Monday, April 15, 2013

என் பாட்டியின் வீடு - பண்புடன் இணைய இதழில்.. - கமலா தாஸ் கவிதை (3)தொலைதூரத்தில் இருக்கிறது இப்போதும்,
எனக்கு அன்பை அள்ளித் தந்த வீடு...

அந்தப் பெண்மணி இறந்து விட்டாள்,
வீடும் மெளனத்துள் சுருங்கிக் கொண்டது,
புத்தகங்களுக்கு மத்தியில் சர்ப்பங்கள் நகருகின்றன,
அப்போதோ வாசிக்கும் வயதை எட்டாதிருந்தேன்.

என் இரத்தம் நிலவைப் போல் குளிர்ந்து போகிறது
எத்தனை முறை நினைத்திருப்பேன் அங்கு செல்ல..
சன்னல் வழியே எட்டிப் பார்க்கவும்,
உறைந்த காற்றை உற்றுக் கேட்கவும்,
அல்லது கட்டுப்படுத்த இயலா மனக்கசப்புடன்
கையளவு இருளை இங்கே எடுத்து வந்து
என் படுக்கையறைக் கதவுக்குப் பின்னால்
நாயைப் போல்
ஏக்கத்துடன் படுத்துக் கிடக்கவும்.

நம்ப மாட்டாய், அன்பே, நம்புவாயா?
அப்படியொரு வீட்டில் நான் வாழ்ந்தேன்
பெருமிதமாய், நேசிக்கப்பட்டு...

வழியைத் தொலைத்தவளாய் இன்று
அறியாதவர் வீட்டு வாசல்களில் நின்று
அன்பை  யாசிக்கிறேன்
சில்லறையளவேனும் கிடைக்காதாவென?
**

மூலம்: My Grandmother's House
By Kamala Das


14 ஏப்ரல் 2013 பண்புடன் இணைய இதழுக்காகத் தமிழாக்கம் செய்த கவிதை. நன்றி பண்புடன்!

படம்: இணையம்.

சித்திரை முதல் நாளில் கயல்விழி முத்துலெட்சுமியை சிறப்பாசிரியராகக் கொண்டு பெண்கள் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பண்புடன் இணைய இதழ்.  ஆசிரியருக்குப் பாராட்டுகள். பங்களிப்பு செய்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

***


37 comments:

 1. ஜூப்பரு..

  பாட்டியின் வீட்டை விடச் சிறந்த சொர்க்கம் எதுவுமில்லை :-)

  ReplyDelete
 2. பாட்டியின் வீடு பரவசமான கவிதை.

  ReplyDelete
 3. தமிழாக்கம் அருமை. பாராட்டுக்கள்.

  //எத்தனை முறை நினைத்திருப்பேன் அங்கு செல்ல.. சன்னல் வழியே எட்டிப் பார்க்கவும், உறைந்த காற்றை உற்றுக் கேட்கவும், அல்லது கட்டுப்படுத்த இயலா மனக்கசப்புடன்
  கையளவு இருளை இங்கே எடுத்து வந்து என் படுக்கையறைக் கதவுக்குப் பின்னால் நாயைப் போல்
  ஏக்கத்துடன் படுத்துக் கிடக்கவும்.//

  மிகவும் அழகான கற்பனை.;)

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. //வழியைத்தொலைத்து விட்டு இன்று அறியாதவர் வாசலில் அன்புக்காக யாசித்து நிற்கிறேன்!//

  அர்த்தம் பொதிந்த அருமையான வரிக‌ள்!
  வெளியிட்டுப்பகிர்ந்தத‌ற்கு அன்பு நன்றி!!

  ReplyDelete
 5. அற்புதம் ராமலஷ்மி.இது மாதிரி கவிதைகள் மனதை இதப்படுத்துகிறது..பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. ஏக்கம் இருக்க வேண்டும்

  ReplyDelete
 7. பழைய நினைவுகளைக் கிளறி இழந்த சில பொன்னான கணங்களை நினைத்துப் பார்க்க வைக்கிறது கவிதை.

  ReplyDelete
 8. கமலாதாஸின் கவிதையை அழகாய் தமிழாக்கம் செய்து தந்து விட்டீர்கள்.
  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  எல்லோருக்கும் பாட்டியின் வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அங்கு ஓடி ஆடி திரிந்த காலங்களை எண்ணி ஏங்கவும் வைத்து விட்டது கவிதை.

  ReplyDelete
 9. கமலாதாஸின் கவிதை.. மிகவும் உணர்வு பூர்வமாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள்...

  ReplyDelete

 10. இது அல்லவோ கவிதை ...

  இதயத்தை அல்லவா தொடுகிறது..

  இனிக்கிறது.... இல்லை இல்லை...

  பனிக்கிறது.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
 11. எதோ ஒரு நினைவை ஞாபகப் படுத்துகிறது..
  தமிழாக்கம் அருமை. வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அருமையான தமிழாக்கம். பாட்டி வீடு என எனக்கு நினைவில் இல்லை! ஏனெனில் அம்மா வழி பாட்டியைப் பார்த்ததே இல்லை. அப்பா வழி பாட்டி வீட்டுக்குச் சென்றது மிகக் குறைவு. அவர்களே எங்கள் வீட்டில் இருந்ததால்....

  ReplyDelete
 13. வாசிக்க வாசிக்க‌
  வார்த்தைகள்
  வர மறுக்கின்றன.

  ReplyDelete
 14. பெருமிதமாய் நேசிக்கப்பட்டு --
  பாட்டி வீடு மனதில் நிறைந்தது ...

  ReplyDelete
 15. பாட்டியின் வீடு மட்டுமல்ல, அம்மாவின் வீடும் கூட சில பெண்களுக்கு தொலைதூரமாகிப்போய்விடுகிறது.

  \\வழியைத்தொலைத்து விட்டு இன்று அறியாதவர் வாசலில் அன்புக்காக யாசித்து நிற்கிறேன்\\

  இவ்வரிகளை வாசிக்கும்போது ஏனோ சிறு துக்கம் தொண்டையை அடைக்கிறது.

  அருமையான மொழிபெயர்ப்பு. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 16. கமலாதாஸின் கவிதையை அழகாய் தமிழாக்கம் செய்து தந்து விட்டீர்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 17. @வெங்கட் நாகராஜ்,

  பாட்டி கூடவே இருந்தது இன்னொரு வகையான கொடுப்பினை. நன்றி வெங்கட்.

  ReplyDelete
 18. @திகழ்,

  நன்றி திகழ். நலமா? நீண்ட இடைவெளிக்குப் பிறகான உங்கள் வரவில் மகிழ்ச்சி:).

  ReplyDelete
 19. @கீதமஞ்சரி,

  கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 20. அற்புதமான கவிதை. இறுதிவரி மனதை தொடுகின்றது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin