#1
ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. ஆங்கிலத்தில் Sloth bear எனப்படும், Melursus ursinus எனும் உயிரியல் பெயரைக் கொண்ட, பாலூட்டி விலங்கான கருங்கரடி இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தெரிஞ்சுக்கலாமா?
#2
மற்ற வகைக் கரடிகளோடு ஒப்பிடுகையில் பெயருக்கேற்ப இவை சற்றே மந்தமானவை.
வெளிறிய முகமும், வெண்ணிற வளைந்த கூரிய நகங்களும், பம்பையான மயிரும், தூசு படிந்த கருப்பு அங்கியை அணிந்த மாதிரியான தோற்றமும் ஆசியக் கருங்கரடிகளிலிருந்து இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன. சிறிய கண்களையும், பெரிய முறம் போன்ற காதுகளையும், நீண்ட மூக்கு மற்றும் வாயையும் உடையவை. நெஞ்சினில் கோதுமை நிறத்தில், Y அல்லது U வடிவில் மிருதுவான ரோமம் இருக்கும். 54 முதல் 140 கிலோ வரையிலான எடையும், 5 முதல் 6 அடிகள் வரையிலான நீளமும் கொண்ட உடல். 6 முதல் 7 அங்குலத்திற்கு கரடி இனங்களிலேயே நீண்ட வால்கள் இவற்றுக்கே.

#3
குறைந்த பார்வைத் திறனை உடையவை என்றாலும் நல்ல மோப்ப சக்தியும் கேட்கும் திறனும் கொண்டவை. இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. வேட்டையாடவும் எதிரிகளைத் தாக்கவும் நீண்ட வளைந்த தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சேர்ந்திருக்கும் சகதி அழுக்கு ஆகியவற்றில் பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே, இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி பகுதியில் கரடியால் விவசாயிகள் தாக்கப்படுவது அடிக்கடி நிகழ்கின்றன. நேற்று காலையில் கூட ஊருக்குள் புகுந்து இரண்டு பேரைக் கடித்து விட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
#4
ஈரப்பதமுள்ள வனங்கள், அடர்ந்த முட் புதர் பகுதிகள், பசுமையான மேய்ச்சல் வெளிகள், சல் மரக் காடுகள் ஆகியன இவற்றின் வாழ்விடங்கள்.
பனிக்கரடி, கொடுங்கரடி(Grizzly bear) போல ஊனுண்ணியாக இல்லாமால் இவை அனைத்துண்ணியாக உள்ளன. பொதுவாக கரடி என்றாலே அவற்றுக்குத் தேன் பிடிக்குமெனக் கதைகள் கேட்டிருக்கிறோம். தேனோடு, பழங்கள், பறவை முட்டைகள், எறும்புகள், பூக்கள் ஆகியவற்றையும் விரும்பி உண்கின்றன.
இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. மெது நடை போட்டாலும் உணவுக்காகவும் ஓய்வெடுக்கவும் இலாவகமாக மரமேறக் கூடியவை. வெகு தொலைவுக்கு கேட்கும் வகையில், 16 வெவ்வேறு சூழல்களில், 25 விதமான ஒலிகளை எழுப்பக் கூடியவை. தண்ணீரில் விளையாடவும் நீச்சலடிக்கவும் மிகப் பிடிக்கும்.
சராசரியாக இவை உயிர் வாழும் வயது 35-40 ஆண்டு காலம்.
[படங்கள் யாவும் மூன்று மாதங்களுக்கு முன், ஜம்ஜெட்புர் ‘ஜூப்ளி’ உயிரியல் பூங்காவில் எடுக்கப் பட்டவை.]
#5
அது சரி, கதை அளப்பவர்களைப் பார்த்து “சும்மா.. கரடி விடாதே..” என்று ஏன் சொல்கிறார்கள் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமானால் சொல்லிச் செல்லுங்கள் :)!
- -
‘தெரிஞ்சுக்கலாம் வாங்க..' வரிசையில் முந்தைய சில பதிவுகள்:
சிங்கம் 2 - ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டாம்ல..
புலி வருது.. புலி வருது..
ஒட்டகச்சிவிங்கி
மாம்பழம் சாப்பிடலாம் வாங்க..
மார்னிங் க்ளோரி
பிரம்மக் கமலங்கள்

சுவாரஸ்யமான தகவல்கள். ஏன் அவர்களை கரடி விடுவதாகச் சொல்கிறார்களோ..தெரியாது! ஆனால் நினைவுக்கு வருவது கரடி ரயில் டில்லி!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். கரடி என்றாலே எனக்கு “இரு நண்பர்களும் கரடியும்” கதை நினைவுக்கு வருகிறது:)!
நீக்குஅருமையான படங்கள். தகவல்களும் நன்று.
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி வெங்கட்.
நீக்குசூப்பர் படங்கள் :)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை :)
நீக்குகரடி பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குநன்றி!
கருத்துக்கு நன்றி.
நீக்குஅது மட்டுமா? கரடியின் முடியை தாயத்தில் அடைத்து கட்டிக்கொண்டால் நல்லதுன்னும் சொல்றாங்க. அதுவும் ஏன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க :-))
பதிலளிநீக்குயானை முடியை உபயோகிப்பார்கள் தெரியும். இது புது விஷயமாய் இருக்கே.
நீக்குபல தகவல்கள் இதுவரை அறியாதவை
பதிலளிநீக்குகுறிப்பாக அதன் உணவுப் பழக்கம்
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி sir.
நீக்குதத்துருபமான படங்கள்...
பதிலளிநீக்குபதிவைப் பார்த்தவர்கள் இனி கரடி விடாதே என்ற தொடரைப் பயன்படுத்தமாட்டார்கள்.
பதிலளிநீக்கு