கருப்பு வெள்ளைக் காவியங்கள்
கண் நிறைக்கும் ஓவியங்கள்
எதைக் கொடுக்கட்டும் சொல்லுங்கள்!
கண் நிறைக்கும் ஓவியங்கள்
எதைக் கொடுக்கட்டும் சொல்லுங்கள்!
மின்னும் கண்களுடன்
மிடுக்காய் தேவதை!
மிடுக்காய் தேவதை!
இனிய புன்னகை சிந்தி
இதயத்தை அள்ளும் இளவரசி!
இதயத்தை அள்ளும் இளவரசி!
இறைவன் படைப்பில் ஒவ்வொரு
உறுப்பும் தாளாத வியப்பு!
உள்ளங்காலில் முடிகின்ற பிரமிப்பு
உச்சந்தலையில் அன்றோ ஆரம்பிக்கிறது?
ஆகா, என்னே ஒரு வடிவமைப்பு!
உறுப்பும் தாளாத வியப்பு!
உள்ளங்காலில் முடிகின்ற பிரமிப்பு
உச்சந்தலையில் அன்றோ ஆரம்பிக்கிறது?
ஆகா, என்னே ஒரு வடிவமைப்பு!
ஆக இந்த மாத போட்டிக்கான தலைப்பாக PiT அறிவித்திருப்பது கருப்பு வெள்ளைப் படங்கள்! வழக்கம் போல ‘உள்ளேன் ஐயா’ என்று வருகைப் பதிவின் போது குரல் கொடுக்க வந்திருக்கிறேன் நானும்! மூன்றிலே முதலாவதில் ஒளியமைப்பு[லைட்டிங்] கூடுதல் சிறப்போ எனத் தோன்றுகிறது எனக்கு! சரி உங்களுக்கு? சொல்லி விட்டுப் போங்களேன், நாளைக்கு அனுப்பவிருக்கிறேன் போட்டிக்கு:)!
*** *** ***
அக்கா இரண்டாம் படம் அழகா இருக்கு! நல்ல ஸ்மைல்~!
பதிலளிநீக்குமூனாவது படம் என்னகு பிடிச்சு இருக்கு...
பதிலளிநீக்குஎன்ன இது ஆளுக்கு ஒரு படமா மாத்தி சொல்லுறாங்களே குழப்பமாகீதா
தமிழ் பிரியன் said...
பதிலளிநீக்கு//அக்கா இரண்டாம் படம் அழகா இருக்கு! நல்ல ஸ்மைல்~!//
சரி இளவரசியின் இனிய புன்னகை வென்றது உங்களை, நன்றி!
அக்கா...முதல் படம் அனுப்புங்க!
பதிலளிநீக்குநாகை சிவா said...
பதிலளிநீக்கு//மூனாவது படம் என்னகு பிடிச்சு இருக்கு...//
ஆமாங்க வித்தியாசமான ஷாட்தானே அது:)?
//என்ன இது ஆளுக்கு ஒரு படமா மாத்தி சொல்லுறாங்களே குழப்பமாகீதா//
PiT போட்டியில கலந்து கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இந்த மாதிரி குழப்பமெல்லாம் “ரொம்ப சகஜமப்ப்பா!” ஆகிவிட்டது:))!
கருத்துக்கு நன்றி சிவா!
எல்லா படங்களும் அருமை அக்கா. இருப்பினும் 2-வது படம் அருமை அக்கா. குழந்தையின் சிரிப்பை விட சிறந்த எது?
பதிலளிநீக்குநிஜமா நல்லவன் said...
பதிலளிநீக்கு// அக்கா...முதல் படம் அனுப்புங்க!//
இங்க பாருங்கப்பா, முதல் படத்துக்கும் விழுந்தாச்சு வோட்டு. சிவா கேட்டுக்கோங்க:)!
நன்றி நிஜமா நல்லவன்!
இதோ, முழுக் குழப்பம் வரட்டும். என் வாக்கு முதல் படத்துக்கே! மூன்றுமே அருமை என்றாலும், எனக்கு முதல் படம்தான் மிகவும் பிடிச்சிருக்கு :)
பதிலளிநீக்குஉங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் :)))))
அனுஜன்யா
கடையம் ஆனந்த் said...
பதிலளிநீக்கு//எல்லா படங்களும் அருமை அக்கா. இருப்பினும் 2-வது படம் அருமை அக்கா. குழந்தையின் சிரிப்பை விட சிறந்த எது?//
நன்றி ஆனந்த்! உண்மை உண்மை மழலையின் சிரிப்பில் மனதை விடாதவர் உண்டா என்ன?
புன்னகை சிந்தி இதயத்தை அள்ளுகிறாள் இளவரசி...
பதிலளிநீக்குமுதல் படம்...அனுப்பலாம்...
பதிலளிநீக்குமுதல் படம் நல்லா இருக்கு!
பதிலளிநீக்குஅப்போ ரெண்டாவது படம்?
அதுவும் . நல்லா இருக்கு !
முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு!
ரெண்டாவது படமும் ரொம்ப நல்லா இருக்கு!
ம்ம்ம் ....அப்போ மூணாவது படம்?
முதல் ரெண்டு படத்துல எது நல்லா இருக்குங்குற குழப்பத்துல
தலைய குனிஞ்சுகிட்டு மூணாவது படம்!
இரண்டாம் படம் நல்லா இருக்கு:)
பதிலளிநீக்குகொஞ்சம் பிரயத்தனப்பட்டு எடுக்கப்படும் புகைப்படங்களே வெற்றிக்கோட்டின் விளிம்பில் வந்து நிற்கின்றன சில சமயங்களில் வெற்றி பெற்றும் கூட.... அந்த வகையில் என்னோட தேர்வு தேர்டு :))))))
பதிலளிநீக்கு(பாவம் அந்த குட்டி பையன் தலை குனிஞ்சு நிக்கிறான்ல - முகம் காட்டவே பெரிதும் விரும்பும் குழந்தைகளுக்கு மத்தியில்...!)
மூன்று படங்களுமே ஒவ்வொரு விதத்தில் அழகோ...அழகு தான் .
பதிலளிநீக்குமுதல் படத்தில் இருக்கும் குழந்தையின் கண்களில் பளிச்சிடும் ஒளி அந்தப் படத்தின் பிளஸ் .
இரண்டாவது படைத்துக் குழந்தையின் கண்களில் காணும் குளுமை அழகு .இது சாத்வீகம் .
மூன்றாவது படத்தில் இருக்கும் குழந்தையின் உச்சந்தலை சுழியின் துல்லியம் அந்தப் படத்தின் சிறப்பம்சம் .கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுழிக்குள் சுழன்று மூழ்கிகாணாமல் போய்விடுவோம் போல!?
என் முதல் ஓட்டு மூன்றாவது படத்திற்கே .
இரண்டாமிடம் முதல் படத்திற்கு
மூன்றாமிடம் இரண்டாவது படத்திற்கு .
எனக்குப் பிடித்த வகையில் வகைப் படுத்தி விட்டேன்.மொத்தத்தில் எல்லாப் படங்களுமே நன்று .
மூன்றும் அருமை.
பதிலளிநீக்கு1. க்ளாரிட்டி
2. லைவ்லிநெஸ்
3. வீ ஆர் தெ பாஸ்
அனுஜன்யா மற்றும் ஆயில்யன் கருத்துகளுக்கு, எனது
அதே ! அதே !!
அருமை!
பதிலளிநீக்குஉங்கள் முன்னேற்றம் படங்களில் நன்கு தெரிகிறது
பதிலளிநீக்குஇரண்டாவது படத்திற்கே முன்னுரிமை! மூன்று படங்களுமே அனுப்பக்கூடாதா?
பதிலளிநீக்கு***ஆக இந்த மாத போட்டிக்கான தலைப்பாக PiT அறிவித்திருப்பது கருப்பு வெள்ளைப் படங்கள்! வழக்கம் போல ‘உள்ளேன் ஐயா’ என்று வருகைப் பதிவின் போது குரல் கொடுக்க வந்திருக்கிறேன் நானும்! மூன்றிலே முதலாவதில் ஒளியமைப்பு[லைட்டிங்] கூடுதல் சிறப்போ எனத் தோன்றுகிறது எனக்கு! சரி உங்களுக்கு? சொல்லி விட்டுப் போங்களேன், நாளைக்கு அனுப்பவிருக்கிறேன் போட்டிக்கு:)!***
பதிலளிநீக்குஎனக்கு எது சிறப்பா இருக்குனு சொல்லத் தெரியலை :-). They all look cute :-)
அனுஜன்யா said...
பதிலளிநீக்கு//இதோ, முழுக் குழப்பம் வரட்டும். என் வாக்கு முதல் படத்துக்கே! மூன்றுமே அருமை என்றாலும், எனக்கு முதல் படம்தான் மிகவும் பிடிச்சிருக்கு :)//
ஆமாம் மூன்றுமே அருமைதான். மொதப் படத்துல லைட்டிங் ஒரு ப்ளஸ்ஸா தோன்றியது எனக்கு.
// உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் :)))))//
’உள்ளேன் ஐயா’ போடத்தான் உள்ளே நுழைந்திருக்கிறேன் என்றாலும் ராங்க் கொடுத்தால் வேண்டாமென்றா சொல்வேன்:))? வாழ்த்துக்களுக்கு நன்றி!
அமுதா said...
பதிலளிநீக்கு//புன்னகை சிந்தி இதயத்தை அள்ளுகிறாள் இளவரசி...//
உங்கள் புகழ் ஆரம் இளவரசியின் கழுத்தில் விழுந்தாயிற்று:)! நன்றி அமுதா!
தமிழன்-கறுப்பி... said...
பதிலளிநீக்கு//முதல் படம்...அனுப்பலாம்..//
ரைட், தமிழன் நன்றி:)!
இரண்டாம் படம் நல்லா இருக்கு
பதிலளிநீக்குஅடேயப்பா
பதிலளிநீக்குஒண்னைஒண்ணு மிஞ்சுதே! எப்படி ராமலஷ்மி இவ்ளோ அழகா எடுக்கறீங்க! மூணுமே பிரம்மாதம்!
மூணுமே அற்புதம் - மூணையும் அனுப்பலாம் - விதிமிஉறைகள் ??? - சரி சரி மூணாவது எனக்கு ரொம்பப் பிடிச்ச்சிருக்கு - அப்புறம் ரெண்டாவது - அப்புறம் ஒண்ணாவதூ
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
உங்களுக்குத்தான்ன் இத்தடவை பரிசு
இரண்டாம் படத்தில் உள்ள குழந்தையின் சிரிப்பு அப்படியே அள்ளிக் கொள்கிறது..
பதிலளிநீக்குநாலாவது படம் தான் ரொம்ப அருமை. என்னது நாலாவதா? ஆமா, நீங்க எதிர்காலத்துல எடுக்கப் போகும் படம். ஹிஹி. :))
பதிலளிநீக்குசரி, ரெண்டு நல்ல சாய்ஸ்னு தோணுது.
Ilavarasi! :)
பதிலளிநீக்குஇரண்டாவது படம் தான் ரொம்பவே அழகு.வெகுளியான சிரிப்பு.
பதிலளிநீக்குகுழந்தைகளே அழகு தான்....
மூனுமே மிச்சமா இருக்குங்க
பதிலளிநீக்குஎத சொல்ல படத்துக்கானா பாடர் இன்னும் அழக கூட்டுதுங்க.
முதல் ரண்டுமே அழகா இருக்குகா.
வாழ்துக்கள்
இரண்டாவது படம் செம க்யூட்.. குறும்பு, சந்தோஷம் எல்லாம் கொட்டிக் கிடக்குது குட்டிப் பாப்பா முகத்தில்.. போட்டிக்கு இதை அனுப்புங்க.. ( அனுப்பிட்டிங்களோ? )
பதிலளிநீக்குமுதல் படம் நன்றாக இருக்கிறது.. ஆனால் இரண்டாவது படம் தான் ஈர்க்கும் விதத்தில் இருக்கு..
மூன்றாவது படம் செம கிரியேட்டிவிட்டி.. :))
ஷா(ர்)ட்டா சொல்லிடறேன்..
பதிலளிநீக்குமுதல் படம் தரமாக இருக்கிறது.. இரண்டாவது படம் அழகாக இருக்கிறது.. :))
ஜீவன் said...
பதிலளிநீக்கு//முதல் படம் நல்லா இருக்கு!//
சரி.
//அப்போ ரெண்டாவது படம்?
அதுவும் . நல்லா இருக்கு !//
சரி சரி.
// முதல் படம் ரொம்ப நல்லா இருக்கு!
ரெண்டாவது படமும் ரொம்ப நல்லா இருக்கு!//
ஆங்:o....!
//ம்ம்ம் ....அப்போ மூணாவது படம்?
முதல் ரெண்டு படத்துல எது நல்லா இருக்குங்குற குழப்பத்துல தலைய குனிஞ்சுகிட்டு மூணாவது படம்!//
இந்த கமெண்ட் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு:)))! நன்றி ஜீவன்:)!
எம்.எம்.அப்துல்லா said...
பதிலளிநீக்கு// இரண்டாம் படம் நல்லா இருக்கு:)//
நன்றி அப்துல்லா!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு// கொஞ்சம் பிரயத்தனப்பட்டு எடுக்கப்படும் புகைப்படங்களே வெற்றிக்கோட்டின் விளிம்பில் வந்து நிற்கின்றன சில சமயங்களில் வெற்றி பெற்றும் கூட....//
உண்மைதான் ஆயில்யன்.
//அந்த வகையில் என்னோட தேர்வு தேர்டு :))))))//
அட்டகாசம்தானே:)? ஆனால் பிரயத்தனப் பட்டேன் என்பதைவிட மனதில் சட்டென பட்டதை பட்டென எடுத்தேன் குழந்தையின் அற்புத ஒத்துழைப்புடன் என்பதே சரி:)!
//(பாவம் அந்த குட்டி பையன் தலை குனிஞ்சு நிக்கிறான்ல - முகம் காட்டவே பெரிதும் விரும்பும் குழந்தைகளுக்கு மத்தியில்...!)//
முகம் காட்ட வச்சும் அடுத்தடுத்த எடுத்ததாலே குட்டிக்கு வருத்தமில்லை:)!
மிஸஸ்.டவுட் said...
பதிலளிநீக்கு//மூன்று படங்களுமே ஒவ்வொரு விதத்தில் அழகோ...அழகு தான் .//
வாங்க டவுட். உங்கள் முதல் வருகைக்கு நன்றி. அதுவும் பாருங்க என் டவுட்டை க்ளியர் பண்றதுக்குன்னே வந்துருக்கீங்க.
//முதல் படத்தில் இருக்கும் குழந்தையின் கண்களில் பளிச்சிடும் ஒளி அந்தப் படத்தின் பிளஸ் .//
ஆமாங்க, அதான் ‘மினுங்கும் கண்கள்’னு வியந்திருக்கிறேன்.
//இரண்டாவது படைத்துக் குழந்தையின் கண்களில் காணும் குளுமை அழகு .இது சாத்வீகம் //
ரைட்.
//மூன்றாவது படத்தில் இருக்கும் குழந்தையின் உச்சந்தலை சுழியின் துல்லியம் அந்தப் படத்தின் சிறப்பம்சம் .கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுழிக்குள் சுழன்று மூழ்கிகாணாமல் போய்விடுவோம் போல!?//
உங்களைப் போலவே அந்த மூன்றாவது படம் பலரையும் ஈர்த்திருக்கிறது. விரிவான விமர்சனத்துக்கு மிக்க நன்றி:)!
சதங்கா (Sathanga) said...
பதிலளிநீக்கு//மூன்றும் அருமை.//
தேங்க் யூ, சதங்கா:)!
// 1. க்ளாரிட்டி
2. லைவ்லிநெஸ்
3. வீ ஆர் தெ பாஸ்//
சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள்:)!
//அனுஜன்யா மற்றும் ஆயில்யன் கருத்துகளுக்கு, எனது
அதே ! அதே !!//
நன்றி நன்றி:)!
ஜோதிபாரதி said...
பதிலளிநீக்கு// அருமை!//
மிக்க நன்றி!
கிரி said...
பதிலளிநீக்கு//உங்கள் முன்னேற்றம் படங்களில் நன்கு தெரிகிறது//
நன்றி கிரி:)!
ஈகோவை விட்டிடுங்கன்னு சொல்லிட்டீங்க .எங்கே காணவில்லையே.
பதிலளிநீக்குஆஹா இந்த குழந்தைகள் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்! எல்லாம் கொள்ளை அழகு. சுத்தி போட சொல்லுங்க பிரண்ட்!!!
பதிலளிநீக்குகுடந்தைஅன்புமணி said...
பதிலளிநீக்கு// இரண்டாவது படத்திற்கே முன்னுரிமை!//
நன்றி அன்புமணி!
//மூன்று படங்களுமே அனுப்பக்கூடாதா?//
கூடாது:)! நீங்கள் வலைக்குப் புதியவர் என நினைக்கிறேன். பதிவின் கடைசியில் ‘கருப்பு வெள்ளைப் படங்கள்’ என்கிற சுட்டியைச் சொடுக்குங்கள். பிட் வலைப்திவில் விவரங்களைக் காணுங்கள்:)! கூடவே அங்கு இதுவரை வந்திருக்கும் படங்களின் அணிவகுப்பையும் கண்டு மகிழுங்கள்!
வருண் said...
பதிலளிநீக்கு// எனக்கு எது சிறப்பா இருக்குனு சொல்லத் தெரியலை :-). They all look cute :-)//
நன்றி வருண். இப்படி நீங்கள் யாவரும் தந்த பாராட்டிலேயே பரிசு கிடைத்ததாய் மனம் நிறைந்து விட்டது:)!
தங்கராசா ஜீவராஜ் said...
பதிலளிநீக்கு// இரண்டாம் படம் நல்லா இருக்கு//
அக்கறையான கருத்துக்கு மிக்க நன்றி ஜீவராஜ்.
ஷைலஜா said...
பதிலளிநீக்கு// அடேயப்பா
ஒண்னைஒண்ணு மிஞ்சுதே! எப்படி ராமலஷ்மி இவ்ளோ அழகா எடுக்கறீங்க! மூணுமே பிரம்மாதம்!//
நன்றி ஷைலஜா:)! நீங்கள் தரும் இப்படியான உற்சாகம்தான் காரணம். மூணும் வென்று விட்டது பரிசை இப்போது உங்கள் பலரது மனம் திறந்த பாராட்டுக்களால்.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு// மூணுமே அற்புதம் - மூணையும் அனுப்பலாம் - விதிமிஉறைகள் ??? - சரி சரி மூணாவது எனக்கு ரொம்பப் பிடிச்ச்சிருக்கு - அப்புறம் ரெண்டாவது - அப்புறம் ஒண்ணாவதூ//
சரி சீனா சார், அக்கறையாய் வரிசைப் படுத்தியிருக்கிறீர்கள்.
//நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
உங்களுக்குத்தான்ன் இத்தடவை பரிசு//
இதோ இந்த வாழ்த்தும் ஆசியும் ஊக்கமுமே எனக்குப் பரிசு.
கார்த்திகைப் பாண்டியன் said...
பதிலளிநீக்கு// இரண்டாம் படத்தில் உள்ள குழந்தையின் சிரிப்பு அப்படியே அள்ளிக் கொள்கிறது..//
இளவரசியின் சிரிப்பிலே எல்லோரையும் போல இதயத்தைத் தொலைத்து விட்டீர்களா கார்த்திகைப் பாண்டியன்? நல்லது நல்லது, நன்றி:)!
ambi said...
பதிலளிநீக்கு//நாலாவது படம் தான் ரொம்ப அருமை. என்னது நாலாவதா? ஆமா, நீங்க எதிர்காலத்துல எடுக்கப் போகும் படம். ஹிஹி. :))//
ஆ அம்பி நாலாவது என்றதும் நான் என்ன நினைத்தேன் தெரியுமா:)? சரி வழக்கம் போல அம்பிக்கு எண்ணத் தெரியவில்லையோன்னு:) ஹிஹி! ஆனாலும் எதிர்காலப் படத்துக்கும் கூறியிருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு நன்றி:)!
//சரி, ரெண்டு நல்ல சாய்ஸ்னு தோணுது.//
மனசிலேயாச்சு:)!
SurveySan said...
பதிலளிநீக்கு// Ilavarasi! :)//
இளவ'ரசி'?
ரசி ரசி!
சரி சரி:)!
sindhusubash said...
பதிலளிநீக்கு// இரண்டாவது படம் தான் ரொம்பவே அழகு.வெகுளியான சிரிப்பு.
குழந்தைகளே அழகு தான்....//
ஆமாம் சிந்து உலகில் மிக அழகு என்றால் குழந்தைகள். அப்புறம்தான் பூக்கள். முதல் பாப்பா முகத்திலே அசாதாரண ஒளி என்றால் ரெண்டாவது பாப்பா முகம் அத்தனை வெகுளி. நல்ல கணிப்புத்தான். நன்றி சிந்து.
கார்த்திக் said...
பதிலளிநீக்கு// மூனுமே மிச்சமா இருக்குங்க
எத சொல்ல படத்துக்கானா பாடர் இன்னும் அழக கூட்டுதுங்க.
முதல் ரண்டுமே அழகா இருக்குகா.
வாழ்துக்கள்//
நன்றி கார்த்திக். எல்லோர் மனதிலும் மூணும் ஒவ்வொரு விதமாய் இடம் பிடித்ததே எனக்குப் பரிசுதான்:)!
கருப்பு வெள்ளைப் படத்துக்கு வெள்ளை கருப்பு பார்டர். நல்லாயிருக்கா:)? கவனமா அதையும் பார்த்து பாராட்டியிருப்பதற்கு நன்றி கார்த்திக்!
SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
பதிலளிநீக்கு//இரண்டாவது படம் செம க்யூட்.. குறும்பு, சந்தோஷம் எல்லாம் கொட்டிக் கிடக்குது குட்டிப் பாப்பா முகத்தில்.. போட்டிக்கு இதை அனுப்புங்க.. ( அனுப்பிட்டிங்களோ? )//
இன்னும் இல்லை சஞ்சய். ரசிப்புக்கு நன்றி.
//முதல் படம் நன்றாக இருக்கிறது.. ஆனால் இரண்டாவது படம் தான் ஈர்க்கும் விதத்தில் இருக்கு..
மூன்றாவது படம் செம கிரியேட்டிவிட்டி.. :))//
மூணாவது படம் அதற்காகவே பதிவிட்டேன்:)! கொஞ்சம் நிழல் விழுந்திருக்கா விட்டால் அதுவே எனது சாய்ஸாக இருந்திருக்கும்:)!
SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...
பதிலளிநீக்கு//ஷா(ர்)ட்டா சொல்லிடறேன்..
முதல் படம் தரமாக இருக்கிறது.. இரண்டாவது படம் அழகாக இருக்கிறது.. :))//
ஷாட்டா மட்டுமல்ல ஸ்ட்ரெய்ட்டாவும் சொல்லிட்டீங்க. புகைப்படத் தரம் என்று பார்த்தால் முதல்தான் என் சாய்ஸும். ‘உள்ளேன் ஐயா’தான் நம்முடைய பங்கு என்பதால் அதிகம் கவலைப் படாமல் இன்று அனுப்பிடுவேன் ஒன்றை போட்டிக்கு:)!
goma said...
பதிலளிநீக்கு//ஈகோவை விட்டிடுங்கன்னு சொல்லிட்டீங்க .எங்கே காணவில்லையே.//
வாங்க கோமா. கடையம் ஆனந்த் தனி மடலில் கேட்டு விட்டார் எங்கே என. நீங்கள் இங்கே:)! ட்ராஃப்டில் வைத்திருந்த பதிவு அது. “ஸ்லிப் ஆஃப் த ஃபிங்கர்:))! தவறுதலாய் இப்போ பப்ளிஷ் ஆகி விட்டது. எனது பாலிஸிதான் உங்களுக்குத் தெரியுமே. வாரம் ஒன்றுதான்:)! அக்கறையான விசாரிப்புக்கு நன்றி.
அபி அப்பா said...
பதிலளிநீக்கு// ஆஹா இந்த குழந்தைகள் பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்! எல்லாம் கொள்ளை அழகு. சுத்தி போட சொல்லுங்க பிரண்ட்!!!//
குழந்தைகளின் வீட்டிலுள்ளோர் அனுமதி வாங்கிய பிறகுதான் பதிவிட்டேன். இப்போது இத்தனை பாராட்டுக்கள் குவிந்ததைக் கூறி சுற்றியும் போடச் சொல்லி விடுகிறேன். சரிதானே ஃப்ரென்ட்:)?
இந்நேரம் அனுப்பியிருப்பீங்க... எனக்குப் பிடிச்சது ரெண்டாவது பாப்பாதான்! :)
பதிலளிநீக்குப்ரெஸென்ட் மேடம்!
பதிலளிநீக்கு@ கவிநயா,
பதிலளிநீக்குஇனி இனிதான் அனுப்பணும். இரவு பனிரெண்டு மணி வரை டைம். அனுப்புற நேரத்தில் நம் மனதுக்குள்ளும் அடிக்கும் பாருங்க ஒரு மணி. அதுதான் புறப்படும் போட்டிக்கு:)!
உங்க அக்கறையான கருத்துக்கும் நன்றி.
எதைக் கொடுத்தேன் என்பது சஸ்பென்ஸ். அறிய விரும்புபவர் மீதியை பிட் திரையில் [பதிவில்] காண்க:))!
திவா said...
பதிலளிநீக்கு// ப்ரெஸென்ட் மேடம்!//
சரிதான் நான் போட்டியின் போது ‘உள்ளேன் ஐயா’ சொல்லப் போகிறேன் என்றதும் நீங்கள் ‘உள்ளேன் அம்மா’ சொல்லிட்டு ஓடப் பார்க்கிறீர்களா:)?
hum!என்ன அக்கா செய்யறது! வேலையோ வேலை ஒரு வாரமா. இப்பதான் அப்பாடா ன்னு உட்காருகிறேன்! இன்னும் அனுப்பலையா? ஆச்சர்யமா இருக்கு!
பதிலளிநீக்கு@ திவா,
பதிலளிநீக்குஅனுப்பியாச்சு:)!
முதல் இரண்டு படங்களும் கொள்ளை அழகுதான் ...ஆனாலும் அவை குழந்தைகள் என்ற தலைப்பிற்குப் பொறுத்தமான படங்கள்.
பதிலளிநீக்குகருப்பு வெள்ளை என்ற ரீதியில் பார்க்கும் பொழுது மூன்றாவது படமே என் தேர்வு.அடர்த்தியாக முடி இருந்திருந்தால் கூட இத்தனை அழகு வெளிப்பட்டிருக்காது.
[முரண்டு என்ற தலைப்பில் போட்டி வைத்தாலும் இந்த படம் தேர்வாகலாம்]
goma said...
பதிலளிநீக்கு//முதல் இரண்டு படங்களும் கொள்ளை அழகுதான் ...ஆனாலும் அவை குழந்தைகள் என்ற தலைப்பிற்குப் பொறுத்தமான படங்கள்.//
உண்மை குழந்தை என்றாலே கொள்ளை அழகே.
//கருப்பு வெள்ளை என்ற ரீதியில் பார்க்கும் பொழுது மூன்றாவது படமே என் தேர்வு.//
அந்த நிழல் மட்டும் விழாமலிருந்தால் வித்தியாசமான படம் என்கிற ரீதியில் அதுவே என் தேர்வாகவும் இருந்திருக்கக் கூடும்:)!
//அடர்த்தியாக முடி இருந்திருந்தால் கூட இத்தனை அழகு வெளிப்பட்டிருக்காது.//
முடியிறக்கிய பின் வளரத் தொடங்கிய பருவம்.
//[முரண்டு என்ற தலைப்பில் போட்டி வைத்தாலும் இந்த படம் தேர்வாகலாம்]//
அடடா, குழந்தை முரண்டே பண்ணாமல் கொடுத்த போஸ் ஆச்சே:)!
3ம் அழகு... அதில் 2வது ரொம்ப அழகு:)
பதிலளிநீக்கு@ பூர்ணிமா,
பதிலளிநீக்குபாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி:)!
அன்பு ராமலக்ஷ்மி லேட்டா வரேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள். அத்தனை அழகா இருக்கு குழந்தைகள். அப்படியே மலர்களாச் சிரிக்கும் இந்தப் பிஞ்சுகளுக்கு என் வந்தனம். படம் எடுத்த உங்களுக்கும் தான். யாரிந்த இளவரசி?????????
மோகனப் புன்னகை வீசிடும் நிலவோ.
சூப்பர்பா. முதல் படப்பென் எதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறாள்;)
மூணாவது படத்திலிருக்கும் முடியிறக்கம் எங்கே நடந்தது ?
இதெல்லாம் என் கேள்விகள் அவ்வளாவு நல்லா இருக்கும்மா.
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு//அன்பு ராமலக்ஷ்மி லேட்டா வரேன்.
வாழ்த்துகள். அத்தனை அழகா இருக்கு குழந்தைகள். அப்படியே மலர்களாச் சிரிக்கும் இந்தப் பிஞ்சுகளுக்கு என் வந்தனம். படம் எடுத்த உங்களுக்கும் தான்.//
வாங்க வல்லிம்மா, எத்தனை லேட்டா வந்தாலும் நீங்க வந்தாலே ஒரு நிறைவு:)!
பாராட்டுக்கு நன்றி. மலர்கள். சரியாச் சொன்னீங்க. முதல் படத்தில் இருப்பது பாச மலர். அறிவுச் சுடர். அழகு தேவதை. என் தங்கையின் பெண்.
//எதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறாள்;)//
எப்போதுமே அந்தக் கண்கள் பிரகாசமாய்தான் இருக்கும்:)!
// யாரிந்த இளவரசி?????????
மோகனப் புன்னகை வீசிடும் நிலவோ.
சூப்பர்பா.//
புன்னகையால் எல்லார் உள்ளமும் கொள்ளை கொண்ட இந்த இளவரசி என் பெரிய அத்தையின் பேத்தி. மறைந்த என் தந்தை தனதருமை மருமகனை [இக்குழந்தையின் தந்தையை] இப்படித்தான் விதவிதமாய் படம் எடுத்திருக்கிறார் அந்தக் காலத்தில். இப்படம் எனக்கு அதை நினைவூட்டியதாகக் கூறியதும் அத்தையும் நெகிழ்ந்தே போனார்.
//மூணாவது படத்திலிருக்கும் முடியிறக்கம் எங்கே நடந்தது ?//
முடியிறக்கம் முருகப் பெருமானுக்கு:)!
//இதெல்லாம் என் கேள்விகள் அவ்வளாவு நல்லா இருக்கும்மா. //
நீங்கள் கேட்டு என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமோ? அன்பான கேள்விகளுக்கு அவ்வண்ணமே பதில்களும்:)! நன்றி வல்லிம்மா.
//மூணாவது படத்திலிருக்கும் முடியிறக்கம் எங்கே நடந்தது ?//
பதிலளிநீக்குமுடியிறக்கம் முருகப் பெருமானுக்கு:)!
முருகப்பெருமானுக்கே முடியிரக்கமா?!!!
goma said...
பதிலளிநீக்கு//முருகப்பெருமானுக்கே முடியிரக்கமா?!!!//
ஹா ஹா என ஹாஸ்ய ரசத்தை சூடாக ஃப்ளாஸ்கில் வைத்துக் கொண்டு ஆங்காங்கே எல்லோருக்கும் ஒரு கப் கொடுத்துக் கொண்டே வருகிறீர்களே கோமா:))? முருகப் பெருமானுக்கு காணிக்கை என்ற அர்த்தத்தில் சொன்னேங்க:)!
//கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுழிக்குள் சுழன்று மூழ்கிகாணாமல் போய்விடுவோம் போல!?
பதிலளிநீக்குஎன் முதல் ஓட்டு மூன்றாவது படத்திற்கே .//
நானும் ரிப்பீட்டு. லேட்டுத்தான். முதல் ரெண்டு மலர்களும் மணம் வீசுகின்றன. மூன்றாவது..'வாழ்கையே ஒரு சுழற்சிதான் பாத்துக்கோ!' என்பதுபோல் அழகாக போஸ் கொடுக்கிறது அந்த வாண்டு!!!
நானானி said...
பதிலளிநீக்கு//நானும் ரிப்பீட்டு. லேட்டுத்தான்.//
நானும் வல்லிம்மாக்கு சொன்ன அதே பதிலை வழிமொழிஞ்சுக்கறேன்:
”எத்தனை லேட்டா வந்தாலும் நீங்க வந்தாலே ஒரு நிறைவு”தான்:)!
//முதல் ரெண்டு மலர்களும் மணம் வீசுகின்றன. மூன்றாவது..'வாழ்கையே ஒரு சுழற்சிதான் பாத்துக்கோ!' என்பதுபோல் அழகாக போஸ் கொடுக்கிறது அந்த வாண்டு!!!//
நன்றி நானானி. மூன்றாவது படத்தில் நான் சொன்னாற் போல அந்த நிழல் விழாதிருந்திருந்தால் அதுவே எனது சாய்சாவும் இருந்திருக்கும்! வித்தியாசமான முயற்சியும்தானே:)?