நாளினை நெய்யும் சிறகுகள்
சூரியன் தன் ஒளியை அறியும் முன்
பறவை விழித்துக் கொள்கிறது
தன் சிறகடிப்புகளால்
அமைதியான வானத்தில் காலையை
வயல்களில் தானியங்களையும்
காற்றில் சமநிலையையும்
மரங்களில் கண நேர ஓய்வையும்
அது தேடுகிறது
நண்பகல் வானம் கனல்கிறது
ஆயினும்
அதன் இறக்கைகள் மடிவதில்லை
பசி வெப்பத்தை விடவும்
உரத்த குரலில் பேசுகிறது
எச்சரிக்கையின்றி
மேகங்கள் திரள்கின்றன
காற்று அமைதியிழக்கிறது
பறக்கும் சிறு உடல் தவிக்கிறது
ஆயினும் தொடர்கிறது
சோர்ந்த இலைகளின் மேல்
அந்திப் பொழுது
பொன்னைச் சிந்துகையில்
ஒரு சிறு கிளை கிடைக்க
நாளின் பிடி தளர்கிறது
ஆகாயம் தன் மர்மங்களைக் காக்க
பூமி தன் மௌனத்தைக் காக்க
பறவை பறந்து கொண்டே இருக்கிறது
ஓய்வில் சக்தியை மீட்டு
மீண்டும் மீண்டும் விண்ணைத் தேடி
*
படம்: AI உருவாக்கம்
*
[இரண்டாவது கவிதையை விரைவில் இங்கு பதிகிறேன்.]
நன்றி நவீன விருட்சம்!



ஆனால் வெளிச்சம் வரும் முன் பறவை பறந்து பார்த்ததில்லை.
பதிலளிநீக்குபொருள் தேடி
அலைவதில்லை.
உணவு மட்டுமே தேடி
அந்த அலைச்சல்.
பழகித்தான் போகிறது
பறவைகளுக்கும்
அந்த வாழ்வு.
இந்த இதழ் நவீன விருட்சம் அழகிய சிங்கர் எனக்கும் அனுப்பினார். இதுதானா என்று பார்க்க வேண்டும்! வந்து நாளாகிறது. நான் இன்னும் பார்க்கவில்லை. நான் எழுதிக் கொண்டிருந்த ப பொ கதைகளை பிரசுரித்து போட்ட புத்தகங்கள் மூன்று தொகுதி வாங்கியபோது இதையும் அனுப்பினார்.
பதிலளிநீக்கு