Wednesday, August 14, 2013

செங்கல் சூளை சித்திரங்கள் - ‘கல்கி கேலரி’க்காக சரவணன் தண்டபாணியுடன் ஒரு நேர்காணல்


 67_ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது நாடு. சமீப ஆண்டுகளில் நாடு கண்டிருப்பது பெரும் வளர்ச்சி என்றே உவகையுடன் பேசப்படுகிறது. சர்வதேச தரத்துக்கு விமான நிலையங்கள், சாலைகள், பாலங்கள், ஐடி அலுவலகக் கட்டிடங்கள், வேலைவாய்ப்புகளால் நகரங்களில் கூடிக் கொண்டே போகும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முளைத்துக் கொண்டே இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், Malls.. இவை யாவும் இப்படியான ஒரு மாயையை உருவாக்கி இருப்பதில் ஆச்சரியமென்ன?
ஏனெனில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உள்கட்டமைப்பே முதுகெலும்பாக இருந்து உதவுகிறது என்பதுதானே பரவலான எண்ணமாக இருக்கிறது? அதிலும் பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்கள் எல்லைகளைத் தாண்டி விரிந்து கொண்டே வருகின்றன.

பெருநகரங்களை மேலும் பிரமாண்டமாகக் காட்டும் கட்டிடங்களை எழுப்பக் கூலி வேலை செய்பவர்கள், பெரும்பாலும் வேற்று மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். வேலை நடக்குமிடங்களுக்கு அருகேயே குடிசை போட்டு வாழ்கிறார்கள். இடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டிய சூழலில் எல்லோராலும் குழந்தைகளைப் படிக்க வைக்கவும் முடிவதில்லை.  இது ஒருபுறமிருக்க முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கட்டிட வேலைத் தொளிலாளிகள் பெங்களூரில் உயிரிழந்த கதைகளும் பல. சில மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன. பெரிய நிறுவனங்கள் செய்தியில் வராமல் பார்த்துக் கொண்ட சம்பவங்களும் உண்டு.

‘சென்னையும் விதிவிலக்கல்ல’ என்கிறார் ஃப்ளிக்கர் நண்பர் சரவணன் தண்டபாணி. செங்கல் சூளை, உப்பளம் போன்ற இடங்களுக்குச் சென்று அடித்தட்டு மக்களின் சிரமங்களைப் படமாக்கி சமூகத்தின் கவனத்துக்கு வைக்கும் அவரது செயல்பாடுகள் என்றும் எனது பாராட்டுக்குரியவையாக இருந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் கூவாகம் திருவிழாவுக்கு சென்று படமாக்கியிருப்பதோடு திருநங்கையரோடு அளவளாவி அவர்களது வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அறிந்து வந்திருக்கிறார். இதோ சென்னை அருகேயுள்ள செங்கல் சூளைகளில் உழலும் தொழிலாளர்கள் குறித்த அவரது பேட்டி, படங்களுடன் இந்த வாரக் கல்கி கேலரியில்:நன்றி கல்கி!

மேலும் இரு படங்கள் உங்கள் பார்வைக்கு:

#1 உலகை உருவாக்க உழைக்கின்ற கரங்கள்


#2 தாகம் தீரலாம். தேவைகள் தீருமா?
அடித்தட்டு மக்களின் வாழ்வு சிறக்கும் நன்னாளே நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கும். அப்படியான பொன்னாளுக்காகப் பிரார்த்திப்போம்.


இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
***

28 comments:

 1. இனிதான் வரவேண்டிய இந்தவார கல்கியா? படிச்சுடுவோம்! வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. ஆகஸ்ட் 18 தேதி, பரத் அட்டைப்படம்...... ஓ... நான் இன்னும் படிக்கவில்லை. இதோ இருக்கிறது கையில்!

  ReplyDelete
 3. @ஸ்ரீராம்.,

  வாசியுங்கள். நன்றி:)! சென்ற சனிக்கிழமையே சென்னையில் வெளி வந்திருக்குமே ஸ்ரீராம்? இங்கே இருதினங்கள் தாமதமாகக் கிடைக்கும்.

  ReplyDelete
 4. நல்லதொரு கட்டுரை... வாசிக்கவேண்டும்...

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் அக்கா!!

  ReplyDelete
 6. தாகம் தீரலாம், தேவை தீருமா?
  நல்ல கேள்வி, நெஞ்சை கனக்க வைக்கும் கேள்வி. செங்கல் சூளையில் வேலை செய்பவர்களுக்கும், தொழில் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
  கல்கியில் வந்த நேர் காணலுக்கு வாழ்த்துக்கள் ராமலஷ்மி.
  இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 7. கட்டுரையும் படங்களும் அருமை.

  ReplyDelete
 8. வித்தியாசமான பேட்டி... ஊடகத்துறையின் பயன்களில் ஒன்று அடித்தட்டு மக்களின் சிரமங்களையும் வெளிக்கொணர்வது... நிச்சயம் பலரிடம் இப்படங்களின் தாக்கம் இருக்கும்.

  அந்தத் தண்ணீர் குடிக்கும் முகத்தில் வழிந்துள்ள நீர்க்கோடுகள் வெளிப்படுத்தும் புழுதிப்படலம்... அது இல்லையென்றால் தூரத்துப் பார்வைக்கு அந்த முகம், கைகள் அவரை இயல்பாகவே சிவந்த நிறமுடையவரென தோன்ற வைத்திருக்கும். :-(( சிறு தூசு பட்டாலும் உடனே கழுவிவிடும் என்னைப் போன்றவரை ரொம்பவே உறுத்தும் இப்படம்...

  ReplyDelete
 9. அருமையான படங்கள்.....

  வித்தியாசமான பேட்டி.

  ReplyDelete
 10. concrete yugaththil sengal soolai iyanki varuvathu viyappu thaan. suvaarasiyamaana interview.

  ReplyDelete
 11. சிரமப்பட்டு உழைக்கும் மக்களின் நிலையை வெளிப்படுத்துகின்றது பேட்டியும் படங்களும்.

  அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. மனத்தை நெகிழ்த்தும் படங்களும் செய்திகளும். சிறப்பான பகிர்வு. நன்றி ராமலக்ஷ்மி. கல்கியில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. படங்கள் நெகிழவைக்கின்றன.

  சிறப்பான செய்திகளுடன் அருமையான ப்திவு. நல்ல பேட்டி.

  பகிர்வுக்கு நன்றி.

  கல்கியில் வந்தமைக்கு வாழ்த்துகள்.

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. அக்கா... படங்கள் அருமை...
  கலக்கலான பேட்டி...

  ReplyDelete
 15. வித்தியாசமான் அருமையான பேட்டி

  ReplyDelete
 16. @கோமதி அரசு,

  ஆம் கோமதிம்மா. தொழில் பாதுகாப்புச் சட்டத்தில் அக்கறை காட்ட வேண்டும் அரசு. வாழ்த்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 17. @ஹுஸைனம்மா,

  உலகுக்கு அவர்களது துயரை உரத்துச் சொல்லுவதாக அமைந்த படம் அது. சமூகம் சிந்திக்க வேண்டும்.

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 18. @அப்பாதுரை,

  நன்றி. பல சூளைகள் இந்த நிலையில் இயங்கி வருவதாகத் தெரிவித்தார் சரவணன்.

  ReplyDelete
 19. @Viya Pathy,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin