விருந்தினர் வருகை
நாளெல்லாம் வேலை
'இன்று வகுப்பிலே..'
'பக்கத்து வீட்டு நாய்க்குட்டி..'
'இந்த வீட்டுக்கணக்கு..'
முடிக்கும் முன்னரே
ஒவ்வொரு முறையும்
'அப்புறமாய் சொல்லுடா'
அன்பாய் தலைகலைத்து
அவசரமாய் அடக்கிவிட்டு
வந்தவர்க்ளைக் கவனித்து
வழியனுப்பி வைத்தபின்
திரும்பிப் பார்த்தால்
உறங்கிப் போயிருந்தது
குழந்தை
பொம்மையை இறுக
அணைத்தபடி
விலகியிருந்த அதன்
போர்வையைச்
சரி செய்தவளை
ஏக்கமாய்ப்
பார்த்துக் கொண்டிருந்தது
மடிப்புக்கலையா அழகுடன்
பிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்.
***
படம்: இணையத்திலிருந்து..
* உரையாடல் கவிதைப் போட்டிக்கு..
* 9 ஆகஸ்ட் 2010 ‘உயிரோசை’ இணைய இதழிலும்..
* ‘பொம்மையம்மா’வாக ஆனந்த விகடனின் சொல்வனத்திலும்..
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகவிதை + புகைப்படம் மிக அருமை.
குழந்தையின் அறியாவயது பாசம்
பதிலளிநீக்குயாராலும் புரியாத ஒன்று அதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க மேடம் படம் அந்த குழந்தை தூங்கும் அழகு ரொம்ப ரசனை...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்
அருமை & வாழ்த்துக்கள் அக்கா !
பதிலளிநீக்கு//இந்த வீட்டுக்கணக்கு..'
முடிக்கும் முன்னரே
ஒவ்வொரு முறையும்
'அப்புறமாய் சொல்லுடா'
அன்பாய் தலைகலைத்து
அவசரமாய் அடக்கிவிட்டு///
அப்புறமாய் சொல்லுடா என்ற குரல் ஒலிக்கும் வீட்டிலே இப்படியான ஏக்கம் என்றால்.....?
ஒ.கே!
புரிந்துக்கொள்ளப்பட்ட ஏக்கங்கள் மகிழ்ச்சியளிக்ககூடியவையே!
மிக அழகான கவிதை..
பதிலளிநீக்குவெற்றிபெற என் வாழ்த்துக்கள்..
wov!
பதிலளிநீக்குரொம்ப பிடிச்சு இருக்கு ராமலக்ஷ்மி!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
அருமை அக்கா.
பதிலளிநீக்குஎல்லா அம்மாக்களும் அனுபவிச்சிருப்பாங்க, என்ன மாதிரியேன்னு நினைக்கிறேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா.
அக்கா, இந்த கால கட்டத்து வாழ்க்கையின் வலிகளை, சரியா சொல்லி இருக்கீங்க. அருமை.
பதிலளிநீக்குஏக்கம் யாருக்கு :)
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகவிதை அழுகுடன் எதார்த்த வாழ்க்கையை சொல்லுது
அன்றாட பணிகளை அற்புதமாய் கவிதையாக்கி பாசம் கலந்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇப்படி
பதிலளிநீக்குஎத்தனை வீடுகளில்
பிரிக்கப் படாமலேயே
நாளிதழ்கள் ,
இதழ்கள் மூடிக்கிடக்கின்றனவோ
நன்று... வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குபடமும் கவிதையும் அழகா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்
பதிலளிநீக்குவாவ்..சூப்பர்!
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துகள்!! :-)
ஏக்கமாக பார்த்துக் கொண்டிருப்பது செய்தித்தாள் மட்டுமா?
பதிலளிநீக்குஅடுத்த வலைப்பூ பதிய பத்து நாளாக வரலையே என்று ஏங்கும் கணிப்பொறியும் தான்
சொன்னது கொஞ்சம் தான்னாலும் அது சொல்லாததையும் சொல்லுது.
பதிலளிநீக்குஅருமை வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
எங்க நம்ம வீட்டுபக்கம் ஆளையே காணோம்? நலம் தானே??
தூங்கிப் போன குழந்தையின் வெளிப்படுத்தப் படாத ஏக்கம் எப்படி அடுத்தடுத்து படியுது பாருங்க செய்தித் தாள் மேலயும் அப்புறம் அதன் அம்மாவுக்குள்ளும், ம்...கவனிப்பு தேவைப் படுது பாருங்க உயர் திணை முதல் அக்றிணை வரை எல்லாருக்குமே .நல்லா இருக்குங்க கவிதை.வெற்றி பெற வாழ்த்துகள் .
பதிலளிநீக்குவெகு அழகாக எடுத்துச் சொல்லிவிட்டிர்கள். ஏக்கம் சரியன தலைப்பு.
பதிலளிநீக்குகுழந்தைகளின் வாழ்க்கையில் நானும் தொலைத்த தருணங்கள் அனேகம்.
அதையும் மீறிக் குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் என்னை நினைக்கும் போது நெகிழ்ந்துவிடுகிறேன்.
வாழ்த்துகளும் ஆசிகளும்.
கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குகொள்ளை அழகு கவிதை
பதிலளிநீக்குஇருபதில் ஒருவராகிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
வெற்றி பெற வாழ்த்துக்கள் படமும் கவிதையும் அருமை.
பதிலளிநீக்குஏக்கம்..இன்று ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும்...
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)
பதிலளிநீக்குஅருமையாக சொல்லிவிட்டீர்கள்... யதார்த்தம்...வெற்றிபெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசில நேரங்களில் எதற்கு ஓடுகிறோம் என்பதை யோசித்துப் பார்த்தால் ஏக்கமே மிஞ்சுகிறது. இது ஒருவரின் அனுபவம் இல்லை . ஒவ்வொருவரின் அனுபவமாகத்தான் இருக்கும். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் மேடம்.
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குமழலை நிகழ்வுகள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குகவிதை அருமையாக இருக்கிறது, வெற்றிபெற வாழ்த்துக்கள், இவர்களுக்கெல்லாம் பரிசு கிடைக்கும் என்று நான் நினைக்கும்னபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. சபாஷ்... சரியான போட்டி
பதிலளிநீக்குஏக்கம் ..குழந்தைகள் மனதில் நிலையாய் தங்குவதில்லை...
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்.
'அப்புறமாய் சொல்லுடா' அவசர உலகத்தில் ஒவ்வொறு
பதிலளிநீக்குபெற்றோரும் உதிர்க்கும் வார்த்தை குழந்தையிடத்தில்.
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி..
பதிலளிநீக்கு( இங்க நேர்மாறா எவ்வளவு கெஞ்சினாலும் ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு எனக்குத்தெரியவே தெரியாதுன்னு சொல்றானே நான் என்ன செய்ய அவ்வ்வ்.. ) :)
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகவிதை,புகைப்படம் மிக அருமை.
ஏக்கத்தை அழகான வார்த்தைகளில் கோர்த்து இருக்கிறீர்கள். அனைவரின் கண்கள் கலங்கும் படி. அருமை.
பதிலளிநீக்கு----
வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅருமை அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபிடித்திருக்கிறது தோழி. அன்றாடம் நாம் செய்வது தான். மனதைத் தொடுகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமை ராம லெஷ்மி
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்
அழகு! வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்க "ஏக்கம்" நல்லாயிருக்குங்க! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!
பதிலளிநீக்குஅழகிய ஏக்கம்.. வாழ்த்துகள்..
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு. மீண்டும் படித்தேன்.
பதிலளிநீக்குஎன்ன சொல்ல.. பிரமாதம்.!
பதிலளிநீக்குஅழகான கவிதை...
பதிலளிநீக்குமுதலில் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குஒரு குடுபத்தலைவியின் ஒய்வு ஒழிச்சல் இல்லாத கடமைகள் அவளை துரத்த அவளையே அவள் கவனித்துக் கொள்ள முடியாத சூழ்நிலைதான். தினம் தினம் உருவாகும் சூழல்.
பதிலளிநீக்குவரிகளில் மௌனம் இழையோடி இருந்தாலும்... ஏக்கம் மேலோங்கி இருந்த போதிலும்! இன்னமும் வரிகளின் அர்த்தம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது..
அந்தக் பெண் குழந்தை படம் அருமை!
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅக்கா இது கவிதை அல்ல. உங்களை நோக்கிய விமர்சனத்திற்கு பதில்.
பதிலளிநீக்குசபாஷ்
:)
butterfly Surya said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்.
கவிதை + புகைப்படம் மிக அருமை.//
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சூர்யா.
பிரியமுடன்...வசந்த் said...
பதிலளிநீக்கு//குழந்தையின் அறியாவயது பாசம்
யாராலும் புரியாத ஒன்று அதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க மேடம் படம் அந்த குழந்தை தூங்கும் அழகு ரொம்ப ரசனை...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்//
கவிதைக்குப் பொருத்தமாகத் தேடியதில் என் மனதுக்கும் பிடித்தமானதாக அமைந்து போனது அந்தப் படம். நன்றி வசந்த்.
ஆயில்யன் said...
பதிலளிநீக்குஅருமை & வாழ்த்துக்கள் அக்கா !
***/ //இந்த வீட்டுக்கணக்கு..'
முடிக்கும் முன்னரே
ஒவ்வொரு முறையும்
'அப்புறமாய் சொல்லுடா'
அன்பாய் தலைகலைத்து
அவசரமாய் அடக்கிவிட்டு///
அப்புறமாய் சொல்லுடா என்ற குரல் ஒலிக்கும் வீட்டிலே இப்படியான ஏக்கம் என்றால்.....?//***
அப்படி ஒலிக்கும் இடத்தில்தானே ஆயில்யன் இப்படியாக எழும் ஏக்கம்?
// ஒ.கே!
புரிந்துக்கொள்ளப்பட்ட ஏக்கங்கள் மகிழ்ச்சியளிக்ககூடியவையே!//
உண்மைதான், புரிதல்கள்தான் வாழ்வின் எல்லா இறுக்கங்களையும் தளர்த்துகின்றன. நகர்த்திச் செல்லுகின்றன. கருத்துக்கு நன்றி ஆயில்யன்.
கமலேஷ் said...
பதிலளிநீக்கு// மிக அழகான கவிதை..
வெற்றிபெற என் வாழ்த்துக்கள்..//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கமலேஷ்.
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//wov!
ரொம்ப பிடிச்சு இருக்கு ராமலக்ஷ்மி!
வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
ஊக்கம் தரும் பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பா ரா.
சுசி said...
பதிலளிநீக்கு//அருமை அக்கா.
எல்லா அம்மாக்களும் அனுபவிச்சிருப்பாங்க, என்ன மாதிரியேன்னு நினைக்கிறேன்.//
சரியாச் சொன்னீங்க சுசி, வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Chitra said...
பதிலளிநீக்கு// அக்கா, இந்த கால கட்டத்து வாழ்க்கையின் வலிகளை, சரியா சொல்லி இருக்கீங்க. அருமை.//
வாங்க சித்ரா. புரிதலுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு// ஏக்கம் யாருக்கு :)
வெற்றி பெற வாழ்த்துக்கள்//
செய்தித்தாளுக்கு மட்டுமல்ல தூங்கிப் போன குழந்தைக்கும்தான்! நன்றி அம்மிணி:)!
ம்ச்...என்னங்க..இதை விட என்ன வேலை...
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்.
--வித்யா
ஆ.ஞானசேகரன் said...
பதிலளிநீக்கு// வாழ்த்துகள்...
கவிதை அழுகுடன் எதார்த்த வாழ்க்கையை சொல்லுது//
எதார்த்த வாழ்வில் எதிர்கொள்ளும் ஒன்றுதான். நன்றிகள் ஞானசேகரன்.
புலவன் புலிகேசி said...
பதிலளிநீக்கு// அன்றாட பணிகளை அற்புதமாய் கவிதையாக்கி பாசம் கலந்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவன் புலிகேசி.
goma said...
பதிலளிநீக்கு//இப்படி
எத்தனை வீடுகளில்
பிரிக்கப் படாமலேயே
நாளிதழ்கள் ,
இதழ்கள் மூடிக்கிடக்கின்றனவோ//
ஆயில்யன் சொன்ன மாதிரி உணர்ந்து திறந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கருத்துக்கு நன்றிகள் கோமா!
ஈ ரா said...
பதிலளிநீக்கு// நன்று... வாழ்த்துக்கள்..//
நன்றி ஈ ரா!
கவிநயா said...
பதிலளிநீக்கு//படமும் கவிதையும் அழகா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//
படத்தையும் சேர்த்து ரசித்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கவிந்யா.
அண்ணாமலையான் said...
பதிலளிநீக்கு//போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மேடம்//
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணாமலையான்.
சந்தனமுல்லை said...
பதிலளிநீக்கு//வாவ்..சூப்பர்!
வெற்றி பெற வாழ்த்துகள்!! :-)//
வாழ்த்துக்களுக்கு நன்றி முல்லை:)!
சகாதேவன் said...
பதிலளிநீக்கு//ஏக்கமாக பார்த்துக் கொண்டிருப்பது செய்தித்தாள் மட்டுமா?
அடுத்த வலைப்பூ பதிய பத்து நாளாக வரலையே என்று ஏங்கும் கணிப்பொறியும் தான்//
ஆகா காலத்துக்கேற்ற அழகான உவமை:)! ரசித்தேன். பத்து நாள்? ம்ம், நான் பதிவிடும் வேகம் இடைவெளி தெரியுமாகையால் என் கணிப்பொறிக்கு அந்த ஏக்கம் வராதென்றே நினைக்கிறேன்:)!
புதுகைத் தென்றல் said...
பதிலளிநீக்கு// சொன்னது கொஞ்சம் தான்னாலும் அது சொல்லாததையும் சொல்லுது./
அப்படி சொல்லாததையும் சொல்லணும் என்றே நான் முயற்சித்தது தென்றல், அதை கண்டுகொண்டு குறிப்பிட்டிருப்பதற்கு நன்றிகள்!
// அருமை வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
எங்க நம்ம வீட்டுபக்கம் ஆளையே காணோம்? நலம் தானே??//
நன்றி, ஹி உடனேயே ‘காஃபி வித் தென்றல்’ அருந்த வந்து விட்டேனே:)!
Mrs.Dev said...
பதிலளிநீக்கு//தூங்கிப் போன குழந்தையின் வெளிப்படுத்தப் படாத ஏக்கம் எப்படி அடுத்தடுத்து படியுது பாருங்க செய்தித் தாள் மேலயும் அப்புறம் அதன் அம்மாவுக்குள்ளும், ம்...கவனிப்பு தேவைப் படுது பாருங்க உயர் திணை முதல் அக்றிணை வரை எல்லாருக்குமே .நல்லா இருக்குங்க கவிதை.வெற்றி பெற வாழ்த்துகள் .//
மிக அழகான புரிதல் கார்த்திகா. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//வெகு அழகாக எடுத்துச் சொல்லிவிட்டிர்கள். ஏக்கம் சரியன தலைப்பு.
குழந்தைகளின் வாழ்க்கையில் நானும் தொலைத்த தருணங்கள் அனேகம்.//
எல்லோர் வாழ்விலும் நிகழக் கூடிய ஒன்றுதானே வல்லிம்மா?
//அதையும் மீறிக் குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் என்னை நினைக்கும் போது நெகிழ்ந்துவிடுகிறேன்.//
வேறென்ன வேண்டும். அன்பான உங்கள் குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
//வாழ்த்துகளும் ஆசிகளும்//
கூடவே எப்போதும் இருக்க வேண்டி, என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.
T.V.Radhakrishnan said...
பதிலளிநீக்கு// கவிதை மிக அருமை.//
மிகவும் நன்றி டி.வி.ஆர் சார்!
கவிதை(கள்) said...
பதிலளிநீக்கு//கொள்ளை அழகு கவிதை//
நன்றிகள் விஜய்.
//இருபதில் ஒருவராகிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள் //
இருத்தலின் அடையாளமாகத்தான் போட்டியில் கலந்துக்கிறது:)! உங்களுக்குப் பிடித்திருப்பதே எனக்கான பரிசு. அன்பான வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்.
மாதேவி said...
பதிலளிநீக்கு//வெற்றி பெற வாழ்த்துக்கள் படமும் கவிதையும் அருமை.//
கவிதையோடு படத்தையும் பாராட்டியிருப்பதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மாதேவி.
தமயந்தி said...
பதிலளிநீக்கு// ஏக்கம்..இன்று ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும்...//
சரியாச் சொன்னீங்க தமயந்தி. வருகைக்கு நன்றி.
கிரி said...
பதிலளிநீக்கு// போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)//
நன்றி கிரி! மேலே எதுவும் கேட்க மாட்டேன்:)!
அமுதா said...
பதிலளிநீக்கு//அருமையாக சொல்லிவிட்டீர்கள்... யதார்த்தம்...வெற்றிபெற வாழ்த்துக்கள்//
யதார்த்த வாழ்வை வெகுஅழகாகக் கவிதைகளில் கொண்டு வரும் உங்களிடமிருந்து வந்துள்ள பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்களுக்கும் நன்றி அமுதா.
சரண் said...
பதிலளிநீக்கு//சில நேரங்களில் எதற்கு ஓடுகிறோம் என்பதை யோசித்துப் பார்த்தால் ஏக்கமே மிஞ்சுகிறது.//
உண்மைதான்.
// இது ஒருவரின் அனுபவம் இல்லை . ஒவ்வொருவரின் அனுபவமாகத்தான் இருக்கும். //
இருக்கக் கூடும். வாழ்த்துக்களுக்கும் நன்றி சரண்.
நிலாரசிகன் said...
பதிலளிநீக்கு// அருமை!//
உங்களின் பாராட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. வருகைக்கு நன்றி நிலாரசிகன்.
/ மடிப்புக்கலையா அழகுடன்
பதிலளிநீக்குபிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்.//
உங்களின் புது முயற்சிக்கும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் :-)
அண்ணாதுரை said...
பதிலளிநீக்கு//மழலை நிகழ்வுகள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..//
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாதுரை.
முரளிகுமார் பத்மநாபன் said...
பதிலளிநீக்கு//கவிதை அருமையாக இருக்கிறது, வெற்றிபெற வாழ்த்துக்கள், இவர்களுக்கெல்லாம் பரிசு கிடைக்கும் என்று நான் நினைக்கும்னபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. சபாஷ்... சரியான போட்டி//
உங்கள் எண்ணமே அழகான பரிசு. நன்றி முரளிகுமார்.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஏக்கம் ..குழந்தைகள் மனதில் நிலையாய் தங்குவதில்லை...//
எவ்வளவு அழகாய் சொல்லி விட்டீர்கள் ஸ்ரீராம், உண்மைதான். அதையே நாம் சாதகமாக எடுத்துக் கொள்கிறோமோ என்கிற குற்ற உணர்வும் மேலிடுகிறது. கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
aambal samkannan said...
பதிலளிநீக்கு// 'அப்புறமாய் சொல்லுடா' அவசர உலகத்தில் ஒவ்வொறு
பெற்றோரும் உதிர்க்கும் வார்த்தை குழந்தையிடத்தில்.//
அப்படி சொல்லியிராதவர்களைப் பாராட்டத்தான் வேண்டும். தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Aambal Samkannan.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி..
( இங்க நேர்மாறா எவ்வளவு கெஞ்சினாலும் ஸ்கூல்ல என்ன நடந்ததுன்னு எனக்குத்தெரியவே தெரியாதுன்னு சொல்றானே நான் என்ன செய்ய அவ்வ்வ்.. ) :)//
இப்படிக் கெஞ்ச வேண்டியதும் நடக்குமுங்க சமயத்தில்:))! எல்லாம் ஒரு பருவம்:)! வாழ்த்துக்களுக்கு நன்றி முத்துலெட்சுமி.
Mrs.Menagasathia said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்.
கவிதை,புகைப்படம் மிக அருமை.//
நன்றி மேனகாசத்யா. படத் தேர்வும் பிடித்ததில் மகிழ்ச்சி.
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//ஏக்கத்தை அழகான வார்த்தைகளில் கோர்த்து இருக்கிறீர்கள். அனைவரின் கண்கள் கலங்கும் படி. அருமை.//
உங்கள் மனதைத் தொடும்படி அமைந்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி ஆனந்த்.
ஜெரி ஈசானந்தா. said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்//
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜெரி ஈசானந்தா.
S.A. நவாஸுதீன் said...
பதிலளிநீக்கு//அருமை அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்//
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நவாஸுதீன்.
ஜெஸ்வந்தி said...
பதிலளிநீக்கு//பிடித்திருக்கிறது தோழி. அன்றாடம் நாம் செய்வது தான். மனதைத் தொடுகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
தங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெய்வந்தி. வாழ்த்துக்களுக்கும் நன்றி.
thenammailakshmanan said...
பதிலளிநீக்கு//அருமை ராம லெஷ்மி
வெற்றி பெற வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் Thenammailakshmanan. [தமிழில் உச்சரிப்பு தேனம்மை லெக்ஷ்மணன் என்பது சரிதானாங்க?]
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
பதிலளிநீக்கு//அழகு! வெற்றி பெற வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சரவணக்குமார்.
வருண் said...
பதிலளிநீக்கு//உங்க "ஏக்கம்" நல்லாயிருக்குங்க! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி!//
பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க வருண்:)!
PPattian : புபட்டியன் said...
பதிலளிநீக்கு//அழகிய ஏக்கம்.. வாழ்த்துகள்..//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புபட்டியன்.
விக்னேஷ்வரி said...
பதிலளிநீக்கு//ரொம்ப நல்லாருக்கு. மீண்டும் படித்தேன்.//
மகிழ்ச்சி விக்னேஷ்வரி. உங்கள் முதல் வருகைக்கும் நன்றி. மீண்டும் அவசியம் வாங்க.
ஆதிமூலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//என்ன சொல்ல.. பிரமாதம்.!//
இது போதுமே! நன்றி ஆதி:)!
Priya said...
பதிலளிநீக்கு//அழகான கவிதை...//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா.
RAMYA said...
பதிலளிநீக்கு//முதலில் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி!//
நன்றி ரம்யா.
RAMYA said...
பதிலளிநீக்கு//ஒரு குடுபத்தலைவியின் ஒய்வு ஒழிச்சல் இல்லாத கடமைகள் அவளை துரத்த அவளையே அவள் கவனித்துக் கொள்ள முடியாத சூழ்நிலைதான். தினம் தினம் உருவாகும் சூழல்.
வரிகளில் மௌனம் இழையோடி இருந்தாலும்... ஏக்கம் மேலோங்கி இருந்த போதிலும்! இன்னமும் வரிகளின் அர்த்தம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது..
அந்தக் பெண் குழந்தை படம் அருமை!//
அழகான புரிதலுடன் கவிதைக்கான படத்தையும் ரசித்திருப்பதற்கு மீண்டும் நன்றிகள் ரம்யா.
தியாவின் பேனா said...
பதிலளிநீக்கு//வாழ்த்துகள்.//
நன்றிகள் தியாவின் பேனா.
எம்.எம்.அப்துல்லா said...
பதிலளிநீக்கு//அக்கா இது கவிதை அல்ல. உங்களை நோக்கிய விமர்சனத்திற்கு பதில்.//
ஆமாம் அப்துல்லா, நன்னெறி பேசாமல், நேராக நீதி சொல்லாமல் என் வழக்கமான பாணியிலிருந்து விலகி முயற்சித்ததே. விமர்சனங்கள் நம்மை செம்மைப் படுத்திக் கொள்ளத்தானே. எல்லாம் நன்மைக்கே.
//சபாஷ்//
ஒருபக்கம் முன் போலவே தொடர்ந்தாலும் இம்மாதிரியான முயற்சிகளும் தொடர்ந்து வரும். புது முயற்சியென்பதை உன்னிப்பாகக் கவனித்துத் தந்திருக்கும் ஊக்கத்துக்கு என் நன்றிகள் அப்துல்லா.
Vidhoosh said...
பதிலளிநீக்கு//ம்ச்...என்னங்க..இதை விட என்ன வேலை...//
கேளுங்க வித்யா நல்லாக் கேளுங்க. இப்படிக் கேட்கணுங்கிறதுக்காகவேதான் இக்கவிதை. வாழ்த்துக்களுக்கு நன்றி:)!
" உழவன் " " Uzhavan " said...
பதிலளிநீக்கு***/ / மடிப்புக்கலையா அழகுடன்
பிரிக்கப்படாமல் கிடந்த
அன்றைய செய்தித்தாள்.//
உங்களின் புது முயற்சிக்கும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் :-)/***
உங்கள் வாழ்த்துக்களுடன் புது முயற்சிகள் தொடரும். நன்றி உழவன்:)!
கவிதையை நன்றாக செதுக்கியுள்ளீர்கள்...எனது வாழ்த்துக்களும்....
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு.... வெற்றிபெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவரிகளில் நிகழ்காலத்தின் நிதர்சனங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
இதுபோல இன்னும் எத்தனை ஏக்கங்களை இனங்காணாமல் விட்டிருக்கிறோமோ எனும் குற்ற உணர்ச்சியே மேலிடுகிறது.
பதிலளிநீக்குகவிதையும் புகைப்படமும் அருமை.
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா.
க.பாலாசி said...
பதிலளிநீக்கு// கவிதையை நன்றாக செதுக்கியுள்ளீர்கள்...எனது வாழ்த்துக்களும்....//
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பாலாசி.
சி. கருணாகரசு said...
பதிலளிநீக்கு// கவிதை நல்லாயிருக்கு.... வெற்றிபெற வாழ்த்துக்கள்.//
நன்றிகள் கருணாகரசு.
தியாவின் பேனா said...
பதிலளிநீக்கு//வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
மீண்டும் நன்றிகள் தியாவின் பேனா.
அத்திரி said...
பதிலளிநீக்கு//வரிகளில் நிகழ்காலத்தின் நிதர்சனங்கள்.
வாழ்த்துக்கள்//
கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் அத்திரி.
சுந்தரா said...
பதிலளிநீக்கு//இதுபோல இன்னும் எத்தனை ஏக்கங்களை இனங்காணாமல் விட்டிருக்கிறோமோ எனும் குற்ற உணர்ச்சியே மேலிடுகிறது.//
உண்மைதாங்க.
//கவிதையும் புகைப்படமும் அருமை.
வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி அக்கா.//
மிகவும் நன்றி சுந்தரா.
நல்லா இருக்குங்க. பரிசு பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு@ Shakthiprabha,
பதிலளிநீக்குகருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ஷக்தி.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. அந்த குழந்தை மாதிரி நானும் கூட சிறு வயதில் ஏங்கியிருக்கேன். வெற்றி பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகல்யாணி சுரேஷ் said...
பதிலளிநீக்கு//கவிதை ரொம்ப நல்லா இருக்கு. அந்த குழந்தை மாதிரி நானும் கூட சிறு வயதில் ஏங்கியிருக்கேன். வெற்றி பெற வாழ்த்துகள்.//
ஆமாங்க, பெற்றவராக மட்டுமின்றி குழந்தையாகவும் இந்த அனுப்வத்தைப் பலரும் கடந்திருப்போம்தான்.
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் கல்யாணி சுரேஷ்.
நியமான உண்மைகளை
பதிலளிநீக்குகவியில் தந்த விதம் அழகு
ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வு இது .
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ நினைவுகளுடன் -நிகே-,
பதிலளிநீக்குகருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நிகே!
அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
அருமை மேடம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு@ திகழ்,
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் திகழ்.
@ Truth,
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ட்ரூத்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்... போட்டிக்கும்..கவிதைக்கும். தினம் தினம் நடக்கும் சங்கடம்தான் இது...
பதிலளிநீக்குநல்ல அருமையாக கவிதை,
பதிலளிநீக்குகவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ பலா பட்டறை,
பதிலளிநீக்குகருத்துக்கும் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பலா பட்டறை.
@ Jaleela,
பதிலளிநீக்குரசிப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி ஜலீலா.
குழந்தையின் ஏக்கம் மட்டுமல்ல; தாயின் ஏக்கத்தையும் சேர்த்தே சரம் தொடுத்திருக்கிறீர்கள், அழகாக.
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ அம்பிகா,
பதிலளிநீக்குதங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் அம்பிகா.
உணர்வுகளின் வெளிப்பாடு அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குரெம்ப தாமதமா வந்துட்டேனா.. நல்லா இருக்கு போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான கவிதை நண்பரே... உண்மையும் கூட,,, வெற்றி பெற வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅவனி அரவிந்தன் said...
பதிலளிநீக்கு// உணர்வுகளின் வெளிப்பாடு அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அரவிந்தன்.
நசரேயன் said...
பதிலளிநீக்கு// ரெம்ப தாமதமா வந்துட்டேனா.. நல்லா இருக்கு போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்//
எப்போது வந்தால் என்ன, வருகைதானே முக்கியம்:)! கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நசரேயன்.
காயத்ரி said...
பதிலளிநீக்கு//அருமையான கவிதை நண்பரே... உண்மையும் கூட,,, வெற்றி பெற வாழ்த்துக்கள்...//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் காயத்ரி.
எப்படியெல்லாம் நமது நேரம் தொலைந்து போய்விடுகிறது, நமது நேரம் நம்மால் சரியாகப் பயன்படுத்த இயலவில்லையே என உணர்வுப்பூர்வமாக சொல்லிவைத்த கவிதை. பிரமாதம்.
பதிலளிநீக்குவெற்றி பெற வாழ்த்துகள்.
@ வெ.இராதாகிருஷ்ணன்,
பதிலளிநீக்குThanks a lot sir.
வெற்றி பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்கு@ சக்தியின் மனம்,
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி.