ஞாயிறு, 7 டிசம்பர், 2014

காண வேண்டிய கானுயிர் உலகம் - பெங்களூரில் சர்வதேச ஒளிபடக் கண்காட்சி (1)

பன்னாட்டுக் கலைஞர்களின் பங்கேற்புடன் ஸ்தம்பிக்க வைக்கும் கானுயிர் ஒளிப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில். 1 டிசம்பர் 2014 அன்று கர்நாடக அரசின் தலைமைச் செயலதிகாரியான திரு. கெளசிக் முகர்ஜி ஆரம்பித்து வைத்த இக்கண்காட்சி இன்று 7 டிசம்பர் நிறைவு பெறுகிறது. ஆர்வமுள்ள ஒளிப்படக் கலைஞர்கள் மற்றும் வாய்ப்புக் கிடைக்கும் அனைவரும் கண்டு இரசிக்கலாம்.

அரங்கின் நான்கு அறைகளில் சுமார் 520 படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் 200, சர்வதேசப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் “17th INTERNATIONAL FEDERATION OF PHOTOGRAPHIC ART(FIAP) NATURE BIENNIAL WORLD CUP"  போட்டியில் வென்ற படங்களும், 120 படங்கள், அகில இந்திய கர்நாடக சுற்றுலா புகைப்படக் கண்காட்சியில் வெற்றி பெற்ற படங்களும் ஆகும். இரண்டு பிரிவுகளில் உலகக் கோப்பையை வென்ற நாடுகள் முறையே இத்தாலியும், தென் ஆப்பிரிக்காவும். இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள்!

விருது பெற்ற இந்தியக் கலைஞர்கள் ஆன ஜெயதேவ் பசப்பா, ஃபிலிப் ரோஸ், க்ளெமென்ட் ஃப்ரான்ஸிஸ் மற்றும் மஞ்சுநாத் SK ஆகியோரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நேற்று சர்வதேச விருது வாங்கிய கிருபாக்கர் செனானி எடுத்த “ Walking with the Wolves" டாகுமென்டரி படம் திரையிடப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் 24 நாடுகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடன் கலைஞர்கள் இக்கண்காட்சிக்காகத் தங்கள் படங்களை அனுப்பி வைத்திருந்தனர். அளவுகள் சற்று சிறிதாக இருப்பினும் நல்ல Print Quality_யில் அமைந்திருந்த படங்கள் அனைத்தும் அப்படியே நேரில் பார்க்கும் உணர்வைத் தந்தன.

 என்னைக் கவர்ந்த படங்கள் சிலவற்றை எடுத்தவரின் பெயரோடு அப்படியே இங்கு உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.

#1


#2

# Survival of the fittest


#4

#5

#6

#7

#8

#9


#10

#11

#12

 #13


#14 WORLD CUP WINNER; SOUTH AFRICA

THEME: INTERACTION#15

#16

#17

#18

#19

#20

#21

#22
பத்திரிகை செய்தியோடு வெளிவந்திருந்த படம்.
எடுத்த கலைஞரும் அங்கிருந்ததால்
நேரில் பாராட்ட முடிந்தது.

#23

கண்காட்சியில் படம் எடுக்கவும் வலையேற்றவும் அனுமதி பெற்றே பகிருகிறேன். யாரும் இப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தி விடக் கூடாதென்பதால் ஃபைல் அளவினை கம்ப்ரெஸ் செய்திருக்கிறேன். கர்நாடாகா மேலூரில் எடுத்த படித்துறை, நெல்லையப்பர் கோவில் இசைத்தூண் உட்பட எனது பல படங்கள் வாட்டர்மார்க் க்ராப் செய்யப்பட்டு பல தளங்களில் வலம் வருகின்றன. தெரிய வந்து விசாரிக்க வழி கிடைக்கையில், சிலருக்கு வாட்டர்மார்க் க்ராப் செய்தே கூகுள் தேடலில் கிடைத்திருக்கிறது. தெரிந்த பின் பெயர் சேர்த்து credit வழங்கும் நட்புகளும் இருக்கிறார்கள். ‘ஆமாம், கிராப் செய்து உபயோகித்தேன். [“இப்ப என்னங்கறீங்க?”:)]  என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். எதுவும் செய்வதிற்கில்லைதான். பலருக்கும் இது போல நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பாதுகாப்புக்காக இந்தப் படங்களின் அளவைக் குறைத்திருப்பதுடன், முத்துச்சரத்தில் copy option தடை எப்போதும் அமலில், atleast எளிதாக எடுத்துச் செல்லாதிருக்க, ஒரு திருப்திக்காக...:).

கர்நாடக சுற்றலா போட்டியில் வென்ற படங்கள் அடுத்த பாகத்தில்..
***


பாகம்: 219 கருத்துகள்:

 1. ஒவ்வொன்றும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 2. நேரில் கண்ட அனுபவம்.. இத்தனை புகைப்படங்கள் ஒன்றாக காணும்போது.. உங்கள் சேவைக்கு . நன்றி. வாழ்க.. வளர்க...

  பதிலளிநீக்கு
 3. ஹைய்யோ!!!!!

  பகிர்தலுக்கு நன்றி.

  யானைக்குடும்பம்...ஆஹா....ஆஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”யானைக் குடும்பம்” குறித்து Times of India_வில் கிடைத்தது இந்தத் தகவல். இப்படம் Jim Corbett தேசியப் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. தேச அளவிலும், சர்வ தேச அளவிலும் பல விருதுகளைப் பெற்ற ஒளிப்படம். இதை எடுத்த கலைஞர் கங்காதர் தொலைபேசித் துறை ஊழியர். சமீபத்தில் இவருக்கு fellowship வழங்கியுள்ளது Royal Photographic Society of London.

   நீக்கு
 4. அனைத்து படங்களும் மிக அருமை.
  பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 5. படங்கள் ஒவ்வொன்றும் அழகு......

  ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 6. ஆஹா... ரசிக்க வைக்கும் படங்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 7. கானுயிர் ஒளிப்படக் கண்காட்சி
  சிறப்பான பகிர்வுகள்.
  அருமையான படங்கள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. உயிரோட்டமான, அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin