புதன், 16 செப்டம்பர், 2020

அதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)

#1

பெங்களூரின் கைக்கொண்டன(ர)ஹள்ளி ஏரிக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு வாரயிறுதி நாளில் சென்றிருந்த போது எடுத்த படங்கள்.. என்றைக்கு நோய்த்தொற்று அச்சம் நீங்கி இந்தப் பறவைகளைப் போல சுத்தமானக் காற்றைச் சுவாசித்து, சுதந்திரமாக வெளியில் சென்று வரப் போகிறோமோ, எனும் ஏக்கம் எழத்தான் செய்கிறது!

#2

இந்த ஏரியைப் பற்றி 6 ஆண்டுகளுக்கு முன், தொடராக 3 பதிவுகள் இட்டிருந்தேன். அதிலொரு பதிவில் எப்படி அப்பகுதி மக்கள் மாநகராட்சியுடன் கைகோர்த்து ஏரியைத் தூர் வாரி, புனரமைப்பு செய்து மக்களுக்கும், பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரனங்களுக்கும் பயனாகும்படி செய்தார்கள் என்பதைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்தேன்:

ஆறு ஆண்டுகள் இடைவெளியில் பராமரிப்பு மோசமில்லை என்றாலும் அன்று பார்த்தது போல பசுமை சூழ்ந்த பூச்செடிகள், சீரான நடை பாதை ஆகியன இப்போது இல்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆனால் ஏரியில் நீரும், பறவைகளின் வரவும் எப்போதும் போலவே உள்ளன. இது போன்ற பெரிய ஏரிகளிலுள்ள பறவைகளைப் படமாக்க 300mm ஜூம் வசதி போதுமானதாக இல்லை. இருந்தாலும் எடுத்த படங்களில் சில தொகுப்பாக இங்கே..

#3
காலை வெயிலில்
குளிர் காயும்
கூழைக்கடா

#4
குளித்து விட்டு
இறக்கைகளை உலர்த்தும்
நீர்க் காக்கை

#5
அங்கும் இங்கும்  தலையைத் திருப்பி
வேடிக்கை..

#6
தாகம் தணித்துக் கொள்ளும் 
குளநாரை
வேண்டும் இவற்றுக்கும் 
நீர் நிலைகள்

#7
ஏகாந்தத் தனிமையில்..
குளநாரை

#8
உல்லாச.. உற்சாக..
 நீச்சலில்
முக்குளிப்பான்கள்

#9
வானிலே வட்டமிடும்
பருந்து..

#10
உறுமீன் வரும் வரை காத்திருக்கும் 
 சிறு வெள்ளைக் கொக்கு
Little Egret
#11
மனதைக் கவர்ந்த
மஞ்சள் மலர்கள்

#12
பவுடர் பஃப் - Powder Puff
(அட, பொருத்தமான பெயர்தான் இல்லையா?) 
அல்லது Fairy Duster எனப்படும்
கேலியண்ட்ரா Calliandra

#13
கேலியண்ட்ரா மலரை
விரும்பிச் சுவைக்கும்
அணிலார்

#14
நழுவும் பூவை இறுக்கிப் பிடித்து..


ஏரியின் துப்பரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் சிலர் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பாலகன்.

#15

மேலும் சில சிறுவர்களும் இதே போல அழகாக போஸ் கொடுத்து அசத்தினர். அந்தப் படங்களை மற்றுமொரு பதிவில் குழந்தைகள் தினத்தையொட்டி பகிர்ந்திடுகிறேன்.

#16
சாம்பல் நாரை

#17
புறப்படுகிறது புவியை உதறி..
Taking Off
**
பறவை பார்ப்போம் - பாகம் (53)

***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

பெங்களூர் ஏரிகள்


மைசூர், குமரகம் ஏரிகள்

10 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அழகு.
    பழைய நிலைமை திரும்பி நீங்கள் ஏரியை , அங்கு பறக்கும் விளையாடும் பற்வைகளை படம் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
    அந்த பறவைகள் போல் சுதந்திர காற்றை அனுபவிக்க வேண்டும் மாஸ்க் இல்லாமல்.
    படங்கள் பேசுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதிம்மா. மாஸ்க் இல்லாத காலம் வரும் வரை காத்திருக்க வேண்டாமென சென்ற வாரயிறுதியில் மாஸ்க் அணிந்து ஒரு ஏரிக்குச் சென்று வந்தோம்.

      நீக்கு
  2. கொரோனா காரணமாக வீட்டில் அடைந்து கிடக்கும் எம் போன்றோருக்கு இது போன்ற படங்களுடன் கூடிய பகிர்வுகள் அவுட்டிங் போனது மாதிரி என்றால் அது மிகையில்லை தானே...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்துமே அழகு.

    300 mm லென்ஸ் படங்கள் நன்று. என்னிடம் இருப்பது 250! பல சமயங்களில் அது போதவில்லை என்று எனக்கும் தோன்றும்! :) கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக வெளியே எங்கும் செல்ல முடியாமல் கேமரா பயன்படுத்துவது குறைந்து விட்டது! நடுவில் சில நாட்கள் சில படங்களை எடுத்து வைத்தேன் - வீட்டிலேயே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட். குறிப்பாக ஏரிகளுக்கு நடுவிலிருக்கும் பறவைகளை எடுக்க 250 அல்லது 300 mm உதவாது. அதிக ஜும் உள்ள லென்ஸுகளின் எடையும் அதிகம்:). கையாளுவது சிரமம். எனவே அதிக ஜூம் கொண்ட ப்ரிட்ஜ் கேமரா ஒன்றை வாங்கிடும் எண்ணம் பரிசீலனையில் உள்ளது:).

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin