Tuesday, April 23, 2013

தூறல்:12 - பெங்களூரில்.. கம்ப இராமாயண முற்றோதல், புகைப்படக் கண்காட்சி; புன்னகை உலகில் ‘ங்கா’; In and Out Chennai

சுவையை அனுபவித்துவிட்டால், 
கம்பனால் என்ன செய்ய முடியும் 
என்பதற்கு எடுத்துக் காட்டு.

கம்பராமாயண முற்றோதல்:

எழுத்தாளர் சொக்கன் ஒருங்கிணைக்க திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழிநடத்த கடந்த இரண்டு சனிக்கிழமைகளாக பெங்களூரில் கம்பராமாயணம் வாசிப்பு நடைபெற்று வருகிறது.

நாள்: சனிக்கிழமை மாலை
நேரம் : மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இடம்:
CRMIT Solutions Private Limited,
NR Towers, 2nd Floor,
#14, Hundred Feet Ring Road,
BTM Layout First Stage,
Bangalore 68

நிகழ்வு நடக்கும் இடம் வரும் வாரங்களில் மாறக் கூடும். விரிவான விவரங்களை சொக்கன் அவர்களது ‘மனம் போன போக்கில்..’ வலைப்பூவில் இங்கே காணலாம். கலந்து கொள்ள இயலாதவர்களுக்காக நிகழ்வின் ஒளிப்பதிவு பாகங்களாக இங்கே:

வகுப்பு ஒன்று:

 http://www.youtube.com/watch?v=VAsL_y6xCqQ பகுதி 1
 http://www.youtube.com/watch?v=qPexxso0wko பகுதி 2
 http://www.youtube.com/watch?v=zvPRwVJGG0g பகுதி 3
 http://www.youtube.com/watch?v=KuCorRPTq9w பகுதி 4
வகுப்பு இரண்டு:

http://www.youtube.com/watch?v=8MpfLP7NJqY பகுதி 1
http://www.youtube.com/watch?v=rdp7p_uCik4 பகுதி 2

இதே யு ட்யூப் இணையப் பக்கத்தில், இனி நடக்கும் வகுப்புகளின் ஒளித் தொகுப்புகளும் இடம் பெறும் எனத் தெரிவித்திருக்கும் திரு ஹரிகிருஷ்ணன் அவர்கள், “பங்குபெறும் ஆர்வலர்கள், வாரம் ஒருமுறைதான் செய்வதனால், இரண்டு மணி நேரத்துக்கு பதிலாக மூன்று மணிநேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.  எட்டு மணிநேரம் என்றாலும் ஒதுக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறேன்.

சுவையை அனுபவித்துவிட்டால், கம்பனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு.  கலந்து கொள்ள முடியாதவர்களுக்காகத்தான் இந்தப் பதிவுகள்.  முதல் வகுப்பின் பதிவுக்குக் கிடைத்திருக்கும் பார்வைகள் திகைப்பை ஏற்படுத்துகின்றன.  எண்ணிக்கை ஏறியவண்ணம் இருக்கிறது.  வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் கம்பராமாயணம் முழுத் தொகுதியும் வாங்குவதற்குச் சென்ற வாரம் முடிவெடுத்திருக்கிறார்கள். 

வரவேற்பு, நான் எதிர்பாராத அளவுக்கு இருக்கிறது.  ஏதோ என்னால் இயன்றது. முளைக்கும் நிலத்தில் விதையைத் தூவிக் கொண்டிருக்கிறேன்.
” என மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார் குழும மடலில்.  “ஹரி கிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற எவரும், அவரது பழகும்விதத்தை, வாசிப்பின் வீச்சை, தமிழ், பிற மொழி இலக்கியங்களின்மீது அவருக்கிருக்கும் அளவற்ற ஆர்வத்தை, அதை எவருக்கும் புரியும்வண்ணம் விவரித்துச் சொல்லும் அக்கறையை, ஒருவரையும் அவமதித்துப் பேச விரும்பாத பண்பான வார்த்தைத் தேர்வுகளையெல்லாம் வியக்காமல் இருக்கமுடியாது.” என சொக்கன்  அவர்கள் தன் பதிவில் சிலாகித்திருப்பது நூறு சதவிகிதம் உண்மை. சென்ற மாதம் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. .. ..

பெங்களுர் தமிழ்ச் சங்கத்தில் ஒரு சங்கமம்:

மின்மினிப்பூச்சிகள்’ ஷக்தி பிரபா பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றாலாகிச் சென்றதையொட்டி ஏற்பாடாகியிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நண்பர்கள் ஷைலஜா, ஷக்தி, சொர்ண லக்ஷ்மி, ஐயப்பன் கிருஷ்ணன், ஓம்ஸ்ரீ, திருமால், பேரனுடன் திரு.ஜி.எம். பாலசுப்பிரமணியம், திரு. ஹரிகிருஷ்ணன் ஆகியோருடன் தமிழ்ச் சங்க உறுப்பினர் திரு முகமது அலி. ஆம், சந்திப்பு நிகழ்ந்த இடம் பெங்களூர் அல்சூர் ஏரியைப் பார்த்து அமைந்த தமிழ்ச் சங்கக் கட்டிடத்தின் மாடியில், நூலகத்துக்கு முன் இருந்த அறையில். இதில் என்னையும் இன்னும் ஓரிருவரையும் தவிர்த்து மற்றவர்கள் மரத்தடி குழுமத்தில் அறிமுகமாகி எழுதிக் கொண்டிருந்தவர்கள். ஒவ்வொருவரின் ஆர்வம் மற்றும் எழுத்துலக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளச் சொன்னதோடு சுய அறிமுகங்களை ஒளிப்பதிவாக்கவும் ஏற்பாடு செய்திருந்தார் திரு. ஹரிகிருஷ்ணன். சந்திப்பு குறித்த ஷைலஜாவின் பகிர்வு இங்கே.

***

புகைப்படக் கண்காட்சி:


26 ஏப்ரல் முதல் 10 மே 2013 வரை நடைபெற உள்ள இந்தப் புகைப்படக் கண்காட்சி வறண்டு வரும், மற்றும் சரியாகப் பராமரிக்கப் படாத ஏரிகள் குறித்த ஆய்வாக, விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. கொற்கையைச் சேர்ந்த புகைப்பட வல்லுநர்களால் 23 ஏப்ரல் அன்று அதிகாலையில் எட்டு ஏரிகளின் சுற்றுச் சூழல் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. அறிவிப்பில் இருக்கும் வர்த்தூர் ஏரியைப் படமாக்கியிருப்பவர் PeeVee. அதே படம் வண்ணத்தில்:

***

In and Out Chennai:


எனது ‘இதுவும் கடந்த போகும்’ சிறுகதையை மார்ச் 1-15 இதழில் வெளியிட்டிருக்கும் In and Out Chennai இதழுக்கு நன்றி!

***


புன்னகை உலகம்:
தேனம்மையின் ‘ங்கா’ கவிதை நூலுக்கு நான் எழுதிய விமர்சனத்தை ஏப்ரல் 2013 இதழில் வெளியிட்டிருக்கும் “புன்னகை உலகம்” வாழ்வியல் மாத இதழுக்கு நன்றி!***

படத்துளி:
இன்று உலக புத்தகத் தினம்

***

28 comments:

 1. இன்றைய சரங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... பல இணைப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
 2. கொடுத்த மற்ற தளங்களின் இணைப்பு வேறு tab-ல் திறந்தால் நன்றாக இருக்கும்... நன்றி...

  உதவிக்கு : visit : http://www.karpom.com/2011/07/blogger-tips-external-link-new-tab.html

  ReplyDelete
 3. க‌ம்ப‌ இராமாய‌ண ஒளிப்ப‌திவுக்கு ந‌ன்றி மேட‌ம். இதுவும் க‌ட‌ந்து போகும் க‌தை அருமை. வாழ்த்துக‌ள்...

  ReplyDelete
 4. வாழ்த்துகள். பாராட்டுகள். திண்டுக்கல் தனபாலனின் கருத்தை நானும் முன்னரே ஒரு தரம் சொல்ல நினைத்தேன். வறண்டு வரும் ஏரிகளின் படத்தில் இருக்கும் ஒரே படம் வண்ணத்திலும், கருப்பு வெள்ளையிலும் மிக அருமையாக இருக்கிறது. தேனம்மை அவர்களுக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 5. பகிர்வுக்கு காணொளி இணைப்பிற்கும்
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 6. ஒவ்வொரு சரமும் ஒளிவிடுகின்றன. ஒரு சாதனை மங்கையாக உங்களை அடையாளம் காண்பிக்கின்றன. மரத்தடி நண்பர்கள் அபூர்வ நட்க்கான அடையாளம். அதிலும் ஸ்ரீ ஹரியண்ணா, ஷைலஜாவின் கம்பராமாயண ஈடுபாடு அளவிட முடியாதது.
  இன்னும் வளர வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 7. எங்கள் நாடகம் ' காத்தாடி' 26ம் தேதி அரங்கேறுவதால் அதில் சற்று முனைப்புடன் இருப்பதால் வலைப்பூ பக்கம் வரும் நேரம் குறைகிறது.விரைவில் உங்கள் எல்லா இடுகைகளையும் படிக்கிறோம்.

  ReplyDelete
 8. மிக அருமை ராமலெக்ஷ்மி.. :)

  மிக்க நன்றி உங்களுக்கும் புன்னகை இதழுக்கும். அழகான தொகுப்பு.

  பெங்களூருவில் தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை எழுத நினைத்தேன். தமிழ்ச்சங்கம் ஏதும் இருக்கா எனக் கேட்டுத் தெரிந்து.. நீங்கள் பகிர்ந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வாழ்த்துக்கள். :)

  எனக்கு அந்தப் புன்னகையின் இரு படங்களையும் அனுப்பி வைக்க முடியுமா..

  மேலும் புகைப்படத்தில் பேர் வரும்படி செய்வது பற்றி இடுகை ஏதும் எழுதி இருந்தால் அதையும் லிங்க் அனுப்பி வையுங்கள். :)

  ஒரே பின்னூட்டத்தில் நிறைய கோரிக்கைகள்..:) :) :)

  ReplyDelete
 9. ஒரே பதிவில் பல சுவையான தகவல்கள்.... படங்கள்..... இணைப்புகளை மாலையில் தான் பார்க்க வேண்டும்....


  அருமை.

  நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 10. கம்பராமாயண வாசிப்பு நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி ராமலஷ்மி! கல்வி சிறந்த தமிழ்நாடு உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றான் பாரதி. ஆம் கல்விகேள்விகளில் கம்பர் சிறந்துவிளங்கினார் அதனால்தான் அவர் பெயரை சொன்னான் பாரதி. வால்மீகியின் 24000 சுலோகங்களையும் உள்வாங்கினாலே ஒழிய இப்படி ஒரு மொழியாக்கம் நமக்கு தமிழில் கிடைக்குமா? அருமையாகஆரம்பித்துவிட்டது வாசிப்பு அனுபவம்! சரயூ நதி பாய்ந்துகொண்டிருக்கிறது அதன் போக்கில் அதன் சிறப்புகளை வியந்தபடி எங்கள் நதிப்பயணமும் தொடர்கிறது!

  ReplyDelete
 11. இரண்டு வார கம்பராமாயண வகுப்புகளிலும் நான் கலந்து கொண்டேன். முதல் வாரம் பற்றிய என் பதிவு இது.
  http://yeskha.blogspot.in/2013/04/blog-post.html

  ReplyDelete
 12. ராமலக்ஷ்மி, நாளுக்கு நாள் உங்களின் பெருமைகள் கூடிக் கொண்டே போகிறது. அதற்கு உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.
  உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  கம்பராமாயண லிங் அனுப்பி இருப்பதை பார்த்து விட்டு வருகிறேன் மறுபடியும்.
  கம்பராமாயண முற்றோதல் ஒரு நல்ல முயற்சி அதற்கு ஆதரவு நிறைய இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
  அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  தேனம்மைக்கு என் வாழ்த்துக்கள்.
  வல்லி அக்கா சொன்னது போல் சாதனை மங்கை தான் நீங்கள் வழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. @திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி நல்ல ஆலோசனைக்கும். அந்த முறையில் ஒருமுறை முயன்றதில் சரியாக வரவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 14. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம். என்னையும் மிகக் கவர்ந்தன படங்கள். தனபாலனின் ஆலோசனையை விரைவில் செயல்படுத்துகிறேன்.

  ReplyDelete
 15. @வல்லிசிம்ஹன்,

  நன்றி வல்லிம்மா. ஆம்,ஆச்சரியப்படுத்தும் அழகான நட்பு, மரத்தடிக் குழுமத்தினரது:). தொடரட்டும் என்றும்.

  ReplyDelete
 16. @Kanchana Radhakrishnan,

  ‘காத்தாடி’ நாடகம் சிறப்பாக நடபெற்றிருக்கும் என நம்புகிறேன். மெதுவாக வரலாம் வலைப்பக்கம். நன்றி.

  ReplyDelete
 17. @Thenammai Lakshmanan,

  நன்றி தேனம்மை. படங்கள் அனுப்பி விட்டேன். புகைப்படத்தில் வாட்டர் மார்க் இடுவது குறித்து நித்தி ஆனந்தின் இன்றைய PiT பதிவு, உங்கள் போலவே பலரும் கேட்டுக் கொண்டதன் பேரில்...
  http://photography-in-tamil.blogspot.in/2013/05/blog-post.html

  ReplyDelete
 18. @ஷைலஜா,

  சரயு நதி போல.. அழகாகச் சொல்லி விட்டீர்கள் அனுபவத்தை. நன்றி ஷைலஜா.

  ReplyDelete
 19. @yeskha,

  பகிர்வு மிக அருமை. நன்றி. தொடர்ந்து வகுப்புகளில் கலந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. @கோமதி அரசு,

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 21. madam you are multi talented genius

  ReplyDelete
 22. பல சுவையான தகவல்கள்.

  வாழ்த்துகள். தொடரட்டும் வெற்றிகள்.

  ReplyDelete
 23. @arul,
  ஆர்வமுள்ள விஷயங்களில் ஈடுபடுகிறேன். அவ்வளவே:). நன்றி அருள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin