Monday, April 4, 2011

மஞ்சளில் இத்தனை விதங்களா..மலர்களா../‘தனித்திரு விழித்திரு’ அதீதத்தில்..-படங்கள்

அடர் மஞ்சள், வெளிர் மஞ்சள், மனம் வருடும் இளம் மஞ்சள், இதயத்தை அள்ளும் மஞ்சள், பளிச் மஞ்சள், பச்சிலைகளுக்கு நடுவே கொஞ்சும் மஞ்சள், என்னைப் பார் என் அழகைப் பார் எனக் கெஞ்சும் மஞ்சள் என விதவிதமாய் இயற்கை குழைத்த வண்ணங்கள்.

இந்த வியப்பை இன்னும் அதிகரிப்பதாக உள்ளன இயற்கை படைத்த மலர்கள். மஞ்சளிலேதான் எத்தனை வகை மலர்கள்!!! என் காமிராக்கள் கவர்ந்த சில வகைகள் இங்கே..

1. ரோஜா மலரில்.. ராஜ வண்ணமாய்2. குவிந்த மலரில் குளிர்ச்சியாய்..


3. இதயம் அள்ளும் இளம் வண்ணத்தில்..


4. தேன் குவளை


5. தங்க மலர்

ஒன்றரை அங்குலத்தில்..

6. பூப்பந்துகள்


ஏழு. அணிவகுப்பு
லைசன்சுக்கு எட்டு போடுவாங்க. லால்பாகில் கண்காட்சிக்கு மலர்களால் ஏழு!

8. பகலவன் தணலெரிக்கப் புடமாகும் பொன் மஞ்சள்
கரையோரப் பெருமரமொன்றில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த இம்மலர் எவ்வகையோ தெரியாது. [மற்றதெல்லாம் மட்டும் தெரியுதா எனக் கேட்கப் படாது:)]. பகலவனின் கதிரில் கனன்று கொண்டிருந்த ஒரு கொத்தை படகிலே கடக்கும் போது பிடித்தது.

9. தேன் மலர்


10. மூவண்ணத்தில் முன்னணி வகித்து..
இம்மலரின் மொட்டு விரிய ஆரம்பித்த ஓரிரு மணிகளில் முழுதாக மலர்ந்து சிரித்த காட்சி ஒவ்வொரு பருவத்திலும்.., வெவ்வேறு கோணங்களிலும் இங்கே:மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.

லைப்புக்குப் பொருந்தி வருவதால் கீழ் வரும் இரண்டு மீள்படங்களாக:

11.நிமிர்ந்து நோக்கும் செவ்வந்தி


12.நேர்கொண்டு பார்க்கும் செம்பருத்தி

***

பூப்பூவா பூத்திருக்கு பதிவினிலே..
பனிரெண்டு மஞ்சப்பூ!
மனசிலே பதிஞ்சது எந்தப் பூ:)?

***

பகிர்வு:1

நிறத்தை முன்னிறுத்தி இன்று பதிய இவ்விடுகை தயாராக இருக்க, காலையில் வெளியானது PiT ஏப்ரல் மாதப் போட்டிக்கான தலைப்பு: சிகப்பு. காத்திருக்கிறது உங்களுக்கு அவ்வண்ணத்திலும் இம்மாதம் ஒரு அணிவகுப்பு:)!

PiT அறிவிப்பும், அசத்தலான மாதிரிப் படங்களும் இங்கே. சிகப்பு வண்ணத்தில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். (செவ்)வானமே எல்லை:)! இறுதித் தேதி இருபது.

பகிர்வு:2

தனித்திரு விழித்திரு
நான் எடுத்த இப்படம் 1 ஏப்ரல் 2011, அதீதம் இதழின் ஃபோட்டோகிராஃபி பக்கத்தில் வெளியாகியுள்ளது. நன்றி அதீதம்!

68 comments:

 1. மிரட்டலாக இருக்கிறது படங்கள்.

  ReplyDelete
 2. அழகிய புகைப் படங்கள்...பத்தாவது திடுக்கிடவைக்கும் கலர் காம்பினேஷன்..! பனிரெண்டாவது எளிமையான ஆனால் அழகான செம்பருத்தி, இரண்டாவது வண்டமர்ந்திருக்கும் மலர், ரோஜா மலரின் ராஜா வண்ணம்..(தலைப்பும் பிரமாதம்)
  தனித்திரு விழித்திரு மிக அருமை.

  ReplyDelete
 3. அருமை அம்மா.

  ReplyDelete
 4. தங்க மலர் என்பதே அதன் பேரா? அகிலன் எழுதிய பொன்மலர்னு ஒரு கதை ஞாபகம் வருதுங்க. அதென்னவோ வண்டு உள்ள அந்தப்படம் மட்டும் பார்க்க கொஞ்சம் பயமா இருக்கு. வண்டுனாலே எனக்கு எப்போவுமே கொஞ்சம் பயம். :)

  ReplyDelete
 5. all the flowers lovely and awesome pictures.

  ReplyDelete
 6. யப்பாடி! அசத்தல்!

  எல்லாமே மனசில் பதிஞ்சது. குறிப்பா தங்க மலர் :) அதீதத்திற்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 7. உங்கள் கை(கேமரா) வண்ணத்தில் மஞ்சள் மகிமை.

  ReplyDelete
 8. மஞ்சள் ’எல்லோ’ படங்களும் அசத்தல்
  ’எல்லோ’ரும் அசந்து போனோம்,

  ReplyDelete
 9. அனைத்தும் அசத்தல்ஸ்!

  ReplyDelete
 10. //பூப்பூவா பூத்திருக்கு பதிவினிலே..
  பனிரெண்டு மஞ்சப்பூ!
  மனசிலே பதிஞ்சது எந்தப் பூ:)?//

  மனசில் எல்லா பூவும் பதிஞ்சது, ஆனால் இயற்கையின் ஆற்றல் வியப்பை தந்தது ”குவிந்தமலரில் குளிர்ச்சியாய்”

  ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 11. உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இது போன்ற படங்கள் மிக அழகு

  ReplyDelete
 12. மனதைக் கொள்ளை கொண்டன மஞ்சள் மலர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. ஆஹா அருமையான மஞ்சள் பூக்கள் பார்க்கவே நல்லக் இருக்கு

  ReplyDelete
 14. என்ன மஞ்சகலர் கட்சில செர்ந்திட்டீங்களோன்னு நினைச்சிட்டேன் ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 15. மலர்கள் மனதை மணக்க செய்கிறது அழாகா இருக்கு. அருமையா கிளிக் பண்ணி இருக்கீங்க சூப்பர்....

  ReplyDelete
 16. அக்கா.. இப்போதும் குண்டுக் குண்டா செவந்திப் பூக்கள் அள்ளிப் போகுது :)

  அம்மாவுக்கு கடைசியில இருக்கிற செவ்வரத்தை பிடிச்சதாம் :))

  ReplyDelete
 17. மஞ்சள் செம்பருத்தி,செவ்வந்தி ரொம்ப அழகு !

  ReplyDelete
 18. சூப்பர்..
  மஞ்சள் கலரில் என்கிட்ட ஒரு தாவணி இருந்தது கண்ணைப்பறிக்கும் பட்டுப்பாவடையும் ..
  போட்டுட்டுபோனா மாரியாத்தான்னு எல்லாரும் அலறுவாங்க அப்படி பதிவைப்பார்த்ததும் எனக்கு :))

  நிஜம்மாவே எல்லாரையும் மிரட்டுதுப்பா.

  ReplyDelete
 19. அழகிய புகைப்படங்கள்... பார்க்கும்போதே மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.

  ReplyDelete
 20. எல்லா படங்களும் அசத்தல்.

  ReplyDelete
 21. அஹா!!
  கண்ணுக்கு குளிர்ச்சியாய்.
  அம்ம ஊர் பூவரசம்பூ மிஸ்ஸிங்.

  ReplyDelete
 22. பூந்தோட்டத்துல நுழைஞ்ச ஃபீலிங்கு :-))))

  ReplyDelete
 23. படங்கள் மிக அழகு ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 24. :-))
  nothing elevates mood like pictures of nature!
  முதல் படம் முதல்லே இயற்கையாவே அமைஞ்சிருக்கு!

  ReplyDelete
 25. ஓ!!
  மஞ்சளில் மங்கலமாய் வண்ணம் தீட்டிய மலர்களுக்கும் உங்களுக்கும் அதீத வாழ்த்துகள்:)
  அழகு அள்ளிக் கொண்டு போகிறதுப்பா.மனம் நிறைகிறது. மகிழ்ச்சி தருகிறது.
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வரவேற்போ!!!

  ReplyDelete
 26. மஞ்சள் அழகிகள் எல்லோரும் சிறப்பா இருக்காங்க....

  ReplyDelete
 27. Truth said...
  //மிரட்டலாக இருக்கிறது படங்கள்.//

  நீண்ட இடைவெளிக்குப் பிறகான வருகைக்கு நன்றி கிரண்:)!

  ReplyDelete
 28. Chitra said...
  //lovely photos!//

  நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 29. ஸ்ரீராம். said...
  //அழகிய புகைப் படங்கள்...பத்தாவது திடுக்கிடவைக்கும் கலர் காம்பினேஷன்..!//

  உங்கள் பின்னூட்டத்துக்குப் பிறகு அதனடியில் என் பழைய பதிவொன்றின் லிங்க் கொடுத்திருக்கிறேன். நேரமிருப்பின் பாருங்கள்:)!


  //பனிரெண்டாவது எளிமையான ஆனால் அழகான செம்பருத்தி, இரண்டாவது வண்டமர்ந்திருக்கும் மலர், ரோஜா மலரின் ராஜா வண்ணம்..(தலைப்பும் பிரமாதம்)
  தனித்திரு விழித்திரு மிக அருமை.//

  ரசனையான கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 30. Rathnavel said...
  //அருமை அம்மா.//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 31. வருண் said...
  //தங்க மலர் என்பதே அதன் பேரா?//

  சரியாப் போச்சு:)! நான் வைத்த பெயரே.

  //அகிலன் எழுதிய பொன்மலர்னு ஒரு கதை ஞாபகம் வருதுங்க. அதென்னவோ வண்டு உள்ள அந்தப்படம் மட்டும் பார்க்க கொஞ்சம் பயமா இருக்கு. வண்டுனாலே எனக்கு எப்போவுமே கொஞ்சம் பயம். :)//

  நான் வாசித்ததில்லை. கருத்துக்கு நன்றி வருண்:)!

  ReplyDelete
 32. Vijis Kitchenan and Creations said...
  //all the flowers lovely and awesome pictures.//

  நன்றி விஜி:)!

  ReplyDelete
 33. கவிநயா said...
  //யப்பாடி! அசத்தல்!

  எல்லாமே மனசில் பதிஞ்சது. குறிப்பா தங்க மலர் :) அதீதத்திற்கும் வாழ்த்துகள்!//

  தங்கமலர் பிடித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கும் நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 34. தமிழ் உதயம் said...
  //உங்கள் கை(கேமரா) வண்ணத்தில் மஞ்சள் மகிமை.//

  நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 35. goma said...
  //மஞ்சள் ’எல்லோ’ படங்களும் அசத்தல்
  ’எல்லோ’ரும் அசந்து போனோம்,//

  மிக்க நன்றி:))!

  ReplyDelete
 36. அன்புடன் அருணா said...
  //அனைத்தும் அசத்தல்ஸ்!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 37. மோகன் குமார் said...
  //கலக்குங்க//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 38. கோமதி அரசு said...
  ***//பூப்பூவா பூத்திருக்கு பதிவினிலே..
  பனிரெண்டு மஞ்சப்பூ!
  மனசிலே பதிஞ்சது எந்தப் பூ:)?//

  மனசில் எல்லா பூவும் பதிஞ்சது, ஆனால் இயற்கையின் ஆற்றல் வியப்பை தந்தது ”குவிந்தமலரில் குளிர்ச்சியாய்”

  ராமலக்ஷ்மி.//***

  அற்புதமான மலர் அது. மிதமான வண்ணமும். நன்றி கோமதிம்மா:)!

  ReplyDelete
 39. சசிகுமார் said...
  //உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இது போன்ற படங்கள் மிக அழகு//

  வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு இடங்களில் எடுத்தவையே:)! நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 40. அமுதா said...
  //மனதைக் கொள்ளை கொண்டன மஞ்சள் மலர்கள். பாராட்டுக்கள்.//

  நன்றி அமுதா.

  ReplyDelete
 41. Jaleela Kamal said...
  //ஆஹா அருமையான மஞ்சள் பூக்கள் பார்க்கவே நல்லக் இருக்கு//

  நன்றி ஜலீலா.

  ReplyDelete
 42. MANO நாஞ்சில் மனோ said...
  //மலர்கள் மனதை மணக்க செய்கிறது அழாகா இருக்கு. அருமையா கிளிக் பண்ணி இருக்கீங்க சூப்பர்....//

  எந்தக் கட்சியிலும் சேரவில்லை:)! நன்றி மனோ.

  ReplyDelete
 43. சுசி said...
  //அக்கா.. இப்போதும் குண்டுக் குண்டா செவந்திப் பூக்கள் அள்ளிப் போகுது :)

  அம்மாவுக்கு கடைசியில இருக்கிற செவ்வரத்தை பிடிச்சதாம் :))//

  மிக்க மகிழ்ச்சி சுசி. அம்மாவுக்கு என் வணக்கங்களைச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 44. ஹேமா said...
  //மஞ்சள் செம்பருத்தி,செவ்வந்தி ரொம்ப அழகு !//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஹேமா.

  ReplyDelete
 45. "உழவன்" "Uzhavan" said...
  //lovely pics :-)//

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 46. பா.ராஜாராம் said...
  //fine!//

  நன்றி பா ரா.

  ReplyDelete
 47. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //சூப்பர்..
  மஞ்சள் கலரில் என்கிட்ட ஒரு தாவணி இருந்தது கண்ணைப்பறிக்கும் பட்டுப்பாவடையும் ..
  போட்டுட்டுபோனா மாரியாத்தான்னு எல்லாரும் அலறுவாங்க அப்படி பதிவைப்பார்த்ததும் எனக்கு :))//

  :)))!

  //நிஜம்மாவே எல்லாரையும் மிரட்டுதுப்பா.//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 48. Priya said...
  //அழகிய புகைப்படங்கள்... பார்க்கும்போதே மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.//

  வாங்க பிரியா:)! நன்றி.

  ReplyDelete
 49. Kanchana Radhakrishnan said...
  //எல்லா படங்களும் அசத்தல்.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 50. அம்பிகா said...
  //அஹா!!
  கண்ணுக்கு குளிர்ச்சியாய்.
  அம்ம ஊர் பூவரசம்பூ மிஸ்ஸிங்.//

  ஆமாங்க. ஊருக்குப் போகையில் கண்ணில் பட்டால் எடுத்து இதோடு சேர்த்து விடலாம்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...
  //பூந்தோட்டத்துல நுழைஞ்ச ஃபீலிங்கு :-))))//

  நன்றி சாரல்:)!

  ReplyDelete
 52. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //படங்கள் மிக அழகு ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 53. திகழ் said...
  //கொள்ளை அழகு//

  மகிழ்ச்சியும் நன்றியும் திகழ்.

  ReplyDelete
 54. திவா said...
  //:-))
  nothing elevates mood like pictures of nature!
  முதல் படம் முதல்லே இயற்கையாவே அமைஞ்சிருக்கு!//

  வாங்க:)! சரியாச் சொன்னீங்க. மிக்க நன்றி.

  ReplyDelete
 55. வல்லிசிம்ஹன் said...
  //ஓ!!
  மஞ்சளில் மங்கலமாய் வண்ணம் தீட்டிய மலர்களுக்கும் உங்களுக்கும் அதீத வாழ்த்துகள்:)
  அழகு அள்ளிக் கொண்டு போகிறதுப்பா.மனம் நிறைகிறது. மகிழ்ச்சி தருகிறது.
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வரவேற்போ!!!//

  மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா. வரவேற்பாகவே கொள்ளலாம்:)!

  ReplyDelete
 56. Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...
  //மஞ்சள் அழகிகள் எல்லோரும் சிறப்பா இருக்காங்க....//

  வாங்க மைதிலி:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 57. தமிழ் மணத்திலும், இன்ட்லியிலும் வாக்களித்த அனைவருக்கு என் நன்றி.

  ReplyDelete
 58. சிறுவயதில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செவ்வந்தி செடி வைத்து, அது பூக்கும் நாளில் பார்த்தால் மனதில் ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள், அந்த நினைவுகளை தூண்டி விட்டது உங்கள் மஞ்சள் பூக்கள்.

  ReplyDelete
 59. ராமலக்ஷ்மி.. இந்த ஒவ்வொரு மலரோடும் மனம் ததும்பும் கவிதைகள் பலவும் பூத்திருக்கின்றன. கலை ஆக்கத்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 60. அமைதி அப்பா said...
  //சிறுவயதில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் செவ்வந்தி செடி வைத்து, அது பூக்கும் நாளில் பார்த்தால் மனதில் ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள், அந்த நினைவுகளை தூண்டி விட்டது உங்கள் மஞ்சள் பூக்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

  ReplyDelete
 61. குமரி எஸ். நீலகண்டன் said...
  //ராமலக்ஷ்மி.. இந்த ஒவ்வொரு மலரோடும் மனம் ததும்பும் கவிதைகள் பலவும் பூத்திருக்கின்றன. கலை ஆக்கத்திற்கு நன்றிகள்.//

  மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 62. இன்று இரவு ஒரே நேர்கோட்டில் சூரியன்,பூமி,சனி கிரகம்! இயற்கை சீற்றம் நிகழுமா?

  இந்த செய்தியைப் இணையத்தில் படித்ததும் என்னுடைய பன்னிரெண்டு வயது பையன் கூறினான் ' அப்பா! நாளைக்குப் பார்! சனிக் கிரகத்தின் அழகழகான படங்களை நாளை முத்துச்சரத்தில் பார்க்கலாமென்று. ராமலக்ஷ்மி பாருங்கள். உங்கள் மீது அவனுக்கு எவ்வளவு நம்பிக்கை என்று.

  ReplyDelete
 63. @ எஸ். நீலகண்டன்,

  //எவ்வளவு நம்பிக்கை//

  எதிர்பார்ப்பை அதிகமாய் வளர்த்து விட்டேன் போலுள்ளதே:)? இருப்பினும் என் படங்களை மகனுக்கு காட்டி வருகிறீர்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin