#1
40 ஏக்கர் பரப்பளவிலான வெங்கையா அல்லது வெங்கைநகரே ஏரி, பெங்களூரின் (Old Madras Road) பழைய சென்னை சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் வரையிலும் இது மோசமான நிலைமையில் இருந்தது. ஏரி முழுவதும் தீங்கு விளைவிக்கும் நீர் பதுமராகம் மற்றும் களைகளால் நிரம்பியிருந்திருக்கிறது. மேலும் மோசமாகும் முன் ஏதேனும் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டத்தில், பெங்களூர் மாநகராட்சி 15 வருடங்களுக்குப் பராமரிக்குமாறு ஏரியை Lake Development Authority (LDA) - ஏரி வளர்ச்சி அதிகாரக்குழுவிடம் ஒப்படைத்தது. ஏரியை ஓரளவுக்கு சீரமைத்த LDA, “ஃபேன்டஸி லகூன்” என்ற பெயரில் இயங்கும் தீம் பார்க் நிர்வாகத்திடம் மாதாந்திர வாடகைத் திட்டத்தில், ஒப்படைத்து விட்டது.
#2
ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
#3
இந்தப் பூங்காவுக்குச் சென்று வருகிற எல்லோருமே இதன் மோசமான பராமரிப்பு குறித்து வருந்துகிறார்கள். நான் சென்றது என்னவோ பறவைகளைத் தேடி.
#4
#5
#6
#7
எந்த இடத்திலும் பறவை கண்ணில் சிக்கவில்லை. மற்ற பெங்களூர் ஏரிகளில் போல இங்கே நீந்தும் வாத்து இனங்களும் இல்லை. வெகு தொலைவில் ஒன்றே ஒன்று மட்டும் பார்க்க முடிந்தது. விசாரித்ததில், ‘பறவைகளைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் பூங்கா வழியாக வராதீர்கள், ஏரியின் மற்றொரு முனையை அடைய சில கிலோ மீட்டர் தள்ளி ஒரு பாதை உண்டு. அதன் வழியாகச் சென்றால் நிறையப் பார்க்கலாம்’ என்றார்கள் அங்கிருந்த ஒரு பராமரிப்பாளர்.
#8
சரி வந்த வரைக்கும் கரையோர நடைபாதை வழியாக உள்ளே வரைக்கும் போய் வரலாமெனச் சென்றபோதுதான் கண்ணில் பட்டன உடைந்த இருக்கைகள், ஆங்காங்கே குப்பைகள் மற்றும் துர்நாற்றம், ஏரியின் உட்பக்கத்தை ஆக்ரமித்துக் கிடந்த களைகள்.
#9
#10
#11
அவற்றை வெட்டிச் சேகரித்துக் கொண்டிருந்தார் ஓர் முதியவர்.
# 12
#13
#14
படங்களில் பார்க்க ஆகா என்ன இரம்மியமான இடம் எனும் எண்ணம் தோன்றலாம். ஆனால் நேரில்தான் நிலைமை புரிய வரும். பூங்கா நிர்வாகம் இந்த நிலைமைக்கு மாநகராட்சியும், கழிவுநீர் அகற்றும் வாரியமும் சரியாகச் செயல்படாததே என்கிறது. குப்பை வண்டிகள் பலவற்றை மாநகராட்சி ஏரிக்கு அருகே நிறுத்தி வைப்பதும், பல இடங்களில் கழிவுநீர் ஏரிக்குத் திருப்பி விடப் பட்டிருப்பதுமே மோசமான சூழலுக்குக் காரணம் என்கிறது ஃபேன்டஸி லகூன். பூங்காவின் உள்ளேயே ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு (படம் 3) இந்தப் பதில் பொருந்துமா என அவர்கள் யோசிக்க வேண்டும்.
பூங்கா நுழைவாயில் மற்றும் முகப்பில் இருந்த தோட்டத்தில் அருமையான பல சிற்பங்களையும் காண முடிந்தது. ஆனால் பலவற்றில் குறிப்பாகப் பெண் சிற்பங்கள் சேதப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒன்று மூக்கு உடைந்தும், ஒன்று விரல்கள் உடைந்தும் (அல்லது உடைக்கப்பட்டும்?) காணப்பட்டன.
#15
மேலிருக்கும் சூரியனார் சிற்பம் பார்க்க வித்தியாசமாக இருந்தது. அதே போல கைகளே இல்லாத பெண் சிற்பம் ஒன்றும் காரணத்தோடு செதுக்கப்பட்டதாகத் தோன்றியது. அவற்றைத் தனிப்பதிவாக மற்றொரு சமயத்தில் பகிருகிறேன்.
[Update: சிற்பங்கள் இங்கே:
https://tamilamudam.blogspot.com/2017/05/blog-post_20.html ]
சென்ற தூறல் பகிர்வில் வர்த்தூர் ஏரி பற்றியும், முன்னர் ஒரு பதிவில் அல்சூர் ஏரியின் மாசு பற்றியும் பகிர்ந்திருந்தேன். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அல்சூர் ஏரியில் கழிவு நீர் வந்து கலந்ததில் ஆக்ஸிஜன் அளவு வடிந்து ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதந்த சோகம் பலரும் அறிந்திருப்பீர்கள். ஏரிகளையே தன் நீர்த் தேவைக்காகப் பெரிதும் நம்பியிருக்கும் பெங்களூர் இதற்கான தீர்வுகளைத் தேடாவிட்டால் பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பது நிச்சயம். வர்த்தூர் ஏரியில் பொங்கும் நுரை உட்பட போர்க்கால துரித நடவடிக்கையை வேண்டும் பிரச்சனைகளை அரசு மெத்தனமாக அணுகுவதாக வருத்தப்படுகிறார்கள் மக்கள். பொதுநலனில் எல்லோருக்கும் அக்கறை இருக்க வேண்டுமென அரசாங்கத்துடன் இணைந்தே இதற்காகப் பாடுபட்டும் வருகின்றன பல தன்னார்வக் குழுக்கள்.
16ஆம் நூற்றாண்டில் பெங்களூரை நிர்மாணித்த கெம்பகெளடா மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் உருவாக்கிய ஏரிகளும், மைசூர் உடையார் பரம்பரையினர் மற்றும் ஆங்கிலேயர் உருவாக்கிய ஏரிகளுமாக 1960_ ல் இருந்த 280 ஏரிகளின் எண்ணிக்கை நகரமயமாக்கலினால் முப்பதே ஆண்டுகளில் 80 ஆகி விட்டன. பேருந்து நிலையங்களாக மாறியவை சில என்றால் சட்டத்துக்குப் புறம்பான குடியிருப்புகள், ஆக்ரமிப்புகளால் காணாமல் போனவை பல.
தற்போது இருக்கிற ஏரிகளையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், நிலத்தடி நீர் வற்றி வருவது, சரியான திட்டமிடல் இன்றி கழிவு நீர் நிலத்தடி நீரோடு கலப்பது, ஏரிகளில் கழிவு நீர் மற்றும் சாயக் கழிவுகள் கலப்பது எனப் பன்முனைப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது பெங்களூர். இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் தண்ணீர் இல்லாமல் பெங்களூர் மக்கள் யாவரும் வெளியேறும் சூழல் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
***
#2
ஸ்கூட்டர் படகு, பெடல் படகு, வேகப் படகு என விதம் விதமான படகுச் சவாரிக்கு பிரபலமாகி விட்டது. சிறுவர் பூங்கா, நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்கான பாதைகள், ஆங்காங்கே இளைப்பாற இருக்கைகள், நீருக்கு நடுவே படகில் மட்டுமே செல்ல முடிகிற செயற்கைத் தீவுப் பூங்கா, சிறு உணவகங்கள் என நுழைவுக்கு, கேமராவுக்கு, பூங்கா விளையாட்டுகளுக்கு, படகுச் சவாரிக்கு எனத் தனித்தனியாக கட்டணம் வசூலித்து இலாபம் பார்க்கும் ஃபேண்டஸி லகூன் ஏரியையும் பூங்காங்களையும் சரிவரப் பராமரிக்கிறதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி.
#3
படகு ஏறும் பகுதியின் வெள்ளை வேலிக்கு இடப்புறம் ....
குவிந்து காணப்படும் குப்பைகள்...
|
#4
#5
#6
#7
எந்த இடத்திலும் பறவை கண்ணில் சிக்கவில்லை. மற்ற பெங்களூர் ஏரிகளில் போல இங்கே நீந்தும் வாத்து இனங்களும் இல்லை. வெகு தொலைவில் ஒன்றே ஒன்று மட்டும் பார்க்க முடிந்தது. விசாரித்ததில், ‘பறவைகளைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் பூங்கா வழியாக வராதீர்கள், ஏரியின் மற்றொரு முனையை அடைய சில கிலோ மீட்டர் தள்ளி ஒரு பாதை உண்டு. அதன் வழியாகச் சென்றால் நிறையப் பார்க்கலாம்’ என்றார்கள் அங்கிருந்த ஒரு பராமரிப்பாளர்.
#8
சரி வந்த வரைக்கும் கரையோர நடைபாதை வழியாக உள்ளே வரைக்கும் போய் வரலாமெனச் சென்றபோதுதான் கண்ணில் பட்டன உடைந்த இருக்கைகள், ஆங்காங்கே குப்பைகள் மற்றும் துர்நாற்றம், ஏரியின் உட்பக்கத்தை ஆக்ரமித்துக் கிடந்த களைகள்.
#9
#10
#11
அவற்றை வெட்டிச் சேகரித்துக் கொண்டிருந்தார் ஓர் முதியவர்.
# 12
தன்னந்தனியே..
#13
#14
படங்களில் பார்க்க ஆகா என்ன இரம்மியமான இடம் எனும் எண்ணம் தோன்றலாம். ஆனால் நேரில்தான் நிலைமை புரிய வரும். பூங்கா நிர்வாகம் இந்த நிலைமைக்கு மாநகராட்சியும், கழிவுநீர் அகற்றும் வாரியமும் சரியாகச் செயல்படாததே என்கிறது. குப்பை வண்டிகள் பலவற்றை மாநகராட்சி ஏரிக்கு அருகே நிறுத்தி வைப்பதும், பல இடங்களில் கழிவுநீர் ஏரிக்குத் திருப்பி விடப் பட்டிருப்பதுமே மோசமான சூழலுக்குக் காரணம் என்கிறது ஃபேன்டஸி லகூன். பூங்காவின் உள்ளேயே ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு (படம் 3) இந்தப் பதில் பொருந்துமா என அவர்கள் யோசிக்க வேண்டும்.
பூங்கா நுழைவாயில் மற்றும் முகப்பில் இருந்த தோட்டத்தில் அருமையான பல சிற்பங்களையும் காண முடிந்தது. ஆனால் பலவற்றில் குறிப்பாகப் பெண் சிற்பங்கள் சேதப்படுத்தப் பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒன்று மூக்கு உடைந்தும், ஒன்று விரல்கள் உடைந்தும் (அல்லது உடைக்கப்பட்டும்?) காணப்பட்டன.
#15
சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போலத் தகித்திடு.
_டாக்டர். அப்துல் கலாம்
|
மேலிருக்கும் சூரியனார் சிற்பம் பார்க்க வித்தியாசமாக இருந்தது. அதே போல கைகளே இல்லாத பெண் சிற்பம் ஒன்றும் காரணத்தோடு செதுக்கப்பட்டதாகத் தோன்றியது. அவற்றைத் தனிப்பதிவாக மற்றொரு சமயத்தில் பகிருகிறேன்.
[Update: சிற்பங்கள் இங்கே:
https://tamilamudam.blogspot.com/2017/05/blog-post_20.html ]
சென்ற தூறல் பகிர்வில் வர்த்தூர் ஏரி பற்றியும், முன்னர் ஒரு பதிவில் அல்சூர் ஏரியின் மாசு பற்றியும் பகிர்ந்திருந்தேன். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அல்சூர் ஏரியில் கழிவு நீர் வந்து கலந்ததில் ஆக்ஸிஜன் அளவு வடிந்து ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதந்த சோகம் பலரும் அறிந்திருப்பீர்கள். ஏரிகளையே தன் நீர்த் தேவைக்காகப் பெரிதும் நம்பியிருக்கும் பெங்களூர் இதற்கான தீர்வுகளைத் தேடாவிட்டால் பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பது நிச்சயம். வர்த்தூர் ஏரியில் பொங்கும் நுரை உட்பட போர்க்கால துரித நடவடிக்கையை வேண்டும் பிரச்சனைகளை அரசு மெத்தனமாக அணுகுவதாக வருத்தப்படுகிறார்கள் மக்கள். பொதுநலனில் எல்லோருக்கும் அக்கறை இருக்க வேண்டுமென அரசாங்கத்துடன் இணைந்தே இதற்காகப் பாடுபட்டும் வருகின்றன பல தன்னார்வக் குழுக்கள்.
16ஆம் நூற்றாண்டில் பெங்களூரை நிர்மாணித்த கெம்பகெளடா மற்றும் அவருக்குப் பின் வந்தவர்கள் உருவாக்கிய ஏரிகளும், மைசூர் உடையார் பரம்பரையினர் மற்றும் ஆங்கிலேயர் உருவாக்கிய ஏரிகளுமாக 1960_ ல் இருந்த 280 ஏரிகளின் எண்ணிக்கை நகரமயமாக்கலினால் முப்பதே ஆண்டுகளில் 80 ஆகி விட்டன. பேருந்து நிலையங்களாக மாறியவை சில என்றால் சட்டத்துக்குப் புறம்பான குடியிருப்புகள், ஆக்ரமிப்புகளால் காணாமல் போனவை பல.
தற்போது இருக்கிற ஏரிகளையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் சூழலில், நிலத்தடி நீர் வற்றி வருவது, சரியான திட்டமிடல் இன்றி கழிவு நீர் நிலத்தடி நீரோடு கலப்பது, ஏரிகளில் கழிவு நீர் மற்றும் சாயக் கழிவுகள் கலப்பது எனப் பன்முனைப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது பெங்களூர். இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் தண்ணீர் இல்லாமல் பெங்களூர் மக்கள் யாவரும் வெளியேறும் சூழல் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
பெங்களூர் ஏரிகள்
6.வாழுங்கள்.. வாழ விடுங்கள்.. - பெங்களூர், கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 2)
7. கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி
8. பொங்கும் நுரை - வர்த்தூர் ஏரி

மைசூர், குமரகம் ஏரிகள்
அழகிய படங்கள்.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇன்று எப்படியாவது நலமாகக் கழிந்து விட்டால் போதும் என்னும் எண்ண்மே நம்மில் பலரிடம் இருக்கிறது1960 களில் சீதோஷ்ணம் 35deg C யைதொட்டாலே மழை வந்து குளிர்விக்கும் அந்த நாட்களை எண்ணியே நாட்களைத் தள்ளுகிறோம் வாழ்த்துகள் மேடம் குறை எங்கு என்று புரிகிறது தீர்வும் தெரிகிறது But who will bell the cat ?
பதிலளிநீக்குஆம். கோடை வருடத்துக்கு வருடம் அதிகமாகவே வாட்டி வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் ஒரு அமைப்பாகச் சேர்ந்து அரசோடு இணைந்து ஏரிகளைப் பரமாரிக்க உதவுகிறார்கள். உதாரணத்துக்கு சாங்கி ஏரி, கைகொண்டனஹள்ளி ஏரி போன்றவை.அது குறித்தும் முன்னர் எழுதியிருக்கிறேன். இது போல நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டவற்றில் பொதுமக்கள் எந்த அளவுக்கு செயல்பட முடியுமெனத் தெரியவில்லை.
நீக்குபொதுமக்களாலும் பிரச்சனை வருகிறது. இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் வர்த்தூர் ஏரியில் சிலர் கட்டிடக் கழிவுகளை வண்டி வண்டியாக வந்து கொட்டிய செய்தியை TOI-ல் நீங்களும் வாசித்திருக்கக் கூடும். ட்
கருத்துக்கு நன்றி.
ஏரியை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. நகரமயமாக்க அரசே எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?
பதிலளிநீக்குஇன்று ஒரு முதியவர் செஞ்சி ஏரியை ஒருவரே சுத்தம் செய்வதை தினமலரில் பகிர்ந்து இருந்தார்கள்.
உங்கள் பதிவிலும் ஒரு முதியவர் தன்னதனியே சுத்தம் செய்கிறார்.
கடைசியில் நீங்கள் சொல்லி இருப்பது கவலை அளிக்கிறது.
நீர் நிலைகளைப் பாதுகாக்கும் அக்கறை மக்களுக்கும் அரசுக்கும் வர வேண்டும். கருத்துக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குநன்றி
பதிலளிநீக்குநல்லது.
நீக்குநீர் சூழ்ந்த அடர்த்தியான பச்சை மரங்கள் மிக அழகு!
பதிலளிநீக்குஉடைந்த சிற்பங்களும், பதிவின் உள்ளடக்கமும் வருத்தம் அளிக்கிறது.
கருத்துக்கு நன்றி.
நீக்குநடுவில் பொதுமக்களே முனைந்து சீர் செய்தார்கள் என்று எழுதியிருந்த நினைவாய் இருக்கிறதே.. பரிதாபமான நிலையில்தான் இருக்கிறது போல.
பதிலளிநீக்குஆம், பகிர்ந்திருந்தேன். அது வெறொரு (கைகொண்டனஹள்ளி) ஏரி. தனியார் நிறுவனத்திடம் மாட்டிக் கொண்டதால் இந்த ஏரி குறித்த பிரச்சனையில் தன்னார்வ அமைப்புகளும் தலையிட முடியவில்லை. நன்றி ஸ்ரீராம்.
நீக்கு