வெள்ளி, 21 ஜனவரி, 2011

வெயில் தின்ற மழை-நிலாரசிகனின் கவிதைத் தொகுப்பு- என் பார்வையில்..


நிலாரசிகன் பக்கங்கள் வலைப்பூவுக்கு அடிக்கடி செல்பவரா நீங்கள்? வலைப்பூ தலைப்பின் கீழ் அவர் வேண்டும் வரமாய் அமைந்த வரிகளை வாசித்ததுண்டா நீங்கள்?
[வேண்டும் வரம்]- ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!

கவனியுங்கள். இவர் வேண்டுவது வரங்கள் அன்று. வரம். ஒரே ஒரு வரம்.

புது இடுகைகளை வாசிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இவ்வரிகளையும் வாசித்து வருவது வாடிக்கையாகி விட்டது. முதல் முறை அந்தக் கடைசி வரியில் ஸ்தம்பித்த மனது, அடுத்தடுத்த முறைகளில் ‘எனக்கும் வேண்டும் அப்படியொரு மனசு’ என சொல்லிப் பார்த்து, பிறகு இந்த பக்குவம் நமக்கு சாத்தியமில்லை என்ற முடிவுடன் வியந்து விலகி ஓடி வந்து விடுகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார். இவர் வேண்டும் வரம் போதும் இவரது கவிதை தொகுப்பு எப்படியானதாக இருக்கக் கூடுமென்பதைச் சொல்ல.

ற்றை மரம் உதிர்த்த பூக்குவியலின் மத்தியில் 'தனி'த்திருக்கும் இளைஞனின் படமொன்றும், வேண்டும் வரத்துக்கு அருகில்.

தனிமை என்பது துயரா இனிமையா, வரமா சாபமா, மனிதனுக்கான தேவைகளுள் ஒன்றா, ஆத்மாவின் தேடலா எனும் பல கேள்விகளை அதிர்வுடன் எழுப்பியபடி நகருகின்றன பல கவிதைகள் இத்தொகுப்பில்:
குழந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையைப் பரிசளித்து
சிரிக்கின்றது காலம்.
மென்காற்றில் சிதறும் சாரலில்
நனைந்தபடி தனித்தழுகிறாய்
நீ


சில கவிதைகள் நம்பிக்கையை விதைப்பவையாகப் புதுப் பரிமாணம் காண்பிக்கின்றன:
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்


நிராகரிப்பின் வலி பேசும் கவிதைகளிலிருந்து பிசுப்பிசுப்பாய் வந்து ஒட்டிக் கொள்கிறது ஈரம், பக்கம் திருப்பும் விரல்களில்:
எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.


யற்கையுடன் ஒன்றியதானதொரு கனவுலகுக்குள் நம்மை இட்டுச் செல்கின்றன பல கவிதைகள்.சிறுமிகளும் தேவதைகளும், மழையும் நட்சத்திரங்களும், விலங்குகளும் பறவைகளுமே அங்கே கவிஞரை கனிவுடன் மகிழ்விப்பவையாக உள்ளன:
பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரைப்
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை..


சாதிக்கும் வேகமாய் ‘கனவுகள் தகர்தெறிந்து’ கவிதை:
“வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்குள் காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்”

ஊர்ந்து செல்லும் கால்கள் இழந்த கிழவனொருவனுக்குக் காட்டும் கருணையாய் இவ்வரிகள்:
கற்கள் எழுப்பும் அலைகளில்
மெல்லக் கால் முளைத்துப்
பால்யத்திற்குள் நுழைகிறான்.
தாய்மையின் சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
அந்நதி.


மனித வாழ்வின் நிலையற்ற சுகம் பற்றி இதைவிட அழகாக சொல்ல இயலுமா தெரியவில்லை:
நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக் கொண்டன
இரு மீன்கள்.
குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன.
உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.
மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
வெண்ணிலா.


னம் வருடுகின்றன ‘இந்தக் கவிதை’,‘சிறுவனின் மணல்வீட்டை’.

வாழ்வின் மிகப் பெரும்’ எழுதுகிறது மனிதனின் கோரமான மறுபக்கத்தை, சிறு சுயசரிதையாய்.

அனல் நிறைந்த கோடையில்’வெயில் தின்ற மழையாக, உலகத்தால் கருணை மறுக்கப்படும் மாந்தரின் நிலைமையை வலிமையாகச் சொல்லுகிற தலைப்புக் கவிதை.

மேலே சொன்னவை போகவும் அறுபது அற்புதமான கவிதைகள் நிறைந்த பயணத்தில் என்னை நின்று சிலகணங்கள் பிரமிக்க வைத்தவற்றில் மேலும் குறிப்பிடத் தக்கவை:தனிமையின் இசையில், இரவிலும் பகலிலும், காற்றுப்புகாத கண்ணாடிச்சுவரின், முதலில் அது நத்தை என்றே, நீங்கள் இறந்து போவீர்கள், தவிர்த்தலையும் ரசனையுடன், நான் தனித்திருக்கும் உலகில், இந்த வலியை யாரிடம், நான்கு சுவர்களுக்குள்.

ஒவ்வொன்றுமே ஆழ்ந்த அர்த்தங்களுடன் பாசாங்கற்ற உணர்வுகளின் வெளிப்பாடாக, மனதுக்கு நிறைவான ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தந்து மிளிர்கின்றன.

நவீனக் கவிதைகளின் பாணி முழுமையாக வசப்படாத எனக்கு சில கவிதைகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்பதையும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன். அதே நேரம் அவற்றை வசப்படுத்தும் ஆவலை அதிகரிப்பதாகவும் உள்ளன.

வெயில் தின்ற மழை’ இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

வாழ்க்கையை கவிதையாகவே வாழும் மென்னுணர்வு வாய்க்கப் பெற்றதாலேயே முப்பது வயதுக்குள் இது சாத்தியப்பட்டிருக்கிறது. தனிமையை, புறக்கணிப்பை, துயரை, தோல்வியை, மகிழ்ச்சியை, வெற்றியை பகிர்ந்திடும் தாய்மடியாகக் கவிதையை இவர் கருதியிருப்பது புரிய வருகையில் 'தொடர்ந்து தொகுப்புகள்' என்பது அத்தனை வியப்பாக இல்லை.

வாழ்த்துக்கள் நிலாரசிகன்.
***

“வெயில் தின்ற மழை”
விலை ரூ:50. பக்கங்கள்: 72. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: - அனைத்து முன்னணி நூல் நிலையங்களிலும்(டிஸ்கவரி புக் பேலஸ்,நியு புக் லேண்ட்ஸ்,லேண்ட் மார்க்)

இணையத்தில் வாங்கிட இங்கே http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=161 செல்லலாம்.
*** *** ***


  • 15 ஜனவரி 2011 பொங்கல் அன்று மலர்ந்துள்ள அதீதம் புதிய இணைய இதழில் வெளிவந்துள்ள புத்தக அறிமுகம். நன்றி அதீதம்!
தள முகப்பில்..
***

***


***

63 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம். நன்றி ராமலக்‌ஷ்மி

    பதிலளிநீக்கு
  2. தொடரட்டும் உங்கள் "நற்பணி", ராமலக்ஷ்மி! :)

    பதிலளிநீக்கு
  3. புத்தகம் வெளியிட நல்ல ஒரு விமரிசகருக்காகக் காத்திருந்தேன்,கண்டு கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. திறம்பட்ட அறிமுகம்....’மிக்க நன்றிங்க

    பதிலளிநீக்கு
  5. மிக்க மகிழ்ச்சி!

    அதீதம்-ல் வாசித்தேன்!

    இது போல் தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  6. அதீதத்தில் பார்த்தேன்.. நன்றி :)

    பதிலளிநீக்கு
  7. // “கற்கள் எழுப்பும் அலைகளில்
    மெல்லக் கால் முளைத்துப்
    பால்யத்திற்குள் நுழைகிறான்.
    தாய்மையின் சாயலுடன் மிதந்தபடி நகர்கிறது
    அந்நதி.”//

    கற்கள் எழுப்பும் அலையா ?
    கருமுகிலின் கண்ணீரா ?
    கவிதையா அல்லது
    கற்பனை மழையா !!
    இரண்டுமில்லை. இது
    காலில்லா ஓடி வரும்
    கங்கை வெள்ளம் !

    ஆங்கிலேய கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் அவர்களின் கற்பனை
    கவிதை நயத்தினை நினைவு படுத்துகிறது.
    அபாரம் !! இனி வரும் படைப்புகள் .கவிஞர் எதிர்காலத்திலே ஒரு சாஹித்ய அகாடமி
    விருது பெருவார் என்ற எண்ணத்தை இக்கவிதையே ஏற்படுத்துகிறது.
    வாழ்த்துக்கள். முதியோனின் ஆசிகள்.

    சுப்பு ரத்தினம்.
    வருக.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. அருமையான அறிமுகம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையாக இரசித்து எழுதிய்ள்ளதை இரசித்துப் படித்தேன். பகிர்ந்த கவிதைகளும் அருமை, தங்கள் எழுத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  10. அழகாக, அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு அறிமுகம் அக்கா!! இதுபோல் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  12. அருமையான பகிர்வு., அக்கா.. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நேர்த்தியான பகிர்விற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. நிலாரசிகனின் கவிதை தொகுப்பு அருமை.

    நன்றி ராமலக்ஷ்மி.
    நிலாரசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. அருமையான பகிர்வு.தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துகள் நிலா ரசிகன்

    நன்றி ராமலட்சுமி

    பதிலளிநீக்கு
  17. நவீனக் கவிதைகளின் பாணி முழுமையாக வசப்படாத எனக்கு சில கவிதைகள் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்பதையும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறேன்.//

    மேடம், இந்த மாதிரி தைரியம் யாருக்கும் வராது. குறிப்பாக,எனக்குப் புரியாத விஷயங்களை, இந்த மாதிரி புரியவில்லை என்று சொல்லக்கூடிய மனசு இன்னும் வரவில்லை. இனிமேல் சொல்ல முயற்சிக்கிறேன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. புத்தக அறிமுகம் நல்ல பகிர்வு,நிறைய படிக்கிறீங்க,நிறைய எழுதறீங்க,அருமை பாராட்டுக்கள்.எனக்கு நேரம் தான் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  19. நல்ல கவிஞரை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நல்லதொரு அறிமுகம்! வழக்கம்போல, அறிமுகம் செய்யப்பட்டவரை விட, உங்களின் கருத்தாழம் மிக்க எழுத்து, சொல்லவொண்ணா அழகில் விஞ்சி நிற்கிறது! அருமையான சுந்தரத் தமிழில் கொஞ்சி விளையாடுகிறது! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  21. அறிமுகத்திற்கு நன்றி ராமலக்ஷ்மி !

    பதிலளிநீக்கு
  22. சந்தோசத்தைத் தந்த பதிவு. நிலாரசிகனுக்கு வாழ்த்துகள் என்றும் உண்டு.

    பதிலளிநீக்கு
  23. ராமலக்ஷ்மி, இந்நூல் அறிமுகக் கட்டுரை உயிரோசை இணைய இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. புதுகைத் தென்றல் said...
    //நல்லதொரு அறிமுகம். நன்றி ராமலக்‌ஷ்மி//

    நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  25. வருண் said...
    //தொடரட்டும் உங்கள் "நற்பணி", ராமலக்ஷ்மி! :)//

    நன்றி வருண்:)!

    பதிலளிநீக்கு
  26. goma said...
    //புத்தகம் வெளியிட நல்ல ஒரு விமரிசகருக்காகக் காத்திருந்தேன்,கண்டு கொண்டேன்.//

    தங்கள் எழுத்துக்கள் புத்தக வடிவமாகப் போவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  27. சி. கருணாகரசு said...
    //திறம்பட்ட அறிமுகம்....’மிக்க நன்றிங்க//

    நன்றி கருணாகரசு.

    பதிலளிநீக்கு
  28. ஈரோடு கதிர் said...
    //மிக்க மகிழ்ச்சி!

    அதீதம்-ல் வாசித்தேன்!

    இது போல் தொடருங்கள்!//

    நன்றி கதிர். வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்கினாலே சாத்தியம்:)! முயன்றிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. நிலாரசிகன் said...
    //அதீதத்தில் பார்த்தேன்.. நன்றி :)//

    நன்றி நிலாரசிகன்:)!

    பதிலளிநீக்கு
  30. Kanchana Radhakrishnan said...
    //நல்லதொரு அறிமுகம்.//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  31. sury said...
    //கற்கள் எழுப்பும் அலையா ?கருமுகிலின் கண்ணீரா ?
    கவிதையா அல்லது
    கற்பனை மழையா !!
    இரண்டுமில்லை. இது
    காலில்லா ஓடி வரும்
    கங்கை வெள்ளம் !

    ஆங்கிலேய கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் அவர்களின் கற்பனை
    கவிதை நயத்தினை நினைவு படுத்துகிறது.
    அபாரம் !! இனி வரும் படைப்புகள் .கவிஞர் எதிர்காலத்திலே ஒரு சாஹித்ய அகாடமி
    விருது பெருவார் என்ற எண்ணத்தை இக்கவிதையே ஏற்படுத்துகிறது.
    வாழ்த்துக்கள். முதியோனின் ஆசிகள்.//***

    ‘கங்கை வெள்ளம்’,‘அபாரம்’ சரியாகச் சொன்னீர்கள்.

    உங்கள் ஆசிகள் பலிக்க வேண்டும் சார்.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம். said...
    //அருமையான அறிமுகம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிதைகளை மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்...//

    பல கவிதைகள் அப்படியானவை. மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. அமுதா said...
    //மிக அருமையாக இரசித்து எழுதிய்ள்ளதை இரசித்துப் படித்தேன். பகிர்ந்த கவிதைகளும் அருமை, தங்கள் எழுத்தும் அருமை//

    மிக்க நன்றி அமுதா.

    பதிலளிநீக்கு
  34. தமிழ் உதயம் said...
    //அழகாக, அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.//

    நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  35. S.Menaga said...
    //நல்லதொரு அறிமுகம் அக்கா!! இதுபோல் தொடருங்கள்..//

    நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  36. அமைதிச்சாரல் said...
    //மிகச்சிறந்த அறிமுகம் ராமலஷ்மி..//

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  37. கே. பி. ஜனா... said...
    //நல்ல அறிமுகம். தொடருங்கள்...//

    மிக்க நன்றி கே பி ஜனா.

    பதிலளிநீக்கு
  38. Chitra said...
    //அருமையான பகிர்வு., அக்கா.. நன்றி.//

    நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  39. நர்சிம் said...
    //நேர்த்தியான பகிர்விற்கு நன்றிகள்.//

    நன்றி நர்சிம்.

    பதிலளிநீக்கு
  40. கோமதி அரசு said...
    //நிலாரசிகனின் கவிதை தொகுப்பு அருமை.

    நன்றி ராமலக்ஷ்மி.
    நிலாரசிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  41. Sriakila said...
    //நல்லதொரு பகிர்வு.//

    நன்றி ஸ்ரீஅகிலா.

    பதிலளிநீக்கு
  42. ஆயிஷா said...
    //அருமையான பகிர்வு.தொடருங்கள்...//

    நன்றி ஆயிஷா.

    பதிலளிநீக்கு
  43. மோகன் குமார் said...
    //வாழ்த்துகள் நிலா ரசிகன்

    நன்றி ராமலட்சுமி//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  44. கோநா said...
    //good one. congrats ramalakshmi.//

    நன்றி கோநா.

    பதிலளிநீக்கு
  45. அமைதி அப்பா said...
    ***/மேடம், இந்த மாதிரி தைரியம் யாருக்கும் வராது. குறிப்பாக,எனக்குப் புரியாத விஷயங்களை, இந்த மாதிரி புரியவில்லை என்று சொல்லக்கூடிய மனசு இன்னும் வரவில்லை. இனிமேல் சொல்ல முயற்சிக்கிறேன்!
    நன்றி./***

    நன்றி அமைதி அப்பா:)!

    பதிலளிநீக்கு
  46. asiya omar said...
    //புத்தக அறிமுகம் நல்ல பகிர்வு,நிறைய படிக்கிறீங்க,நிறைய எழுதறீங்க,அருமை பாராட்டுக்கள்.எனக்கு நேரம் தான் கிடைப்பதில்லை.//

    நன்றி ஆசியா. வாசிக்க இன்னும் அதிக நேரம் ஒதுக்கவே ஆசை:)!

    பதிலளிநீக்கு
  47. Lakshmi said...
    //அருமையான பதிவு தொடருங்கள்.//

    நன்றி லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  48. சிவகுமாரன் said...
    //நல்ல கவிஞரை அறிமுகம் செய்ததற்கு நன்றி.//

    நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  49. மனோ சாமிநாதன் said...
    //நல்லதொரு அறிமுகம்! வழக்கம்போல, அறிமுகம் செய்யப்பட்டவரை விட, உங்களின் கருத்தாழம் மிக்க எழுத்து, சொல்லவொண்ணா அழகில் விஞ்சி நிற்கிறது! அருமையான சுந்தரத் தமிழில் கொஞ்சி விளையாடுகிறது! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!//

    நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  50. சுசி said...
    //அருமையான பகிர்வு அக்கா.//

    நன்றி சுசி.

    பதிலளிநீக்கு
  51. James Vasanth said...
    //அறிமுகத்திற்கு நன்றி ராமலக்ஷ்மி !//

    நன்றி ஜேம்ஸ்:)!

    பதிலளிநீக்கு
  52. "உழவன்" "Uzhavan" said...
    //சந்தோசத்தைத் தந்த பதிவு. நிலாரசிகனுக்கு வாழ்த்துகள் என்றும் உண்டு.//

    மிக்க நன்றி உழவன்:)!

    பதிலளிநீக்கு
  53. கோநா said...
    //ராமலக்ஷ்மி, இந்நூல் அறிமுகக் கட்டுரை உயிரோசை இணைய இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்களுக்கு நன்றி கோநா.

    பதிலளிநீக்கு
  54. தமிழ்மணத்தில் வாக்களித்த 12 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 24 பேருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  55. ரசித்து எழுதிய அறிமுகத்தை ரசித்து வாசித்'தேன்'. நிலாரசிகனுக்கும் உங்கள் அன்புக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  56. @ கவிநயா,

    தங்கள் அன்பான வாழ்த்துக்கள் 'தேனாக' இனித்தன:)! மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin