வியாழன், 26 டிசம்பர், 2013

நாளினை நனைத்த சொற்கள் - இந்த வாரக் கல்கியில்..

இந்த வாரக் கல்கியியின்..  27 ஆம் பக்கம், கவிதை கஃபேயில்..
நாளினை நனைத்த சொற்கள்

‘இது மேலத்தெருதானே?
குத்தாலிங்கம் வாத்தியார் வீடு
எங்கிருக்கு?’

வடக்குத்தெருவில் நின்று
நடுங்கும் குரலில்
போவோர் வருவோரைக்
கேட்டுக் கொண்டிருந்த
வயதானவரின்
கைப்பிடித்து அழைத்துச் சென்று
மேலத்தெருவின்
நாலாவது வீட்டு முன் நிறுத்தி,
அழைப்பு மணியை அழுத்திவிட்டு
ஒதுங்கி நின்றேன்.

திறந்த கதவுக்குப் பின்னிருந்து
‘அடடே, வாங்க பெரிப்பா’
குரல் கேட்டதும்
நான் திரும்பிச் செல்ல எத்தனிக்க,
என் சட்டையின் கைப் பற்றியிழுத்துக்
கண்களுக்குள் பார்த்த பெரியவர்
'மகராசனா இருப்ப தம்பி’
சொன்ன சொற்களில்
அழகானது என்
அன்றைய பொழுது.
***
நன்றி கல்கி!



***

26 கருத்துகள்:

  1. அருமை. இயல்பான இந்த உதவிகளை, இந்த சந்தோஷங்களை நகரங்களில் எதிர்பார்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. முதுமை போற்றப்படவேண்டியது - என்பதை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. கல்கியில் இடம்பெற்ற ஆக்கத்திற்கு வாழ்த்துகள்.

    கனிந்த கனிகளைப்பற்றிய கவிதை ருசியான கனிச்சுவையுடன் அருமையாக உள்ளது.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ராமலக்ஷ்மி, வாழ்த்துக்கள்.
    நாளினை நனைத்த சொற்கள் மிக அருமை.

    பெரியவர் வாழ்த்து நாளை நல்ல பொழுதாக்கியது நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  5. முடிவு அருமை...

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள்... கிராமங்களில் மட்டுமே இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்க இயலும்...

    பதிலளிநீக்கு
  7. ஆஹா.... அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  8. இயல்பான வார்த்தைகளில் அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.. அருமையான கவிதை ராமலக்ஷ்மி...

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதை......

    மனதைத் தொட்டது.....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  10. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

    பதிலளிநீக்கு
  11. இன்றைய வலைச்சரத்தில் என் இனிய நண்பர் திருச்சி தி. த்மிழ் இளங்கோ என்பவர், தங்களுக்கு இன்று பிறந்த நாள் என அறிவித்துள்ளார்கள்.

    வலைச்சர அறிமுகத்திற்கும், தங்களின் பிறந்த நாளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    க்ஷேமமாக, செளக்யமாக, சகல செளபாக்யங்களுடன் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  12. @Anonymous,

    மிக்க நன்றி. தங்கள் பெயரைச் சொல்லியிருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  13. @வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட், கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

    பதிலளிநீக்கு
  14. @ADHI VENKAT,

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  15. இதைவிட இனிய பரிசு எது. தந்தை கொடுக்க அன்னை பெற தனயன் சந்தோஷித்திருப்பான் . அருமை மைந்தனுக்கு அருமை மனைவியும் கிடைக்கட்டும். ராமலக்ஷ்மியின் கனிவுக்கு இந்தக் கவிதை அர்ப்பணம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin