#1
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் ஆசியக் குயில் வகை பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.
#2
குயில் மரத்தில் மட்டுமே வாழும் பறவை, தரையில் காணப்படாது. சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். குயிலுக்கு ‘காளகண்டம்’ என்ற பெயரும் உண்டு.
ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
#3
பெண் குயில் பழுப்பு அல்லது சாம்பல் நிற உடலுடன், மேலே முத்து முத்தாக வெண் புள்ளிகள் நிறைந்து காணப்படும்.
#4
கிளிகள் போன்று கூட்டமாக அல்லாமல் குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். ..
தனியாகவோ இணையுடனோ, பழங்களும் சிறு கனிகளும் நிறைந்த தோட்டம், தோப்புகளில் தென்படும். கனிகள் போக, சமயங்களில் கம்பளிப்புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றையும் உண்ணும்.
ஆண், பெண் இரண்டுமே வெட்கப்படும், சோம்பேறிப் பறவைகள். பெரும்பாலான நேரம் மரங்களில் மறைந்திருந்து தூங்கிக்கொண்டிருக்கும். குயில்கள் அழகாகப் பாடும். பெண் குயில்களை விடவும் ஆண் குயில்களின் கூவலே இனிமையாக இருக்கும்.
#5
குயில் கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாத, மற்ற பறவைகளை அண்டிப்பிழைக்கிற குக்கூஸ் (Cuckoo) என்ற குடும்பத்தைச் சார்ந்த பறவை. Brood parasite என்பார்கள், அதாவது பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை.
#6
இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அதிலிருந்து ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும், ஆண் குயில். காகம் ஆண் குயிலைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். (சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்). குயிலின் முட்டை இளம் சாம்பல் சேர்ந்த பச்சை நிறத்திலும், காகத்தின் முட்டை இளம் நீலம் சேர்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். குயிலின் முட்டைகள் காகத்தின் முட்டையை விடச் சிறியதாக இருக்கும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாக்கிற காகம், குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புப் பெற்றோரிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சு போலக் கட்டைக் குரலில் கத்தும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.
**
தகவல்கள் நன்றி: விக்கிப்பீடியா
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 15)
பறவை பார்ப்போம் (பாகம் 13)
***
ஆண் குயில்
ஆசியக் குயில் - Asian Koel
உயிரியல் பெயர் - Eudynamys scolopacea
|
இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பார்த்தால் மூன்று வகைக் குயில்கள் உள்ளன. அவற்றுள் ஆசியக் குயில் வகை பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன.
#2
பெண் குயில்
குயில் காகத்தைவிட சற்று சிறியதாக ஆனால், உருண்டு திரண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும்.
குயில் மரத்தில் மட்டுமே வாழும் பறவை, தரையில் காணப்படாது. சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும். குயிலுக்கு ‘காளகண்டம்’ என்ற பெயரும் உண்டு.
ஆண் குயில் பளபளப்பான கருமை நிறமுடையது; அலகு மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் கண்கள் இரத்தச்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
#3
#4
கிளிகள் போன்று கூட்டமாக அல்லாமல் குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். ..
தனியாகவோ இணையுடனோ, பழங்களும் சிறு கனிகளும் நிறைந்த தோட்டம், தோப்புகளில் தென்படும். கனிகள் போக, சமயங்களில் கம்பளிப்புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றையும் உண்ணும்.
ஆண், பெண் இரண்டுமே வெட்கப்படும், சோம்பேறிப் பறவைகள். பெரும்பாலான நேரம் மரங்களில் மறைந்திருந்து தூங்கிக்கொண்டிருக்கும். குயில்கள் அழகாகப் பாடும். பெண் குயில்களை விடவும் ஆண் குயில்களின் கூவலே இனிமையாக இருக்கும்.
#5
குயில் கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாத, மற்ற பறவைகளை அண்டிப்பிழைக்கிற குக்கூஸ் (Cuckoo) என்ற குடும்பத்தைச் சார்ந்த பறவை. Brood parasite என்பார்கள், அதாவது பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை.
#6
இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அதிலிருந்து ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும், ஆண் குயில். காகம் ஆண் குயிலைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். (சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்). குயிலின் முட்டை இளம் சாம்பல் சேர்ந்த பச்சை நிறத்திலும், காகத்தின் முட்டை இளம் நீலம் சேர்ந்த பச்சை நிறத்திலும் இருக்கும். குயிலின் முட்டைகள் காகத்தின் முட்டையை விடச் சிறியதாக இருக்கும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாக்கிற காகம், குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புப் பெற்றோரிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சு போலக் கட்டைக் குரலில் கத்தும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.
**
தகவல்கள் நன்றி: விக்கிப்பீடியா
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 15)
பறவை பார்ப்போம் (பாகம் 13)
***
கம்பளிப்புழுக்களைச் சாப்பிடும் என்பதும், வெட்கப்படும் பறவை என்பதும் ஆச்சர்யமான தகவல். காகங்கள் எப்போதுமே இவற்றுக்கு வளர்ப்புப் பெற்றோர்கள்!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇதுவரை அறியாத குயில் குறித்த
பதிலளிநீக்குசில விஷயங்களைத் தங்கள் பதிவின்
மூலம் அறிந்தேன்
படங்களுடன் பகிர்ந்தவிதம்
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
மிக்க நன்றி.
நீக்குஅறியாத செய்திகள்
பதிலளிநீக்குபடங்கள் அருமை
மிக்க நன்றி.
நீக்குபல தகவல்கள் அறிந்திராதவை. படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குazagana padangkaLum aasiya kuyilkal vivaram arumai Ramalakshmi :)
பதிலளிநீக்குநன்றி தேனம்மை :)
நீக்குகுயில்களின் அழகிய படங்களுடன் குயில்களைப் பற்றி தெரிந்து கொணடேன்.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்கு