புதன், 10 ஆகஸ்ட், 2016
புதன், 27 ஜூலை, 2016
வெற்றி நிச்சயம் - டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள் (பாகம் 2)
டாக்டர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது பொன்மொழிகள் சிலவற்றின் தமிழாக்கம், எடுத்த படங்களுடன்..
1. வெற்றிக் கதைகளை மட்டுமே படிக்காதீர்கள். அவற்றிலிருந்து உங்களுக்கு செய்தி மட்டுமே கிடைக்கும். தோல்விக் கதைகளை வாசியுங்கள். வெற்றி பெற சில யோசனைகள் உதிக்கும்.
2. ஒருவரை தோற்கடிப்பது மிக எளிதானது, ஆனால் ஒருவரை வெல்வது மிகக் கடினமானது.
ஞாயிறு, 24 ஜூலை, 2016
புதன், 20 ஜூலை, 2016
பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்!
#1
பிரம்மக் கமலம் ( Epiphyllum oxypetalum) மலரைக் குறித்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் விரிவாக இங்கே.. “பத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்” பகிர்ந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து சில வாரங்களில் என் வீட்டிலும் ஒரு தொட்டியில் ஓர் இலையை நட்டு வைத்தேன். இலையின் விளிம்புகளிலிருந்து மேலும் இலைகளும், தண்டுகளுமாய் துளிர்த்தன. அதில் ஒரு தண்டு மட்டும் சற்று தடிமனாக, மெல்ல மெல்ல உயரமாக, சுமார் எட்டடி அடி உயரத்துக்கு வளர்ந்து, வளைந்து வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்து ‘நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..’ என விசாரித்தபடியே இருந்ததே தவிர ஒரு மொட்டு கூட விடவில்லை நான்கு வருடங்களாக. இரு மாதம் முன்னர் வீடு மாறி வந்த போது மற்ற தொட்டிச் செடிகளை அங்கிருந்த நண்பர்களுக்கு கொடுத்து விட்டாலும் இதை மட்டும் கொண்டு வந்து இங்குள்ள தோட்ட மண்ணில் நட்டு வைத்தேன். கொடி போல் வளைந்தபடி இருந்த செடியை ஒரு முருங்கை மரக் கம்பை நட்டு அதில் கட்டியும் வைத்தேன்.
நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின், அட, இரண்டு மொக்குகள் விட்டிருந்தது செடி, புதிய இடத்தில்.. புதிய மண்ணில்..
மலர் விரியும் அழகு பனிரெண்டு படங்களாக உங்கள் பார்வைக்கு..
மொக்கு, நான்கைந்து நாட்கள் முன்னர்..
#2
இன்று காலையில்..
#3
#4

ஞாயிறு, 17 ஜூலை, 2016
சும்மா கரடி விடாதே..
#1
ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. ஆங்கிலத்தில் Sloth bear எனப்படும், Melursus ursinus எனும் உயிரியல் பெயரைக் கொண்ட, பாலூட்டி விலங்கான கருங்கரடி இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமா?
#2
மற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் பெயருக்கேற்ப இவை சற்றே மந்தமானவை.
ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. ஆங்கிலத்தில் Sloth bear எனப்படும், Melursus ursinus எனும் உயிரியல் பெயரைக் கொண்ட, பாலூட்டி விலங்கான கருங்கரடி இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமா?
#2
லேபிள்கள்:
ஞாயிறு,
தெரிஞ்சுக்கலாம் வாங்க..,
பேசும் படங்கள்
ஞாயிறு, 10 ஜூலை, 2016
நிற்க அதற்குத் தக
மழலைப் பூக்கள்.. (பாகம் 9)
#1 ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’
![]() |
| Flickr explore பக்கத்தில் தேர்வாகி 5700+ பார்வையாளர்களையும், 147 விருப்பங்களையும் பெற்றிருக்கும் படம்:)! https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/26883492464/ |
#2 ‘கற்க கசடற கற்றபின்
![]() |
| நிற்க அதற்குத் தக' |
லேபிள்கள்:
ஞாயிறு,
பேசும் படங்கள்,
மழலைப் பூக்கள்,
Portraits
வெள்ளி, 1 ஜூலை, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)