Tuesday, December 17, 2013

பெண் பணி - மாயா ஏஞ்சலோ கவிதை (2)

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள் பராமரிக்க
துணிகள் உள்ளன துவைக்க
தரை உள்ளது துடைக்க
கடைக்குச் செல்ல வேண்டும் மளிகை வாங்க
அடுத்து உள்ளது கோழிக்குஞ்சு பொறிக்க
குழந்தை காத்திருக்கிறது குளிக்க வைக்க
துணை இருக்கிறது உணவளிக்க
தோட்டத்துக்கும் நான் தேவை, களை பிடுங்க


சட்டைகள் உள்ளன இஸ்திரி போட
வேண்டும் நான்
செல்லங்களுக்கு உடை அணிவிக்க
உணவு டப்பாவைத் திறக்க
இந்தச் சிறு குடிலைச் சுத்தம் செய்ய
அடுத்து நோயாளியைக் கவனிக்க
அவர் துணிகளை எடுத்துப் போட.

என் மேல் மிளிர்வாய், பிரகாசமான சூரியனே
என் மேல் பொழிவாய், மழையே
என் மேல் விழுவாய் மெதுவாய், பனித்துளியே
என் புருவங்களை மீண்டும் குளிர்விப்பாய்.

புயலே, ஊதித் தள்ளிவிடு என்னை இங்கிருந்து
உன் மூர்க்கமான காற்றினால்,
மிதக்கவிடு என்னை வானத்தில்
மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை.

மிருதுவாய்ப் பொழி, பனித்திரளே
என்னை மூடிடு உன் வெண்
குளிர் முத்தங்களால்..
இன்றிரவு என்னை ஓய்வெடுக்க விடு.

சூரியன், மழை, வளைந்த வான்,
மலை, சமுத்திரங்கள், இலை மற்றும் கல்
மினுங்கும் நட்சத்திரம், ஒளிரும் நிலவு
உங்கள் எல்லோரையும் மட்டுமே நான்
என்னுடையவர்களாகச்
சொந்தம் கொண்டாட முடியும்.
***

மூலம்: “Woman Work”
By Maya Angelou
17 டிசம்பர் 2013 அதீதம் இதழுக்காக தமிழாக்கம் செய்த கவிதை. 

-----------

மாயா ஏஞ்சலோ
மாயா ஏஞ்சலோ 1928ஆம் ஆண்டு அமெரிக்காவின் செயின்ட் லூயி, மிசெளரி மாகாணத்தில் பிறந்தவர். எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், நடனக் கலைஞர், நாடக மற்றும் திரை தயாரிப்பாளர், இயக்குநர், நடிகை, பாடகி, குடியுரிமைக்காகப் போராடிய சேவகி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான இவரது எழுத்துப் பயணத்தில் முக்கியமானதாகக் கருதப்படுபவை, குழந்தைப் பருவம் மற்றும் பதின்ம வயதை மையமாகக் கொண்டு எழுதிய ஏழு சுயசரிதை நூல்கள். தன் பதினேழு வயது வரையான வாழ்வு குறித்து 1969-ல் எழுதிய  I Know Why the Caged Bird Sings   [எனது தமிழாக்கம் இங்கே: “ஏன் பாடுகிறது கூண்டுப் பறவை, நானறிவேன்”] இவருக்கு சர்வதேசஅங்கீகாரத்தையும் புகழையும் தேடித் தந்ததாகும்.
***

படங்கள்: நன்றி இணையம்.


25 comments:

 1. தங்களின் மொழியாக்கம் அருமை. பாராட்டுக்கள்.


  மாயா ஏஞ்சலோ வாழ்க்கைச் சுருக்கம் அறியத்தந்துள்ளதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. ஓய்வைக் கெஞ்சும் உடலுக்கு ஓய்வளிக்க இயற்கையைத் துணைக்கழைக்கும் பெண். அருமை.

  ReplyDelete
 3. மொழியாக்கம் அருமை...
  கவிதை நன்று அக்கா.

  ReplyDelete
 4. அற்புதமான கவிதை
  அருமையான மொழிமாற்றம்
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. அருமையான மொழியாக்கம்.

  ReplyDelete
 6. அருமையான வரிகள்...சிறப்பான மொழியாக்கம்...

  ReplyDelete
 7. வேலைகள் எவ்வளவு இருக்கிறது!என் அம்மா சொல்வது நினைவுக்கு வருது
  உத்து உத்து பார்த்தால் உட்கார நேரம் இல்லை என்பார்கள்.

  ஒய்வு நாமாக எடுத்தால் தான் உண்டு.
  கவிதை அருமை.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. மாயா ஏஞ்சலோவின் கவிதை புத்தக்ம் அம்மாவை பற்றி எழுதிய கவிதையை நியூஜெர்சி நூலகத்தில் எடுத்து வந்து படித்தார் என் கணவர்.
  அம்மவைப் பற்றிய கவிதையில் பிடித்த ஒன்றை எழுதி வைத்து இருந்தார்கள். உங்களுக்கு பிடித்து இருந்தால் இதையும் தமிழாக்கம் செய்யுங்களேன்.
  அம்மாவைப் பற்றிய கவிதைகளில் ஒன்று:-

  "It is true
  I was created in you
  It is also true
  That you ewre created for me
  I owned your voice
  It has shaped and turned to sooth me
  Your arms were molded
  Into a cradle to hold me,to rock me
  The scent of your body was the air
  Perfumed for me to breath."

  ReplyDelete

 9. மொழியாக்கம் அருமை.

  ReplyDelete
 10. @திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி தனபாலன். புதிய ஆன்ட்ராய்டுக்கு வாழ்த்துகளும்:)!

  ReplyDelete
 11. @கோமதி அரசு,

  உண்மைதான். இன்றைய நாளில் வேலைக்கும் சென்று கொண்டு வீட்டிலும் அத்தனை வேலைகளையும் ஓய்வின்றி பார்த்துக் கொள்கிற பெண்கள் எத்தனை பேர். நன்றி கோமதிம்மா, மாயா ஏஞ்சலோவின் இன்னொரு அருமையான கவிதையை வாசிக்கத் தந்ததற்கும், தமிழாக்கம் செய்யும் வாய்ப்பைத் தந்ததற்கும்:)!

  http://tamilamudam.blogspot.com/2013/12/blog-post_18.html

  ReplyDelete
 12. அருமையான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin