புதன், 31 ஜனவரி, 2018

அபூர்வ சந்திரக் கிரகணம் - SUPER BLUE BLOOD MOON 2018

நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த அபூர்வ சந்திரக் கிரகணம். வழக்கத்தை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் ஒளிர்ந்ததோடு மூன்று முக்கிய நிகழ்வுகளை ஒரு சேரக் கொண்டிருந்த ஒன்றும்.

பெங்களூரிலிருந்து...

1. SUPER MOON
சூப்பர் மூன் எனப்படும் அபூர்வ நிலா என்பது  நிலா தனது நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் போது பூமிக்கு மிக அருகே வரும் சமயம் ஏற்படுவது.
இத்தோடு இணைந்தது ஆச்சரியமான அடுத்த நிகழ்வு..


2. BLUE MOON
ப்ளூ மூன் என அறியப்படும் ஒரே மாதத்தில் வருகிற இரண்டாம் பெளர்ணமி. மற்றபடி பெயரில் இருக்கும் நீல வண்ணத்துக்கு நிலவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை:). இத்தோடு கை கோர்த்தது பூரண சந்திரக் கிரகணம்...

3.TOTAL LUNAR ECLIPSE
பூரண சந்திரக் கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வருகிற பூமி சூரிய ஒளியை வளிமண்டலத்தின் வழியே பயணிக்க நிர்ப்பந்திக்கிறது. அப்போது வளி மண்டலம் பெரும்பாலான நீல நிற ஒளிக் கற்றைகளைச் சிதறடித்து விட, சிகப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணமே எஞ்சுகிறது. அப்படியான இரத்த சிகப்பு நிலவையே BLOOD MOON என்கிறோம். 1866 ஆம் ஆண்டுக்குப் பிறகு காணக் கிடைத்த இந்த ப்ளட் மூன் மீண்டும்  அடுத்த வருடம் 2019 ஜனவரி 19ஆம் திகதி காணக் கிடைக்கும். அது அபூர்வ நிலாவாக இருக்கும். ஆனால் ப்ளூ மூன் அதாவது ஒரே மாதத்தின் இரண்டாம் முழுநிலவாக இருக்காது.

*

இன்று நிகழ்ந்த சந்திரக் கிரகணம் குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன் படிப்படியான படங்களுடன் பகிர்ந்த சந்திரக் கிரகணப் பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்:
“சந்திரனைத் தொட்டது யார்? -  Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள்” 

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

16 கருத்துகள்:

  1. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி! இது நீங்கள் எடுத்த புகைப்படமா? சந்திரன் உதயமாகும்போது தானே இப்படி சிகப்பாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்? இங்கு விண்ணளாவிய கட்டிட்ங்கள் சூழ்ந்திருப்பதால் அதைக்காண முடியவில்லை. ஒரு மணி நேரங்கழித்து 7 மணிக்குத்தான் சற்று முழுமை குறைந்த வெள்ளை நிலாவைப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நான் எடுத்த படமே. இந்த நிகழ்வில் உதயமாகும் சந்திரனை விடவும் அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்து நிலவு. நான் ட்ரைபாடை தயார் செய்யும் முன் வேக வேகமாக வெள்ளை நிறத்துக்கு மாற ஆரம்பித்து விட்டது. அப்போது எடுத்த படமே இது. நன்றி மனோம்மா.

      நீக்கு
  2. நாங்கள் கிரகணம்பார்த்தபோதுசந்திரன் பாதியாகத் தெரிந்தது முதலிலிருந்து பார்க்க முடியவில்லை கட்டிடங்கள் மறைத்தன. இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறதுவிஜயவாடாவில் இருந்தபோது அருகில் வசித்த டாக்டர் கர்ப்பிணிப்பெண்களுக்கு விசேஷமாக கிரகணம் காட்டி அவர்களுக்கு நல்ல ஆகாரமும்கொடுப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியம். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் பார்க்கக் கூடாதென்பார்கள். அந்த நேரத்தில் உணவும் உட்கொள்ளக் கூடாதென்பார்கள். அதில் தவறில்லை என்பதற்காகவே
      கிரகணத்தைக் காட்டி உணவும் கொடுத்திருப்பாரோ?

      பலரும் கட்டிடங்கள் மறைத்ததால் பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்கள்.

      கருத்துப் பகிர்வுக்கு நன்றி GMB sir.

      நீக்கு
  3. அருமையான படம்.
    அழகான விளக்கம் . இங்கு பார்க்க முடியவில்லை.
    காலை சந்திரனைதான் பார்க்க முடியும் இந்தவீட்டில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தத் திசையில் பால்கனி இருக்கிறது என்பதைப் பொறுத்ததே. முன்பு இருந்த வீட்டில் எல்லா பால்கனிகளும் மேற்கு பார்த்தவை. ஒவ்வொரு முறையும் மொட்டை மாடிக்கே செல்ல வேண்டிருக்கும். நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. மிக அழகு ....

    நாங்களும் பார்த்தோம்...

    கிரகணம் நடந்து நிலவு ஒளி இழந்து ...பின் ஒளி பெற்றது என மாடியில் ஒரு மணி நேரம் நின்று ரசித்தோம்...

    அழகிய தருணங்கள்...

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப அழகா இருக்கு படங்கள்...தகவல்கள் உட்பட...

    நாங்களும் கிரகணம் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை முன்னிரவில் நிகழ்ந்தபடியால் பலருக்கும் பார்க்க முடிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin