உண்மை
நான் உன்னில் உருவானேன்
இதுவும் உண்மை
நீ எனக்காக உருவாக்கப் பட்டாய்.
உன் குரலைச் சொந்தமாக்கிக் கொண்டேன்
அது என்னை வடிவாக்கி ஆறுதலுமளித்தது.
உனது கரங்கள் வார்க்கப்பட்டனத்
தொட்டிலாக, என்னை ஏந்திக் கொள்ள
என்னை ஆட்டி விட.
உன் உடம்பின் வாசமே
நறுமணம் கமழச் செய்யப்பட்டக் காற்றானது
நான் சுவாசிக்க..
*
By Maya Angelou
சென்ற பதிவில் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசு அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழாக்கம் செய்த வரிகள்.
*
சிறு வயதில் பெற்றோர்கள் பிரிந்து விட்ட நிலையில் மாயோ ஏஞ்சலோவும் அவருடைய சகோதரரும் அர்கான்ஸாஸில் இருந்த பாட்டியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கேயே வளர்ந்தார்கள். பிறகு அவரது பதிமூன்றாவது வயதில் மீண்டும் தாயிடம் வந்து சேர்ந்திருக்கிறார். Mom & Me & Mom என்ற புத்தகத்தில் தாயுடனான தன் உறவைப் பற்றிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிரிந்து பின் ஒன்று கூடிய உறவில் நிகழ்ந்த.. நேர்ந்த.. மன்னிப்பு, சமாதானம் மற்றும் சமரசம் பற்றிய நெகிழ்வான கதைதான் ‘அம்மாவும் நானும் அம்மாவும்’.
***
படங்கள் நன்றி: இணையம்
கவிதையும் மொழியாக்கமும் நல்லாருக்குங்க..
பதிலளிநீக்குதமிழாக்கம் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅருமை. நெகிழ்வு.
பதிலளிநீக்குராமலக்ஷ்மி, நான கேட்டுக் கொண்டதற்கு இணங்க அழகாய் மொழியாக்கம் செய்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநெகிழ்வான கவிதை.
அம்மாவின் நினைவு வந்து கண்ணோரத்தில் ததும்பியது கண்ணீர்.
தமிழாக்கம் அருமை... நன்றி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அழகான தழிழாக்கம்,வாழ்த்துக்கள் அக்கா!!
பதிலளிநீக்கு@அமைதிச்சாரல்,
பதிலளிநீக்குமிக்க நன்றி சாந்தி.
@வை.கோபாலகிருஷ்ணன்,
பதிலளிநீக்குநன்றி Vgk sir.
@ஸ்ரீராம்.,
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
@கோமதி அரசு,
பதிலளிநீக்குஆம். அவருடைய வாழ்க்கைப் பற்றி அறியும் போது கவிதை மேலும் நெகிழ வைக்கிறது. நன்றி கோமதிம்மா.
@திண்டுக்கல் தனபாலன்,
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
@Menaga sathia,
பதிலளிநீக்குமிக்க நன்றி மேனகா.
அருமை... பகிர்வுக்கு நன்றிகள்..
பதிலளிநீக்கு@ADHI VENKAT,
பதிலளிநீக்குநன்றி ஆதி.
Beautiful..brought back my days with my mom...
பதிலளிநீக்குஅருமையான தமிழாக்கம்.
பதிலளிநீக்குஆங்கிலக் கவிதையும் அதற்கான தமிழ் கவிதையும் மிக அருமை.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.