செவ்வாய், 12 நவம்பர், 2024

திருமலை நாயக்கர் மஹால் - மதுரை

 #1

திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

அரண்மனை வாயிலினுள் நுழைந்ததும் காணப்படுகிற இந்தப் பரந்த முற்றமானது சுமார் 41,979 சதுர அடிகளைக் கொண்டு, சுற்றி வர உயர்ந்த வட்ட வடிவத் தூண்களால் சூழப்பட்டு பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது.

#2


#3

#4

இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிடக் கலைநயத்தில் கட்டப்பட்ட  இந்த அரண்மனையின் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம்,  அரச குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தனவாம். ஆனால் தற்போது நான்கில் ஒரு பகுதியே எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. அரண்மனையின் பெரும்பாலான பகுதிகள் மாறி மாறி பல்வேறு ஆட்சிகளின் போது சிதைக்கப்பட்டு வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது வருத்தத்திற்குரியது.

#5

#6

#7

அக்காலத்தில் இந்த அரண்மனை சொர்க்க விலாசம் மற்றும் அரங்க விலாசம் என  இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டிருந்திருக்கிறது. முதலாவது மன்னரின் வசிப்பிடமாகவும், இரண்டாவது அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்திருக்கின்றன.

இந்த அரண்மனையை 248 பிரம்மாண்டமான  தூண்கள் தாங்கி நிற்கின்றன.   மைய மண்டபத்தின் முற்றம் சுமார் 42000 சதுர அடியில் வட்ட வடிவ தோற்றத்தில் உள்ளது. கூரைகளின் உட்புறத்தில் புராணக்காட்சிகள்  மற்றும் அழகிய வடிவங்கள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

#8

#9

#10

#11

சொர்க்க விலாசத்தில் நாயக்க மன்னரின் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தை இப்போதும் காணலாம். சிம்மாசன அறை எண்கோணத்தில் உயரமான குவிமாடத்தால் மூடப்பட்டிருக்க அதனை வட்ட வடிவிலான பெரிய நெடுவரிசை வளைவுகள்  தாங்கி நிற்கின்றன. 

#12

#13

மன்னர் திருமலை நாயக்கரின் பேரன் இந்த அரண்மனையை பெரிய அளவில் சிதைத்ததாகக் கூறப்படுகிறது.   திருச்சியில் ஒரு அரண்மனையை கட்டுவதற்காக இந்த அரண்மனையில் இருந்து பல அழகிய மர வேலைப்பாடுகளை அகற்றியிருக்கிறார். திட்டமிட்டபடி அவரால் திருச்சியில் அரண்மனையைக் கட்டவும் முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக அரண்மனை அப்போதைய மெட்ராஸ் கவர்னர் பிரான்சிஸ் நேப்பியர் பிரபுவால் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு 1866 முதல் 1872 வரையிலான ஆண்டுகளில் ஓரளவு புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

#14

#15

பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த மறுசீரமைப்புப் பணிகளால் நுழைவாயில், நடன மண்டபம் மற்றும் பிரதான மண்டபம் ஆகியன இப்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன.

#16
உட்புறத்திலிருந்து நுழைவாயிலை நோக்கி..

#17
அரண்மனை வெளிப்புறம்
[இடப்பக்கத்தில் நுழைவாயில்..]


#18
மன்னர்


அங்கிருந்த தகவல் பலகைகள்:

#

#

#

#

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும்.  1971_ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 1981_ஆம் ஆண்டு முதல் மாலை வேளையில் ஒலி-ஒளிக் காட்சிகள் அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது.

[இணையத்தில் சேகரித்தத் தகவல்களை சுருக்கமாகவும், சிலவற்றைத் தமிழாக்கம் செய்தும்  தந்துள்ளேன்.]

***



4 கருத்துகள்:

  1. ​கலைக் கண்களுக்கு ஒரு அற்புதமான இடம். நான் ஒருமுறை, ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இவ்வளவு விவரங்கள் இப்போதுதான் அறிகிறேன். நான் சென்றபோது ஒரு ஒளி-ஒலிக் காட்சி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  2. மதுரையில் நான் பார்க்காத இடம் இது ஒன்று தான்! திருமலை நாயக்கர் மஹாலை மிக அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்! நுணுக்கமான வேலைப்பாடுகள், அலங்கார வளைவுகள், ஓவியங்களை உங்களின் பார்வையில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள்! அவசியம் போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்து விட்டீர்கள் ராமலக்ஷ்மி! இனிய பாராட்டுகள்!!

    பதிலளிநீக்கு
  3. இதுவரை சென்றதில்லை. அசாத்தியமாக இருக்கிறது.

    உங்கள் ப்டங்கள் அட்டகாசம். வித விதமான ரசிக்கும்படியான கோணங்களில் எடுத்திருப்பது சூப்பர்.

    விவரங்களும் வாசித்துக் கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. 4 மடங்கு பெரியதாக இருந்திருக்கிறது இப்போ இவ்வளவுதான் என்றால் மீதிப் பகுதிகள் என்ன ஆகியிருந்திருக்கும்?

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin