வெள்ளி, 18 அக்டோபர், 2013

"மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல்..." - சுகா

நெல்லை பொருட்காட்சி குறித்த எனது பதிவில்.. மலரும் நினைவுகளாக சுகா அவர்கள் பகிர்ந்து கொண்டது, நீங்களும் இரசிக்க இங்கே:

பொருட்காட்சி சீஸனும், குற்றால சீஸனும் ஒண்ணு போல வர்றதால காத்துல தலைமுடி கலையும். நம்ம ஊரு பாஷைல ஒலையும்.அதனால எப்பவுமே கைவசம் சீப்பு இருக்கும்.

‘தலைய சீவுல. இன்னைக்கு நெறய பிள்ளேள் வந்திருக்கு’.

உள்ளே நுழையும் போதே குஞ்சு சொல்லுவான்.



சீப்பை எடுத்து அவசர அவசரமாக தலை சீவிக் கொள்வேன். ஆனாலும் ஒரு பெண் பிள்ளையும் கடைசி வரைக்கும் திரும்பியே பார்க்காது.

மறக்கவே முடியாத ஜெயிண்ட் வீல், மரணக் கிணறு, அரசு ஸ்டால்கள் . . .


டெல்லி அப்பளம், மொளகா பஜ்ஜி, வருடத்துக்கொருமுறை மட்டும் பார்க்க முடிகிற பேல் பூரி, பானி பூரி, பஞ்சு மிட்டாய், பாண்ட்ஸ் பவுடர், சர்வோதயா சங்கத்து ஜவ்வாது என எல்லா வாசனையும் காற்றில் கலந்து வரும். கூடவே சொக்கு மாமா வீட்டு அத்தை மாதிரியான அந்தக் காலத்துப் பொம்பளைகள் வீட்டில் இருந்தே தயார் பண்ணி கொண்டு வருகிற முறுக்கு, தட்டை மற்றும் மொளகாப் பொடியும், நல்லெண்ணையும் தடவின இட்லி வாசனையும் மூக்கைத் துளைக்கும்.

நாடக அரங்குக்கு எதிரே புல்தரையில் ஜமுக்காளம் விரித்து, கால் நீட்டி உட்கார்ந்தபடி, ‘ஏட்டி! கூட ரெண்டு இட்லி தின்னு. நெறய அவிச்சுட்டேன். அப்புறம் வம்பாப் போயிரும்லா’ என்பாள், சொக்கு மாமாவின் சம்சாரம்.

‘ஆசயா சொல்லுதாங்க. ரெண்டு வாங்கி தின்னுட்டு போவோமேல!’

வெட்கமே இல்லாமல் குஞ்சு கேட்பான்.

குஞ்சுவின் கணக்கு இட்லியல்ல, சொக்கு மாமாவின் மகள் ஈஸ்வரிதான் என்பது எனக்கு தெரியுமென்பதாலும், சொக்கு மாமாவின் பச்சைக்கலர் தண்டி பெல்ட் என் கண்ணுக்கு பளிச்சென்று தெரிவதாலும் குஞ்சுவை அந்த இடத்தை விட்டு இழுத்துச் செல்வேன்.

உங்களின் இந்த நெல்லை அரசுப் பொருட்காட்சி புகைப்படங்களைப் பார்த்தவுடன் எனக்கு இந்த நினைவுகளனைத்தும் மனதில் சுழலத் தொடங்கி விட்டன.

இந்த புகைப்படங்களுக்காக உங்களைப் பாராட்டுவது சரியல்ல. வாழ்வின் அற்புதமான தருணங்களை, அதன் தன்மை கெடாமல்,இயல்பான முறையில் பதிவு செய்திருக்கும் உங்களுக்கு நன்றி சொல்வதுதான் முறை.

நன்றி ராமலக்‌ஷ்மி.


சுகா

**

நன்றி சுகா:)!

****

20 கருத்துகள்:

  1. எங்க ஊர் மாரியம்மன் திருவிழா ஞாபகம் வந்தது...

    சுகா அவர்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. இனிமையான சுகமான நினைவலைகள் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயமாக
    ஒரு சிறு புகைப்படம்
    நம்மை பல சமயங்களில்
    எத்தனை ஆண்டு பின்னோக்கி நகர்த்தி
    மகிழ்வில் திளைக்கவிடுகிறது
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சுகா அவர்களின் நினைவுகளும் அவற்றை எழுதிய விதமும் அழகு. பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டத்திலும் ரசித்தேன். இங்கும்!

    பதிலளிநீக்கு
  6. சுகமான நினைவுகளையும் சுவையான அனுபவங்களையும் மிக அருமையாக பகிர்ந்துள்ளார் சுகா. அதை அழகாக பதிவு செய்த உங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  7. அருமையான நினைவலைகள்...
    பகிர்வுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  8. தெற்கே எல்லா ஊரிலும் நடக்கும் பொருட்காட்சிகள்.எல்லா ஊர்களிலும் அள்ளி தெளிக்கும் நினைவுகள்.சுகா அவர்கள் வர்ணிப்பது மீண்டும் திருவிழாக்களை நினைவுக்கு கொண்டு வந்தது.நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவுக்கு சுகா அவர்களின் பின்னூட்டம் மிக அருமை. அவரை போல மலரும் நினைவுகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin