சனி, 14 டிசம்பர், 2013

பூக்குட்டி - இந்த வார ஆனந்த விகடன் சொல்வனத்தில்..


இந்த வார ஆனந்த விகடன் (பக்கம் 24) சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ‘பூக்குட்டி’ கவிதையை எனக்களித்தப் பூக்குட்டி:)!

ன்னல்கள் மட்டுமே கொண்ட
வீட்டைக் கட்டி முடித்த
இரண்டே நிமிடங்களில்
திமுதிமுவென வளர்ந்து நின்றன
வாசலில் நான்கு தென்னைகள்.

நேர் மேலே சூரியன் சுட்டெரிக்க
மொட்டை மாடியில்
சாதம் வைக்கிற பாட்டிக்குக்
கரிசனத்துடன் அணிவிக்கப்படுகிறது
குளிர்க் கண்ணாடி.

சோற்றுப் பருக்கைகளைக்
கொத்தும் குருவிகளையும்
ஓடிவரும் அணில்களையும்
அவற்றை விரட்டுகிறக் காகங்களையும்
வேடிக்கைப் பார்க்கிறது
கைப்பிடிச் சுவரில் அமர்ந்து
நேற்றையப் பிறை நிலா.

ஓரத்துப் பூஞ்செடிக்கு
மொட்டுகள் வரையும் போதுதான்
நினைவுக்கு வந்தது அஸ்வத்துக்கு
அன்று ரோஜாவுக்கு நீர் வார்க்காதது.
‘டீச்சருக்குப் பறித்துத் தரும் முன்
செடி வதங்கிப் போகுமே...’ கவனம் சிதற
ரோஜாக்களைப் பச்சை வண்ணத்திலும்
இலைகளை மஞ்சள் வண்ணத்திலுமாகத்
தீட்டி முடித்து விட்டுக்
கவலையில் ஆழ்கிறான் வகுப்பறையில்.

கருவண்டுக் கண்களின்
சோகம் பொறுக்காத காற்று
முகில்களைத் திரட்டிக் கொண்டு
விரைகிறது அவன் வீட்டை நோக்கி
பூந்தொட்டிக்கு மழை தர.
***

நன்றி விகடன்!

 

41 கருத்துகள்:

  1. கடைசி வரிகள் கவிதையின் அழகை மேலும் கூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு

  2. பூக்குட்டியின் எண்ணஓட்டங்களும் செய்கைகளும் அழகாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். .

    பதிலளிநீக்கு
  3. அற்புதம்
    குறிப்பாக கவிதையை முடித்த விதம்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அழகான பூக்குட்டி - ஆனந்த விகடன் சொல்வனத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மனதைத் தொடும் கவிதை! ஒரேவார்த்தையில் சொன்னால் 'அழகு!'

    பதிலளிநீக்கு
  6. அருமை.. வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி :)

    பதிலளிநீக்கு
  7. //கருவண்டுக் கண்களின்
    சோகம் பொறுக்காத காற்று
    முகில்களைத் திரட்டிக் கொண்டு
    விரைகிறது அவன் வீட்டை நோக்கி
    பூந்தொட்டிக்கு மழை தர.//

    மிக அருமை ராமலஷ்மி.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அழகான வரிகள்... பூக்குட்டிப் பையன் செம க்யூட்....:)

    சொல்வனத்தில் பிரசுரமானதற்கு பாராட்டுகள். வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. பூக்குட்டி.....

    கவிதையும் படமும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  10. பூக்குட்டி அழகோ அழகு அக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கவிதை விகடன் சொல்வனத்தில் இடபெற்றதற்கு வாழ்த்துக்கள்.
    பூக்குட்டிக்கு காற்று உதவிக்கு வருவது அருமை.
    நல்ல கற்பனை.

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள்..!

    //‘பூக்குட்டி’ கவிதையை எனக்களித்தப் பூக்குட்டி:)!//

    அத்தையின் மனதில் நிரந்தர இடம்பிடித்த பூக்குட்டி பற்றி கொஞ்சம் சொல்லலாமே!

    பதிலளிநீக்கு
  13. //ரோஜாக்களைப் பச்சை வண்ணத்திலும்
    இலைகளை மஞ்சள் வண்ணத்திலுமாகத்
    தீட்டி முடித்து விட்டுக்
    கவலையில் ஆழ்கிறான் வகுப்பறையில்...

    //

    குழந்தைமனத்தைக்கண்ணாடியாய் காட்டும் கவிதை..எளிமையான வார்த்தைகளில் அழகிய சொல் ஓவியம் வாழ்த்துகள் ராமலஷ்மி

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin