இட்லி வடை பொங்கல்
கெட்டிச் சட்னி சாம்பார்
உணவுப் பட்டியல் பார்த்து
விரும்பிக் கேட்டு வாங்கி
கலந்து கட்டி அடித்து
போதும் போதுமெனக்
கெஞ்சிய வயிற்றின் மேல்
இரக்கம் வைத்து
எழுகிற நேரம்
கடந்தது மேசையை
கமகம மசால் தோசை
‘அடடா, விட்டு விட்டோமே’
கண்டும் காணாது நடந்தாலும்
சுண்டி இழுத்த மணத்தால்
மின்னல் வெட்டாய் வந்து மறையும்
அற்ப சிந்தனையை
எப்படி மனதோடு சுமப்பதில்லையோ
அதுபோலவேதான்
நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
***
20 ஜூலை 2010, யூத்ஃபுல் விகடனில் வெளியான கவிதை.
படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
:) சூப்பர்
பதிலளிநீக்குபலமுறை யோசித்து பின் ஒரு முறை வேண்டாம் என்று முடிவெடுத்த பின்னர் வேண்டாம்ன்னா வேண்டாம்தான்!
நல்லதே நடக்கும் !
ஒதுக்கப்பட்ட அனைத்தும்,
பதிலளிநீக்குசெதுக்கப்பட்ட சிற்பம் போல்,
ஆழ் மனத்துள் பதிந்து விடும்,
அம்மசால் தோசை போல்!
\நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை//
பெரிய விசயம்தான் இப்படி செய்யமுடிந்தால்.. :)
நல்லாருக்குப்பா!
பதிலளிநீக்குபோதும் போதுமெனக்
பதிலளிநீக்குகெஞ்சிய வயிற்றின் மேல்
இரக்கம் வைத்து
எழுகிற நேரம்
.....அக்கா, அசத்திட்டீங்க!!!! வாழ்த்துக்கள்!!!
good akka
பதிலளிநீக்குகவிதை அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்கு//சுண்டி இழுத்த மணத்தால்
பதிலளிநீக்குமின்னல் வெட்டாய் வந்து மறையும்
அற்ப சிந்தனையை
எப்படி மனதோடு சுமப்பதில்லையோ//
யெஸ்..
மொத்த கவிதையும் அருமை மேடம்!
அருமையாய் இருக்கு சகா.
பதிலளிநீக்கு\\நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!\\
என்னால் முடியாது இந்த விஷயம். நானே ஒதுக்கிய பல விஷயம் ஒரு அவசரகதியில் தான் நடந்திருக்கும். அதனால் பல தடவை மறுகியிருக்கிறேன். கவலைப்பட்டும் இருக்கிறேன். நல்லா இருக்கு கவிதை.
சரியான ....பதில்..
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க கவிதை... ஒதுக்கிய வாய்ப்புகள் என்றைக்குமே அவசியமற்றதுதானே...
பதிலளிநீக்கு//நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை//
கவிதை நல்லாயிருக்கு ராமலக்ஷ்மி.
நிரம்பிய வயிறு
பதிலளிநீக்குஇன்று ஒதுக்கிய மசால் தோசையை
நினைவு வைத்து இன்னொரு முறை சாப்பிட்டு பழிதீர்ப்பதும்(!) உண்டே
கவிதை வெகு யதார்த்தமாய்...
ஹா ஹா சூப்பர்
பதிலளிநீக்குகவிதை வெகு யதார்த்தமாய்..!
பதிலளிநீக்குஅக்கா, அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!!
அக்கா..
பதிலளிநீக்கு//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!//
எல்லாருக்கும் இந்த மனசு வந்திட்டா..
ரொம்ப ரசிச்ச வரிகள்.
படமும் வித்தியாசமா இருக்கு.
இளமை விகடனில் வாசித்திருந்தேன்.நல்லதொரு கவிதை...எப்பவும்போலவே.
பதிலளிநீக்குநல்ல அழகான கவிதை.. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.
பதிலளிநீக்குநல்லா இருக்கு
பதிலளிநீக்குநல்லா இருக்கு.
பதிலளிநீக்குவேண்டாம் என ஒதுக்கியதையோ, தவறிப்போன வாய்ப்புகளையோ நினைத்து புலம்புவதால் நிகழ்கால அற்புதங்களை காணாமலும், அனுபவிக்காமலும் விட்டு விட வாய்ப்பு உண்டு என்பதை உணர்த்திய கவிதை.
பதிலளிநீக்குஆஹா அருமை. சுவையான உதாரணத்தோடு நல்ல கவிதை.
பதிலளிநீக்குவேண்டாம் என வாழ்வில் othukkiya வாய்ப்புகள்////
பதிலளிநீக்குஒதுக்குவோம். மீண்டும் நினைப்போம்.
மறுகுவோம். மீண்டும் வெறுப்போம்.
பக்குவம் வந்த பிறகு நீங்கள் எழுதிய வரிகள் நடைமுறைக்கு வரும்.
ராமலக்ஷ்மி மிக மிக அருமை.
நல்ல அழகான கவிதை..
பதிலளிநீக்குபலரும் சொல்லி இருப்பது போல் சட்டென மனதில் தோன்றுவது:
பதிலளிநீக்குSUPER!
:)
பளிச்சுன்னு இருக்கு Nice one ya
பதிலளிநீக்குமறுத்த வாய்ப்புகள் எல்லாம் இறைவனால் நமக்கு மறுக்கப்பட்டவையே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
விஜய்
Simply superb! Evlo touchy vishayatha easya solliteenga :)
பதிலளிநீக்குநினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை//
அருமை ராமலெக்ஷ்மி.. நல்லா சொன்னீங்க..:))
எப்பவும் போல சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
//
அருமை
ம்ம்.. கிடைக்கிறது கிடைக்காமப் போகாது.. கிடைக்காமப் போகவேண்டியது கிடைக்காதுன்னு இதத்தான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்களோ!!
பதிலளிநீக்கு:-))) அருமை!!
:-) நல்லாருக்குது.
பதிலளிநீக்குகவிதை அருமை ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறதுங்க......
பதிலளிநீக்கு//நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை//
உண்மைதான்.. பழையகாலத்துலயே இருந்திட்டிருந்தா, நிகழ்காலம் கண்ணுக்கு தெரியாமயே போயிடும் :-)
/*நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
*/
அழகாக சொன்னீர்கள். அற்ப சிந்தனை என்று சொன்னதும் அருமை
//நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை//
நிதர்சனமான வார்த்தைகள். inspiring words ராமலக்ஷ்மி.
அன்பின் ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குவேண்டாம் என ஒதுக்கிய வாய்ப்புகள் மறக்கப்பட வேண்டியவையே ! நலல் கற்பனை - உவமை - கவிதை
நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
நட்புடன் சீனா
பெரிய இலக்கிய உதாரணங்களென்று இல்லாமல் வெறும் இட்லி, பொங்கலை மேற்கோள் காட்டியே அருமையான கவிதை படைத்து விட்டீர்கள்!! வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!
பதிலளிநீக்குஅற்ப சிந்தனையை
பதிலளிநீக்குஎப்படி மனதோடு சுமப்பதில்லையோ
அதுபோலவேதான்
நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
It is best not thinking, "What would have happened if I accepted that offer?" But I see people saying if I had taken up the job in India I would have been the director of the Institute by now! LOL
Certainly, it is boring to hear such a talk!
//நினைத்து மறுகவோ
பதிலளிநீக்குநெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை//
அதானே இது மசால்தோசைக்கு மட்டுமா என்ன?:) ஆனால் அந்த தீர்மான நிலைவர மனம் ஒத்துழைக்கவேண்டும் பக்குவப்படவேண்டும். சிந்தனைக்குரிய கவிதை!
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு//:) சூப்பர்
பலமுறை யோசித்து பின் ஒரு முறை வேண்டாம் என்று முடிவெடுத்த பின்னர் வேண்டாம்ன்னா வேண்டாம்தான்!
நல்லதே நடக்கும் !//
அதே அதே. எல்லாம் நன்மைக்கே:)! நன்றி ஆயில்யன்.
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
பதிலளிநீக்கு//ஒதுக்கப்பட்ட அனைத்தும்,
செதுக்கப்பட்ட சிற்பம் போல்,
ஆழ் மனத்துள் பதிந்து விடும்,
அம்மசால் தோசை போல்!//
அதைத்தான் தாண்டி வருவோம் என்கிறேன்:)! கவித்துவமான கருத்துக்கு நன்றி ஆர் ராமமூர்த்தி.
முத்துலெட்சுமி/muthuletchumi said...
பதிலளிநீக்கு//\நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை//
பெரிய விசயம்தான் இப்படி செய்யமுடிந்தால்.. :)//
செய்யமுடிந்தால் சின்ன விசயமாகி விடும்:)!
நன்றி முத்துலெட்சுமி.
அன்புடன் அருணா said...
பதிலளிநீக்கு//நல்லாருக்குப்பா!//
நன்றி அருணா.
Chitra said...
பதிலளிநீக்கு***போதும் போதுமெனக்
கெஞ்சிய வயிற்றின் மேல்
இரக்கம் வைத்து
எழுகிற நேரம்
.....அக்கா, அசத்திட்டீங்க!!!! வாழ்த்துக்கள்!!!***
நன்றி சித்ரா:)!
எம்.எம்.அப்துல்லா said...
பதிலளிநீக்கு//good akka//
நன்றி அப்துல்லா.
கோமதி அரசு said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை ராமலக்ஷ்மி.//
நன்றி கோமதிம்மா.
ப்ரியமுடன் வசந்த் said...
பதிலளிநீக்கு***//சுண்டி இழுத்த மணத்தால்
மின்னல் வெட்டாய் வந்து மறையும்
அற்ப சிந்தனையை
எப்படி மனதோடு சுமப்பதில்லையோ//
யெஸ்..
மொத்த கவிதையும் அருமை மேடம்!***
நன்றி வசந்த்.
பா.ராஜாராம் said...
பதிலளிநீக்கு//அருமையாய் இருக்கு சகா.//
நன்றி பா ரா.
அபி அப்பா said...
***\\நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!\\
என்னால் முடியாது இந்த விஷயம். நானே ஒதுக்கிய பல விஷயம் ஒரு அவசரகதியில் தான் நடந்திருக்கும். அதனால் பல தடவை மறுகியிருக்கிறேன். கவலைப்பட்டும் இருக்கிறேன். நல்லா இருக்கு கவிதை.***
அவசர கதியிலே ஆனாலும் நாமாக ஒதுக்கியவை எனும் போது மனதுக்குள் மறுபடி வரவிடாமல் ஒதுக்கியே வைப்போம். நன்றி அபி அப்பா.
ஜெரி ஈசானந்தன். said...
பதிலளிநீக்கு//சரியான ....பதில்..//
நன்றி ஜெரி ஈசானந்தன்.
க.பாலாசி said...
பதிலளிநீக்கு//நல்லாயிருக்குங்க கவிதை... ஒதுக்கிய வாய்ப்புகள் என்றைக்குமே அவசியமற்றதுதானே...//
கருத்துக்கு நன்றி பாலாசி.
அம்பிகா said...
பதிலளிநீக்கு***//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை//
கவிதை நல்லாயிருக்கு ராமலக்ஷ்மி.***
நன்றி அம்பிகா.
ஈரோடு கதிர் said...
பதிலளிநீக்கு//நிரம்பிய வயிறு
இன்று ஒதுக்கிய மசால் தோசையை
நினைவு வைத்து இன்னொரு முறை சாப்பிட்டு பழிதீர்ப்பதும்(!) உண்டே//
தாராளமாய் தீர்த்துக் கொள்ளட்டும். அது இன்னொரு வாய்ப்பாகத் தேடி வரும் போதே:)!
‘எண்ணி விடுக கருமம். விட்ட பின் வருந்துவம் என்பது....’(?)
//கவிதை வெகு யதார்த்தமாய்...//
நன்றி கதிர்.
Gayathri said...
பதிலளிநீக்கு//ஹா ஹா சூப்பர்//
நன்றி காயத்ரி.
சே.குமார் said...
பதிலளிநீக்கு//கவிதை வெகு யதார்த்தமாய்..!
அக்கா, அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!!//
நன்றி குமார்.
சுசி said...
பதிலளிநீக்கு***அக்கா..
//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!//
எல்லாருக்கும் இந்த மனசு வந்திட்டா..
ரொம்ப ரசிச்ச வரிகள்.//
நன்றி சுசி.
//படமும் வித்தியாசமா இருக்கு.//
ஆம். யூத் விகடன் தேர்வு.
ஹேமா said...
பதிலளிநீக்கு//இளமை விகடனில் வாசித்திருந்தேன்.நல்லதொரு கவிதை...எப்பவும்போலவே.//
நன்றி ஹேமா.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பதிலளிநீக்கு//நல்ல அழகான கவிதை.. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.//
நன்றி ஸ்டார்ஜன்.
நசரேயன் said...
பதிலளிநீக்கு//நல்லா இருக்கு//
நன்றி நசரேயன்.
சின்ன அம்மிணி said...
பதிலளிநீக்கு//நல்லா இருக்கு.//
நன்றி சின்ன அம்மிணி.
திருவாரூரிலிருந்து சரவணன் said...
பதிலளிநீக்கு//வேண்டாம் என ஒதுக்கியதையோ, தவறிப்போன வாய்ப்புகளையோ நினைத்து புலம்புவதால் நிகழ்கால அற்புதங்களை காணாமலும், அனுபவிக்காமலும் விட்டு விட வாய்ப்பு உண்டு என்பதை உணர்த்திய கவிதை.//
கருத்துக்கு நன்றி சரவணன்.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//ஆஹா அருமை. சுவையான உதாரணத்தோடு நல்ல கவிதை.//
நன்றி ஸ்ரீராம்:)!
வல்லிசிம்ஹன் said...
பதிலளிநீக்கு***//வேண்டாம் என வாழ்வில் othukkiya வாய்ப்புகள்////
ஒதுக்குவோம். மீண்டும் நினைப்போம்.
மறுகுவோம். மீண்டும் வெறுப்போம்.
பக்குவம் வந்த பிறகு நீங்கள் எழுதிய வரிகள் நடைமுறைக்கு வரும்.
ராமலக்ஷ்மி மிக மிக அருமை.//***
உண்மை பக்குவம் வந்தால்தான் நடைமுறைக்கு வரும். நன்றி வல்லிம்மா.
வெறும்பய said...
பதிலளிநீக்கு//நல்ல அழகான கவிதை..//
மிக்க நன்றி.
T.V.ராதாகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//super//
மிக்க நன்றி சார்.
Deepa said...
பதிலளிநீக்கு//பலரும் சொல்லி இருப்பது போல் சட்டென மனதில் தோன்றுவது:
SUPER!
:)//
நன்றி தீபா:)!
தமிழரசி said...
பதிலளிநீக்கு//பளிச்சுன்னு இருக்கு Nice one ya//
நன்றி தமிழரசி.
விஜய் said...
பதிலளிநீக்கு//மறுத்த வாய்ப்புகள் எல்லாம் இறைவனால் நமக்கு மறுக்கப்பட்டவையே
வாழ்த்துக்கள் சகோ//
நன்றி விஜய்!
Bharkavi said...
பதிலளிநீக்கு//Simply superb! Evlo touchy vishayatha easya solliteenga :)//
நன்றி பார்கவி.
தேனம்மை லெக்ஷ்மணன் said...
பதிலளிநீக்கு***//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை//
அருமை ராமலெக்ஷ்மி.. நல்லா சொன்னீங்க..:))***
நன்றி தேனம்மை:)!
சசிகுமார் said...
பதிலளிநீக்கு//எப்பவும் போல சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்//
நன்றி சசிகுமார்.
VELU.G said...
பதிலளிநீக்கு//அருமை//
மிக்க நன்றி வேலு.ஜி
ஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//ம்ம்.. கிடைக்கிறது கிடைக்காமப் போகாது.. கிடைக்காமப் போகவேண்டியது கிடைக்காதுன்னு இதத்தான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்களோ!!
:-))) அருமை!!//
ஆமா போலிருக்கு:))! நன்றி ஹுஸைனம்மா.
ஆதிமூலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//:-) நல்லாருக்குது.//
நன்றி ஆதி.
ஜெஸ்வந்தி said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை ராமலக்ஷ்மி.//
நன்றி ஜெஸ்வந்தி.
ஜெஸ்வந்தி said...
பதிலளிநீக்கு//கவிதை அருமை ராமலக்ஷ்மி.//
நன்றி ஜெஸ்வந்தி.
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பதிலளிநீக்கு//நன்றாக இருக்கிறதுங்க.....//
மிக்க நன்றி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு***//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை//
உண்மைதான்.. பழையகாலத்துலயே இருந்திட்டிருந்தா, நிகழ்காலம் கண்ணுக்கு தெரியாமயே போயிடும் :-)//***
அழகா சொன்னீங்க. இதே கருத்திலே இன்னொரு கவிதையும் எழுதினேன் சமீபத்தில்தான், நிகழ்காலம் என்ற தலைப்பிலேயே:)! நன்றி அமைதிச் சாரல்.
அமுதா said...
பதிலளிநீக்கு****/*நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
*/
அழகாக சொன்னீர்கள். அற்ப சிந்தனை என்று சொன்னதும் அருமை****
நன்றி அமுதா.
James Vasanth said...
பதிலளிநீக்கு***//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை//
நிதர்சனமான வார்த்தைகள். inspiring words ராமலக்ஷ்மி.***
மிக்க நன்றி ஜேம்ஸ்.
cheena (சீனா) said...
பதிலளிநீக்கு//அன்பின் ராமலக்ஷ்மி
வேண்டாம் என ஒதுக்கிய வாய்ப்புகள் மறக்கப்பட வேண்டியவையே ! நலல் கற்பனை - உவமை - கவிதை
நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
நட்புடன் சீனா//
மிக்க நன்றி சார்.
மனோ சாமிநாதன் said...
பதிலளிநீக்கு//பெரிய இலக்கிய உதாரணங்களென்று இல்லாமல் வெறும் இட்லி, பொங்கலை மேற்கோள் காட்டியே அருமையான கவிதை படைத்து விட்டீர்கள்!! வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!!//
மிக்க நன்றிங்க மனோ சாமிநாதன்:)!
வருண் said...
பதிலளிநீக்கு***அற்ப சிந்தனையை
எப்படி மனதோடு சுமப்பதில்லையோ
அதுபோலவேதான்
நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை
வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
It is best not thinking, "What would have happened if I accepted that offer?" But I see people saying if I had taken up the job in India I would have been the director of the Institute by now! LOL
Certainly, it is boring to hear such a talk!***
உண்மைதான்:)! அதில் ஒரு ஆறுதல் கிடைக்கலாமாயிருக்கும். பெருமை பேசுவது விடுத்து அப்போது பார்க்கும் வேலையில் கவனம் செலுத்தலாம் அவர்கள்.
நன்றி வருண்.
ஷைலஜா said...
பதிலளிநீக்கு***//நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியமே இல்லாதவை//
அதானே இது மசால்தோசைக்கு மட்டுமா என்ன?:) ஆனால் அந்த தீர்மான நிலைவர மனம் ஒத்துழைக்கவேண்டும் பக்குவப்படவேண்டும். சிந்தனைக்குரிய கவிதை!***
வல்லிம்மாவும் இதையே வலியுறுத்தினார்கள். நன்றி ஷைலஜா.
தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த 31 பேருக்கும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குரசித்தேன் :-)
பதிலளிநீக்கு@ உழவன்,
பதிலளிநீக்குநன்றி:)!
அருமை
பதிலளிநீக்குரொம்ப நல்லா இருக்கு , எல்லாம் வேனும்னு பட்டாலும் சில்து வேண்டாம்னா வேண்டாம் தான் யோசிக்க கூடாது அதுக்கப்பறம்
நன்றி ராமலஷ்மி
ஜேகே
இன்றைய கவிதை said...
பதிலளிநீக்கு//அருமை
ரொம்ப நல்லா இருக்கு , எல்லாம் வேனும்னு பட்டாலும் சில்து வேண்டாம்னா வேண்டாம் தான் யோசிக்க கூடாது அதுக்கப்பறம்//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜேகே.