டும்.//
அவள் காட்டிய கனிவுக்கு இறைவன் சீக்கிரமே ஏற்றி விட்டிட பிரார்த்திக்கலாம் நாம். கருத்துக்கு மிக்க நன்றி.
ஹேமா said...
பதிலளிநீக்கு//இறுக்கமான இடத்தில்தான் சமயத்துக்கு இரக்கமும் இருக்கும் !//
மிகச் சரி. நன்றி ஹேமா.
மதுரை சரவணன் said...
பதிலளிநீக்கு//nice...//
மிக்க நன்றி சரவணன்.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//அருமை.ராமலக்ஷ்மி.
படத்திலிருக்கும் பூ மாதாவும் அருமை.
பூவைக் கொடுக்கும் மாதாவும் அருமை. மூன்று பெண்களைப் பெற்ற ஏழை மாதாவும் அருமை.
மொத்தத்தில் இந்த அன்புக் கவிதைக்கு கோடி நமஸ்காரங்கள்.//
மிக்க நன்றி வல்லிம்மா.
பாச மலர் / Paasa Malar said...
பதிலளிநீக்கு//அன்பின் அழகே அழகு..அதை விட அழகு இந்த வார்ப்பு...ராமலக்ஷ்மி....//
அன்பான கருத்துக்கு நன்றி மலர்.
சுசி said...
பதிலளிநீக்கு//இல்லாமை இருந்தாலும் கொடுத்து மகிழ்வது ஏழைகள் மட்டுமே அக்கா. //
ஆம் சுசி.
//அழகான கவிதை.
கன்னப் பொட்டில் திருஷ்டி கழிந்த
மூன்று குட்டித் தேவதைகளுடன்.//
:)))))//
:))!
Lakshmi said...
பதிலளிநீக்கு//மிகவும் அழகான கவிதை.//
மிக்க நன்றிங்க.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//ஆஹா...அருமை ராமலக்ஷ்மி!//
நன்றி அருணா.
போளூர் தயாநிதி said...
பதிலளிநீக்கு***//‘அம்மாவா நினைச்சு
சும்மா புடி தாயீ’ என்று
நாலு முழம் அளந்து
மணக்கும் ரோஜா நாலு சேர்த்து.//அருமை....../***
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தயாநிதி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//தாய்வாசனை..//
அருமையான கருத்து. நன்றி சாந்தி.
மாதேவி said...
பதிலளிநீக்கு//பூக்காரம்மாவின் அன்புள்ளம் நம்மையும் இழுக்கிறது.//
நன்றி மாதேவி.
Sriakila said...
பதிலளிநீக்கு//கவிதை ரொம்ப வாசமா இருக்கு...//
நன்றி ஸ்ரீஅகிலா.
Kanchana Radhakrishnan said...
பதிலளிநீக்கு//அருமை.//
நன்றி மேடம்.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலக்ஷ்மி - அருமையான சிந்தனை - நல்லதொரு கவிதை - தாயுள்ளம் கொண்ட பூக்கார அம்மா - ஏழைத் தாயின் நிலை அறிந்து - பூ கொடுக்கும் இந்தத்தாயின் செயல் நெஞ்சம் நெகிழ வைக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா சார்.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//ஆமா காசுல கறார் எப்ப ..அன்புல கறார் எப்பன்னு தெரிஞ்சு வச்ச எளிய மக்கள்.
நல்லாருக்கு ராமலக்ஷ்மி//
ஆம் முத்துலெட்சுமி:)! மிக்க நன்றி.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//மலரைப் போலவே அவள் மனமும் வாசத்துடன்//
மிக்க நன்றி நீலகண்டன்.
Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை!//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவிகுமார்.
அமைதி அப்பா said...
பதிலளிநீக்கு//நல்ல கவிதை!//
நன்றி அமைதி அப்பா.
Innamburan said...
பதிலளிநீக்கு//ஒரு நாள் பஸ்ஸில் ஒரு பூக்காரி மும்முரமாக பூத்தொடுத்துக்கொண்டு இருந்தார். நான் பேச்சுக்கொடுத்தேன். இயல்பாக, அவர் சொன்ன போது தான், அவர் போன்ற சில்லரை வியாபாரிகளின் கடின உழைப்பு எனக்கு புரிய வந்தது. இந்த பொருள் செறிந்த கவிதை, அந்த நிகழ்வை நினைவுட்டுகிறது.//
ஆம், அவர்களது அன்றாட வாழ்க்கை சிரமங்கள் நிறைந்தது. அத்தனைக்கு இடையிலும் சகமனிதருக்குக் காட்டும் பரிவு வியக்க வைப்பதாக இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
geethasmbsvm6 said...
பதிலளிநீக்கு//கண்ணீரே வந்தது ரா.ல. ஆனால் இதை நான் அனுபவிச்சிருக்கேன். இதிலுள்ள உண்மை நெஞ்சை நிறைக்கும்.//
இயலாமையில் ஒரு தாயுள்ளம், புரிந்து பரிவு காட்டும் ஒரு தாயுள்ளம். இவர்களை உணர்ந்த ஒரு தாயுள்ளமாக தங்கள் கருத்து.
//தொடர//
நன்றி மேடம்.
தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி.
பதிலளிநீக்கு