Friday, June 27, 2014

அர்த்தமுள்ள மெளனம்

1. நம் மெளனத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் நம் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

2. மெளனம் எல்லா சமயங்களிலும் சம்மதத்துக்கு அறிகுறி ஆகாது. புரிதலற்ற மனிதரோடு போராடுவது வீண் என்கிற அயர்வினாலும் மெளனம் சாதிக்க நேரும்.

3.சுருக்கமாக இருந்தாலும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும், கனிவான வார்த்தைகள்!

4. ஒருவரைத் தாழ்த்திப் பேசித் தன்னை உயர்த்திக் கொள்ள நினைப்பது மடமை. புதிய உயரங்களைச் சேர்ந்தே அடையும் போது அதிகரிக்கிறது வலிமை.

5. இதயங்கள் அன்பால் இணைந்திருக்கையில் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சிறு இடைவெளிகள் ஒரு பொருட்டேயில்லை, நட்புகளுக்கு நடுவில்.

6. திரும்பிப் பார்க்கலாம். எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதைப் பார்ப்பது இன்னும் போக வேண்டிய தூரத்தை உணர வைக்கிறது சிலநேரங்களில்.

7. புன்னகையும் மெளனமும் போதும் உணர்வுகளை உன்னதப்படுத்த.
ஓவியம் நன்றி: செல்வி
                      ஓவிய ஒளிப்படம்: Ramalakshmi Photography8.தடைகள் அற்ற, மலர்கள் நிறைந்த பாதை வழியாக எவரும் வெற்றியை அடைந்ததாக வரலாறு இல்லை.
கபினி நதி
9. நேரம் ஒத்துழைக்காமல் முதல் முறை தவற விடுகிற வாய்ப்பு, மலரக் கூடும் சிலநேரங்களில் இரண்டாவது முறையாக.

10. அர்த்தமுள்ள மெளனம் அர்த்தமில்லா வார்த்தைகளை விட ஆயிரம் மடங்கு உயர்வானது.
 **
[தினமொழிகள் பத்து. எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும் தொகுப்பது தொடர்கிறது..]
***

24 comments:

 1. பத்தும் முத்து. மௌனம் பற்றிக் கூறியிருப்பவை எல்லாம் மிகமிகச் சரியானவை. ஐஸ்க்ரீமின் உச்சிச் செர்ரியாய் சுவைகூட்டுகின்றன உங்களின் புகைப்படங்கள்.

  ReplyDelete
 2. முத்துக்கள் பத்து ! அதிலும் ரெண்டும் மூணும் எனக்கான சொத்து!

  நன்றீஸ்ப்பா.

  ReplyDelete
 3. அழகிய புகைப்படங்களுக்கு அருமையான வார்த்தைகள் அணிசேர்க்கின்றன. // சேர்ந்தே அடையும்போது அதிகரிக்கிறது வலிமை// தேனம்மையின் ஸ்லோகன் நினைவுக்கு வருகிறது!

  ReplyDelete
 4. முத்துக்கள் பத்தும் அருமை.
  அதில் இரண்டாவதும் மூன்றும் எனக்கும் மிக பிடித்த கருத்து.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  படங்கள் எல்லாம் மிக அழகு.

  ReplyDelete
 5. பத்து வாக்கியங்களும் மனதில் பதியும் வரிகள். சத்தம் போட்டாலும் ஏறாது. மௌனமாக இருந்தாலும் உறைக்காது. வாங்கிக்கொள்ளும் மனம் விசாலமாக இல்லாவிட்டால். உங்களது மொழிகள் அத்தனையும் மனதுக்குள் நேரே போய்ச் சேர்ந்துவிட்டதுதான் அருமை. மிக நன்றி ராமலக்ஷ்மி. படமும் சேர்ந்தே பேசுவது இன்னும் அழகு.

  ReplyDelete
 6. பரவசம்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 7. முத்துக்கள் பத்தும் அருமை.

  ReplyDelete
 8. 1
  ஒரு நூறு வார்த்தைகள் சொல்ல இயலாததை
  ஒரு கண மௌனம் சொல்லும்.

  2
  மௌனம்
  மனம் ?

  சுப்பு தாத்தா

  ReplyDelete
 9. படங்களே கவிதையாக,வார்த்தைகளே படங்களாய் மாறிப்போன வித்தை/வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 10. ஆஹா...தத்துவங்களும் புகைப்படங்களும் அழகோ அழகு !

  ReplyDelete
 11. ஒவ்வொரு முத்தும் ஒரு பாடம் சொல்கின்றன.

  வழமை போல உங்கள் படங்கள் சிறப்பான மொழி பேசுகின்றன.

  ReplyDelete
 12. @ஸ்ரீராம்.,

  அட, ஆமாம்:). நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 13. @வல்லிசிம்ஹன்,

  /வாங்கிக்கொள்ளும் மனம் விசாலமாக இல்லாவிட்டால்./ உண்மைதான் வல்லிம்மா. மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

  நன்றி.

  ReplyDelete
 14. @T.V.ராதாகிருஷ்ணன்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி TVR sir!

  ReplyDelete
 15. @sury Siva,

  சரிதான். இங்கே இரண்டும் ஒன்றேதான். நன்றி சூரி sir.

  ReplyDelete
 16. @விமலன்,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விமலன்.

  ReplyDelete
 17. being silent when an injustice had happened to your known friend atleast is a cowdaise act. most of them remain silent and observe silence for their own selfish ends.... even mahaswamy had brokrn his silence in a particular day when groups of orphan children visited his ashram/. he began toconverse with them ... he had silenced his asram people not to remind him about his silent day.

  ReplyDelete
 18. மௌன மொழி இத்தனை வலிமையானது என்பதை உங்கள் வார்த்தை ஜால வரிகள் என்னும் நாரில், உங்கள் கைவண்ணப் புகைப்படங்கள் என்னும் மலர்களால் கோர்த்த மாலையின் மூலம் உணர்ந்தேன். ரசித்து அசர வைத்த பதிவு. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin