Sunday, January 30, 2011

அரசுக்கு ஓர் கடிதம்


இலவசங்களால் வலைபின்னி
வாக்குறுதிகளால் தூண்டிலிட்டு
தேர்தல் தோணியிலே
வெற்றிமீன் பிடிப்பவருக்கும்

கூட்டணியெனும் வலைபின்னி
மத்தியமந்திரி எனும் தூண்டிலிட்டு
அதே தோணியில்
தொகுதிமீன் பிடிப்பவருக்கும்

உயிரைப் பணயம் வைத்து
வயிற்றைப் பிழைப்புக்கென்று
ஆழ்கடலில் வலைவீசி
வாழ்வோடு போராடுபவர்
வலிகள் புரிவதில்லை

இயற்கை சீறிடுமோ
என்பதுடன்
தோட்டாக்கள் துளைத்திடுமோ
எனவும்
தவியாய் தவித்தபடி
கரையில் கண்ணீருடன்
காத்திருக்கும் உற்றவரின்
வேதனைகள் பொருட்டில்லை

இன்று..

கணக்கற்ற இனக் கொலைகள்
கடலுக்குள் தினம் நடக்க
பிணக்கம் வேண்டாம் அரசுடனென
ஊடகங்கள் மூடி மறைக்க

வந்தாலும் வரக்கூடும்
நாளை விளம்பரங்கள்
அழகான மீன் படத்துடன்
முத்தான எழுத்துக்களில்
சிறுமி கொடுக்கும் கடிதம்

‘அன்புள்ள முதல்வருக்கு
ஆனந்தி எழுதுவது..
ஐந்து லட்சத்துக்கு நன்றி!’
***

நாம் கொடுப்போம் வாரீர்
மனுக்கடிதம் நாட்டின் பிரதமருக்கு!
***

 • http://www.petitiononline.com/TNfisher/ மனுவில் கையெழுத்திட்ட 773-வது நபர்தான் நான் நேற்று. ஒரு இலட்சம் பேர்களின் கையெழுத்துக்கள் சேர்ந்தால் மீனவரின் தலையெழுத்தை மாற்றி அமைக்க உரியவரை அணுக முடியும் எனும் நம்பிக்கையுடன் தொடங்கப் பட்டிருக்கும் ஒரு கூட்டு முயற்சி இது. இணைந்திடுங்கள் குரல் கொடுக்க!

70 comments:

 1. பண்ணியாச்சு மேடம்

  ReplyDelete
 2. http://www.petitiononline.com/TNfisher/ மனுவில் கையெழுத்திட்ட 285-வது நபர் நான்

  ReplyDelete
 3. இயற்கை சீறிடுமோ
  என்பதுடன்
  தோட்டாக்கள் துளைத்திடுமோ//
  சரியாச்சொன்னீங்க..

  சரியான முடிவுகளை எடுத்தால் ஏன் பிணக்கம் கொள்வார்கள் மக்கள்.. பாராட்டி அடுத்தமுறையும் ஓட்டு போடுவாங்களே..

  ReplyDelete
 4. நன்றி, அழுத்தமான கவிதை! அப்படியே கிழவனுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 5. தேவையான நல்ல கவிதைங்க, ராமலக்ஷ்மி!

  உங்க அனுமதியில்லாமல், உங்க தளத்தில் உள்ள "ஸ்டாப் கில்லிங்" படத்தை நான் காப்பி செய்து என் தளத்திலும் போட்டிருக்கேன். நன்றிங்க! :)

  ReplyDelete
 6. கண்டிப்பாக கூட்டு முயற்சியே நம் மீனவனைக் காக்கும்.
  நானும் செய்து விட்டேன்.

  ReplyDelete
 7. நம் கடமையை செய்து விட்டோம். இனி நாம் வோட்டு போட்டு அனுப்பிய பெரிய மனிதர்களின் கையில் தான் எல்லாம் உள்ளது.

  ReplyDelete
 8. நல்ல ப்கிர்வு,ராமலஷ்மி, நானும் கையெழுத்திட்டு விட்டேன், நன்றி.

  ReplyDelete
 9. நானும் கையெழுத்திடுகிறேன்.
  அருமையான சொல்வலை பின்னி விரித்து விட்டீர்....

  ReplyDelete
 10. I signed y'day. Also i twitted yday night between 8pm and 10pm with save tnfisherman tag.

  Thanks for the initiative.

  ReplyDelete
 11. என் கையெழுத்திட்ட வரிசை எண் 1544

  ReplyDelete
 12. காலையில் அவசரமாக பார்த்ததால் பின்னூட்டமிட முடியவில்லை ராமலெக்ஷ்மி..

  உங்கள் கருத்தை நானும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன்..

  தெரியவைத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 13. வித்யாசமான சிந்தனை. முன்பே கையெழுத்திட்டு விட்டேன்

  ReplyDelete
 14. நானும் கையெழுத்திட்டுவிட்டேன். 1870ஆவது நபராக..

  உங்க கவிதையையே அனுப்பலாம் ராமலஷ்மி.. இதைப்படிச்சப்புறமாவது உணர்ச்சி வருதான்னு பாக்கலாம்.

  ReplyDelete
 15. ஒன்றுபடுகிறோம் என்பதே பலம் வெற்றி !

  ReplyDelete
 16. செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!

  ReplyDelete
 17. அழுதமான, அவசியமான கவிதை. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே என்பதுதான் ஆதங்கமே...

  மனுவில் கையெழுத்திட்டுவிட்டேன்.

  ReplyDelete
 18. போட்டாச்சு (நான் - 2632வது)

  ReplyDelete
 19. கவிதை அற்புதமாக இருக்கிறது. இணைய மனுவில் கையெழுத்துப் போட்டாச்சு, 1534ஆவது ஆளாக. நிற்க.

  இப்பிரச்சினையில் கலைஞர் கடிதம் படித்தீர்களா?
  http://ch-arunprabu.blogspot.com/2011/01/blog-post_28.html
  இங்கே இருக்கிறது!

  ReplyDelete
 20. கையெழுத்திட்டாயிற்று லஷ்மி...கவிதை படித்ததும் கண்ணீர் தடுக்க இயலவில்லை

  ReplyDelete
 21. //இயற்கை சீறிடுமோ
  என்பதுடன்
  தோட்டாக்கள் துளைத்திடுமோ//

  தேவையான சமயத்தில் தேவையான நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

  நல்லமுடிவு கிடைக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. தங்களின் முயற்ச்சிக்கு நன்றி! நான் 4437 வது நபர்.

  இணைந்து குரல் கொடுப்போம்! ஏதேனும் ஒரு செவிடன் காதில் விழாமலா போகும்!

  ReplyDelete
 23. அழுத்தமான விழிப்புணர்வைத் தூண்டும் கவிதைங்க.
  நானும் கையெழுத்து போட்டுவிட்டேன்.
  மிகக் நன்றி.

  ReplyDelete
 24. அவசியமான கவிதை.

  ReplyDelete
 25. அறிவுக் கண் திறக்கட்டும்

  ReplyDelete
 26. அருமையான அவசியமான கவிதை.

  ReplyDelete
 27. எல் கே said...
  //பண்ணியாச்சு மேடம்//

  நல்லது எல் கே.

  ReplyDelete
 28. வெறும்பய said...
  //http://www.petitiononline.com/TNfisher/ மனுவில் கையெழுத்திட்ட 285-வது நபர் நான்//

  நல்லது. நன்றி.

  ReplyDelete
 29. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  ***இயற்கை சீறிடுமோ
  என்பதுடன்
  தோட்டாக்கள் துளைத்திடுமோ//
  சரியாச்சொன்னீங்க..

  சரியான முடிவுகளை எடுத்தால் ஏன் பிணக்கம் கொள்வார்கள் மக்கள்.. பாராட்டி அடுத்தமுறையும் ஓட்டு போடுவாங்களே../***

  உண்மைதான் முத்துலெட்சுமி.

  ReplyDelete
 30. Thekkikattan|தெகா said...
  //நன்றி, அழுத்தமான கவிதை!//

  நல்லது நடக்கிறதா பார்ப்போம். நன்றிங்க தெகா.

  ReplyDelete
 31. SurveySan said...
  //beautiful.//

  நன்றி சர்வேசன்.

  ReplyDelete
 32. வருண் said...
  //தேவையான நல்ல கவிதைங்க, ராமலக்ஷ்மி!

  உங்க அனுமதியில்லாமல், உங்க தளத்தில் உள்ள "ஸ்டாப் கில்லிங்" படத்தை நான் காப்பி செய்து என் தளத்திலும் போட்டிருக்கேன். நன்றிங்க! :)//

  நன்றி வருண். தாராளமாக. அது பரவ வேண்டும் என்பதற்காகதான் பதிவே. கடந்த பதிவின் முடிவில் சொல்லியிருந்தது இந்தப் படத்துக்குப் பொருந்தாது..!

  ReplyDelete
 33. சே.குமார் said...
  //கண்டிப்பாக கூட்டு முயற்சியே நம் மீனவனைக் காக்கும்.
  நானும் செய்து விட்டேன்.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 34. தமிழ் உதயம் said...
  //நம் கடமையை செய்து விட்டோம். இனி நாம் வோட்டு போட்டு அனுப்பிய பெரிய மனிதர்களின் கையில் தான் எல்லாம் உள்ளது.//

  பெரிய மனிதர் டெல்லி சென்று வந்துள்ளார். பார்க்கலாம். நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 35. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
  //நல்ல ப்கிர்வு,ராமலஷ்மி, நானும் கையெழுத்திட்டு விட்டேன், நன்றி.//

  நன்றி நித்திலம்.

  ReplyDelete
 36. goma said...
  //நானும் கையெழுத்திடுகிறேன்.
  அருமையான சொல்வலை பின்னி விரித்து விட்டீர்....//

  நன்றி கோமா.

  ReplyDelete
 37. Ashvinji said...
  //I signed y'day. Also i twitted yday night between 8pm and 10pm with save tnfisherman tag.

  Thanks for the initiative.//

  நல்லது அஸ்வின்ஜி. நானும் இக்கவிதையையே பிரித்து ட்வீட் செய்து விட்டிருந்தேன்.

  ReplyDelete
 38. goma said...
  //என் கையெழுத்திட்ட வரிசை எண் 1544//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 39. சி.பி.செந்தில்குமார் said...
  //கலக்கல் கலங்க வைத்தது//

  கலங்கி நிற்கும் மீனவர் வாழ்வில் நல்லது நடக்கட்டும். நன்றி செந்தில் குமார்.

  ReplyDelete
 40. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //காலையில் அவசரமாக பார்த்ததால் பின்னூட்டமிட முடியவில்லை ராமலெக்ஷ்மி..

  உங்கள் கருத்தை நானும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன்..

  தெரியவைத்தமைக்கு நன்றி//

  பார்த்தேன், நன்றி தேனம்மை.

  ReplyDelete
 41. அன்புடன் அருணா said...
  //done mam!//

  நன்றி அருணா.

  ReplyDelete
 42. மோகன் குமார் said...
  //வித்யாசமான சிந்தனை. முன்பே கையெழுத்திட்டு விட்டேன்//

  நல்லது, நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 43. அமைதிச்சாரல் said...
  //நானும் கையெழுத்திட்டுவிட்டேன். 1870ஆவது நபராக..

  உங்க கவிதையையே அனுப்பலாம் ராமலஷ்மி.. இதைப்படிச்சப்புறமாவது உணர்ச்சி வருதான்னு பாக்கலாம்.//

  நன்றி அமைதிச் சாரல்.

  ReplyDelete
 44. ஹேமா said...
  //ஒன்றுபடுகிறோம் என்பதே பலம் வெற்றி !//

  உண்மைதான் ஹேமா, நன்றி.

  ReplyDelete
 45. சேட்டைக்காரன் said...
  //செய்து விட்டேன் நண்பரே! முயற்சி வெல்க!!//

  மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 46. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //அழுத்தமான கவிதை!//

  நன்றி சார்.

  ReplyDelete
 47. சுந்தரா said...
  //அழுதமான, அவசியமான கவிதை. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே என்பதுதான் ஆதங்கமே...

  மனுவில் கையெழுத்திட்டுவிட்டேன்.//

  ஆம் சுந்தரா. நன்றி.

  ReplyDelete
 48. S.Menaga said...
  //voted akka!!//

  மிக்க நன்றி மேனகா.

  ReplyDelete
 49. தோழி said...
  //போட்டாச்சு (நான் - 2632வது)//

  நன்றி தோழி.

  ReplyDelete
 50. சிவகுமாரன் said...
  //இணைந்தேன் தோழி//

  நன்றி சிவகுமாரன்.

  ReplyDelete
 51. ஸ்ரீராம். said...
  //Done.

  கவிதை அருமை.//

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 52. தெய்வசுகந்தி said...
  //I did vote!//

  நன்றி தெய்வ சுகந்தி.

  ReplyDelete
 53. Arun Ambie said...
  //கவிதை அற்புதமாக இருக்கிறது. இணைய மனுவில் கையெழுத்துப் போட்டாச்சு, 1534ஆவது ஆளாக. //

  நன்றி அருண். தங்கள் பதிவும் கண்டேன்.

  ReplyDelete
 54. தமிழரசி said...
  //கையெழுத்திட்டாயிற்று லஷ்மி...கவிதை படித்ததும் கண்ணீர் தடுக்க இயலவில்லை//

  மீனவர் கண்ணீர் துடைக்கப் படுமென நம்புவோம். நன்றி தமிழரசி.

  ReplyDelete
 55. கோமதி அரசு said...
  ***//இயற்கை சீறிடுமோ
  என்பதுடன்
  தோட்டாக்கள் துளைத்திடுமோ//

  தேவையான சமயத்தில் தேவையான நல்ல கவிதை ராமலக்ஷ்மி.

  நல்லமுடிவு கிடைக்க வாழ்த்துக்கள்.//***

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 56. எஸ்.ஏ.சரவணக்குமார் said...
  //தங்களின் முயற்ச்சிக்கு நன்றி! நான் 4437 வது நபர்.

  இணைந்து குரல் கொடுப்போம்! ஏதேனும் ஒரு செவிடன் காதில் விழாமலா போகும்!//

  இணைந்து எழுப்பப்பட்ட குரல்களால் பலன்கள் வரும் நிச்சயம். நம்புவோம். நன்றி சரவணக்குமார்.

  ReplyDelete
 57. ஜிஜி said...
  //அழுத்தமான விழிப்புணர்வைத் தூண்டும் கவிதைங்க.
  நானும் கையெழுத்து போட்டுவிட்டேன்.
  மிகக் நன்றி.//

  நன்றி ஜிஜி.

  ReplyDelete
 58. ஆயிஷா said...
  //அவசியமான கவிதை.//

  நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 59. ரிஷபன் said...
  //அறிவுக் கண் திறக்கட்டும்//

  அதுவே பிரார்த்தனை. நன்றி ரிஷபன்.

  ReplyDelete
 60. அமுதா said...
  //அருமையான அவசியமான கவிதை.//

  நன்றி அமுதா.

  ReplyDelete
 61. இன்று வரையிலாக மனுவில் கையெழுத்து இட்டவர்கள் 6363 பேர். செய்தியை பலரிடம் கொண்டு சேர்ப்போம். அவ்வாறாக இப்பதிவின் சுட்டியை buzz, FB-யில் பகிர்ந்து கொண்டிருந்த பலருக்கும் தமிழ்மணத்தில் வாக்களித்த 19, இன்ட்லியில் வாக்களித்த 34 பேருக்கும் நன்றி.

  ReplyDelete
 62. மீனவர் பிரச்சனை தீர்வுக்காக ஒன்றிணைந்த குரல்கள் கரங்கள் பற்றியும், மக்களிடையே ஏற்படவேண்டிய விழிப்புணர்வு பற்றியும் விரிவான விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin