Friday, January 12, 2018

கோபுர தரிசனம் - மயிலை கபாலீஸ்வரர்

#1
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவில்  அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும் பழைமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும். அந்நாளைய கோவில் ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டிருக்கிறது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் புகழ் பெற்றத் தலமாகத் திகழ்ந்திருக்கிறது.

#2

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஒட்டிய பல்லவர் காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளி விட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டதாகத் தெரிகிறது. பின்னர் பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

#3

இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர்.  அம்மனின் பெயர் கற்பகாம்பாள். திருமயிலை என்றும் கபாலீஸ்வரம் என்றும் மயிலாப்பூர் அறியப்படுகிறது.

#4

#5

இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

#6


கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும்; விநாயகர்(படம் 2), முருகப் பெருமான்(படம் 1) மற்றும் பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும்.

#7

பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

திருக்குளம்
#8


#9


#10
 **

அனைத்தும் அலைபேசிப் படங்கள். எல்லா நேரங்களிலும் நாம் கேமராவுடன் பயணிக்க முடிவதில்லை. அப்போது கை கொடுக்கின்றன கையோடு இருக்கும் அலைபேசிகள். கேமராவைக் கொண்டு எடுக்கிற திருப்தி கிடைப்பதில்லை என்றாலும் காட்சிகளைத் தவற விடாது சேமிக்க முடிவது வரமே. மேலும் பல பொது இடங்களில் DSLR உபயோகிக்கத் தடையிருக்கிறது. சில கோயில் வளாகங்கள், (Mall) மால் போன்ற இடங்களில் அலைபேசிகளில் மக்கள் எத்தனை படங்கள் எடுத்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். கேமராவை வெளியில் எடுத்தவுடனேயே எங்கிருந்தாவது விரைந்து வந்து விடுவார்கள், ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக கேமரா உபயோகிக்க அனுமதி கிடையாது’ என்றபடி. சென்ற வருடம் சென்றிருந்த ஒரு சமயத்தில் எடுத்து சேமிப்பில் இருந்த இந்த ஒன் ப்ளஸ் த்ரீ படங்கள், தைப் பொங்கலை முன்னிட்டு உங்கள் பார்வைக்கு..

அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்!

***

16 comments:

 1. இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி அமைதி அப்பா.

   Delete
 2. புகைப்படங்கள் அற்புதம். அலைபேசிக் கேமிராவா? வல்லவன் திறமை கன்னுக்குத் தெரிகிறது. 1+5 இருந்தும் நான்?!!!!!

  விவரங்கள் சுவாரஸ்யம். அதென்ன பல பத்தாண்டுகள்?!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம். நீங்கள் முயன்று பார்க்கவில்லை என்றே சொல்வேன்:).

   இணையத்திலிருந்து தகவல்களைச் சேகரித்தாலும் என் நடையில் எழுதுவதே வழக்கம். Few decades என்பதற்கு Wiki உபயோகித்திருந்த சொற்பதத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டுள்ளேன்:).

   Delete
 3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 4. இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலம் மறுபடியும் செல்லும் வாய்ப்பு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சியும் நன்றியும்.

   Delete
 5. ஒருமுறை இக்கோவிலுக்கு சென்று வந்துள்ளேன், மீண்டும் ஒருமுறை சென்று வந்த அனுபவம் உங்க பதிவில்...

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி. நன்றி ராஜி.

   Delete
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 8. படங்கள் அனைத்தும் அழகு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin