பிள்ளையார்பட்டி வரை வந்ததும், பயணத் திட்டத்தில் இல்லாத காரைக்குடி, ஆத்தங்குடி ஆகியனவும் திடீரெனப் பட்டியலில் சேர்ந்து கொண்டன. காரைக்குடி கானாடுகாத்தான் அரண்மனையைப் படம் எடுக்க நான் விரும்பிய போது, அங்கு உள்ளே செல்ல முன் அனுமதி இல்லை பெற்றிருக்க வேண்டுமெனத் தெரிய வர, அதே போன்ற மற்றொரு அரண்மனையான ஆத்தங்குடி லெட்சுமி விலாஸ் சென்று வந்தோம்.
ஆத்தங்குடி (டைல்ஸ்) தரைக் கற்களுக்கும் பெயர் பெற்ற ஊர். சுற்றி வர ஊரின் பல இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை நாம் சென்று பார்க்கலாம். அடுத்து காரைக்குடி செல்ல வேண்டியிருந்த அவசரத்தினால் தவறவிட வேண்டியதாயிற்று. அடுத்த முறை செல்ல வாய்த்தால் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் சேர்த்தாயிற்று. ஆத்தங்குடி அரண்மனையின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்தப் பட்டிருக்கும் வெவ்வேறு விதமான தரைக் கற்களைக் குறிப்பாகக் கவனித்தால் இங்குள்ள இத்தொழிலின் சிறப்பு புரிய வரும். படங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் இரண்டு பாகங்களாக பகிருகிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து சுமார் 24 கிமீ தொலைவில் உள்ள ஆத்தங்குடி எனும் செட்டிநாட்டுச் சிற்றூரில் உள்ளது ஆத்தங்குடி அரண்மனை. லெட்சுமி விலாஸ் மற்றும் பெரிய வீடு என்றும் இது அழைக்கப்படுகிறது.
#1
தெருவின் தொடக்கத்தில் பரந்து விரிந்து நிற்கும் இந்த அரண்மனை சிறிய நுழை வாயிலைக் கொண்டு அமைந்துள்ளது.
#2 இடப்புறம்:
#3 வலப்புறம்:
நுழை வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளைக் கொண்டு அமைக்கப்பட்டவையாகும். உள்ளே படிகளில் ஏறும்போது இரு பக்கங்களிலும் முற்றம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து இரு புறங்களிலும் பெரிய திண்ணைகள் காணப்படுகின்றன. தேக்கு மரத்தால் ஆன பெரிய கதவுகள் உள்ளன. கதவுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
#4 தேக்கு மர நிலைக்கதவுகள்: